என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ரெட்மி நிறுவனத்தின் புதிய நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
ரெட்மியின் புதிய நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.6 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், வேரியபில் ரிப்ரெஷ் ரேட், 16 எம்.பி. செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 810 சிப்செட், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ரெட்மி நோட் 11டி 5ஜி அம்சங்கள்
- 6.6 இன்ச் 1080x2400 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர்
- மாலி-ஜி57 எம்.சி.2 ஜி.பி.யு.
- 6 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
- 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 50 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
- 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
- 16 எம்.பி. செல்பி கேமரா
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. டைப் சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்டார்டஸ்ட் வைட், அக்வாமரைன் புளூ மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 16,999, 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 17,999, 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அறிமுக சலுகையாக ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ. 1000 தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தள்ளுபடி சில வாரங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. கூடுதலாக வங்கி சார்ந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் சேவையில் பேமண்ட்ஸ் சேவையை 4 கோடி பேருக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் தனது பேமண்ட்ஸ் சேவையை 4 கோடி பேருக்கு நீட்டிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. யு.பி.ஐ. சார்ந்து இயங்கும் பேமண்ட் சேவைக்கு இந்திய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் (என்.பி.சி.ஐ.) அனுமதி அளித்து இருக்கிறது. என்.பி.சி.ஐ. வலைதளத்தில் மூன்றாம் தரப்பு செயலிகள் பட்டியலில் தற்போது வாட்ஸ்அப் இடம்பெற்றுள்ளது.
என்.பி.சி.ஐ. வலைதள விவரங்களின் படி வாட்ஸ்அப் நிறுவனம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டவைகளை தனது பேமண்ட் சேவை வழங்குனராக பயன்படுத்த இருக்கிறது. பேமண்ட்ஸ் அம்சம் மூலம் வாட்ஸ்அப், கூகுள் பே மற்றும் போன் பே போன்ற சேவைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

வாட்ஸ்அப் பேமண்ட்ஸ் அம்சம் கொண்டு பயனர்கள் செயலியினுள் யு.பி.ஐ. உருவாக்கிக் கொள்ளலாம். பின் வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை பகிர்வதை போன்றே மிக எளிமையாக பணம் அனுப்பலாம். தற்போது யு.பி.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த என்.பி.சி.ஐ. வலைதளத்தில் மொத்தம் 21 மூன்றாம் தரப்பு செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான ஜாக் டார்சி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப அதிகாரியான பராக் அகர்வால் அந்நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியரான பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.-யில் படித்தவர் ஆவார்.
"நிறுவனர்களிடம் இருந்து அடுத்தக்கட்டத்திற்கு செல்ல நிறுவனம் தயாராகி விட்டதால், நான் ட்விட்டரில் இருந்து விலக முடிவு செய்து இருக்கிறேன். ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியாக பராக் மிகச்சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன். கடந்த பத்து ஆண்டுகளில் இவரின் பணி அபாரமாக இருந்துள்ளது. இது அவர் தலைமை வகிப்பதற்கான நேரம்," என ஜாக் டார்சி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Deep gratitude for @jack and our entire team, and so much excitement for the future. Here’s the note I sent to the company. Thank you all for your trust and support 💙 https://t.co/eNatG1dqH6pic.twitter.com/liJmTbpYs1
— Parag Agrawal (@paraga) November 29, 2021
பராக் அகர்வால் 2011 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் இணைந்தார். 2017 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப அதிகாரியாக பதவியேற்றார். முன்னதாக இவர் யாஹூ, மைக்ரோசாப்ட் மற்றும் ஏ.டி. அண்ட் டி லேப்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஜி31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனினை மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்தது. இதில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா, 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பிளாஸ்டிக் பேக் கொண்டிருக்கும் மோட்டோ ஜி31 மாடலில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 20 வாட் சார்ஜர் வழங்கப்பட்டு இருக்கிறது.

