என் மலர்
விருதுநகர்
- கல்லூரி மாணவிகள் உள்பட 3 இளம்பெண்கள் மாயமாகி விட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள அரசப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது 17 வயது மகள் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் காளியப்பன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தங்கல் எஸ்.என்.புரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலையரசி. இவர் கணவரை பிரிந்து மகள் சுவேதா என்ற சுந்தரேஸ்வரியுடன்(20) வசித்து வருகிறார். சுந்தரேஸ்வரி சிவகாசி அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தருமாறு திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் கலையரசி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி அருகே உள்ள நாசர் புளியங்கு ளத்தை சேர்ந்தவர் வீர பாண்டி. இவரது மகள் பேச்சி(21). என்ஜினீயரிங் படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் ஆதித்தநேந்தலில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்தவர் திடீரென மாயமானார். எங்கு சென்றார் என தெரியவில்லை.
இதுகுறித்து நரிக்குடி போலீஸ் நிலையத்தில் வீரபாண்டி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- தலைமறைவான மூன்று பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் ஆண்டத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தி–யப்பட்ட மறவர் பொது சபை உள்ளது. இந்த பொது சபையில் கோவிலின் புதிதாக புணரமைக்கப்பட்ட கட்டிடம் மற்றும் கும்பாபி–ஷேகம் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடை–பெற்றது.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜவேல், பாண்டியன் என்ற சிபிராஜ் பாண்டி, தங்கப்பாண்டி ஆகிய மூன்று பேரும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த விடாமல் இடையூறு செய்து வந்ததாக கூறப்படு–கிறது.
இதை அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 55) என்பவர் கண்டித்துள்ளார். அப்பொழுது ராஜவேல் பாண்டியன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக பாலசுப்பிரமணியனை வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த பாலசுப்பிரமணியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக் டர் சார்லஸ் மூன்று பேரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவான மூன்று பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்ற–னர்.
- தாயை கத்திரிக்கோலால் மகன் சரமாரியாக குத்தினார்.
- தலைமறைவாக உள்ள ஜெயகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தாட்கோ காலனியைச் சேர்ந்தவர் அபிராமி (வயது35). இவரது கணவர் வைரமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் இறந்து விட்டார். இவர்க ளது மகன் ஜெயக்குமார் (19).
இந்த நிலையில் அபிராமிக்கும், மகனின் நண்பர் ஆரோக்கியம் என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகன் பலமுறை தாயை கண்டித்தார். அதே சமயம் தனது நண்பரையும் கண்டித்தார். ஆனாலும் அவர்களது கள்ள தொடர்பு நீடித்தது.
இந்த நிலையில் நேற்றிரவு அபிராமிக்கும், ஆரோக்கியத்திற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டிற்கு வந்த ஜெயகுமார் நண்பரை கண்டித்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் வீட்டில் இருந்த கத்திரிக்கோலால் தாய் அபிராமியை சரமாரி யாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த அபிராமி கொடுத்த புகாரின்பேரில் வடக்கு காவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள ஜெயகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த போலீசார் அனுமதி மறுக்கப்பட்டது.
- திருச்சுழி அருகே பதட்டம்-போலீசார் குவிக்கப்பட்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரை கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இறங்கி முத்தம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் நடக்கும் திருவிழாவில் பச்சை இலந்தை முள் மீது நடந்து பக்தர்கள் அருள் வாக்கு கூறுவது சிறப்பு.
கடந்த சில ஆண்டுகளாக கோவிலில் சாமி கும்பி டுவது தொடர்பாக 2 தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. கோவில் வழிபாடு விவகாரம் தொடர்பாக இருதரப்பி னரும் அடிக்கடி மோதி கொண்டனர். இந்த நிலையில் ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு சமூகத்தினருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை யடுத்து ஒரு தரப்பினர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர்க ளுக்கு சொந்தமான இடத்தில் முகூர்த்தகால் நடப்பட்டு காப்பு கட்டி ஏராளமானோர் விரதம் தொடங்கினர்.
இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து கோவிலலை சுற்றி போலீசார் பாது காப்பு பணியில் நிறுத்தப் பட்டனர். நேற்று (7-ந்தேதி) கும்பாபி ஷேகம் நடத்த முடிவு செய்யப் பட்டிருந்தது. ஆனால் கடைசி ே நரத்தில் சட்டம்-ஒழுங்கு பாது காப்பை காரணம் காட்டி போலீசார் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதனால் குறிப்பிட்ட சமூகத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
போலீசார் நடவ டிக்கைக்கு எதிர்ப்பு தெரி வித்த அவர்கள் அருகில் உள்ள விநாயகர் கோவி லுக்கு சென்று தாங்கள் கட்டியிருந்த விரத கயிறை கழட்டினர். கும்பாபி ஷேகம் நடத்த முடியாத தால் ஒரு தரப்பினர் கவலையுடன் வீட்டிற்கு சென்றனர். கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி மறுத்த தால் தொப்பா லக்கரை கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவி யது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தர வின்பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
- சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு கல்வி பயன்பட வேண்டும்.
- புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.
விருதுநகர்
விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுமைப் பெண் திட்டம் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
இந்தியாவில் 12-ம் வகுப்பு முடித்து, கல்லூரியில் சேருபவரின் எண்ணிக்கை 3-ல் 1 பங்காக உள்ளது. இதில் உயர்கல்வி பயிலும் பெண்கள் எண்ணிக்கை 25 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. ஆனால், உயர்கல்விக்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் 52 விழுக்காடு பெற்று இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது.
கல்லூரி என்பது பட்டம் பெறுவதற்கான இடம் மட்டுமல்ல. அந்த கல்வியோடு, சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயல்கள் குறித்தும் கண்காணிப்பது, அது குறித்து ஒரு தீர்க்கமான பார்வை கொண்டிருப்பது உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுப்பதுதான் கல்லூரி.
அந்த கல்வியை முறையாக பயில்வதன் மூலம் ஒரு முழுமைபெற்ற, சமூகத்தில் ஒரு பொறுப்பு மிக்க பெண்ணாக உருமாற்றம் பெற்று, உங்களை காத்துக் கொள்வதற்கும், சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும், உங்களை சார்ந்த குடும்பத்தை பாதுகாப்பதற்கும் உங்கள் கல்வி பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர்(பொ) தங்கலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சட்டம்) சிக்கந்தர் பீவி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பிரியதர்ஷினி, கல்லூரி முதல்வர் முனைவர் உஷா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உயிரை காப்பாற்றியவர்களுக்கு ஜீவன் ரக்சா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
- www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசின் (பொதுப் பிரிவு) உள்துறை அமைச்ச கத்தின் கீழ், இயற்கை சீற்றங்கள், விபத்துகள், தீவிரவாதிகள் தாக்குதல், நீரில் மூழ்குதல், விபத்துகள், மின்கசிவு, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் மீட்புப் பணிகள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதில் மனிதாபிமான குணத்துடன், ஒருவரின் உயிரைக் காப்பாற்றியதற்காக 3 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது.
சர்வோத்தம் ஜீவன் ரக்சா பதக்கமானது மீட்பவரின் உயிருக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உயிரைக காப்பாற்றுவதற்கும், உத்தம் ஜீவன் ரக்சா பதக்கமானது மீட்பவரின் உயிருக்கு பெரும் ஆபத்து இருக்கும் சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றுவதற்கும், ஜீவன் ரக்சா பதக்கமானது மீட்பவருக்கு உடல் காயம் ஏற்பட்ட சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றியதற்கும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் அது போன்ற வீரதீர செயல்களில் ஈடுபட்டு ஒருவரின் உயிரை காப்பாற்றியிருந்தால் 2023-ம் ஆண்டுக்கான ஜீவன் ரக்சா பதக்கம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். 2021 -ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதிக்கு முன்னர் ,இச்செயல்களை புரிந்தவர்களுக்கு பொருந்தாது.
இச்செயல்களை புரிந்த தகுதிவாய்ந்த நபர்கள், மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விபரங்கள் மற்றும் மீட்கப்பட்டவரின் விபரங்களை சுயவிபர படிவத்தில் (அதிகபட்சம் 250 வார்த்தைகள்) பூர்த்தி செய்து அனுப்பவேண்டும்.
