என் மலர்
- இந்த அம்சம் மற்றவர்களிடம் மொபைலை கொடுப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- இதன் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது.
மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் சாட் லாக் பெயரில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் சாட்களை தனியே ஒரு ஃபோல்டர் உருவாக்கி அதில் பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் பாதுகாப்புடன் சேமித்துக் கொள்ளலாம்.
தனிப்பட்ட சாட்கள் மட்டுமின்றி க்ரூப் சாட்களையும் இந்த ஃபோல்டரில் வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மெசேஜ் பிரீவியூக்கள் எதுவும் தெரியாது. இந்த அம்சம் உலகளவில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

"இந்த அம்சம் அடிக்கடி தங்களது மொபைல் போனினை குடும்ப உறுப்பினரிடமோ அல்லது சந்தர்ப சூழல் காரணமாக மற்றவர்களிடம் மொபைலை கொடுப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று மெட்டா தனது வலைதளத்தில் தெரிவித்து உள்ளது.
வாட்ஸ்அப் சாட்-ஐ லாக் செய்யும் முன் பயனர்கள் குறிப்பிட்ட காண்டாக்ட் அல்லது க்ரூப்-ஐ தேர்வு செய்ய வேண்டும். சாட்களை மீண்டும் பார்க்க இன்பாக்ஸ்-ஐ கீழ்புறமாக ஸ்வைப் செய்தால், சாட்களின் மேல் லாக்டு ஃபோல்டர் இடம்பெற்று இருக்கும். லாக்டு ஃபோல்டருக்கான பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் மூலம் அன்லாக் செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் சாட் லாக் ஆப்ஷன்களில் பயனர்கள் இதர சாதனங்களில் உள்ள சாட்களை லாக் செய்யும் வசதியை வழங்குவது, பிரத்யேக பாஸ்வேர்டுகளை வைத்துக் கொள்ள செய்வது போன்ற ஆப்ஷன்களை வழங்க மெட்டா திட்டமிட்டிருந்ததாக தெரிவித்து உள்ளது.
- வேகன்ஆர் மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- இந்த கார் CNG மோடில் 34.05 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது வேகன் ஆர் ஹேச்பேக் மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் 1999 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வேகன்ஆர் மாடல் விற்பனையில் 30 லட்சம் யூனிட்களை கடந்து, புதிய மைல்கல் எட்டியுள்ளது.
இந்திய சந்தையில் வேகன்ஆர் மாடலின் விலை தற்போது ரூ. 5 லட்சத்து 54 ஆயிரம் என்று துவங்கி அதிகபட்சம் ரூ. 7 லட்சத்து 42 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மூன்றாம் தலைமுறை கட்டத்தில் உள்ள வேகன்ஆர் மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி வேகன்ஆர் மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என்று இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் CNG கிட் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த கார் CNG மோடில் 34.05 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. மாருதி சுசுகி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக என்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக வேகன்ஆர் விளங்குகிறது. இதுதவிர மாருதி வேகன்ஆர் ஹேச்பேக் மாடலின் ஃபிலெக்ஸ் ஃபியூவல் ப்ரோடோடைப் வெர்ஷனை மாருதி சுசுகி நிறுவனம் காட்சிப்படுத்தி இருக்கிறது. இது காரின் விற்பனையை மேலும் அதிகப்படுத்தும் என்று தெரிகிறது.
- சிம்பில் எனர்ஜி மாடலில் 4.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக், 4.5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருந்தது.
- இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கும் என்று கூறப்பட்டது.
சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்கள் தெரியவந்துள்ளது.
அதன்படி டெஸ்டிங்கில் உள்ள மாடல் அந்நிறுவனம் ஏற்கனவே காட்சிப்படுத்திய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலின் அப்ரானில் எல்இடி ஹெட்லைட் மவுண்ட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இண்டிகேட்டர்கள், ஹேண்டில்பாரிலேயே பொருத்தப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஒற்றை சீட், இளமையான தோற்றம் கொண்டிருக்கிறது.

