என் மலர்
கன்னியாகுமரி
- இந்தியாவில் அமைந்துள்ள மாநிலங்களும் பிரிந்துகிடந்தன.
- கன்னியாகுமரியையும், பிரதமர் மோடியையும் யாராலும் பிரித்து பார்க்கமுடியாது.
நாகர்கோவில்:
அகஸ்தீஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
பிரதமர் மோடி எனக்கு பிடித்தமான மண்ணுக்கு வந்துள்ளார். கன்னியாகுமரியையும், பிரதமர் மோடியையும் யாராலும் பிரித்து பார்க்கமுடியாது. 1991 டிசம்பர் 11-ந்தேதி இங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து முரளிமனோகர் ஜோஷியுடன் ஏக்தா யாத்திரை என்ற ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார்.
இந்தியாவை துண்டாடிக்கொண்டிருந்த காலகட்டம் அது. இந்தியாவில் அமைந்துள்ள மாநிலங்களும் பிரிந்துகிடந்தன. 1992 ஜனவரி 26 அன்று காஷ்மீரில் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து யாத்திரையை முடித்தார் மோடி. தாயின் பாலை குடித்து வளர்ந்த நான் யாருக்கும் பயப்படமாட்டேன் என காஷ்மீரில் தேசியகொடியை ஏற்றினார்.

இந்த மண்ணின் மைந்தனாக நீங்கள் பிரதமர் மோடியை கொண்டாடி கொண்டிருக்கிறீர்கள். இன்று குமரி மாவட்டத்துக்கு மிகப்பெரிய உறுதிமொழியோடு வந்திருக்கிறார். 3-வது முறையாக மோடி பிரதமராக வரப்போகிறார். இதுபோன்ற அரசியல் தலைவர் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை இல்லை. இந்தியா கூட்டணி வாரிசு அரசியல். மக்களே என் குடும்பம். மோடியின் தம்பிகளாக இங்கு வந்துள்ளீர்கள்.
400 எம்.பி.க்கள் என்பது வெறும் வார்த்தை கிடையாது. மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரும்போது 400 எம்.பி.க்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல, மக்களின் உணர்வாக இருக்கும். அதில் 370-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பா.ஜ.க.வை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இதே குமரிக்கு இன்னொரு மனிதரும் வந்தார். 1882-ல் டிசம்பர் 24-ல் நரேந்திர தத்தா என்கிற மனிதன் கடலில் நீந்தி மூன்று நாட்கள் பாறையில் அமர்ந்து நாடு, மக்கள் குறித்து சிந்தித்து விவேகானந்தராக மாறினார்.
இந்தியாவை அசைக்கமுடியாத சக்தியாக மாற்ற மோடி வந்துள்ளார். மோடி விஸ்வகுருவாக மாறிக்கொண்டிருக்கிறார். விவேகானந்தர் சிக்காகோவுக்கு போராமகிருஷ்ண மிஷனை தொடங்கினார். டீ விற்ற, 5 வீடுகளில் பாத்திரம். தேய்த்துக்கொண்டிருந்த ராஜ்கோட்டில் உள்ள ராமகிருஷ்ணர் மிஷனுக்கு சென்றார். அங்கிருந்த அஸ்வஸ்தானந்தா சொன்னார் ஞானி ஆகி இருக்க நீ பிறக்கவில்லை. இந்த நாட்டுக்காக பிறந்துள்ளாய் என திருப்பி அனுப்பப்பட்டார். 2-வது முறையும் சென்றார். அப்போதும் திருப்பி அனுப்பப்பட்டார். இப்போது 140 மக்களின் விஸ்வ குருவாக அமர்ந்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து ஒவ்வொரு முறையும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈடுபட்டு வருகிறோம்.
- கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.
தக்கலை:
பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தக்கலையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினு லால்சிங், பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ், மாநில துணை தலைவர் வக்கீல் ராபரட் புரூஸ், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜான் கிறிஸ்டோபர், திருவட்டார் வட்டார தலைவர் வக்கீல் ஜெபா, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜான் விக்னேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் தாரகை கட்பர்ட், நிர்வாகிகள் குமார், செல்வின்ராஜ் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் மக்களை பிரித்தாள நினைக்கும் மோடி தமிழகத்திற்கு வரக்கூடாது என்ற நோக்கத்துடன் இன்றைக்கு கோ பேக் மோடி எனும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம் என்றார்.
