என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஒப்போ நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.


    ஒப்போ நிறுவனம் டேப்லெட் மற்றும் மடிக்கக்கூடிய சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஒப்போ டேப்லெட் மாடல் சீன சந்தை மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவில் ஒப்போ நிறுவனத்தின் முதல் டேப்லெட் மாடல் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களின் படி ஒப்போ நிறுவனத்தின் முதல் டேப்லெட் மாடல் ஒப்போ பேட் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 11 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர் ஓ.எஸ். 12 வழங்கப்படலாம்.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மிட்-ரேன்ஜ் மாடலான மோட்டோ ஜி51 பிளாக்‌ஷிப் மாடலான மோட்டோ ஜி200, மோட்டோ ஜி31, மோட்டோ ஜி71 போன்ற மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இதுதவிர மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனாக மோட்டோ ஜி51 5ஜி அறிமுகமாக இருக்கிறது.

     மோட்டோ ஜி51 5ஜி

    இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 12 5ஜி பேண்ட்களுக்கான வசதி வழங்கப்படுகிறது. மோட்டோரோலா சார்பில் புதிய ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. அம்சங்களை பொருத்தவரை மோட்டோ ஜி51 மாடலில் 6.8 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர், அட்ரினோ 619 ஜி.பி.யு. வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 13 எம்.பி. செல்பி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 50 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
    கூகுள் நிறுவனம் உருவாக்கி வரும் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கி வருவதாக 2018 முதல் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பின் 2019 வாக்கில் கூகுள் நிறுவனத்தில் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவுக்கான ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ரோகன் எனும் பெயரில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வியர் ஓ.எஸ். புது வெர்ஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

     ஸ்மார்ட்வாட்ச்

    புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ஆரோக்கியம் மற்றும் உடல்நலன் சார்ந்த அம்சங்கள் பிட்பிட் ஒருங்கிணைப்பு மூலம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் கூகுள் உற்பத்தி செய்யும் வாட்ச் பேண்ட்கள் வழங்கப்படலாம். கூகுள் ஸ்மார்ட்வாட்ச் விலை பிட்பிட் மாடல்களை விட அதிகமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் நாடு முழுக்க 4ஜி சேவைகளை எப்போது வெளியிடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


    பி.எஸ்.என்.எல். நிறுவனம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் நாடு முழுக்க 4ஜி சேவைகளை வழங்க இருக்கிறது. 4ஜி சேவை வெளியீட்டை அடுத்த, முதல் ஆண்டில் பி.எஸ்.என்.எல். நிறுவன வருவாய் ரூ. 900 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பு பாராளுமன்றத்தில் வெளியானது.

    பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். இணைப்பு பற்றி வெளியான தகவல்கள் குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த தகவல் தொடர்பு துறை அமைச்சர் தேவ் சிங் சவுகான், அந்த தகவல்களில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.

     கோப்புப்படம்

    செப்டம்பர் 30, 2021 வரையிலான காலக்கட்டத்தில் பி.எஸ்.என்.எல். சொத்து மதிப்பு ரூ. 1,33,952 கோடி, எம்.டி.என்.எல். நிறுவன சொத்து மதிப்பு ரூ. 3,556 கோடி ஆகும். பட்ஜெட் ஒதுக்கீட்டில் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களுக்கு 4ஜி ஸ்பெக்ட்ரம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது.
    உபெர் இந்தியா நிறுவனம் வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை பயன்படுத்தி உபெர் ரைடு முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்தது.


    உபெர் இந்தியா நிறுவனம் வாட்ஸ்அப் சாட்பாட் கொண்டு உபெர் ரைடு முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் உபெர் செயலியை இன்ஸ்டால் செய்யாதவர்களும் உபெர் ரைடுகளை முன்பதிவு செய்யலாம். 

    உபெர் செயலியில் மேற்கொள்ளப்படும் பயனாளர் பதிவு, ரைடு முன்பதிவு, பயணத்திற்கான ரசீது உள்ளிட்டவைகளை வாட்ஸ்அப் சாட்பாட் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும் என உபெர் இந்தியா தெரிவித்துள்ளது. உலகளவில் இதுபோன்ற வசதி முதல்முறையாக இந்தியாவில் தான் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

     வாட்ஸ்அப்

    விரைவில் டெல்லியில் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. அதன்பின் நாடு முழுக்க பல்வேறு நாகரங்களில் இந்த அம்சம் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது இந்த அம்சம் ஆங்கில மொழியில் மட்டுமே வழங்கப்படுகிறது. விரைவில் பல்வேறு மொழிகளில் இந்த சேவை வழங்கப்பட இருக்கிறது.

    ரெட்மி பிராண்டின் நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் கொண்ட ஒற்றை வேரியண்டில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் பர்பில், பிராஸ்ட் வைட், டீப் சீ புளூ மற்றும் ஷேடோ பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    தற்போது ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது வேரியண்ட் தவிர ரெட்மி நோட் 10எஸ் மாடல் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     ரெட்மி நோட் 10எஸ்

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 10எஸ் மாடலில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 13 எம்.பி. செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 6 ஜிபி, 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்.ஐ.யு.ஐ. 12.5 ஒஎஸ் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. டெப்த் மற்றும் 2 எம்.பி. போர்டிரெயிட் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ரெட்மி நோட் 10எஸ் 6 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 14,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 16,499 என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய 8 ஜிபி + 128 ஜிபி ரூ. 18,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ப்ளூடூத் இயர்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    இந்தியாவை சேர்ந்த போட் நிறுவனம் புதிய நெக்பேண்ட் வயர்லெஸ் ஹெட்செட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய இயர்போன் போட் ராக்கர்ஸ் 330 ப்ரோ என அழைக்கப்படுகிறது. இந்த இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 60 மணி நேர பிளேபேக் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    மேலும் இத்தனை அளவு பேக்கப் வழங்கும் போட் நிறுவனத்தின் முதல் இயர்போன் இது ஆகும். இதன் தோற்றம் போட் ஏற்கனவே அறிமுகம் செய்த ராக்கர்ஸ் 333 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இந்த இயர்போனில் உள்ள ஏ.எஸ்.ஏ.பி. பாஸ்ட் சார்ஜிங் வசதி பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 20 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது.

