என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய லேப்டாப் அறிமுக விவரங்கள் வெளியாகி உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோபுக் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் மீண்டும் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்ட லேப்டாப் பிரிவில் ஜியோ களமிறங்குகிறது. முந்தைய ஜியோபோன் நெக்ஸ்ட் போன்றே ஜியோபுக் மாடலும் குறைந்த விலையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஜியோபுக் மாடல் எண்ட்ரி-லெவல் அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. முன்னதாக இந்த லேப்டாப் அம்சங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. அதன்படி புதிய ஜியோபுக் என்.பி.112எம்.எம். எனும் குறியீட்டு பெயர் கொண்டு உருவாகி வருகிறது. இந்த லேப்டாப் மீடியாடெக் எம்.டி.8788 பிராசஸர் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த லேப்டாப் புல் ஹெச்.டி. ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு சார்ந்த ஜியோ ஓ.எஸ்., டூயல் பேண்ட் வைபை, 4ஜி எல்.டி.இ. போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஜியோபுக் அம்சங்கள் சார்பில் இதுவரை அந்நிறுவனம் எந்த தகவலையும் வழங்கவில்லை.
ஒப்போ நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அந்த மாதத்தில் அறிமுகமாகிறது.
ஒப்போ நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இந்த ஸ்மார்ட்போன் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மேலும் இதுபோன்ற சாதனம் உருவாக்கப்படுவதாகவும் ஒப்போ சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 'பீகாக்' எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒப்போ நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ரெனோ 7 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம்.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனுடன் ஒப்போ நிறுவனம் மற்றொரு ஸ்மார்ட்போனினை உயர் ரக அம்சங்களுடன் உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 'பட்டர்பிளை' எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் போன்ற பேஸ்புக் நிறுவன செயலிகளில் மெட்டா பிராண்டிங் அமலுக்கு வந்தது.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் மற்றும் இதர பேஸ்புக் குழும செயலிகளில் மெட்டா பிராண்டிங் காண்பிக்கிறது. அனைத்து செயலிகளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். வெர்ஷன்களில் மெட்டா பிராண்டிங் தோன்றுகிறது. முன்னதாக பேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெட்டா என மாற்றுவதாக அறிவித்தது.
அந்த வரிசையில், தற்போது செயலிகளில் பேஸ்புக்கிற்கு மாற்றாக மெட்டா எனும் பிராண்டிங் இடம்பெற்று இருக்கிறது. முன்பை போன்று வழக்கமான சமூக வலைதளமாக நிறுவனமாக மட்டும் செயல்படுவதை தவிர்த்து, மெட்டாவெர்ஸ் எனும் புதிய மெய்நிகர் தொழில்நுட்பத்தில் இந்த நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது.

பேஸ்புக் மட்டுமின்றி மைக்ரோசாப்ட் மற்றும் பல்வேறு இதர தொழில்நுட்ப நிறுவனங்களும் மெட்டாவெர்ஸ் போன்ற சேவைகளை உருவாக்கும் முயற்சியை துவங்கி உள்ளன.
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய சாம்சங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே மற்றும் கேமரா அம்சங்கள் பற்றிய புது தகவல்கள் ட்விட்டரில் இடம்பெற்று இருக்கிறது.
அதன்படி புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் மேம்பட்ட 108 எம்பி கேமரா மோட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்டு உருவாகிறது. இது ஐசோசெல் ஹெச்.எம்.4 அல்லது ஐசோசெல் ஹெச்.எம்.5 சென்சார்களில் ஒன்றாக இருக்கும் என தெரிகிறது.