அவரை தொடர்ந்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் கூறுகையில், தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து ஒவ்வொரு முறையும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈடுபட்டு வருகிறோம். அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடியை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.
சி.ஏ.ஏ. எனும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் பிரதமர் மோடியை கண்டிக்கின்றோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் ராதா கிருஷ்ணன், ராபர்ட் புரூஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
- உங்கள் மத்தியில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு மிகப்பெரிய மனக்குறை.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி,
* தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்களுக்கு வலிமை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
* திமுக, காங்கிரஸ் கட்சியினருக்கு பெண்களை ஏமாற்றவும், அவமானப்படுத்தவும் மட்டுமே தெரியும்.
* பெண்களின் பெயரில் அவர்கள் அரசியல் செய்து வருகிறார்கள்.
* முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் திமுகவினர் எப்படி நடந்து கொண்டனர் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.
* நம்முடைய பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா குறித்து தி.மு.க. தலைவர்கள் கேள்விஎழுப்பினர்.
* தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
* தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், பெருமையையும் பாதுகாக்க பா.ஜ.க என்றும் முன்னிலையில் இருக்கிறது.
* உங்கள் மத்தியில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு மிகப்பெரிய மனக்குறை.
* நமோ இன் செயலி மூலம் நீங்கள் என் பேச்சை தமிழில் கேட்கலாம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
#WATCH | During a public rally in Kanniyakumari, PM Modi says, "...The workers of DMK and Congress only know how to cheat and insult women. The people of Tamil Nadu know how the workers of DMK behaved with former state CM J Jayalalithaa...They do politics in the name of women.… pic.twitter.com/LdtJgN5PVc
— ANI (@ANI) March 15, 2024
- பாவத்தை செய்தது நீங்களோ, நானோ அல்ல. தி.மு.க.வும், காங்கிரசும்.
- பாவச் செயலுக்கான கணக்கை அவர்களிடம் கேட்கும் நேரம் வந்து விட்டது. கேட்பீர்களா..?
கன்னியாகுமரி:
பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
* இலங்கையில் நமது மீனவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
* மோடி எடுத்த நடவடிக்கைகளால் மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
* மீனவர்கள் ஏன் இலங்கை அரசால் கைது செய்யப்படுகிறார்கள்? அதற்கு காரணம் யார்?
* இந்தப் பாவத்தை செய்தது நீங்களோ, நானோ அல்ல. தி.மு.க.வும், காங்கிரசும்.
* இந்த பாவச் செயலுக்கான கணக்கை அவர்களிடம் கேட்கும் நேரம் வந்து விட்டது. கேட்பீர்களா..?
* காங்கிரஸ், திமுக செய்த பாவங்களுக்கான பலனை அனுபவிப்பார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்ட போது திமுகவும், காங்கிரசும் வாயை மூடிக்கொண்டு இருந்தனர்.
- தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்தது.
நாகர்கோவில்:
பா.ஜ.க. அரசின் திட்டங்களை ஒப்பிட்டு எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி,
* கேலோ இந்தியாவை நாம் நடத்துகிறோம், அவர்கள் காமன்வெல்த் போட்டியில் ஊழல் செய்தார்கள்.
* தி.மு.க. தமிழ்நாட்டின் வருங்கால, கடந்த கால வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் எதிரி.
* ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்பு தமிழகத்தில் உள்ள பாரம்பரிய கோவில்களுக்கு வந்தேன்.
* அயோத்தி விழாவை தொலைக்காட்சியில் மக்கள் பார்க்க கூட தி.மு.க. அரசு தடை விதித்தது.
* புதிய பாராளுமன்ற கட்டடத்தில் நாங்கள் தமிழகத்தின் பாரம்பரியமான செங்கோலை நிறுவினோம்.
* ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்ட போது திமுகவும், காங்கிரசும் வாயை மூடிக்கொண்டு இருந்தனர்.
* தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்தது.
* திமுக தமிழ்நாட்டிற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் எதிரி.
* மாற்று கட்சி தலைவர்களுக்கு குமரியில் இருந்து வரும் முழக்கம் தூக்கத்தை கெடுத்துள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.#WATCH | PM Modi in Tamil Nadu's Kanniyakumari, says, "DMK is the enemy of the future and the culture of Tamil Nadu. Before the Ayodhya Ram temple 'Pran Pratishtha' ceremony, I came to Tamil Nadu and visited the prominent temples in the state. But the DMK govt tried to stop the… pic.twitter.com/Q5tEQpa9Pf
— ANI (@ANI) March 15, 2024
- பா.ஜ.க. ஆட்சியில் கன்னியாகுமரிக்கு ஏராளமான வளர்ச்சிப்பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
- உங்களுடைய ஒவ்வொரு துன்பத்திற்கும் நாங்கள் தீர்வு கொண்டு வந்திருக்கிறோம்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
பின்பு பேச தொடங்கிய பிரதமர், என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
* தமிழக மண்ணில் நான் ஒரு மாபெரும் மாற்றத்தை காண்கிறேன்.
* தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் இந்தியா கூட்டணியின் கர்வத்தை தமிழகம் அடக்கும்.
* தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக எப்போதும் மாற்றாது.
* மக்களை கொள்ளையடிக்கவே இவர்கள் ஆட்சியமைக்க நினைக்கிறார்கள்.
* நாங்கள் 5ஜி கொண்டு வந்தோம். அவர்கள் 2ஜியில் ஊழல் செய்தார்கள்.
* இந்தியா கூட்டணி ஹெலிகாப்டர் வாங்குவதில் ஊழல் செய்தார்கள்.
* இந்தியா கூட்டணியின் ஊழல் பட்டியல் மிகவும் நீளமானது.
* பா.ஜ.க அரசு ஏராளமான விமான நிலையங்களை கட்டியது.
* கன்னியாகுமரி பா.ஜ.க.வுக்கு எப்போதும் மாபெரும் ஆதரவு தந்திருக்கிறது.
* வாஜ்பாய் வடக்கையும், தெற்கையும் இணைக்கும் நெடுஞ்சாலை திட்டத்தை கொண்டு வந்தார்.
* கன்னியாகுமரி- திருவனந்தபுரம் 4 வழிச்சாலை கொண்டு வர மாநில அரசு உதவவில்லை.
* இரட்டை ரெயில் பாதை வேண்டும் என்ற மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை இவர்கள் நிறைவேற்றவில்லை.
* பா.ஜ.க. ஆட்சியில் கன்னியாகுமரிக்கு ஏராளமான வளர்ச்சிப்பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
* நாம் தமிழ்நாட்டின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதில் முனைப்போடு இருக்கிறோம்.
* உங்களுடைய ஒவ்வொரு துன்பத்திற்கும் நாங்கள் தீர்வு கொண்டு வந்திருக்கிறோம்.
* மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஜோ.டி.குரூஸ் ஆற்றிய பணிகளை உணர்ந்து பாராட்டுகிறேன்.
* தமிழ்நாட்டின் ரெயில்வே, சாலை வசதிகளை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி தொடர்ந்து பேசிவருகிறார்.
#WATCH | "DMK-Congress' INDI alliance can never make Tamil Nadu a developed state as its history is of scams and corruption...," says PM Modi during a public rally in Kanniyakumari, Tamil Nadu. pic.twitter.com/mcKvjA8QkO
— ANI (@ANI) March 15, 2024
- குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது.
- மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமர் ஆவார்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பா.ஜ.க. பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
* குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது.
* கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 48 ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்தவர் பிரதமர் மோடி.
* குமரியில் 1995-ல் ஏக்தா யாத்திரை துவங்கிய போது மோடி முக்கிய பங்கு வகித்துள்ளார்.
#WATCH | PM Modi to address a public rally in Tamil Nadu's Kanniyakumari, shortly pic.twitter.com/HhbJVBmrqE
— ANI (@ANI) March 15, 2024
* அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் பிரதமர் மோடி வந்திருக்கிறார்.
