என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கும் புதிய திட்டத்தில் பயனர்கள் தங்களின் ஐபோனை தாங்களாகவே சரிசெய்து கொள்ளலாம்.


    ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக செல்ப் சர்வீஸ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் தங்களின் ஆப்பிள் சாதனங்களை சர்வீஸ் செண்டர் செல்லாமல் தாங்களாகவே சரிசெய்து கொள்ளலாம்.

    இந்த திட்டம் ஆப்பிள் அதிகாரப்பூர்வ உதிரிபாகங்கள், டூல்கள், மேனுவல் உள்ளிட்டவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. முதற்கட்டமாக இந்த திட்டம் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களுக்கு செயல்படுத்தப்பட இருக்கிறது. 

      ஆப்பிள் செல்ப் சர்வீஸ்

    முதலில் பயனர்களுக்கு ரிப்பேர் மேனுவல் வழங்கப்படும். இதனை வாசித்து சாதனத்தை சரி செய்யும் நம்பிக்கை பயனருக்கு ஏற்படும் பட்சத்தில், அவர்கள் ஆப்பிள் அதிகாரப்பூர்வ உதிரிபாகங்களை வாங்க முன்பதிவு செய்யலாம். சரி செய்த பின் பாழாகி போன உதிரிபாகங்களை மறுசுழற்சி செய்ய பயனர்கள் ஆப்பிளிடம் திரும்ப வழங்கலாம்.

    ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களின் டிஸ்ப்ளே, பேட்டரி மற்றும் கேமரா சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய வைக்க ஆப்பிள் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 200 தனித்தனி உதிரிபாகங்களை வாங்கிட முடியும். ஐபோனை தொடர்ந்து எம்1 மேக் மாடல்களை சரிசெய்யும் வசதியையும் ஆப்பிள் வழங்க இருக்கிறது.

    வெளிப்புறம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட புது ஸ்மார்ட்போனினை ரியல்மி நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
      

    அண்டர் டிஸ்ப்ளே கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பரவலாக வெளியாக துவங்கிவிட்ட நிலையில், பல்வேறு நிறுவனங்களும் இந்த தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் ஈடுபட துவங்கி இருக்கின்றன. அந்த வரிசையில், தற்போது ரியல்மி களமிறங்கி இருப்பதாக தெரிகிறது. 

    ரியல்மி நிறுவன அதிகாரியின் பதிவில் இதனை உணர்த்தும் தகவல்கள் இடம்பெற்று இருக்கின்றன. அடுத்த ஆண்டு அண்டர் ஸ்கிரீன் கேமரா மற்றும் மடிக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் புதிய உச்சத்தை தொடும் என ரியல்மி நிறுவன அதிகாரி பதிவிட்டுள்ளார். ரியல்மி இந்த தொழில்நுட்பம் அடங்கய சாதனங்களை அறிமுகம் செய்வதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

     கோப்புப்படம்

    ரியல்மியின் தாய் நிறுவனமான ஒப்போ வெளிப்புறம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரியல்மி நிறுவனமும் இதை போன்ற சாதனத்தை உருவாக்கலாம் என கூறப்படுகிறது. 

    ஒருவேளை ஒப்போ மற்றும் ரியல்மி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பட்சத்தில், இரு நிறுவனங்களும் ஏற்கனவே மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் ஹூவாய், சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்கள் வரிசையில் இடம்பிடிக்கும்.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.


    மோட்டோ வாட்ச் 100 பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகி இருக்கிறது. இதனை இ-பை-நௌ எனும் நிறுவனம் உற்பத்தி செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மோட்டோ வாட்ச் ஓ.எஸ். கொண்டிருக்கிறது. 

    அம்சங்களை பொருத்தவரை புதிய மோட்டோ வாட்ச் 100 மாடலில் 1.3 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், 42 எம்.எம். அலுமினியம் கேசிங், இதய துடிப்பு மற்றும் எஸ்.பி.ஓ.2 மாணிட்டரிங், 26 ஸ்போர்ட் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

     மோட்டோ வாட்ச் 100

    இத்துடன் 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், ஜி.பி.எஸ்., பெய்டூ, ப்ளூடூத் 5 எல்.இ. போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மொத்த எடை 45.8 கிராம் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த ஸ்மார்ட்வாட்ச் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    மோட்டோ வாட்ச் 100 மாடல் கிளேசியர் சில்வர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 7,449 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இந்த வாட்ச் மோட்டோவாட்ச் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்பேஸ் கோ 3 லேப்டாப் மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.


    மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சர்பேஸ் கோ 3 மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 10.25 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிக்ஸ்டாண்டு, 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், சர்பேஸ் பென் வசதி, விண்டோஸ் 11 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    544 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய சர்பேஸ் கோ 3 8.3 எம்.எம். அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் இன்டெல் யு.ஹெச்.டி. கிராபிக்ஸ் 615, 4 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம், 64 ஜிபி இ.எம்.எம்.சி அல்லது 128 ஜிபி எஸ்.எஸ்.டி., வைபை 6 மற்றும் ப்ளூடூத் 5 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

     மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ 3

    இந்தியாவில் புதிய சர்பேஸ் கோ 3 4 ஜிபி ரேம், 64 ஜிபி இ.எம்.எம்.சி. ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ. 42,999 என துவங்குகிறது. இன்டெல் கோர் ஐ3, 8 ஜிபி ரேம், 128 ஜிபி எஸ்.எஸ்.டி. கொண்ட மாடலின் விலை ரூ. 62,999 ஆகும். இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நவம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது. தற்போது இதற்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 மாடல் அதிரடி தள்ளுபடியில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் ஐபோன் 13 மினி, ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் உள்ளன. புதிய ஐபோன் 13 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து பழைய ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் விலை பண்டிகை காலக்கட்டத்தின் போது அதிரடியாக குறைக்கப்பட்டன. 

    அதிக விலை காரணமாக ஐபோன் 13 மாடலை வாங்க பெரும்பாலானோர் ஆர்வம் செலுத்தாமல் இருந்தனர். இந்த நிலையில், புதிய ஐபோன் 13 வாங்க சரியான நேரம் வந்துள்ளது. தற்போது ஐபோன் 13 மாடல் ரூ. 24 ஆயிரம் வரை குறைந்த விலையில் கிடைக்கிறது.

     ஐபோன் 13

    ஆப்பிள் விற்பனையாளரான ஐஸ்டோர் இந்தியா ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு அசத்தல் கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் தள்ளுபடி வழங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 6 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை மாத தவணையில் ஐபோனை வாங்குவோருக்கும் வழங்கப்படுகிறது.

    இத்துடன் பழைய ஐபோன்களை எக்சேன்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரை தள்ளுபடி பெற முடியும். அந்த வகையில் ஐபோன் 13 மாடலை கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் சலுகை சேர்த்து ரூ. 55,900 விலையில் வாங்கிடலாம்.
    சியோமியின் ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மாரட்போனிற்கு ஒருவழியாக புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.


    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கி வருகிறது. முன்னதாக இதே அப்டேட் சீன சந்தையில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. சியோமி ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு அப்டேட் அதிகளவு புது அம்சங்களை வழங்குவதில்லை. 

    இதனால் புது அப்டேட் ரெட்மி நோட் 8 மாடலில் புது அம்சங்களை கொண்டுவராது. இந்த அப்டேட் 12.0.1.RCOINXM எனும் வெர்ஷன் நம்பர் கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் இந்த அப்டேட் அனைவருக்கும் கிடைக்கும். புது அப்டேட் செக்யூரிட்டி பேட்ச் உடன் வழங்கப்படுகிறது.

     ரெட்மி நோட் 8

    ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் எம்.ஐ.யு.ஐ. 12.5 அப்டேட் பெற இருக்கிறது. அந்த வகையில், இந்த அப்டேட் வெளியாகும் போது ரெட்மி நோட் 8 மாடலில் ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5 வழங்கும் அம்சங்கள் கிடைக்கும்.

    பொறியியல் மாணவர் மறு உருவாக்கம் செய்த ஐபோன் மாடல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.


    யு.எஸ்.பி. சி கொண்ட உலகின் முதல் ஐபோன் மாடல் 80 ஆயிரத்து 1 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 59,51,074) விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. பொறியியல் மாணவர் ஒருவர் பழைய ஐபோன் எக்ஸ் மாடலை மறுஉருவாக்கம் செய்து அதில் யு.எஸ்.பி. சி போர்ட்-ஐ பொருத்தினார்.

    நல்ல வேளையாக ஐபோனும் ஆப்பிள் தயாரித்ததை போன்றே சரியாக இயங்குகிறது. மாணவர் முயற்சியில் யு.எஸ்.பி. சி கொண்ட உலகின் முதல் ஐபோன் என்ற பெருமையுடன், இந்த மாடல் ஏலத்தில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. முன்னதாக இதுபோன்ற மாடிபிகேஷன்கள் பலமுறை ஐபோன்களில் செய்யப்பட்டு இருக்கின்றன.

     ஐபோன்

    எனினும் பாஸ்ட் சார்ஜிங், டேட்டா டிரான்ஸ்பர், ஃபார்ம் ஃபேக்டர் மற்றும் இதர அம்சங்களை இதுவரை யாரும் வெற்றிகரமாக மாற்றியமைக்கவில்லை. அந்த வரிசையில், யு.எஸ்.பி. சி மாட் கொண்ட இந்த ஐபோன்- டேட்டா டிரான்ஸ்பர், பாஸ்ட் சார்ஜிங் மற்றும் இதர பயன்களை வழங்குகிறது. தோற்றத்திலும் இந்த ஐபோனில் எந்த வித்தியாசமும் ஏற்படவில்லை.