மேலும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் இருப்பதை போன்றே வளைந்து இருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடலை விட புதிய ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் அதிகளவு வளைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 2200 சிப்செட், ஆர்.டி.என்.ஏ. 2 கிராபிக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய ஐபேட் மினி விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 8.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட புது ஐபேட் மினி மாடலை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. வெளியீட்டை தொடர்ந்து ஐபேட் மினி மாடலில் ஜெல்லி ஸ்கிராலிங் எனும் பிரச்சினை ஏற்பட்டது.
எல்.சி.டி. டிஸ்ப்ளேவில் இதுபோன்ற பிரச்சினை சாதாரண ஒன்று தான் என ஆப்பிள் விளக்கம் அளித்து இருந்தது. இந்த நிலையில், ஜெல்லி ஸ்கிராலிங் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஆப்பிள் ஐபேட் மினி 6 மாடலின் புது வேரியண்ட் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி புதிய ஐபேட் மினி 120 ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதே டிஸ்ப்ளேவினை ஆப்பிள் 2017 முதல் வெளியாகி வரும் ஐபேட் ப்ரோ மாடல்களில் வழங்கி வருகிறது. சமீபத்திய ஐபோன் 13 ப்ரோ மாடலிலும் இதே டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டோராலா நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புதிய மொபைல் போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் பீச்சர் போன் மாடல்களை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய பீச்சர் போன் மாடல்கள் மோட்டோ ஏ10, மோட்டோ ஏ50 மற்றும் மோட்டோ ஏ70 பெயர்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை மோட்டோ ஏ10 மற்றும் மோட்டோ ஏ50 மாடல்களில் 1.8 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் எம்டி6261டி சிப்செட், ஆட்டோ கால் ரெக்கார்டிங், வயர்லெஸ் எப்.எம். ரேடியோ போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

இத்துடன் புதிய மோட்டோ ஏ சீரிஸ் மாடல்களை ஐந்து இந்திய மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. மோட்டோ ஏ50 பேக் பேனலில் கேமரா மற்றும் டார்ச் வழங்கப்படுகிறது. இந்த அம்சங்கள் மோட்டோ ஏ10 மாடலில் வழங்கப்படவில்லை. இரு மாடல்களிலும் டூயல் சிம் வசதி மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் வழங்கப்படுகிறது.
மோட்டோ ஏ70 மாடலில் 2.4 இன்ச் டிஸ்ப்ளே, யுனிசாக் சிப்செட், விஜிஏ கேமரா, எல்.இ.டி. டார்ச் வழங்கப்படுகிறது. இந்த மொபைலில் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அதிகபட்சம் 2 ஆயிரம் காண்டாக்ட்களை ஸ்டோர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் போட்டோ மற்றும் காண்டாக்ட்களுக்கு ஐகான்களை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
கூகுள் நிறுவனம் தனது பயனர் அக்கவுண்ட்களை பாதுகாக்கும் நோக்கில் புது நடவடிக்கையை அமல்படுத்த இருக்கிறது.
கூகுள் நிறுவனம் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு கொண்டுவரப் போவதாக மே மாத வாக்கில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த வழிமுறை நவம்பர் 9 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
இதனை செயல்படுத்திய பின், பயனர் ஒவ்வொரு முறை கூகுள் கணக்கில் லாக்-இன் செய்யும் போதும் குறுந்தகவல் அல்லது மின்னஞ்சலில் ஒருமுறை பயன்படுபத்தக்கூடிய கடவுச்சொல் (ஓ.டி.பி.) வரும். இதனை பதிவிட்டால் தான் கணக்கில் நுழைய முடியும். இந்த வழிமுறை பயனர் கணக்குகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும்.

நவம்பர் 9 ஆம் தேதி முதல் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறை பயனரின் கூகுள் அக்கவுண்டில் தானாக அமல்படுத்தப்பட்டு விடும் என பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கூகுள் நிறுவனம் தெரியப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 150 மில்லியன் கூகுள் பயனர்களின் அக்கவுண்ட்களுக்கு 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூகுள் அறிவித்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் சியோமி பிராண்டிங் கொண்ட ஸ்மார்ட்போனும் அதன்பின் ரெட்மி பிராண்டிங் கொண்ட ஸ்மார்ட்போனும் வெளியிடப்பட இருக்கிறது. இரு மாடல்களும் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகமாகிறது.
சியோமியின் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஓ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படலாம் என தெரிகிறது.

