என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை மாற்றியமைத்து இருக்கிறது.


    ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை 25 சதவீதம் வரை உயர்த்தி இருக்கிறது. தற்போது ஏர்டெல் பிரீபெயிட் சலுகை கட்டணங்கள் விலை ரூ. 99 முதல் துவங்குகின்றன. முன்னதாக ஏர்டெல் தனது ரூ. 49 சலுகையை நீக்கியது. இந்த சலுகையில் எஸ்.எம்.எஸ். பலன்கள் வழங்கப்படவில்லை.

    எஸ்.எம்.எஸ். பலன்கள் அடங்கிய சலுகை கட்டணங்கள் தற்போது ரூ. 179 முதல் துவங்குகின்றன. முன்னதாக இந்த சலுகை விலை ரூ. 149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ. 219 சலுகையின் விலை தற்போது ரூ. 265 என மாறி இருக்கிறது. 

     கோப்புப்படம்

    ஏர்டெல் நிறுவனத்தின் பிரபல பிரீபெயிட் சலுகையான ரூ. 598 சலுகை கட்டணம் தற்போது ரூ. 719 என மாறி இருக்கிறது. இதில் பயனர்கள் 84 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா பெற முடியும். மற்ற பிரீபெயிட் சலுகை கட்டணங்கள் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    புதிய விலை பட்டியல் நவம்பர் 26 ஆம் தேதி அமலுக்கு வரும் என ஏர்டெல் தெரிவித்து உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் இதுவரை சலுகை கட்டணங்கள் விலையை உயர்த்துவது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

    சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் சிறப்பான செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 4 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் இசட் ப்ளிப் 3 மாடல்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களும் சர்வதேச சந்தையில் அமோக வரவேற்பை பெற்றன.

    இந்த நிலையில், சாம்சங் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி இசட் போல்டு 4 மற்றும் இசட் ப்ளிப் 4 மாடல்களின் அம்சங்கள் தற்போதைய மாடல்களில் இருப்பதை விட மேம்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     கேலக்ஸி இசட் ப்ளிப் 3

    புதிய கேலக்ஸி இசட் போல்டு 4 மாடலில் மேம்பட்ட அண்டர் டிஸ்ப்ளே கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இரு செல்பி கேமராக்கள் வழங்கப்பட இருக்கின்றன. ஒரு சென்சார் டிஸ்ப்ளேவின் மேல் மற்றொரு சென்சார் டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. 

    இத்துடன் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களின் எடை முன்பை விட குறைவாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இரு மாடல்களும் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
    யூடியூப் ஷார்ட்ஸ் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

    கூகுள் ஃபார் இந்தியா 2021 நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை கூகுள் வெளியிட்டது. கடந்த ஆண்டு யூடியூப் ஷார்ட்ஸ் பீட்டா வடிவில் வெளியிடப்பட்டது. தற்போது யூடியூப் ஷார்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. 

     யூடியூப் ஷார்ட்ஸ்

    யூடியூப் ஷார்ட்ஸ் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் டிக்டாக் போன்றே செயல்படுகிறது. இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது முதல் பல்வேறு குறு வீடியோ உருவாக்கும் செயலிகளுக்கு கடும் வரவேற்பு கிடைத்து வருகிறது. டிக்டாக் தடையை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. 

    உலகளவில் யூடியூப் ஷார்ட்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்தியாவில் 1500 கோடிக்கும் அதிக பார்வையாளர்களை யூடியூப் ஷார்ட்ஸ் பெற்று வருகிறது. வரும் நாட்களில் யூடியூப் ஷார்ட்ஸ் பல்வேறு புது அம்சங்களை பெற இருக்கிறது. 
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் ஐபோன் 14 சீரிஸ் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. 2022 செப்டம்பர் மாத வாக்கில் ஆப்பிள் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 மேக்ஸ் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் யு.எஸ்.பி. 2.0 வேகத்தில் லைட்னிங் போர்ட் வழங்கி வருகிறது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

     ஐபோன்

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் ப்ரோ-ரெஸ் வீடியோக்களை படமாக்கும் போது அதிகளவு ஸ்டோரேஜை எடுத்துக் கொள்கின்றன. இதனால் ஐபோன்களில் இருந்து ப்ரோ-ரெஸ் வீடியோக்களை கணினியில் டிரான்ஸ்பர் செய்ய அதிக நேரம் ஆகிறது. 

