என் மலர்tooltip icon

    துபாய்

    • சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இடம்பெற்றுள்ளார்.
    • சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா இடம்பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி ஐசிசி கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    அதன்படி, டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் ஜஸ்டின் கிரீவ்ஸ், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    அதேபோல் டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பெயர் பட்டியலில் இந்தியாவின் ஷபாலி வர்மா, தென் ஆப்பிரிக்காவின் லாரா வால்வோர்ட் மற்றும் சுனே லூஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் சிறந்த வீராங்கனையை தேர்வு செய்து அறிவிக்கப்படும்.

    • பந்துவீச்சில் தீப்தி சர்மா தரவரிசைக்கான 735 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.
    • பேட்டிங்கில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 இடங்கள் முன்னேறியுள்ளார்.

    துபாய்:

    ஐ.சி.சி. சிறந்த வீராங்கனைகள், அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.

    இதில் பெண்களுக்கான டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்டிங் வரிசையில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் 2 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தில் உள்ளார்.

    இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக அரை சதம் கடந்தார்.

    இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனி முதல் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹெய்லே மேத்யூஸ் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஷபாலி வர்மா 6வது இடத்தில் உள்ளார்.

    பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீராங்கனை சுதர்லேண்டு 736 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார். இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு புள்ளி குறைந்து 2வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    • முதலில் ஆடிய டெசர்ட் வைபர்ஸ் அணி 20 ஓவரில் 182 ரன்கள் குவித்தது.
    • கேப்டன் சாம் கர்ரன் 51 பந்தில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    துபாய்:

    4-வது சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் எம்.ஐ.எமிரேட்ஸ், டெசர்ட் வைபர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய டெசர்ட் வைபர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் சாம் கர்ரன் 51 பந்தில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அடுத்து ஆடிய எம்.ஐ.எமிரேட்ஸ் 18.3 ஓவரில் 136 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெசர்ட் வைபர்ஸ் அணி கோப்பையை வென்று அசத்தியது.

    கடந்த 2 தொடர்களில் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த வைபர்ஸ் இந்த தடவை முதல் முறையாக கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடந்தது.
    • இந்த டெஸ்டின் மூன்றாவது நாளில் இந்தியாவை 30 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது.

    துபாய்:

    தென்னாப்பிரிக்க அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளுக்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.

    கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டின் மூன்றாவது நாளில் இந்திய அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது.

    இந்தப் போட்டி மூன்று நாளில் முடிவுக்கு வந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தப் போட்டியில் மொத்தம் 8 விக்கெட் வீழ்த்திய தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது.

    இந்நிலையில், ஈடன் கார்டன் மைதானம் 'திருப்திகரமானது' (Satisfactory) என ஐசிசி மதிப்பிட்டுள்ளது. இதனால் இந்த மைதானத்திற்கு அபராதம் விதிக்கப்படவில்லை.

    • துபாயில் குளோப் சாக்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    • மத்திய கிழக்கு நாடுகளின் சிறந்த வீரராக ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார்.

    துபாய்:

    துபாயில் நடந்த குளோப் சாக்கர் விருது விழாவில் மத்திய கிழக்கு நாடுகளின் சிறந்த வீரராக ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர், 1000 கோல் இலக்கை எட்டும் வரை ஓய்வு பெறப் போவதில்லை என்பதை சூசகமாக தெரிவித்தார்.

    மான்செஸ்டர் யுனைடெட், யுவன்டஸ் உள்பட அனைத்து கிளப் அணிக்காக 813 மற்றும் போர்ச்சுகல் அணிக்கு 143 கோல்கள் சேர்த்து 1,297 போட்டிகளில் 956 கோல் அடித்து முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் மெஸ்ஸி (896 கோல்) உள்ளார்.

    ரொனால்டோவுக்கு 1000 கோல் எட்ட இன்னும் 44 கோல் தான் தேவை. வரும் 2026-ல் நடக்கும் உலகக் கோப்பை தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளார்.

    இந்நிலையில், துபாயில் நடந்த 2025 குளோப் சாக்கர் விருது விழாவில் முதல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட குளோப் ஸ்போர்ட்ஸ் விருதை டென்னிஸ் ஜாம்பவான் நோவாக் ஜோகோவிச் வென்றார்.

    கால்பந்துக்கு அப்பாற்பட்ட சாதனைகளை மதிப்பிடும் இந்த விருதை கிரிஸ்டியானோ ரொனால்டோ அவருக்கு வழங்கினார். அவரது அசாதாரணமான அர்ப்பணிப்பு, நீண்ட கால வெற்றி மற்றும் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

    விருதை வழங்கி பேசிய ரொனால்டோ, எனக்கு அவர் ஒரு உதாரணம். அவர் தன்னிடமிருந்து வரும் வார்த்தைகளைப் பேசுகிறார். எனவே அவர் இதற்கு தகுதியானவர் என நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் இந்த தலைமுறைக்கு, அனைத்து தலைமுறைகளுக்கும், வரவிருக்கும் தலைமுறைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவித்தார்.

