search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஐகூ 7
    X
    ஐகூ 7

    அதிரடி அம்சங்களுடன் உருவாகும் ஐகூ ஸ்மார்ட்போன்

    ஐகூ பிராண்டு உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


    ஐகூ பிராண்டின் புதிய நியோ 6 ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே டெவலப்பர் கன்சோலில் இடம்பெற்று இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் மாடல் நம்பர் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 

    அதன்படி புதிய ஐகூ நியோ 6 ஸ்மார்ட்போனில் 2400x1080 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 12 ஜிபி ரேம், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 66 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

     ஐகூ 7

    கூகுள் டெவலப்பர் கன்சோலில் இடம்பெற்று இருப்பதால், இந்த ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஐகூ நியோ 5 5ஜி மாடலின் மேம்பட்ட வேரியண்ட் ஆகும். இத்துடன் ஐகூ நியோ 6 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்திய சந்தையில் ஐகூ நியோ 5 5ஜி ஸ்மார்ட்போன் ஐகூ 7 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒருவேளை புதிய ஐகூ நியோ 6 இந்தியாவில் அறிமுகமாகும் பட்சத்தில், இது விரைவில் அறிமுகமாக இருக்கும் ஒன்பிளஸ் 9ஆர்.டி./ஆர்.டி. ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக அமையும்.
    Next Story
    ×