மோட்டோ ஜி31 அம்சங்கள்
- 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் ஓ.எல்.இ.டி. மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
- ஏ.ஆர்.எம். மாலி-ஜி52 ஜி.பி.யு.
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11
- 50 எம்பி குவாட்பிக்சல் பிரைமரி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா / டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 13 எம்பி செல்பி கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- கைரேகை சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 5,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 20 வாட் சார்ஜர்
மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன் மெட்டோரிட் கிரே மற்றும் ஸ்டெர்லிங் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 12,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 14,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 6 ஆம் தேதி துவங்குகிறது.
குவால்காம் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
குவால்காம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சிப்செட்-ஐ விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய பிராசஸர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 என அழைக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடல் புதிய பிரசாஸர் கொண்டு அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் சியோமி மற்றும் மோட்டோரோலா நிறுவன மாடல்களில் இந்த பிரசாஸர் முதலில் வழங்கப்படும் என கூறப்பட்டது.

முந்தைய மாடல்களை போன்று இல்லாமல், ஒன்பிளஸ் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்கள் மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன.
அம்சங்களை பொருத்தவரை புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் வளைந்த குவாட் ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 8 ஜிபி அல்லது 12 ஜிபி ரேம், 128 ஜிபி அல்லது 256 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி வைடு சென்சார், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 12, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் பிரபல ஸ்மார்ட்போன் சீரிஸ் விற்பனை நிரந்தரமாக நிறுத்தப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு கேலக்ஸி நோட் சீரிஸ் மாடலை அறிமுகம் செய்யவே இல்லை. இந்த ஆண்டுக்கு பதில் 2022 ஆம் ஆண்டு புதிய நோட் சீரிஸ் மாடலை அறிமுகம் செய்வதாக கூறப்பட்டது. எனினும், இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென் கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை நிரந்தரமாக நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. நோட் சீரிஸ் மாடல்களுக்கு மாற்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மீது கவனம் செலுத்த சாம்சங் முடிவு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஸ்மார்ட்போன் உற்பத்தி திட்டத்தில் இருந்து கேலக்ஸி நோட் சீரிஸ் நீக்கப்பட்டு இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது என தற்போது வெளியாகி இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2019 ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனம் 1.27 கோடி நோட் சீரிஸ் மாடல்களை விற்பனை செய்து இருந்தது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 97 லட்சம் நோட் சீரிஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டன. 2022 ஆண்டு கேலக்ஸி இசட் சீரிஸ் விற்பனை இலக்கு 1.3 கோடி யூனிட்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பேடிஎம் நிறுவன வருவாய் அறிக்கை வெளியாகி இருக்கிறது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் பேடிஎம் நிறுவனம் இண்டர்நெட் மூலம் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும் வசதி, விமான டிக்கெட், ரெயில் டிக்கெட், பஸ் டிக்கெட் போன்றவற்றுக்கு கட்டணம் செலுத்தும் வசதி, செல்போன், டி.டி.ஹெச். போன்ற சேவைகளை ரீசார்ஜ் செய்யும் வசதிகளை வழங்கி வருகிறது.
பேடிஎம் நிறுவனம் 2021-2022 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
பேடிஎம் நிறுவனத்துக்கு இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் 64 சதவீதம் வருவாய் உயர்ந்து இருக்கிறது. இதன் மூலம் ரூ.1,090 கோடி வருவாய் கிடைத்துள்ளது. யு.பி.ஐ. அல்லாத பண பரிவர்த்தனை சேவை இந்த காலாண்டில் 54 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நிதி சேவை மற்றும் இதர வருவாய் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

