என் மலர்

  கார்

  வாகன உற்பத்தி
  X
  வாகன உற்பத்தி

  இனி கார், பைக் வாங்குவது கடினம்: தொடர்ந்து உயரப்போகும் வாகன விலைகள்- காரணம் என்ன?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடந்த வருடத்தில் 13 சதவீதம் வரை புதிய வாகனத்தின் விலை உயர்ந்துள்ளதாகவும், பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையும் 29 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
  உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதுப்புது கார்கள், பைக்குகளை தொடர்ந்து சந்தையில் அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன.

  இந்நிலையில் ஃபோக்ஸ்வேகன், மெர்சடிஸ் பென்ஸ், பி.எம்.டபில்யூ, டொயோட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் திடீரென விலை உயர்வை இந்த மாதம் முதல் அறிவித்துள்ளன.

  ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் மற்றும் ஏனைய ஆட்டோ மொபைல் சார்ந்த பொருட்கள் விலை ஏறியதால் வாகனங்களின் விலையும் உயர்த்தப்படுவதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவித்தன. இந்நிலையில் இந்த விலை உயர்வுக்கு ரஷியா - உக்ரைன் போர் முக்கிய பங்குவகிப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த போரினால் உலக ஆட்டோமொபைல் துறை பெரும் பாதிப்பை சந்திக்கும் என்றும், அந்த பாதிப்பு தொடர்ந்து வளரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
   
  ரஷியா உக்ரைன் போரினால் பி.எம்.டபில்யூ இரண்டு ஜெர்மன் தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. பென்ஸ் நிறுவனமும் தங்களது தொழிற்சாலையில் உற்பத்தியை தாமதப்படுத்தியுள்ளது. இதுபோன்ற உற்பத்தி பாதிப்பு உலக அளவில் வாகனங்கள் வாடிக்கையாளர்கள் கைகளுக்கு சென்று சேர்வதை தாமதமாக்குவதால், வாகனங்களின் விலையும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதைத்தவிர கம்ப்யூட்டர் சிப்ஸ் மற்றும் பிற கணினி பாகங்களுக்கான பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதுவும் பழைய மற்றும் புதிய கார்களின் விலை உயர்வை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

  உக்ரைன் நாடு எலக்ட்ரிக்கல் ஒயரிங் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கிறது. ரஷியாவும் கேட்டலிட்டிக் கன்வெர்டர் மற்றும் மின்சார வாகன பேட்டரிக்களுக்கான நிக்கல் உள்ளிட்ட உலோக ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் நாடாக இருக்கிறது. இந்த இரு நாடுகளும் போரில் ஈடுபட்டுள்ளதால் இந்த பாதிப்பு ஆட்டோமொபைல் சந்தையையை பெரிதும் பாதித்துள்ளது.

  கடந்த வருடத்தில் 13 சதவீதம் வரை புதிய வாகனத்தின் விலை உயர்ந்துள்ளதாகவும், பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையும் 29 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஷிய உக்ரைன் பிரச்சனை நீடிக்கும் வரை இந்த விலை தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கும் என கூறப்படுகிறது.
  Next Story
  ×