* 400 தொகுதிகள் வெற்றி என்பது வெறும் வார்த்தை அல்ல, இந்திய மக்களின் உணர்வு.
* 1892-ல் குமரிக்கு வந்த நரேந்திர தத்தா பாறை மீது அமர்ந்து விவேகானந்தராக மாறினார்.
* தற்போது இங்கு வந்துள்ள பிரதமர் மோடி ஞானியாக மாறியுள்ளார்.
* மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமர் ஆவார்.
* 147 கோடி மக்களின் விஸ்வ குருவாக பிரதமர் மோடி திகழ்கிறார் என்றார்.
இதையடுத்து மகளிர் அணியின் சார்பில் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி பா.ஜ.க. சார்பாக பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
#WATCH | Women BJP leaders felicitate PM Modi during a public rally in Tamil Nadu's Kanniyakumari pic.twitter.com/3GowmX6Wg7
— ANI (@ANI) March 15, 2024
முன்னதாக பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி. 40 மக்களவை தொகுதிகளிலும் நாம் நிச்சயம் வெல்வோம் என்றார்.
- தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் மோடியுடன் சேர்ந்து செயல்பட குமரி முனை வந்துள்ளோம்.
- மோடி, அண்ணாமலையின் ரசிகர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்.
நாகர்கோவில்:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே தேர்தல் களம் அனைத்து மாநிலங்களிலும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தி.மு.க. தன் வழக்கமான கூட்டணி கட்சிகளோடு களம் இறங்க, அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி முறிந்து தனித்தனியாக தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என திட்டமிட்டுள்ள பா.ஜனதா அதற்கேற்ப தேர்தல் வியூகங்களை அமைத்து செயலாற்றி வருகிறது.
குறிப்பாக தமிழகம், கேரளாவில் வலுவாக காலூன்ற பாரதிய ஜனதா முயன்று வருகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 மாநிலங்களிலும் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.
சமீபத்தில் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை மற்றும் சென்னை பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டினார். இந்நிலையில் அவர் கேரளா மற்றும் தமிழகத்தில் இன்று மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இதற்காக கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் சரத்குமார், ராதிகா சரத்குமார், விஜயதாரணி, பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, மாநில செயலாளர் மீனா தேவ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய ராதிகா சரத்குமார், பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியாகவும், எழுச்சியாகவும் உள்ளது. தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் மோடியுடன் சேர்ந்து செயல்பட குமரி முனை வந்துள்ளோம் என்றார்.
இதன்பின்னர் பேசிய சரத்குமார், நாட்டை ஆள்வதற்கான நல்ல தலைவர் மோடி. 3-வது முறையாக பிரதமராக அமர உள்ளார். மோடி, அண்ணாமலையின் ரசிகர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன். ஊழல் அற்ற, சுயநலம் அற்ற சிறந்த ஆட்சி அமைய வேண்டும் என்றார்.
- 74-வது திருஏடு வாசிப்பு விழா.
- நாளை மறுநாள் பட்டாபிஷேக திருவிழா நடைபெறுகிறது.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை நெட்டியான்விளையில் அய்யா வைகுண்டர் பதி உள்ளது. இங்கு 192-வது அய்யா வைகுண்டர் அவதார தின விழா மற்றும் 74-வது திருஏடு வாசிப்பு விழா ஆகியவை நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் திருஏடு வாசிப்பு, விளக்கவுரை, உகப்படிப்பு, அன்னதர்மம் ஆகியவை நடந்து வருகிறது.
8-ம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருஏடு வாசிப்பு, விளக்க உரை, இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, சுருள் வைப்பும் சாமிதோப்பு தலைமை பதியை சேர்ந்த பால் பையன் தலைமையில் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) இரவு சமய வகுப்பு மாணவ மாணவிகளின் நாடகம் நடக்கிறது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பட்டாபிஷேக திருவிழா நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு பால் வைப்பு, 3.30 மணிக்கு பணிவிடை, 4 மணிக்கு திருஏடு வாசிப்பு, பட்டாபிஷேகமும், 7 மணிக்கு திருவிளக்கு பணிவிடை, 8.30 மணிக்கு உகப்படிப்பும் நடக்கிறது.