இதற்கான படிவத்தினை www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5, வ.உ.சி.நகர், சூலக்கரைமேடு, விருதுநகர் - 626003 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமா கவோ ஜூலை 14-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
- மாணவர்களின் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசின் சார்பில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சாத்தூர் வட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் உள்ள சிப்காட்-க்கு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ரூ.26.50 கோடி மதிப்பில் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் இ.குமாரலிங்கம் மற்றும் மேட்டமலை ஆகிய இடங்களில் நியாய விலைக் கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, மேட்டமலை ஊராட்சி, மடத்துக்காடு பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 112 பயனாளிகளுக்கு, வீடுகட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும்,மேட்டமலை நடுத்தெருவில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினையும், சின்னக்காமன்பட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் செயல்படும் அரசு மாணவர் விடுதியினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாணவர்களின் எண்ணிக்கை, வழங்கப் படும் உணவுகளின் தரம், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சின்னகாமன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவ-மாணவி களுடன் கலந்துரையாடி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள், உயர்கல்விக்கான வாய்ப்புகள், உதவித்தொகைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் உயர்கல்வி பயிலவதற்கான துறைகள் மற்றும் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது, தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வது உள்ளிட்டவைகள் குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
- பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- நாடார்கள் உறவின் முறைபொருளாளர் செந்தூரான் வரவேற்றார்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாடார் மகாஜன சங்கம் மற்றும் அருப்புக் கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் இணைந்து காமராஜர் 121- வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். நாடார்கள் உறவின் முறைபொருளாளர் செந்தூரான் வரவேற்றார்.
பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பரிசு மற்றும்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.
மேலும் நிகழ்ச்சியில் நாடார்கள் உறவின்முறை துணைத்தலைவர் முத்துக்குமார், காரியதரிசி முத்துசாமி , புரவலர் ராமர், எஸ்.பி.கே.கல்விக் குழும தலைவர் ஜெயக்குமார், நாடார் மகாஜன சங்க மண்டல செயலாளர் கனக ரத்தினம் எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் கவுன்சிலர்மணி முருகன், பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் காசி கோபிநாத், இன்டர்நேஷனல் பள்ளி செயலாளர் கனகவேல் ராஜன், கல்லூரி செயலாளர் முத்து தினகரன், தொடக்கப் பள்ளி செயலாளர் சவுந்தர பாண்டியன், ஜூனியர் நர்சரி பள்ளி செயலாளர் ராஜசெல்வம், பள்ளி தலைமையாசிரியர் ஆனந்த ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி தலைவர் சிவராம கிருஷ்ணன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின்பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவ- மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள்பே ச்சுப்போட்டியில் கலந்து கொண்டனர். பேச்சு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வர்களுக்கு முதல் பரிசு ரூ5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2ஆயிரமும் ஆறுதல் பரிசாக வழங்கினர்.
- மாணவ- மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டு முகாம் நடந்தது.
- உயர் கல்விக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை பெறலாம்.
விருதுநகர்
விருதுநகர் அரசு மருத்து வக் கல்லூரி கலையரங்க கூடத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டு தல் முகாம் மற்றும் கடந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பு முடித்த உயர்கல்வி யில் சேரும் மாணவர்களுக் கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (சனிக் கிழமை) நடைபெறவுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள் அவை தொடர்பான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் களை எளிதில் பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்தும் நோக்கில், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்கி தொடர்ச்சியான நட வடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் கடந்த கல்வி யாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இதுவரை கல்லூரி யில் சேர விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கும் வகையிலும், மாணவர்கள் தங்கள் உயர்கல்விக்கு தேவையான ஆலோசனை கள் மற்றும் உதவிகள் பெறு வதற்கும், வருவாய்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலத் துறை, பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை கள் ஒருங்கிணைந்து நடத் தும், உயர்கல்விக்கான வழி காட்டுதல் முகாம் மற்றும் கடந்த கல்வியாண் டில் 12-ம் வகுப்பு முடித்த உயர் கல்வியில் சேரும் மாணவர் களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மருத்துவக்கல்லூரி கலை யரங்க கூடத்தில் நடைபெற வுள்ளது.