2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சிம்பில் எனர்ஜி மாடலில் 4.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக், 4.5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருந்தது. பின் சில மாதங்கள் கழித்து இதே மாடலில் மூன்றாவதாக மற்றொரு பேட்டரி பேக் வழங்கப்பட்டு, இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கும் என்று கூறப்பட்டது.
சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் எல்இடி இலுமினேஷன், ப்ளூடூத் மற்றும் வைபை வசதி கொண்ட டிஎப்டி கன்சோல், 2 ஜிபி ரேம், நான்கு ரைடிங் மோட்கள்- இகோ, ரைடு, டேஷ் மற்றும் சோனிக் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது.
Photo Courtesy: bikewale
- இணைய சேவைகள், மனித வளம் மற்றும் சப்போர்ட் பிரிவுகளில் பணியாற்றி வந்தவர்கள் வேலை இழந்துள்ளனர்.
- பணிநீக்க நடவடிக்கையின் கீழ் 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக ஆண்டி ஜேசி அறிவித்து இருந்தார்.
அமேசான் ஊழியர்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். கடுமையான பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. உலகளவில் பல்வேறு ஊழியர்கள் வேலையிழந்த நிலையில், இந்தியாவில் உள்ள அமேசான் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்தியாவில் எத்தனை ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதுகுறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இணைய சேவைகள், மனித வளம் மற்றும் சப்போர்ட் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்தவர்கள் இந்தியாவில் வேலையிழந்துள்ளனர்.

ஒவ்வொரு பிரிவில் இருந்தும் எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜேசியின் ஆரம்பக்கட்ட பணிநீக்க திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் பணிநீக்க நடவடிக்கையின் கீழ் 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக ஆண்டி ஜேசி அறிவித்து இருந்தார்.
பின் மார்ச் மாதத்தில் அமேசான் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 9 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஆண்டு ஜேசி அறிவித்தார். சீரற்ற பொருளாதார நிலை காரணமாகவே பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
- போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது.
- இந்த ஸ்மார்ட்வாட்ச் சிங்கில் சிப் ப்ளூடூத் 5.3 மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச்- ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. போட் லூனார் கனெக்ட் ப்ரோ மாடலின் வரிசையில் புதிய ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலில் 1.91 இன்ச் HD டிஸ்ப்ளே, 2.5D வளைந்த டிசைன், 550 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. சீம்லெஸ் மற்றும் மெட்டல் டிசைன் கொண்டிருக்கும் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடல் ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தை அழகாகவும், ஒட்டுமொத்தமாக பிரீமியம் அனுபவத்தையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் சிங்கில் சிப் ப்ளூடூத் 5.3 மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இதில் 100-க்கும் அதிக கிளவுட் வாட்ச் ஃபேஸ்கள், IP68 தர டஸ்ட், ஸ்வெட், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படு இருக்கிறது. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இந்த வாட்ச் ஹார்ட் ரேட் மற்றும் உடலின் சுவாச அளவுகளை டிராக் செய்கிறது. இதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கண்காணிக்க முடியும்.
போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது. இந்த வாட்ச்-இல் நேரலை கிரிகெட் ஸ்கோர்கள், வானிலை அப்டேட்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இயக்கும் வசதி உள்ளது.

போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் அம்சங்கள்:
1.91 இன்ச் HD 2.5D வளைந்த டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ்
2.5D வளைந்த டிசைன், மெட்டாலிக் ஃபிரேம்
ப்ளூடூத் 5.3
பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்
ENx மூலம் இரைச்சல் இல்லா அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி
100-க்கும் அதிக கிளவுட் வாட்ச் ஃபேஸ்கள்
100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
உடல்நல டிராகிங் செய்யும் சென்சார்கள்
IP68 டஸ்ட், ஸ்வெட், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
300 எம்ஏஹெச் பேட்டரி
அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப்
வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி
ஸ்மார்ட் அலெர்ட்கள்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலின் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் போட் அதிகரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆக்டிவ் பிலாக், கூல் கிரே, டீப் புளூ மற்றும் மரூன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
- ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள படங்களின் படி அதிபர் புதின் நிலை தடுமாறி கீழே விழுந்திருப்பதை போன்று காட்சியளிக்கிறது.
- முன்னதாக மார்ச் மாதமும் இதே போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தி மாஸ்கோ டைம்ஸ் வெளியிட்ட செய்தி குறிப்பின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள படங்களின் படி அதிபர் புதின் நிலை தடுமாறி கீழே விழும் போது தரையில் கைகளை வைப்பதை போன்றும், கீழே படுத்திருக்கும் நிலையிலும் காட்சியளிக்கிறது.
"புதின் கீழே விழுந்தார். முன்னாள் சோவியத் உறுப்பினர்களை சந்தித்த பின் அதிபர் புதின் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை உதவியாளர்கள் மீட்டனர்" எனும் தலைப்பில் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டு இருக்கிறது. இந்த தகவலை மாஸ்கோ டைம்ஸ் வெளியிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இணைய தேடல்களில் தி மாஸ்கோ டைம்ஸ் இவ்வாறு எந்த செய்தியையும் பதிவிடவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்கிரீன்ஷாட் மே 16 ஆம் தேதி காலை பதிவிடப்பட்டு இருக்கிறது. ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு மே 12 ஆம் தேதி உருவாக்கப்பட்டுள்ளன.
முன்னதாக மார்ச் மாதமும் இதே போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதுவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும். அந்த வகையில், தற்போது வைரலாகும் தகவலில் உண்மையில்லை என்று உறுதியாகி இருக்கிறது.
- லாவா நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.
- இத்துடன் 4700 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
லாவா நிறுவனத்தின் புதிய அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் FHD+ dual curved AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் கீழ்புறம் 2.3mm பெசல் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர், 3rd Gen 2900mm² வேப்பர் சேம்பர் கூலிங் தொழில்நுட்பம், X ஆக்சிஸ் லீனியர் மோட்டார் ஹேப்டிக்ஸ், மேட் ஃபினிஷ் ரிடியன் நிறம் மற்றும் ரி-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட கிலாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 13 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் வசதி உள்ளது.

இத்துடன் 8 ஜிபி ரேம், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட உள்ளது. 50MP குவாட் கேமரா செட்டப் கொண்டிருக்கும் அக்னி 2 5ஜி மாடலில் 4700 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
லாவா அக்னி 2 5ஜி அம்சங்கள்:
6.78 இன்ச் 2400x1080 பிக்சல் Full HD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர்
மாலி G68 MC4 GPU
8 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 13
50MP பிரைமரி கேமரா
அல்ட்ரா வைடு, டெப்த் மற்றும் மேக்ரோ கேமரா சென்சார்கள்
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
4700 எம்ஏஹெச் பேட்டரி
66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 24 ஆம் தேதி அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் முன்னணி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி பெறலாம்.
- தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
- காஞ்சிபுரம் எஸ்பி சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
தமிழ் நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, விழுப்புரம் மாவட்ட டிஐஜியாக, சிபிசிஐடி டிஐஜி ஜியாவுல் ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் எஸ்பி சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ்-க்கு, விழுப்புரம் எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
- கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை தேடும் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக நடைபெற்றது.
தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் தொடர்பான உயிரிழப்பு அதிகரித்ததை அடுத்து தமிழ் நாடு முழுக்க காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அந்த வகையில், கடந்த 2 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற சாராய வேட்டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 1,558 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 19 ஆயிரத்து 028 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்டையில் 19 ஆயிரத்து 028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது."
"4 ஆயிரத்து 943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது. கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16 ஆயிரத்து 493 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனமும், ஏழு இரண்டு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன."
"2023 ஆண்டு இதுவரையில் 55 ஆயிரத்து 474 சாராய வழக்குகள் பதிவு செய்யட்டு 55 ஆயிரத்து 173 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளனர். அதில் 4 ஆயிரத்து 534 பேர் பெண்கள். இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- சுப்மன் கில் 58 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என 101 ரன்களை விளாசினார்.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசஸ்ர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் துவக்க வீரர் ரித்திமான் சாகா டக் அவுட் ஆகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
இவருடன் களமிறங்கிய சுப்மன் கில் துவக்கம் முதலே அதிரடியாக ஆடிவந்தார். இவர் 58 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என 101 ரன்களை விளாசினார். இவருடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்சர் அடித்து 47 ரன்களில் ஜன்சென் பந்தில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்த்திக் பாண்டியா 8 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