18-ந் தேதி மாலை 5 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு பள்ளி உணர்த்தல் 9.30 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- கணக்கெடுப்பில் வனத்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
- கணக்கெடுப்பில் குமரி வனக்கோட்டத்தில் மொத்தம் 6,055 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 மற்றும் 3-ந் தேதிகளில் ஒருங்கிணைந்த நிலப்பறவை கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த பறவைகள் கணக்கெடுப்பானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகள் என மொத்தம் 25 பகுதிகளில் நடத்தப்பட்டது. கணக்கெடுப்பில் வனத்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
பறவைகள் கணக்கெடுப்பில் மொத்தம் 191 பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. முந்தைய ஆண்டான 2023-ம் ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பினை ஒப்பிடுகையில் இந்த வருடம் கூடுதலாக 18 இன வகை பறவைகள் அதிகமாக கண்டறியப்பட்டன. அதாவது இந்த கணக்கெடுப்பில் குமரி வனக்கோட்டத்தில் மொத்தம் 6,055 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த பறவைகள் கணக்கெடுப்பில் அரிய வகை பறவைகளான நீல தலை பூங்குருவி, வடக்கு சிட்டு பருந்து, கதிர்குருவி, பிளைட் நெட்டைக்காலி, பெரிய அலகு கதிர் குருவி ஆகிய வலசை பறவைகள், புதியதாக கண்டறியப்பட்டுள்ளன. மேலும் இங்கு கூடுதலாக வசித்து வருகிற பறவைகளில் நீண்ட அலகு நெட்டைக்காலி, சிறிய வல்லூறு, கேரள கொண்டைக்கழுகு, கருஞ்சிவப்பு வயிற்று கழுகு, மலை இருவாச்சி, பொன்முதுகு மரங்கொத்தி, மஞ்சள் கண் சிலம்பன், பருத்த அலகு கதிர்குருவி ஆகிய பறவைகளும் புதியதாக கண்டறியப்பட்டுள்ளன.
இத்தகவலை மாவட்ட வன அதிகாரி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
- கன்னியாகுமரி கடற்கரை, காந்திமண்டபம், சன்செட் பாயிண்ட், கோவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.
- 7 கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கழமை) பகலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். எனவே பாதுகாப்பு கருதி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர குமரி மாவட்ட போலீசார் 1,200 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிரதமர் மோடி வருகையையொட்டி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன. எந்தவித டிரோன்கள் பறக்கவும் அனுமதி இல்லை.
கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து மதியம் 2 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுக்கூட்டம் முடியும் வரை கன்னியாகுமரி கடற்கரை, காந்திமண்டபம், சன்செட் பாயிண்ட், கோவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.
பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம், ஹெலிகாப்டர் இறங்குதளம், கன்னியாகுமரி கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடைகளை திறக்கக்கூடாது.
அதுமட்டுமின்றி கன்னியாகுமரி கடல் பகுதியில் இன்று மதியம் 2 மணி வரை மீனவர்கள் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மத்திய கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவைநகர், கோவளம் ஆகிய 7 கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்காக விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி காரில் வந்து- செல்லும் சாலை ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது.
பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தமிழகத்தை குறி வைத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டிச் சென்றார்.
இதனை தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பா.ஜனதா கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை அவர் விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 11 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிபேடு தளத்தில் வந்திறங்குகிறார்.
அங்கிருந்து பிரதமர் மோடி கார் மூலம் புறப்பட்டு பொதுக்கூட்ட மேடைக்கு சென்று பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
பொதுக்கூட்டம் முடிந்ததும் மதியம் 12.15 மணிக்கு பிரதமர் மோடி மீண்டும் கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவுக்கு புறப்படுகிறார்.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்காக விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம், சுற்று வட்டார பகுதிகள், பிரதமர் மோடி காரில் வந்து- செல்லும் சாலை ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து குமரி மாவட்ட போலீசார் என மொத்தம் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தெரிவித்தார்.






