என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் அமெரிக்க வலைதளத்தில் இட்மபெற்று இருக்கிறது.
அமெரிக்காவின் எப்.சி.சி. வலைதளத்தில் ரெட்மி 10 (2022) ஸ்மார்ட்போன் விவரங்கள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 128 ஜிபி மெமரி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இதே ஸ்மார்ட்போன் யூரேசியன் எகனாமிக் கமிஷன், ஐ.எம்.டி.ஏ., டி.கே.டி.என்., எஸ்.டி.பி.பி.ஐ., டி.யு.வி. ரெயின்லாந்து செர்டிஃபிகேஷன் என பல்வேறு வலைதளங்களில் இடம்பெற்று இருந்தது. புதிய ரெட்மி 10 (2022) மாடல் இந்தியாவில் ரெட்மி 10 பிரைம் (2022) ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்.ஐ.யு.ஐ. 12.5 கொண்டிருக்கும். இத்துடன் 50 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. சென்சார், 2 எம்.பி. லென்ஸ் வழங்கப்படுகிறது. ஐ.எம்.இ.ஐ. டேட்டாபேஸ் வலைதளத்திலும் இரு ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் இடம்பெற்று இருந்தன. இரு மாடல்களும் இந்தியாவில் அறிமுகமாகும் என்றே கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் தகவல்களை தானாக அழிந்துபோக செய்யும் அம்சத்தில் அசத்தலான மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. இந்த செயலியில் தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி புகைப்படம், வீடியோக்கள் என பலத்தரப்பட்ட தகவல்கள் அன்றாடம் பகிரப்பட்டு வருகின்றன.
பயனர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கும் பணியை வாட்ஸ்அப் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலியில் புதிய வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் அனைத்து தகவல்களையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பின் அழிந்துவிடும்படி தேர்வு செய்ய முடியும்.

இதற்கான காலக்கெடு 24 மணி நேரம் அல்லது 7 நாட்கள், 90 நாட்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் விரும்பும் காலக்கெடுவை தேர்வு செய்ய முடியும். முன்னதாக பயனர்கள் அனுப்பும் தகவல்கள் 7 நாட்களுக்கு பின் அழிந்து போகும் வசதி வழங்கப்பட்டு இருந்தது.
இனி அப்படி இல்லாமல் மொத்தமாக அனைத்து உரையாடல்களிலும் தாங்கள் அனுப்பும் தகவல்கள் அழிந்துவிடும்படி காலக்கெடுவை தேர்வு செய்து கொள்ளலாம். முன்பு தகவல்கள் அழியும் காலக்கெடு 7 நாட்களாக இருந்தது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர், 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்பி கேமரா உள்ளது.
பிளாஸ்டிக் பாடி கொண்டிருக்கும் புது ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் அம்சங்கள்
- 6.5 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர்
- ஐ.எம்.ஜி.8322 ஜி.பி.யு.
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன்
- டூயல் சிம் ஸ்லாட்
- 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
- 5 எம்.பி. செல்பி கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- 5,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் விரைவில் நாடு முழுக்க விற்பனைக்கு வர இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் சலுகைகளின் விலையை மாற்றியிருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் ஐந்து பிரீபெயிட் சலுகை விலைகளை மாற்றியமைத்து இருக்கிறது. கடந்த வாரம் ஜியோ விலை உயர்வு அறிவிப்பில் இந்த சலுகைகள் இடம்பெறாமல் இருந்தது.
புது மாற்றத்தின் படி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளின் விலை ரூ. 601 என துவங்குகிறது. முன்னதாக இதன் விலை ரூ. 499 என இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜியோ சலுகைகளின் விலை தற்போது 20 சதவீதம் அதிகம் ஆகும்.

