என் மலர்
- விஜய் குமார் தற்போது அறிவு என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
- சத்யசிவா அறிவு படத்தை இயக்கியுள்ளார்.
'உறியடி', 'உறியடி 2', 'ஃபைட் கிளப்' என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை அடுத்து விஜய் குமார் தற்போது அறிவு என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மகளிர் தினத்தை ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது.
பெண் உரிமைகளை மையமாகக் கொண்டு வலுவான சமூகச் செய்தியுடன் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
- விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சங்கீதா முன்வைத்தார்.
- கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண விழாவில் ஒரே காரில் திரிஷாவுடன் விஜய் வந்தார்.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் குறித்து கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. இதனிடையே கரூர் சம்பவத்தை அடுத்து அவர் மீது குற்றச்சாட்டுகள், வழக்குகள் என நடைபெற்று வருகிறது. இதற்கெல்லாம் அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே, விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவரது மனைவி சங்கீதா முன்வைத்தார். இதுதொடர்பாக மறுப்பு எதுவும் தெரிவிக்காத விஜய், சங்கீதா கூறியது உண்மை என்பதை மெய்பிக்கும் வகையில் கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண விழாவில் ஒரே காரில் திரிஷாவுடன் விஜய் ஒன்றாக வந்தது அமைந்தது. இதுதொடர்பாக விஜய் மீது கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. முன்னதாக விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்கள் கூட தற்போது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒரே காரில் விஜய் - திரிஷா வந்தது குறித்து நடிகர் விமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சட்டென விமல், "அந்தக் காரை இப்போ யாரு வச்சிருக்கா" என்று கூறியதும் அங்கிருந்தவர்கள் சிரிக்க தொடங்கினர்.
இது தொடர்ந்து விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லாமல் மழுப்பலான பதில்களை விமல் கொடுத்தார்.
- இளைஞர்களை திரட்டிப் போராடியதில் பாலேந்திர ஷா முக்கியப் பங்கு வகித்தார்.
- கர்நாடகாவில் முதுகலை பயின்றார்.
நேபாளத்தில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. கடந்த ஆண்டு ஜென் இசட் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால் அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஒலி பதவி விலகலுக்கு பிறகு அங்கு தேர்தல் நடந்தது.
பாராளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடித் தோ்தல் மூலமும், மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்டுவர். பெரும்பான்மைக்கு 138 இடங்கள் தேவை.
தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் கே.பி.சர்மா ஒலியும், நேபாளி காங்கிரஸ் சாா்பில் அதன் தலைவா் ககன் தாபாவும் பிரதமா் வேட்பாளா்களாகக் களமிறங்கினா்.
ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் 35 வயதான காத்மாண்டு பெருநகர மேயா் பாலேந்திர ஷா பாலன் பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.
நேபாளத்தின் செல்வாக்குமிக்க தலைவரான கே.பி. சர்மா ஒலியை அவரது சொந்தத் தொகுதியான ஜாப்பா-5 இல் பாலேந்திர ஷா மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் போட்டியிட்ட பாலேந்திர ஷா 68,348 வாக்குகள் பெற்ற நிலையில் சர்மா ஒலி 18,734 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன் மூலம் மூத்த தலைவர், முன்னாள் பிரதமர் சர்மா ஒலியை 35 வயது முன்னாள் மேயர் 49,614 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
74 வயதான ஒலி, 1990 முதல் இந்தத் தொகுதியில் ஏழு தேர்தல்களில் ஆறில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 4 முறை நேபாள் பிரதமர் பதவியில் இருந்துள்ளார்.
இதற்கிடையே நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 165 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பாலேந்திர ஷாவின் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் பாலேந்திர ஷா பிரதமர் பொறுப்பேற்க உள்ளார்.

யார் இந்த பாலேந்திர ஷா?
பாலேந்திர ஷா அடிப்படையில் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர் ஆவார். இசை மீதான ஆர்வத்தால் ராப் பாடகர் ஆகி அதன் மூலம் நேபாள் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்றார்.
இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பாலேந்திர ஷா முதுகலை பட்டம் பெற்றவர்.
2022 இல் காத்மாண்டு மாநகராட்சி மேயராக பாலேந்திர ஷா சுயேச்சையாக வென்று சாதனை படைத்தார்.
2026 பொதுத்தேர்தலில் போட்டியிட கடந்த ஜனவரி மாதம் மேயர் பதவியைத் துறந்து, ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சியில் இணைந்தார்.
2025 இல் கே.பி. ஒலி அரசு சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்தபோது, அதற்கு எதிராக இளைஞர்களைத் திரட்டிப் போராடியதில் பாலேந்திர ஷா முக்கியப் பங்கு வகித்தார். அந்தப் போராட்டமே ஒலி அரசின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.