    லைட்னிங் போர்ட்-க்கு மாற்றாக யு.எஸ்.பி. டைப் சி பயன்படுத்தினால் சிறிது நேரமே ஆகும். ஐபோன்கள் உள்பட அனைத்து சாதனங்களிலும் யு.எஸ்.பி. சி போர்ட் வழங்க ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தி வருகிறது. புதிய விதிகளை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பட்சத்தில் நிறுவனங்கள் அபராதம் செலுத்த நேரிடும். இதன் காரணமாக ஆப்பிள் புதிய ஐபோன் மாடல்களில் யு.எஸ்.பி. சி போர்ட் வழங்கலாம் என தெரிகிறது.
    ரியல்மி நிறுவனத்தின் வாட்ச் 2 விரைவில் புதிய நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ரியல்மி நிறுவனம் சில மாதங்களுக்கு முன் ரியல்மி வாட்ச் 2 மாடலை அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் அறிமுகம் செய்தது. அப்போது இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக் எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்வாட்ச் கோல்டு நிறத்தில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ரியல்மி வாட்ச் 2 கோல்டு நிற வேரியண்ட் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என சந்தை வல்லுநரான முகுல் ஷர்மா தெரிவித்து இருக்கிறார். இந்த ஸ்மார்ட்வாட்ச் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த ஆண்டு இறுதியில் இந்த வாட்ச் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    ரியல்மி வாட்ச் 2

    ரியல்மி வாட்ச் 2 அம்சங்கள்

    - 1.4 இன்ச் 320x320 பிக்சல் எல்.சி.டி. ஸ்கிரீன்
    - 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
    - இதய துடிப்பு சென்சார், ரோட்டார் வைப்ரேஷன் மோட்டார்
    - ப்ளூடூத் 5.0
    - 90 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
    - இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஓ2 சென்சார்
    - நோட்டிபிகேஷன்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (ஐ.பி.68)
    - 315 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 6 சீரிஸ் மாடல்களின் பாஸ்ட் சார்ஜிங் வசதி பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வழங்கி இருக்கிறது.


    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் அதிகளவு பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. தற்போது கூகுள், தனது புதிய பிளாக்‌ஷிப் மாடல்களில் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை என அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.

    இதுகுறித்து கூகுள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. பிக்சல் 6 சீரிஸ் மாடல்களுடன் சார்ஜர் வழங்கப்படுவதில்லை. எனினும், கூகுள் 30 வாட் பாஸ்ட் சார்ஜரை தனியாக விற்பனை செய்து வருகிறது. இதையடுத்து பலரும் புதிய பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதாக நினைத்துக் கொண்டனர்.

     கூகுள் பிக்சல் 6

    தற்போது கூகுள் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், புதிய பிக்சல் 6 மாடலில் 21 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும், பிக்சல் 6 ப்ரோ மாடலில் 23 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது. 

    "பேட்டரி செல், சிஸ்டம் டிசைன், டெம்பரேச்சர், சிஸ்டம் யூசேஜ் மற்றும் ஸ்டேட் ஆப் சார்ஜ் உள்ளிட்ட காரணிகளே சார்ஜிங் ரேட்டை நிர்ணயிக்கிறது. எனினும், போனின் பேட்டரி குறையும் போது 30 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்துவிடும்." என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


    ரியல்மியின் புதிய ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கெண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆர்.எம்.எக்ஸ்.3301 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது. எனினும், தற்போதைய தகவல்களில் ரியல்மி ஜிடி 2 ப்ரோ மாடலில் எல்.பி.டி.டி.ஆர்.5 ரேம், யு.எப்.எஸ். 3.1 பிளாஷ் மெமரி, 6.51 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.

     ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன்

    புகைப்படங்களை எடுக்க 50 எம்பி, 8 எம்பி மற்றும் 5 எம்பி கேமரா சென்சார்கள், முன்புறம் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆட்டோபோக்கஸ், ஓ.ஐ.எஸ். மற்றும் இ.ஐ.எஸ். போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். 

    புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    சியோமி 12 அல்ட்ரா அந்நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக உருவாகி வருகிறது. எம்ஐ11 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக உருவாகி இருக்கும் சியோமி 12 அல்ட்ரா 50 எம்பி பிரைமரி கேமரா, அதிநவீன ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    முன்னதாக சியோமி 12 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி நிறுவனம் லோகி மற்றும் தார் எனும் குறியீட்டு பெயர்களில் இரு ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இவை சியோமி 12 அல்ட்ரா மற்றும் சியோமி 12 அல்ட்ரா என்ஹான்ஸ்டு பெயர்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.