    • துபாயில் கண்காட்சி போட்டி நடைபெற்றது.
    • இதில் ஆஸ்திரேலியா வீரர் நிக் கிர்கியோஸ் வெற்றி பெற்றார்.

    துபாய்:

    அடுத்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் 12-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை மெல்போர்னில் நடைபெற உள்ளது.

    இந்தத் தொடருக்காக நம்பர் 1 வீராங்கனையான பெரலாசைச் சேர்ந்த அரினா சபலென்கா தயாராகி வருகிறார். கடந்த 2023, 24-ம் ஆண்டுகளில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற அவர், 2025 இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீசிடம் தோல்வி அடைந்தார். மூன்றாவது முறையாக பட்டம் வெல்லும் இலக்குடன் அவர் ஆஸ்திரேலியா புறப்படுகிறார்.

    இந்நிலையில், துபாயில் உள்ள கோகோ-கோலா அரீனா அரங்கில் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இதில் நமப்ர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் மோதினார்.

    இதில் நிக் கிரிகியோஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    • துபாயில் இன்று கண்காட்சி போட்டி நடைபெற உள்ளது.
    • இதில் அரினா சபலென்கா, ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோசுடன் மோதுகிறார்.

    துபாய்:

    அடுத்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் 12-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை மெல்போர்னில் நடைபெற உள்ளது.

    இந்தத் தொடருக்காக நம்பர் 1 வீராங்கனையான பெரலாசைச் சேர்ந்த அரினா சபலென்கா தயாராகி வருகிறார். கடந்த 2023, 24-ம் ஆண்டுகளில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற அவர், 2025 இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீசிடம் தோல்வி அடைந்தார்.

    மூன்றாவது முறையாக பட்டம் வெல்லும் இலக்குடன் அவர் ஆஸ்திரேலியா புறப்படுகிறார்.

    இதற்கிடையே, துபாயில் இன்று நடைபெறும் கண்காட்சி போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் மோதுகிறார்.

    துபாயில் உள்ள கோகோ-கோலா அரீனா அரங்கில் இந்திய நேரப்படி இன்று இரவு 9.15 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற உள்ளது.

    • பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • பந்துவீச்சாளர் தரவரிசையில் வருண் சக்கரவர்த்தி முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

    துபாய்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.

    பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் திலக் வர்மா தென் ஆப்பிரிக்கா தொடரில் 187 ரன்கள் குவித்து ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

    இளம் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

    பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி தென் ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக செயல்பட்டு முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இந்த தொடரில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 18வது இடத்தைப் பிடித்தார். அவர் மூன்று போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். அக்சர் படேல் ஒரு இடம் சரிந்து 10வது இடத்திற்குச் சென்றார்.

    • ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது.
    • இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

    துபாய்:

    12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதின.

    லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    முதல் அரையிறுதியில் இலங்கையை வீழ்த்தி இந்தியாவும், 2வது அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

    இந்நிலையில், துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்தப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இறுதி களத்தில் சந்திப்பது 11 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே லீக் சுற்றில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது நினைவு கூரத்தக்கது.

    • முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 138 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்திய அணி 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    துபாய்:

    12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

    லீக் சுற்று முடிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில், முதல் அரையிறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சமிகா 42 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    மற்றொரு அரையிறுதியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    • தென் ஆப்பிரிக்காவின் சைமன் ஹார்மர் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
    • சிறந்த வீராங்கனையாக இந்திய அணியின் அதிரடி பேட்டர் ஷபாலி வர்மா தேர்வு செய்யப்பட்டார்.

    துபாய்:

    சிறந்த வீரர், வீராங்கனைகளை மாதந்தோறும் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனையாக இந்திய பெண்கள் அணியின் அதிரடி பேட்டர் ஷபாலி வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த மாதம் நவி மும்பையில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த ஆட்டத்தில் 87 ரன் குவித்ததுடன் 2 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றியில் ஷபாலி வர்மா முக்கிய பங்கு வகித்தார்.

    அவரது இந்த அபார ஆட்டத்தால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோல் தென் ஆப்பிரிக்காவின் சைமன் ஹார்மர் சிறந்த வீரர் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டார்.

    • முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவரில் 225 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை அணி 186 ரன்னில் சுருண்டது.

    துபாய்:

    12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

    'பி' பிரி–வில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வங்கதேச அணி, இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த வங்கதேச அணி 46.3 ஓவரில் 225 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது.

    தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 49.1 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்களதேசம் 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    3 விக்கெட் வீழ்த்திய வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் இக்பால் ஹூசைன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    நாளை நடைபெறும் முதலாவது அரை இறுதியில் இந்தியா- இலங்கை மோதுகின்றன. மற்றொரு அரை இறுதியில் வங்கதேசம்-பாகிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன.

    ×