இந்த தேர்தல் முடிவு ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிராக இளைஞர்கள் அளித்த தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.
- தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் வருகிற 12-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்தக்கோரியும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கட்சி சார்பில் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்து ஆர்ப்பாட்டத்திற்கு உரிய அனுமதி பெற்று நடத்த வேண்டும். மாவட்ட தலைநகரங்களில் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- விஜயின் வாகனத்தை ரசிகர்கள் பின்தொடர்ந்து பயணம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.
- விபத்தில் சிக்கி திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரத்திற்கு செல்லும் போதெல்லாம் அவரது வாகனத்தை ரசிகர்கள் பின்தொடர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.
அண்மையில் தஞ்சாவூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று, விபத்தில் சிக்கி திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார்
இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் விமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், நடிகரை பிடிக்கும் என்றால் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உயிரை பணயம் வைத்து வாகனத்தை விரட்டி பின்தொடராதீர்கள் என்று விஜய் வாகனத்தை விரட்டும் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார்.
- விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார்.
- நடிகையுடன் விஜய் ஜோடியாக வலம் வந்தது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
சென்னையில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் நடிகர் விஜய்யும், நடிகை திரிஷாவும் ஜோடியாக பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், நடிகையுடன் அவர் ஜோடியாக வலம் வந்தது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் விஜய்க்கு எதிர்ப்புகளும், ஆதரவும் எழுந்து வரும் நிலையில், கிருத்திகா உதயநிதி வெளியிட்ட ஒரு பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவியும், சினிமா இயக்குனருமான கிருத்திகா உதயநிதி தனது 'எக்ஸ்' பக்கத்தில், 'பிரபலம் என்பது யார்? நீங்களும், உங்கள் மீதான மக்களின் பார்வை மற்றும் புரிதல் தான் உங்களை ஒரு பிரபலமாக்குகிறது. ஆனால் மக்களின் பார்வை தான் நான் என்று நினைத்துக்கொண்டு, உங்கள் சுய அடையாளத்தை நீங்கள் இழக்கும்போது, நீங்கள் கடுமையான பிரச்சனையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்', என்று குறிப்பிட்டுள்ளார்.
இது பிரச்சனையில் மாட்டிக்காதீங்க... என்று நடிகர் விஜய்யை, கிருத்திகா உதயநிதி மறைமுகமாக தாக்கி எச்சரிப்பதாக இருக்கிறது என்று பேசப்படுகிறது.
- குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார்
- மகளிர் உரிமை தொகையை விமர்சித்து அருண் ராஜ் பேசிய பழைய வீடியோ வைரலாகியுள்ளது.
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் மகளிருக்கான வாக்குறுதிகளை அறிவித்தார்.
அப்போது பேசிய அவர்,த.வெ.க. ஆட்சி அமைந்த உடன் 60 வயதை கடந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும்" என்று அறிவித்தார்.
இந்நிலையில், மகளிர் உரிமை தொகையை விமர்சித்து தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ் பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், "இலவச பேருந்து பயணம், பெண்களுக்கு 1000 ரூபாய், பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய்... ஒரு கட்சி பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் தருகிறேன் என்று சொல்றாங்க. இன்னொரு கட்சி மாதம் 2000 ரூபாய் என்று சொல்றாங்க. இதற்கு எங்கதான் முடிவு?" என்று மகளிர் உரிமை தொகையை அருண் ராஜ் விமர்சித்திருந்தார்.
- வரும் நாட்களில் மேலும் பல இந்தியர்கள் விமானங்கள் மூலம் நாடு திரும்புவார்கள்.
- சிறப்பு விமானங்களும் இயக்கப்படுகின்றன.
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல், அதைத்தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய மோதல் ஒரு வாரத்தை கடந்து நீடித்து வருகிறது. பல்வேறு நாடுகளின் வான்வழி மூடப்பட்டதால் பலர் அங்கு சிக்கித் தவித்தனர்.
இதனிடையே கடந்த சில நாட்களில் வான்வழிகள் பகுதியளவு திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் மார்ச் 1 முதல் மார்ச் 7 வரையிலான காலகட்டத்தில், பல்வேறு விமானங்கள் மூலம் மொத்தம் 52,000 இந்தியர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியுள்ளனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரும் நாட்களில் மேலும் பல இந்தியர்கள் விமானங்கள் மூலம் நாடு திரும்புவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வழக்கமான விமானச் சேவைகள் மட்டுமின்றி, சிறப்பு விமானங்களும் இயக்கப்படுகின்றன.
பதற்றம் நீடிப்பதை தொடர்ந்து மேற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் சுமார் ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகம் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி விநியோகம் தடையின்றி தொடர்வதையும் உறுதி செய்ய இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.