     சியோமி ஸ்மார்ட்போன்

    சியோமி 12 அல்ட்ரா மாடலில் 50 எம்பி சாம்சங் ஜி.என்.5 சென்சாருன் குவாட் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. இத்துடன் 2எக்ஸ் ஜூம் வசதியுடன் 48 எம்பி கேமரா, 5 எக்ஸ் ஜூம் வசதியுடன் 48 எம்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகிறது.
    மீடியாடெக் நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் சிப்செட் அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.


    மீடியாடெக் நிறுவனம் தனது புதிய பிளாக்‌ஷிப் பிராசஸரை அறிமுகம் செய்தது. டிமென்சிட்டி 9000 என அழைக்கப்படும் புது சிப்செட் டி.எஸ்.எம்.சி.-யின் 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பிராசஸர் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

    மேலும் ஏ.ஆர்.எம். கார்டெக்ஸ்- எக்ஸ்2, ஏ710 மற்றும் ஏ510 சி.பி.யு.-க்களை பயன்படுத்தி இருக்கும் முதல் பிராசஸரும் இது தான். இந்த பிராசஸருடன் மாலி ஜி710 ஜி.பி.யு. வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் எல்.பி. டி.டி.ஆர்.5எக்ஸ் ரேம் கொண்ட உலகின் முதல் பிராசஸரும் இது தான். இது அதிகபட்சம் 7500 எம்.பி.பி.எஸ். வேகம் மற்றும் ப்ளூடூத் 5.3 வசதி கொண்டிருக்கிறது.

     மீடியாடெக் டிமென்சிட்டி 9000

    இந்த சிப்செட்டில் 1 எக்ஸ் ஏ.ஆர்.எம். கார்டெக்ஸ் எக்ஸ்2 சி.பி.யு., 3 எக்ஸ் கார்டெக்ஸ் ஏ 710 சிபியு மற்றும் 4 எக்ஸ் கார்டெக்ஸ் ஏ510 சி.பி.யு. உள்ளது. இது தற்போது இருக்கும் ஆண்ட்ராய்டு பிளாக்‌ஷிப் பிராசஸர்களைவிட 35 சதவீதம் சக்திவாய்ந்தது ஆகும். மேலும் இது 37 சதவீதம் சிறப்பான பேட்டரி திறன் வழங்குகிறது.

    இந்த பிராசஸர் 320 எம்.பி. பிரைமரி கேமராவுக்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது. மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்கள் 2022 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
    சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜி மற்றும் 5ஜி என இரு வெர்ஷன்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. அம்சங்களை பொருத்தவரை புது சாம்சங் ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச், 8 எம்பி செல்பி கேமரா கொண்டிருக்கிறது.

    இத்துடன் 50 எம்பி பிரைமரி சென்சாருடன் மூன்று கேமரா சென்சார்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. 

     சாம்சங் கேலக்ஸி ஏ12

    சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

    - 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. இன்பினிட்டி வி டிஸ்ப்ளே 
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் 
    - மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு 
    - 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. கோர் 3.1
    - டூயல் சிம் 
    - 50 எம்பி பிரைமரி கேமரா
    - அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
    - டெப்த் / மேக்ரோ கேமரா 
    - 8 எம்பி செல்பி கேமரா 
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
    மோட்டோரோலா நிறுவனத்தின் 2022 மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.


    மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.5 இன்ச் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

     மோட்டோ ஜி பவர் 2022

    புதிய மோட்டோ ஜி பவர் 2022 ஸ்மார்ட்போன் விலை 199.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 14,840 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அமெரிக்காவில் அறிமுகமாகி இருக்கும் மோட்டோ ஜி பவர் 2022 மாடலின் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
    டிசோ பிராண்டின் வாட்ச் 2 மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ரியல்மியின் துணை பிராண்டு டிசோ இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. செப்டம்பர் மாத வாக்கில் டிசோ வாட்ச் 2 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாட்ச் விற்பனை துவங்கிய முதல் 15 நாட்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானது.

    தற்போது டிசோ வாட்ச் 2 மற்றொரு மைல்கல் எட்டியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் விற்பனை துவங்கிய 40 நாட்களில் டிசோ வாட்ச் 2 மொத்தத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 

    டிசோ வாட்ச் 2

    இந்திய ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் அதிவேகமாக விற்பனையாகும் ஸ்மார்ட்வாட்ச் என்ற பெருமையை வாட்ச் 2 பெற்று இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை டிசோ வாட்ச் 2 மாடலில் 1.69 இன்ச் டி.எப்.டி. எல்.சி.டி. டச் ஸ்கிரீன், 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
    ×