இந்த முகாமில் மாணவர்கள் தங்கள் உயர் கல்விக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் தெரிவித்துள்ளார்.
- அதிகரிக்கும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
- பள்ளிகள், கல்லூரிகளின் அருகே கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை நடந்து வருவதாக புகார்கள் வருகின்றன.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் பள்ளிகள், கல்லூரிகள், கிராம பகுதிகளுக்கு சென்று போலீசார் போதைப் பொருள் தடுப்பு விழிப்பு ணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மேலும் பெட்டிக்கடைகள் மற்றும் கடை உரிமை யாளர்களின் வீடுகளில் புகையிலை, பான்மசாலா மற்றும் குட்கா போன்ற போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதா? என தொடர்ச்சியாக சோதனை செய்து வருகின்றனர்.
அதில் கிலோ கணக்கில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக போதைப்பொருட்களை பதுக்கி வைத்துள்ளவர்களையும், விற்பனை செய்து வருபவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இருப்பினும் பள்ளிகள், கல்லூரிகளின் அருகே கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை நடந்து வருவதாக புகார்கள் வருகின்றன. இந்த நிலையில் பள்ளி, கல்லூரியின் அருகே உள்ள பகுதிகளில் தினமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும், கடைகளில் தொடர்ச்சியாக சோதனை செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் போதைப் பொருட்களை வைத்திருப்போர், விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கொப்பரை தேங்காய் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்.
- ஏக்கர் ஒன்றுக்கு 291 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 108.60 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் மற்றும் நகர்ப்புறங்களில் ஏராளமான தென்னை சாகு படி செய்யப்பட்டுள்ளது. கரும்பு பயிருக்கு மாற்றாக கரும்பு தோட்டங்கள் உள்ள இடங்களில் தென்னை மரங் கள் நடவு செய்யப்பட்டுள் ளது.
இந்நிலையில் தேங்காய் விலை படு பாதாளத்தை நோக்கி சென்றுவிட்ட நிலை யில் தென்னை விவசாயிகள் மாற்று வழி தெரியாத நிலை யில் கவலையில் உள்ளனர். தேங்காய்க்கு விலை நிர்ண யம் செய்ய இயலாத நிலை யில் தமிழக அரசு அறிவித் துள்ள கொப்பரை தேங்காய் தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ. 108.60 வீதம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தென்னை விவசாயிகளி டம் ஏக்கர் ஒன்றுக்கு 291 கிலோ கொள்முதல் செய் யப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 108.60 வீதம் வழங்கப் பட்டு வருகிறது. இது வெளி மார்க்கெட் ரேட்டை விட மிகவும் அதிகமாகும். என வே ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தென்னை விவசாயி கள் கொப்பரை தேங்காயை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்க மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு ராஜபாளையம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 300 மெட்ரிக் டன் கொள்முதல் என்று இருந்த தை தற்போது 200 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித் துள்ளது. ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 500 மெட்ரிக் டன் வரை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இருக் கும் நிலையில் 200 ஆக குறைத்து இருப்பது தென்னை விவசாயம் இடை யே மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு பரிசீலனை செய்து ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 500 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாய் தென்னை விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
- சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ராம மூர்த்தி சிறுமியை திருவிழாவிற்கு அழைத்து சென்றார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள இலங்கிப்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் காதலித்து வந்தனர்.
இந்த நிைலயில் திருவிழாவிற்காக சிறுமி ஊருக்கு வந்தார். ராம மூர்த்தி சிறுமியை திரு விழாவிற்கு அழைத்து சென்றார். அப்போது திருமணம் செய்து கொள்வ தாக ஆசை வார்த்தை கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத் காரம் செய்துள்ளார். பின்னர் பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது சிறுமியின் தாய்க்கு தெரிய வந்தது. அவர் கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி கடத்தல்
சிவகாசி அருகே உள்ள நதிக்குடியை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது 17 வயது மகளை அதே ஊரை சேர்ந்த முத்து முனியாண்டி என்பவர் கடத்தி சென்றதாக மாரனேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






