search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐபோன்  - கோப்புப்படம்
    X
    ஐபோன் - கோப்புப்படம்

    யு.எஸ்.பி. சி போர்ட் உடன் உருவாகும் ஐபோன் ப்ரோ சீரிஸ்

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் ஐபோன் 14 சீரிஸ் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. 2022 செப்டம்பர் மாத வாக்கில் ஆப்பிள் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 மேக்ஸ் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் யு.எஸ்.பி. 2.0 வேகத்தில் லைட்னிங் போர்ட் வழங்கி வருகிறது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

     ஐபோன்

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் ப்ரோ-ரெஸ் வீடியோக்களை படமாக்கும் போது அதிகளவு ஸ்டோரேஜை எடுத்துக் கொள்கின்றன. இதனால் ஐபோன்களில் இருந்து ப்ரோ-ரெஸ் வீடியோக்களை கணினியில் டிரான்ஸ்பர் செய்ய அதிக நேரம் ஆகிறது. 

    லைட்னிங் போர்ட்-க்கு மாற்றாக யு.எஸ்.பி. டைப் சி பயன்படுத்தினால் சிறிது நேரமே ஆகும். ஐபோன்கள் உள்பட அனைத்து சாதனங்களிலும் யு.எஸ்.பி. சி போர்ட் வழங்க ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தி வருகிறது. புதிய விதிகளை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பட்சத்தில் நிறுவனங்கள் அபராதம் செலுத்த நேரிடும். இதன் காரணமாக ஆப்பிள் புதிய ஐபோன் மாடல்களில் யு.எஸ்.பி. சி போர்ட் வழங்கலாம் என தெரிகிறது.
    Next Story
    ×