என் மலர்
கார்

ஜீப் மெரிடியன்
ஜீப் மெரிடியின் முன்பதிவு மற்றும் டெலிவரி அப்டேட் - எப்போ தொடங்குது தெரியுமா?
ஜீப் நிறுவனம் தனது மெரிடியன் எஸ்.யு.வி. மாடல் இந்திய வினியோகம் பற்றி புது தகவலை வெளியிட்டு உள்ளது.
ஸ்டெலாண்டிஸ் நிறுவனத்தின் ஜீப் பிராண்டு சமீபத்தில் இந்திய சந்தைக்கான மெரிடியன் எஸ்.யு.வி.-யை அறிமுகம் செய்தது. இது ஜீப் காம்பஸ் மாடலின் ஸ்டிரெட்ச் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய மெரிடியன் மாடல் இண்டீரியரில் அதிக இடவசதியை வழங்குகிறது. மேலும் இதில் மூன்றாவது அடுக்கு இருக்கைகளை பொருத்திக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

காம்பஸ் மாடலை விட அதிக விலை கொண்டிருக்கும் என்றாலும் கொடுக்கும் விலைக்கு அதிகளவு பிரீமியம் அம்சங்கள் இந்த காரில் உள்ளன. அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஜீப் மெரிடியன் மாடல் இந்திய சந்தையில் பெருமளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஜீப் மெரிடியன் மாடலுக்கான முன்பதிவு மே மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் என ஜீப் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இதைத் தொடர்ந்து வினியோகம் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்க இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடலில் 2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஜீப் காம்பஸ் மாடலிலும் இதே என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஜீப் மெரிடியன் மாடலில் இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
Next Story