பரிவர்த்தனை மற்றும் நிதியில் சேவைப்பிரிவு மூலம் வருமானம் 69 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து ரூ.842.60 கோடியாக உயர்ந்துள்ளது.
இதேபோன்று வர்த்தகம் உள்ளிட்ட வேறு சேவைப்பிரிவு வருமானம் 47 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.243.80 கோடியாக உள்ளது.
பை நவ் பே லேட்டர் (இப்போது வாங்குங்கள், பணத்தை பின்னர் செலுத்துங்கள்) என்ற திட்டத்தின் மூலம் நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை பேடிஎம் அறிமுகம் செய்து இருந்தது. இந்த திட்டத்தின் மூலம் இரண்டாவது காலாண்டில் 28 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இது, கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 714 சதவீதம் அதிகம் ஆகும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை திடீரென உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது. தற்போதைய விலை உயர்வை தொடர்ந்தும் ரிலையன்ஸ் ஜியோ கட்டணங்கள் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா கட்டணங்களை விட குறைவாகவே இருக்கிறது.
புதிய விலை உயர்வை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் சலுகை துவக்க விலை ரூ. 91 ஆக மாறி இருக்கிறது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் சலுகை விலை 21.3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மற்ற சலுகை விலை 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 155 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவன சலுகை விலை ரூ. 179 என துவங்குகிறது. இந்த பிரீபெயிட் சலுகைகள் சந்தையில் சிறப்பான அனுபவத்தை வழங்கும் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்து இருக்கிறது. புதிய விலை டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
உலக அளவில் இந்தியாவில்தான் மக்கள் செல்போன் சேவைக்கு குறைவாக செலவிடுவதாக ஏர்டெல் தலைவர் அனில்மிட்டல் கூறியுள்ளார்.
பார்தி ஏர்டெல் தொலை தொடர்பு நிறுவனம் அதன் ‘பிரீ பெய்டு’ சேவைக்கான செல்போன் கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.
28 நாட்களுக்கு ரூ.79 என்று இருக்கும் கட்டணத்தை ரூ.99 என்றும், ரூ.149 கட்டணத்தை ரூ.179 எனவும், ரூ.219 கட்டணத்தை ரூ.265 ஆகவும் உயர்த்தியுள்ளது. 1 வருடத்துக்கு ரூ.2,498 என்று இருக்கும் கட்டணத்தை ரூ.2,999 ஆக அதிகரித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு வருகிற 26-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

அதாவது 20 முதல் 25 சதவீதம் வரை கட்டண அறிவிப்பை வோடபோன் ஐடியா நிறுவனம் அதிகரித்துள்ளது. அன்லிமிடெட் அழைப்புகள் குறித்த திட்டங்களில் 20 சதவீதம் முதல் 23 சதவீதம் என்ற அளவுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
இது தொடர்பாக வோடபோன் ஐடியா தலைமை அதிகாரி ரவீந்தர் தக்கர் கூறுகையில், “செல்போன் சேவை உயிர்ப்புடன் இருக்க கட்டண உயர்வு அவசியம்” என்றார்.
ஏர்டெல் தலைவர் அனில்மிட்டல் கூறுகையில், “உலக அளவில் இந்தியாவில்தான் மக்கள் செல்போன் சேவைக்கு குறைவாக செலவிடுகிறார்கள். சில மேற்கத்திய நாடுகளில் செல்போன் சேவைக்கு ஒவ்வொரு வாடிக்கையாளரும் மாதம் ரூ.5 ஆயிரம் வரை செலவழிக்கிறார்கள்.
இந்தியாவில் இந்த தொகை ரூ.200 முதல் ரூ.300 வரையாவது இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 200 ரூபாய்க்கு கீழ் மாதாந்திர கட்டணம் வைத்திருந்தால் யாரும் இந்த துறையில் நீடிக்க முடியாது என்றார்.
28 நாட்களுக்கு ரூ.79 என்று இருக்கும் கட்டணத்தை ரூ.99 என்றும், ரூ.149 கட்டணத்தை ரூ.179 எனவும், ரூ.219 கட்டணத்தை ரூ.265 ஆகவும் உயர்த்தியுள்ளது. 1 வருடத்துக்கு ரூ.2,498 என்று இருக்கும் கட்டணத்தை ரூ.2,999 ஆக அதிகரித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு வருகிற 26-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த நிலையில் ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனத்தில் 28 நாட்கள் கொண்ட குறைந்தபட்ச கட்டணம் ரூ.79 ஆக உள்ளது. அது ரூ.99 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.149 கட்டணம் ரூ.179 ஆகவும், ரூ.219 கட்டணம் ரூ.265 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 1 வருடத்துக்கான கட்டணம் ரு.2,399-ல் இருந்து ரூ.2,899 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது 20 முதல் 25 சதவீதம் வரை கட்டண அறிவிப்பை வோடபோன் ஐடியா நிறுவனம் அதிகரித்துள்ளது. அன்லிமிடெட் அழைப்புகள் குறித்த திட்டங்களில் 20 சதவீதம் முதல் 23 சதவீதம் என்ற அளவுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
இது தொடர்பாக வோடபோன் ஐடியா தலைமை அதிகாரி ரவீந்தர் தக்கர் கூறுகையில், “செல்போன் சேவை உயிர்ப்புடன் இருக்க கட்டண உயர்வு அவசியம்” என்றார்.
ஏர்டெல் தலைவர் அனில்மிட்டல் கூறுகையில், “உலக அளவில் இந்தியாவில்தான் மக்கள் செல்போன் சேவைக்கு குறைவாக செலவிடுகிறார்கள். சில மேற்கத்திய நாடுகளில் செல்போன் சேவைக்கு ஒவ்வொரு வாடிக்கையாளரும் மாதம் ரூ.5 ஆயிரம் வரை செலவழிக்கிறார்கள்.
இந்தியாவில் இந்த தொகை ரூ.200 முதல் ரூ.300 வரையாவது இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 200 ரூபாய்க்கு கீழ் மாதாந்திர கட்டணம் வைத்திருந்தால் யாரும் இந்த துறையில் நீடிக்க முடியாது என்றார்.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘கிரிசில்’ கூறுகையில், அடுத்த ஆண்டு நடைபெற வாய்ப்புள்ள 5ஜி ஏலத்தில் அலைக்கற்றைகளை ஏலம் எடுக்க செல்போன் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இதன் காரணமாக கட்டண உயர்வை அறிவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்... கொரோனா 3வது அலை வந்தாலும் மோசமானதாக இருக்காது- மருத்துவ நிபுணர்கள் கணிப்பு
கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களும் கூகுளின் சொந்த டென்சார் சிப்செட் கொண்டிருக்கின்றன. புதிய பிக்சல் 6 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகாது என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், கூகுள் பிக்சல் 5ஏ போன்றே பிக்சல் 6ஏ மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. தோற்றத்தில் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் பிக்சல் 6 சீரிஸ் போன்றே காட்சியளிக்கின்றன.
புதிய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனில் இரண்டு கேமரா சென்சார்கள், ஒற்றை எல்.இ.டி. பிளாஷ், பவர் பட்டன், வால்யூம் ராக்கர்கள் உள்ளன. இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.2 இன்ச் பிளாட் ஓ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, 12.2 எம்பி லென்ஸ், 16 எம்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.
இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி இந்தியா நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து 5ஜி சோதனைகளை நடத்தி வருகிறது.
ரெட்மி இந்தியா நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து 5ஜி சோதனையை நடத்தி வருகிறது. 5ஜி சோதனை ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் 30 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது.
இரு நிறுவனங்கள் இணைந்து புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 5ஜி தொழில்நுட்பத்தை பல்வேறு நிலைகளில் சோதனை செய்ததாக தெரிவித்துள்ளன. இதன் மூலம் பயனர்களுக்கு மேம்பட்ட 5ஜி அனுபவம் கிடைக்கும் என இரு நிறுவனங்களும் தெரிவித்து இருக்கின்றன.

