என் மலர்

  தொழில்நுட்பச் செய்திகள்

  ஐபோன் 12 ப்ரோ
  X
  ஐபோன் 12 ப்ரோ

  ஐபோனுக்கு ரூ. 25 ஆயிரம் விலை குறைப்பு அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல ஐபோன் மாடலுக்கு அசத்தலான விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


  ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ப்ரோ மாடலுக்கு அமேசான் தளத்தில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது ஐபோன் 12 ப்ரோ மாடல் விலை ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விலை குறைப்பு கிராபைட், கோல்டு, பசிபிக் புளூ மற்றும் சில்வர் என அனைத்து நிறங்கள் மற்றும் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியண்ட்களுக்கும் வழங்கப்படுகிறது.

  ஐபோன் 12 ப்ரோ கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த பிளாக்‌ஷிப் மாடல் ஆகும். தற்போது இந்த மாடல் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் மட்டுமே கிடைக்கிறது. கடந்த ஆண்டு ஐபோன் 12 ப்ரோ மாடல் ரூ. 1,19,900 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதன் விலை ரூ. 94,900 என அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. 

   ஐபோன் 12 ப்ரோ

  இதன் 256 ஜிபி மாடல் விலை ரூ. 99,900 என்றும் 512 ஜிபி விலை ரூ. 1,07,900 என்றும் மாற்றப்பட்டு இருக்கின்றன. அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 12 ப்ரோ மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர். ஓ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, ஏ14 பயோனிக் சிப்செட், 12 எம்.பி. மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 12 எம்.பி. ட்ரூ டெப்த் செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
  Next Story
  ×