ரூ. 601 பிரீபெயிட் சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் கூடுதலாக 6 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ. 799 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இந்த சலுகை 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. ஜியோ ரூ. 888 சலுகையின் விலை தற்போது ரூ. 1,066 என மாறி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டு உருவாகி வருகிறது.
ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ, அந்நிறுவனத்தின் அடுத்த தலைமுறை சாதனங்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், ஒன்பிளஸ் 10 சீரிசில் இந்த பிராசஸர் வழங்கப்படுமா என்பதை அவர் குறிப்பிடவில்லை.
பீட் லௌ அறிவிப்பை தொடர்ந்து புதிய ஒன்பிளஸ் 10 சீரிஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என்றே இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஸ்னாப்டிராகன் பிராசஸரை முடிந்தவரை ஆப்டிமைஸ் செய்யும் பணிகளில் ஒன்பிளஸ் மென்பொருள் மற்றும் வன்பொருள் பிரிவினர் ஈடுபட்டு வருவதாக பீட் லௌ தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சாதனத்தின் மென்பொருள் அனுபவம் சீராக இருக்கும்.

முந்தைய வழக்கப்படி, ஒன்பிளஸ் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. அந்த வகையில் புதிய குவால்காம் சிப்செட் கொண்டு அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ஒன்பிளஸ் 10 இடம்பெறும் என்றே தெரிகிறது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகமாகலாம்.
சோனி நிறுவனத்தின் பி.எஸ்.5 மற்றும் பி.எஸ்.5 டிஜிட்டல் எடிஷன் விற்பனை ஒரே நிமிடத்தில் நிறைவடைந்து இருக்கிறது.
சோனி நிறுவனத்தின் பி.எஸ்.5 இன்று விற்பனைக்கு வந்தது. விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் அவை விற்றுத் தீர்ந்ததாக சோனி அறிவித்து இருக்கிறது. இன்று மதியம் 12 மணிக்கு பி.எஸ்.5 மற்றும் பி.எஸ்.5 டிஜிட்டல் எடிஷன் ரி-ஸ்டாக் விற்பனைக்கு வந்தது.
முன்பை போன்றே இன்றும் பி.எஸ்.5 விற்பனை அமேசான், சோனி மற்றும் பல்வேறு மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் நடைபெற்றது. பல வலைதளங்கள் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் செயலற்று போனது. இந்தியாவுக்கு மேலும் சில புதிய பி.எஸ்.5 மற்றும் பி.எஸ்.5 டிஜிட்டல் எடிஷன் யூனிட்களை விற்பனைக்கு கொண்டுவர சோனி முயற்சித்து வருகிறது.

இந்தியாவில் அடுத்த விற்பனை எப்போது நடைபெறும் என சோனி இதுவரை அறிவிக்கவில்லை. மேலும் இதற்கான முன்பதிவுகளும் இதுவரை துவங்கப்படவில்லை. டிசம்பர் மாத்திற்கான பி.எஸ்.5 இந்தியா முன்பதிவுகள் டிசம்பர் 15 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல ஐபோன் மாடலுக்கு அசத்தலான விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ப்ரோ மாடலுக்கு அமேசான் தளத்தில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது ஐபோன் 12 ப்ரோ மாடல் விலை ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விலை குறைப்பு கிராபைட், கோல்டு, பசிபிக் புளூ மற்றும் சில்வர் என அனைத்து நிறங்கள் மற்றும் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியண்ட்களுக்கும் வழங்கப்படுகிறது.
ஐபோன் 12 ப்ரோ கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த பிளாக்ஷிப் மாடல் ஆகும். தற்போது இந்த மாடல் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் மட்டுமே கிடைக்கிறது. கடந்த ஆண்டு ஐபோன் 12 ப்ரோ மாடல் ரூ. 1,19,900 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதன் விலை ரூ. 94,900 என அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

இதன் 256 ஜிபி மாடல் விலை ரூ. 99,900 என்றும் 512 ஜிபி விலை ரூ. 1,07,900 என்றும் மாற்றப்பட்டு இருக்கின்றன. அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 12 ப்ரோ மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர். ஓ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, ஏ14 பயோனிக் சிப்செட், 12 எம்.பி. மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 12 எம்.பி. ட்ரூ டெப்த் செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐகூ பிராண்டு உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஐகூ பிராண்டின் புதிய நியோ 6 ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே டெவலப்பர் கன்சோலில் இடம்பெற்று இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் மாடல் நம்பர் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி புதிய ஐகூ நியோ 6 ஸ்மார்ட்போனில் 2400x1080 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 12 ஜிபி ரேம், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 66 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

