என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கார்

X
ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட்
புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் இந்திய உற்பத்தி துவக்கம்
By
மாலை மலர்20 April 2022 9:43 AM GMT (Updated: 20 April 2022 9:43 AM GMT)

ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் உற்பத்தி துவங்கி விட்டது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் உற்பத்தியை துவங்கி இருக்கிறது. புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் உற்பத்தி ராஜஸ்தானில் உள்ள தபுகாரா உற்பத்தி ஆலையில் நடைபெற்று வருகிறது. ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ஹோண்டா சிட்டி eHEV மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு ஹோண்டா அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது. முன்பதிவு கட்டணம் விற்பனை மையத்தில் ரூ. 21 ஆயிரம் என்றும் ஆன்லைனில் ரூ. 5 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஹோண்டா சிட்டி eHEV மாடலில் 1.5 லிட்டர், அட்கின்சன் சைக்கிள் iVTEC பெட்ரோல் என்ஜின் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இவை இணைந்து 124 பி.ஹெச்.பி. திறன், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் லிட்டருக்கு 26.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
ஹோண்டா eHEV எலெக்ட்ரிக் மோட்டார்கள் லித்தியம் அயன் பேட்டரியை ஒவ்வொரு முறை பிரேக் போடும் போதும் சார்ஜ் செய்கின்றன. பேடில் ஷிஃப்டர்கள் உதவியுடன் பிரேக் எனர்ஜி மீட்பு சிஸ்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். லித்தியம் அயன் பேட்டரி மீது ஹோண்டா நிறுவனம் எட்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்குகிறது.
Next Story
×