    பார்ப்பதற்கும் இது வழக்கமான ஐபோன் எக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. இதில் லைட்னிங் போர்ட்-க்கு மாற்றாக யு.எஸ்.பி. சி போர்ட் பொருத்தப்பட்டு இருக்கிறது. "யு.எஸ்.பி. சி ஐபோனினை ஆப்பிள் வெளியிட காத்திருந்தேன். பொருத்தவரை போதும் என நினைத்து எனக்கென நானே ஒன்றை உருவாக்கி கொண்டேன்," என பொறியியலில் முதுகலை பட்டம் பயின்று வரும் கென் பிலோயல் தெரிவித்தார். 

    சியோமி நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்படுகிறது.


    சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் அளவில் சிறியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    முன்னதாக ஐபோன் 12 மினி அறிவிக்கப்பட்டதும் சியோமி இதேபோன்ற மாடலை வெளியிட திட்டமிட்டது. எனினும், அசுஸ் நிறுவனம் சென்போன் 8 அறிமுகம் செய்து சியோமியை பின்னுக்கு தள்ளியது. இதைத் தொடர்ந்து எல்3 மற்றும் எல்3ஏ எனும் மாடல் நம்பர்கள் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள் கடந்த ஆண்டு வெளியாகின. 

     சியோமி ஸ்மார்ட்போன்

    சியோமி நீண்ட காலமாக உருவாக்கி வரும் இரு ஸ்மார்ட்போன்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் எல்3 மாடல் நம்பர் கொண்டு உருவாகி வரும் ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது.

    சியோமியின் எல்3 மற்றும் எல்3ஏ மாடல்கள் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என தெரிகிறது. சமீபத்தில் ரெட்மி நிறுவன பொது மேலாளர் லு வெய்பிங் சிறிய ஸ்கிரீன் கொண்ட பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் பற்றி வெய்போவில் பேசியிருந்தார்.
    கூகுள் நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


    கூகுள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் 6 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகமாகும் என கூறப்பட்டது. பின் இதன் வெளியீடு 2021 நான்காவது காலாண்டில் துவங்கும் என தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை ரத்து செய்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    டிஸ்ப்ளே வினியோக பிரிவை சேர்ந்த ராஸ் யங், பிக்சல் போல்டு மாடலின் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்களின் முன்பதிவை கூகுள் ரத்து செய்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார். அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வரை இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் வாய்ப்புகள் குறைவு தான் என்றும் அவர் தெரிவித்தார்.

     கூகுள் ஸ்மார்ட்போன்

    டேப்லெட் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கென பிரத்யேக ஆண்ட்ராய்டு 12எல் ஓ.எஸ். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமாக இருக்கிறது. இதன் காரணமாக பிக்சல் போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனும் இதே காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என கூறப்பட்டது. இதை உணர்த்தும் குறியீடுகளும் கூகுள் கேமரா செயலியில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனின் மற்றொரு வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனினை (6ஜிபி+128ஜிபி) இந்தியாவில் ரூ. 21,999 துவக்க விலையில் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி+128ஜிபி மாடல் வெளியாகி இருக்கிறது. புதிய வேரியண்ட் விலை ரூ. 23,499 ஆகும். 

    இந்த வேரியண்ட் ஆசம் பிளாக், ஆசம் புளூ மற்றும் ஆசம் வைலட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் வலைதளம், முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி ஏ32

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ32 மாடலில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி யு டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3, புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 5 எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
    ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்குகிறது.


    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 249 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு 500 எம்.பி. கூடுதல் டேட்டா வழங்கி வருகிறது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். 

    தற்போது இதன் தினசரி டேட்டா அளவில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வோடபோன் ஐடியா நிறுவனம் இதே விலை கொண்ட சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏர்டெல் தற்போது வாடிக்கையாளர்களுக்கு சற்றே கூடுதல் டேட்டா வழங்கி வருகிறது. 

     ஏர்டெல்

    கூடுதல் டேட்டாவினை பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதே சலுகையில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் டிரையல் ஒரு மாதத்திற்கும், ஷா அகாடமி சந்தா ஒரு வருடத்திற்கும், இலவச ஹலோ டியூன் சந்தா, வின்க் மியூசிக் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
    சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்தது.


    சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 30 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இது ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

    இதே ஸ்மார்ட்போன் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி பெயரில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதன் தோற்றத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.6 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

    ரெட்மி நோட் 11டி 5ஜி

    இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், 50 எம்பி+8 எம்பி பிரைமரி கேமரா சென்சார்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிஸ்டீரியஸ் பிளாக், மில்கிவே புளூ மற்றும் மிண்ட் கிரீன் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. 
    ×