புதிய ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தத்தில் ஏழு 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும். தற்போதைய சோதனைகளில் அதிவேக டவுன்லோட் வேகம் கிடைத்ததாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. இது ஏற்கனவே சீன சந்தையில் ரெட்மி நோட் 11 5ஜி பெயரிலும், ஐரோப்பிய சந்தையில் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி பெயரிலும் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
நாய்ஸ் நிறுவனத்தின் புதிய எக்ஸ் பிட்1 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
நாய்ஸ் எக்ஸ் பிட்1 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேசான் இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை நவம்பர் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. புதிய நாய்ஸ் எக்ஸ் பிட்1 செவ்வக வடிவம் கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் ஒற்றை பட்டன், சிலிகான் ஸ்டிராப் உள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் வெறும் 30 கிராம் எடை கொண்டிருக்கிறது. மெட்டல் பினிஷ் கொண்டிருக்கும் நாய்ஸ் எக்ஸ் பிட் 1 மாடலில் எஸ்.பி.ஓ.2 மாணிட்டர் உள்ளது. மேலும் இதில் உள்ள பேட்டரி முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.

புதிய நாய்ஸ் எக்ஸ் பிட்1 ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 5,999 ஆகும். எனினும், சிறப்பு சலுகையின் கீழ் இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. நாய்ஸ் எக்ஸ் பிட்1 சில்வர் மற்றும் பிளாக் மெட்டல் பிரேம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வைட் மற்றும் பிளாக் சிலிகான் ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.