பின் களமிறங்கிய டேவிட் மில்லர் 7 ரன்களையும், ராகுல் தேவாட்டியா 3 ரன்களை எடுத்து அவுட் ஆகினர். தசுன் ஷனுகா 9 ரன்களை எடுத்தார். ரஷித் கான் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டனஸ் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்களை குவித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்களை வீழ்த்தினார். மார்கோ ஜன்சென், ஃபசல்ஹக் ஃபரூக்கி, நடராஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு வழங்கியது.
- சோதனையின் போது வீடு, அலுவலகங்களின் வாயில் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டது.
லாட்டரி அதிபர் மார்டின் மீது அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் இவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கேரளாவில் இருந்து கோவை வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் மார்டினுக்கு சொந்தமான வீடு உள்பட மூன்று இடங்களில் சோதனையை துவங்கினர்.
சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு வழங்கியது. இரண்டு நாட்கள் அமலாக்கத்துறை தீவிர சோதனை நடத்தியது. சோதனையின் போது வீடு, அலுவலகங்களின் வாயில் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, வெளி ஆட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும் வேறு யாரும் உள்ளே நுழையாத அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

மே 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமாக சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அமைந்திருக்கும் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், இரண்டு நாட்கள் நடைபெற்ற சோதனையின் முடிவில், லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான ரூ. 457 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.
மார்டின் மற்றும் அவரின் இதர நிறுனங்களுக்கு சொந்தமான ரூ. 457 கோடி மதிப்பிலான அசையும்/அசையா சொத்துக்கள், வைப்பு தொகை, மியூச்சுவல் ஃபண்ட், அசையா சொத்து பத்திரங்கள் வடிவில் இருந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதில், ரூ. 157.7 கோடி மதிப்பிலான வைப்புத் தொகை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்கள், ரூ. 299.16 கோடி மதிப்பிலான அசையா சொத்து பத்திரங்கள் அடங்கும்.
- கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் டெல்லி செல்ல இருந்தார்.
- என்னிடம் எந்த சட்டமன்ற உறுப்பினரும் இல்லை. கட்சி மேலிடமே முடிவை எடுக்கட்டும்.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, ஆட்சியமைக்கும் முனைப்பில் உள்ளது. அம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக நேற்று மாலை காங்கிரஸ் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று சித்தராமையா டெல்லி சென்றுள்ளார். இவரைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் டெல்லி செல்ல இருந்தார். இந்த நிலையில், டெல்லி பயணத்தை ரத்து செய்த டிகே சிவகுமார் விமான நிலையம் செல்லாமல் வீடு திரும்பினார்.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் இன்று டெல்லி செல்லவில்லை. மொத்தம் 135 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். என்னிடம் எந்த சட்டமன்ற உறுப்பினரும் இல்லை," என்று டிகே சிவகுமார் தெரிவித்தார்.
"நான் போர்க்கொடி தூக்கவில்லை. யாரையும் மிரட்டவில்லை. முதலமைச்சரை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சி மேலிடத்திடம் விட்டுவிட்டேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மை ஆதரவு சித்தராமையாவுக்கு இருந்தால் அவருக்கு எனது வாழ்த்துகள்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
டெல்லி பயணத்தை ரத்து செய்ததோடு, சித்தராமையாவுக்கு டிகே சிவகுமார் வாழ்த்து தெரிவித்து இருப்பதால் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.