புகைப்படங்களை எடுக்க 108 எம்பி அல்லது 50 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்கள், எக்ஸ்-ஆக்சிஸ் மோட்டார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் எம்1 மேக்ஸ் சிப்செட் கொண்ட புது மேக்புக் ப்ரோ மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் புதிய தலைமுறை ஐமேக் மாடல்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஐமேக் மாடல் ஐமேக் ப்ரோ எனும் பெயரில் வெளியாகும் என தெரிகிறது. ப்ரோ பிராண்டிங் மூலம் ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்த 24 இன்ச் ஐமேக் மாடலை வித்தியாசப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய ஐமேக் ப்ரோ மாடல்களில் எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் அறிமுகம் செய்த மேக்புக் ப்ரோ மாடல்களிலும் எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஆப்பிள் தனது எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட்களை சமீபத்திய நிகழ்வில் அறிமுகம் செய்தது. இரு சிப்செட்களும் சமீபத்திய மேக்புக் ப்ரோ மற்றும் மேக்புக் ஏர் லேப்டாப் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
வாட்ஸ்அப் செயலியில் தீபாவளிக்காக பிரத்யேக அனிமேஷன் ஸ்டிக்கர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் செயலியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரத்யேக அனிமேடெட் ஸ்டிக்கர்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதை கொண்டு பயனர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பண்டிகை கொண்டாட்ட முறைகள் முற்றிலும் மாறி போயுள்ளன. இந்த காலக்கட்டத்தில் விர்ச்சுவல் முறையில் அனைவருடன் இணைந்து இருப்பதே சிறந்த வழிமுறையாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்திருக்க வாட்ஸ்அப் மட்டுமே சிறந்த தளமாக இருக்கிறது.

இவற்றை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகைக்காக வாட்ஸ்அப் அனிமேடெட் ஸ்டிக்கர்களை வெளியிட்டு உள்ளது. ஸ்டிக்கர்களை மற்றவர்களுக்கு அனுப்பி பயனர்கள் தங்களின் வீட்டில் இருந்தபடி தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
முன்னணி ஓ.டி.டி. தளமான நெட்ப்ளிக்ஸ் கேமிங் சந்தையில் களமிறங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் மொபைல் கேமிங் சந்தையில் களமிறங்கியது. ஏற்கனவே இதுபற்றிய அறிவிப்பை நெட்ப்ளிக்ஸ் வெளியிட்ட நிலையில், தற்போது ஐந்து மொபைல் கேம்களை நெட்ப்ளிக்ஸ் சந்தாதாரர்களுக்கு பிரத்யேகமாக வெளியிட்டு உள்ளது.
ஐந்து கேம்களையும் கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய முடியும். கேம்கள் அனைத்தும் நெட்ப்ளிக்ஸ் செயலியின் கேம்ஸ் -- டெடிகேடெட் கேம்ஸ் பிரிவில் தோன்றும். இங்கிருந்து கேம்களை நேரடியாக பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்யலாம்.
கேம்களை விளையாட நெட்ப்ளிக்ஸ் சந்தா மட்டுமே போதுமானது. இதில் விளம்பரங்களோ, கூடுதல் கட்டணமோ, இன் ஆப் பர்சேஸ் என எதுவும் இருக்காது.

நெட்ப்ளிக்ஸ் மொபைல் கேம் பட்டியல்
- ஸ்டிரேன்ஜர் திங்ஸ் 1984
- ஸ்டிரேன்ஜர் திங்ஸ் 3 - தி கேம்
- ஷூட்டிங் ஹாப்ஸ்
- கார்ட் பிளாஸ்ட்
- டீட்டர் அப்
அனைவருக்கும் ஏற்றவாரு எதையாவது வழங்கும் நோக்கில் அதிக கேம்களை வெளியிட விரும்புவதாக நெட்ப்ளிக்ஸ் அறிவித்து இருக்கிறது. இந்த கேம்கள் அனைத்தும் பெரியவர்களுக்கானவை. இதனால் கேம்கள் குழந்தைகளுக்கான ப்ரோபைல்களில் இயங்காது. வரும் மாதங்களில் ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு அதிக கேம்களை வழங்க இருப்பதாக நெட்ப்ளிக்ஸ் தெரிவித்து இருக்கிறது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
ஒப்போ நிறுவனம் விரைவில் புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய ஒப்போ ஏ95 மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. சமீபத்திய ரெண்டர்களின் படி புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனில் செவ்வக கேமரா மாட்யூல், மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் சிப்செட், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குளோயிங் ஸ்டேரி பிளாக் மற்றும் ரெயின்போ சில்வர் என இருவித நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்படுகிறது.

ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் பிளாஷ் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஓ.எஸ். 11, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.