கூகுள் டெவலப்பர் கன்சோலில் இடம்பெற்று இருப்பதால், இந்த ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஐகூ நியோ 5 5ஜி மாடலின் மேம்பட்ட வேரியண்ட் ஆகும். இத்துடன் ஐகூ நியோ 6 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்திய சந்தையில் ஐகூ நியோ 5 5ஜி ஸ்மார்ட்போன் ஐகூ 7 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒருவேளை புதிய ஐகூ நியோ 6 இந்தியாவில் அறிமுகமாகும் பட்சத்தில், இது விரைவில் அறிமுகமாக இருக்கும் ஒன்பிளஸ் 9ஆர்.டி./ஆர்.டி. ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக அமையும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிரீபெயிட் சலுகைகளை தொடர்ந்து ஜியோபோன் சலுகை கட்டணங்களையும் உயர்த்தி இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் சலுகை கட்டணங்களையும் மாற்றியமைத்திருக்கிறது. முன்னதாக ஜியோ பிரீபெயிட் சலுகைகளின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மூன்று ஜியோபோன் சலுகைகளின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய சலுகை ஒன்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஜியோபோன் பயனர்களுக்கு ரூ. 152 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகை வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதில் தினமும் 0.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது.
ஜியோபோன் ரூ. 155 சலுகையின் விலை தற்போது ரூ. 186 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதில் தினமும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

முன்னதாக ரூ. 186 விலையில் வழங்கப்பட்டு வந்த ஜியோபோன் சலுகை ரூ. 222 விலைக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
இத்துடன் 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஜியோபோன் ரூ. 749 சலுகையின் விலை தற்போது ரூ. 899 என மாறி இருக்கிறது. இதில் 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டாவும், 336 நாட்களுக்கு 24 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போன் விவரங்கள் அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. புதிய எட்ஜ் எஸ்30 விவரங்கள் அன்டுடு பென்ச்மார்கிங் வலைதளத்திலும் இடம்பெற்று இருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 மாடலில் 4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.78 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8.8 எம்.எம். அளவில் உருவாகி இருப்பதாகவும், இதன் மொத்த எடை 202 கிராம் என்றும் கூறப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகள் திடீரென நிறுத்தப்பட்டு இருக்கின்றன.
ஏர்டெல் நிறுவனம் தனது சலுகை கட்டணங்களை உயர்த்தியதோடு, அன்லிமிடெட் சலுகைகளிலும் சமீபத்தில் மாற்றம் செய்தது. தற்போது ரூ. 398, ரூ. 499 மற்றும் ரூ. 558 பிரீபெயிட் சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் நீக்கியிருக்கிறது. நீக்கப்பட்டுள்ள மூன்று சலுகைகளிலும் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
மூன்று பிரீபெயிட் சலுகைகளுக்கு மாற்றாக ஏர்டெல் நிறுவனம் ரூ. 599 மற்றும் ரூ. 699 விலைகளில் இரண்டு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இரு சலுகைகளிலும் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இரு சலுகைகள் பற்றிய அறிவிப்பு ஏர்டெல் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. எனினும், இந்த மாற்றம் ஏர்டெல் வலைதளம் மற்றும் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

பலன்களை பொருத்தவரை ஏர்டெல் ரூ. 599 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் அழைப்புகள் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன. இத்துடன் 28 நாட்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ. 699 சலுகையில் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ மொபைல் வெர்ஷனுக்கான இலவச டிரையல் வழங்கப்படுகிறது. இத்துடன் முந்தைய சலுகையில் வழங்கப்படுவதை போன்று 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய எப்21 சீரிஸ் இந்தியாவில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஒப்போ எப்21 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய எப்21 சீரிசில் ஒப்போ எப்21, ஒப்போ எப்21 ப்ரோ மற்றும் ஒப்போ எப்21 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
ஒப்போ எப்21 ப்ரோ பிளஸ் மற்றும் ஒப்போ எப்21 மாடல்கள் இந்தியாவில் மார்ச் 17 முதல் மார்ச் 21 ஆம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம். இதில் ஒப்போ எப்21 ப்ரோ பிளஸ் மாடல் ஒரு வாரம் முன்னதாகவே விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

புதிய ஒப்போ எப்21 சீரிஸ் மெல்லிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ எப்19 மாடலில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்தது.