     போட் ராக்கர்ஸ் 330 ப்ரோ

    மிக குறைந்த எடையில் உருவாகி இருக்கும் போட் ராக்கர்ஸ் 330 ப்ரோ வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி, இன்-லைன் பிளேபேக் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்களை கொண்டிருக்கிறது. புதிய போட் ராக்கர்ஸ் 330 ப்ரோ பிளாக், புளூ, ரெட் மற்றும் எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,499 ஆகும். இது அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ஐபோன் மாடல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்.இ. மாடலை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், புதிய மூன்றாம் தலைமுறை ஐபோன் எஸ்.இ. மாடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    2022 முதல் காலாண்டில் புதிய ஐபோன் எஸ்.இ. அறிமுகம் செய்வது மட்டுமின்றி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நான்கு மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஐபோன் எஸ்.இ. மாடல் மிட்-ரேன்ஜ் பிரிவில் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரிகிறது. வரும் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 2.5 கோடி முதல் 3 கோடி யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

     ஐபோன் எஸ்.இ.

    புதிய ஐபோன் எஸ்.இ. மாடலில் 4.7 இன்ச் டிஸ்ப்ளே, 5ஜி கனெக்டிவிட்டி, ஆப்பிள் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடல் புது ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    சாம்சங் கேலக்ஸி எஸ்21 பேன் எடிஷன் (எப்.இ.) அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், இந்த ஸ்மார்ட்போனின் புது ரெண்டர்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

    புதிய ரெண்டர்களின் படி கேலக்ஸி எஸ்21 எப்.இ. நான்கு நிறங்களில் உருவாகி வருவது தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஐரோப்பாவில் இதன் விலை 660 யூரோக்கள் மற்றும் 705 யூரோக்கள் என நிர்ணயம் செய்யப்படலாம். 

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடலில் 6.41 இன்ச் அமோலெட் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஸ்னாப்டிராகன் 888 / எக்சைனோஸ் 2100 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யு.ஐ. 3.1 வழங்கப்படும் என தெரிகிறது.

    புகைப்படங்களை எடுக்க 32 எம்.பி. செல்பி கேமரா, 12 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    ஐகூ நிறுவனத்தின் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    சிப்செட் குறைபாடு காரணமாக ஐகூ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என்றே தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐகூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

    இந்தியாவில் ஐகூ 9 சீரிஸ் மாடல்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஐகூ 9 சீரிஸ் மாடல்களில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஐகூ 9 சீரிசில்- ஐகூ 9 மற்றும் ஐகூ 9 ப்ரோ / லெஜண்ட் போன்ற மாடல்கள் இடம்பெறும் என தெரிகிறது.

     ஐகூ ஸ்மார்ட்போன்

    முன்னதாக ஐகூ நிறுவனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்ட பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தது. இந்த மாடல் ஐகூ 9 அல்லது ஐகூ 9 ப்ரோ மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. ஐகூ 9 மாடல்களில் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 12 மற்றும் புதிய ஐகூ யு.ஐ., 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம்.
    டுவிட்டர் சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்ற புதிய விதிமுறை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.


    முன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் சேவையை உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தளத்தில் தகவல்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. டுவிட்டர் நிறுவனம் பயனாளர்களின் தனியுரிமையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

    ஏற்கனவே பயனாளரின் தொலைபேசி எண், முகவரி தனிப்பட்ட தகவல்களை வெளியிட தடை செய்துள்ளது. இந்த நிலையில் டுவிட்டரில் தனி நபர்களின் புகைப்படம், வீடியோக்களை அவர்களின் ஒப்புதல் இன்றி பகிர தடை செய்து புது விதிமுறையை டுவிட்டர் அறிவித்துள்ளது.

     டுவிட்டர்

    புது விதிகளின்படி பயனர்கள் தங்களின் அனுமதியின்றி வெளியிடப்பட்டதாக புகார் அளிக்கும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் டுவிட்டரில் இருந்து அகற்றப்படும்.

    ரியல்மி நிறுவனம் விரைவில் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    ரியல்மி நிறுவனம் விரைவில் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய 9 சீரிஸ்- ரியல்மி 9, ரியல்மி 9 ஐ, ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் என நான்கு மாடல்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய ரியல்மி 9 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

    இந்த நிலையில், ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் பி.ஐ.எஸ். சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக அக்டோபர் மாத வாக்கில் ஆர்.எம்.எக்ஸ்.3393 எனும் மாடல் நம்பர் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் ஐ.எம்.இ.ஐ. வலைதளம் மற்றும் யூரேசியன் எகனாமிக் கமிஷன் வலைதளங்களில் இடம்பெற்று இருந்தது.

     ரியல்மி ஸ்மார்ட்போன்

    தற்போது ஆர்.எம்.எக்ஸ்.3392 எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 9 ப்ரோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    புதிய 9 சீரிஸ் மட்டுமின்றி ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனினை பல்வேறு சந்தைகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு டாப் எண்ட் அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 
    ×