என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் ஜெப் ஜூக் பார் 3820ஏ ப்ரோ சவுண்ட்பார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் அலெக்சா வசதி கொண்ட புதிய ஜெப் ஜூக் பார் 3820ஏ ப்ரோ சவுண்ட்பார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் டூயல் டிரைவர்கள், டூயல் 69 எம்.எம். சப்-வூஃபர்கள், 80 வாட் ஆர்.எம்.எஸ். அவுட்புட் உள்ளது. 

    பில்ட்-இன் வைபை கனெக்டிவிட்டி கொண்டிருப்பதால் ஆடியோ ஸ்டிரீமிங் செய்யும் வசதி உள்ளது. மேலும் இதில் ப்ளூடூத் 5, ஜெப் ஸ்மார்ட் ஜூக்பார் ஆப் மூலம் கண்ட்ரோல் செய்யும் வசதி உள்ளது. இத்துடன் ஹெச்.டி.எம்.ஐ. ஏ.ஆர்.சி. மற்றும் ஆப்டிக்கல் போர்ட், ஆக்ஸ் போர்ட், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஜெப் ஜூக் சவுண்ட்பார்

    புதிய ஜெக் ஜூக் பார் 3820ஏ ப்ரோ பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 29,999 ஆகும். எனினும் அறிமுக சலுகையாக இந்த சவுண்ட்பார் ரூ. 8,999 விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது புதிய மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. மோட்டோ ஜி51 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் / டெப்த் கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 13 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

    மோட்டோ ஜி51 5ஜி

    மோட்டோ ஜி51 5ஜி அம்சங்கள்

    - 6.8 இன்ச் 2400x1080 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. பிராசஸர்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர்
    - அட்ரினோ 619 ஜி.பி.யு.
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 50 எம்.பி. பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு / டெப்த் கேமரா
    - 2 எம்.பி. மேக்ரோ கேமரா
    - 13 எம்.பி. செல்பி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 20 வாட் சார்ஜிங் 

    புதிய மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் இண்டிகோ புளூ மற்றும் பிரைட் சில்வர் என இரு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி ஆப்ஷன் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 16 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் பற்றிய புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் ஜனவரி 2022 வாக்கில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்21 எப்.இ. விவரங்கள் சமீபத்தில் சாம்சங் சர்வெரில் இடம்பெற்று இருந்தது. 

    அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். சார்ந்த ஒன் யு.ஐ. 4 கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 வரையிலான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. சாம்சங் தனது பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மூன்று ஓ.எஸ். அப்டேட் மற்றும் 4 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    முந்தைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஐரோப்பாவில் இதன் விலை 660 யூரோக்கள் மற்றும் 705 யூரோக்கள் என நிர்ணயம் செய்யப்படலாம். 

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடலில் 6.41 இன்ச் அமோலெட் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஸ்னாப்டிராகன் 888 / எக்சைனோஸ் 2100 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யு.ஐ. 3.1 வழங்கப்படும் என தெரிகிறது.
    ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் ப்ரோ, புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்கள் மற்றும் புதிய ஐபோன் எஸ்.இ. உள்ளிட்ட சாதனங்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

    தற்போது ஆப்பிள் வல்லுனரான மிங் சி கியோ அடுத்த ஆண்டு இலையுதிர்காலத்தில் ஆப்பிள் நிறுவனம் மூன்று ஆப்பிள் வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என தெரிவித்து இருக்கிறார். இவை வாட்ச் சீரிஸ் 8, வாட்ச் எஸ்.இ. மற்றும் ரக்கட் அல்லது ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் என அழைக்கப்படலாம். ஆப்பிள் வாட்ச் மட்டுமின்றி ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலையும் ஆப்பிள் வெளியிட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

     ஏர்பாட்ஸ்

    முந்தைய தகவல்களில் ஆப்பிள் ஏ.ஆர்./வி.ஆர். ஹெட்செட் மாடல்கள் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என மிங் சி கியோ ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அணியக்கூடிய சாதனங்கள் மட்டுமின்றி புதிய ஐபோன் எஸ்.இ. 2023 ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என அவர் தெரிவித்து இருந்தார்.
    கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய சாதனங்களுக்கென உருவாக்கிய ஆண்ட்ராய்டு 12எல் முதல் பீட்டா வெளியிடப்பட்டு இருக்கிறது.


    பெரிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்ற வகையில் புதிய ஆண்ட்ராய்டு 12 வெர்ஷனை அக்டோபர் மாதம் அறிவித்தது. இந்த ஓ.எஸ். ஆண்ட்ராய்டு 12எல் என அழைக்கப்படுகிறது. 

    சிறப்பான மல்டி-டாஸ்கிங் அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஆண்ட்ராய்டு 12எல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஆண்ட்ராய்டு 12எல் மடிக்கக்கூடிய சாதனங்களுக்கு ஏற்ப பல மாற்றங்களை கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12எல் ஓ.எஸ். முதல் பீட்டா வெளியிடப்பட்டு இருக்கிறது.

     ஆண்ட்ராய்டு ஓ.எஸ்.

    மடிக்கக்கூடிய சாதனங்களுக்காக உருவாக்கப்பட்டு இருக்கும் போதிலும், இந்த அப்டேட் சாம்சங்கின் எந்த மாடலுக்கும் இதுவரை வெளியிடப்படவில்லை. முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 12எல் பீட்டா வெளியிடப்பட்டு உள்ளது. 

    முழுமையான ஓ.எஸ். வெளியீட்டுக்கு முன் மூன்று பீட்டா வெர்ஷன்கள் வெளியிடப்பட இருக்கின்றன. வரும் வாரங்களில் லெனோவோ டேப் பி12 ப்ரோ மாடலுக்கு ஆண்ட்ராய்டு 12எல் அப்டேட் வெளியிடப்பட இருக்கிறது. தற்போது வெளியிடப்படவில்லை என்ற போதிலும், எதிர்காலத்தில் சாம்சங் சாதனங்களுக்கும் இந்த அப்டேட் வழங்கப்படலாம்.
    ஒப்போ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.


    ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பைண்ட் என் பெயரில் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனிற்கான டீசரையும் ஒப்போ வெளியிட்டு உள்ளது. ஒப்போ பைண்ட் என் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் இன்னோ டே 2021 நிகழ்வில் அறிமுகமாகிறது.

    நான்கு ஆண்டுகள் தீவிர ஆய்வு, 6 தலைமுறை ப்ரோடோடைப் மாடல்களை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எதிர்கால ஸ்மார்ட்போன்களுக்கு ஒப்போவின் பதில், புதிய பைண்ட் என் மாடல் இருக்கும் என ஒப்போ தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்தார்.

     ஒப்போ பைண்ட் என்

    பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குதல் மற்றும் தற்போதைய டிரெண்ட்களில் எவ்வித சமரசமும் இல்லாத மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்க ஒப்போ நிறுவன குழு 2018 ஆண்டில் இருந்து காத்திருந்தது.
    ரெட்மி நிறுவனத்தின் புதிய நோட் 11 4ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ரெட்மி பிராண்டின் புதிய நோட் 11 4ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் புதிய ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போன் நோட் 11டி 4ஜி ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. சீனாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் நோட் 11 5ஜி ஸ்மார்ட்போனே இந்தியாவில் நோட் 11டி 5ஜி எனும் பெயரில் அறிமுகமாக இருக்கிறது.

     ரெட்மி நோட் 11 4ஜி

    ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி+64ஜிபி, 4ஜிபி+128ஜிபி மற்றும் 6ஜிபி+128ஜிபி போன்ற மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கிராபைட் கிரே, டுவிலைட் புளூ மற்றும் ஸ்டார் புளூ நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 11 4ஜி மாடலில் 6.5 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், மூன்று கேமரா சென்சார்கள், 8 எம்.பி. செல்பி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    ஒப்போ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான சந்தை மெல்ல வளர்ந்து வருகிறது. தற்போது சாம்சங் நிறுவனம் மூன்று தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. ஒப்போ நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ போல்டு எனும் பெயரில் விற்பனைக்கு அறிமுகமாகும் என தெரிகிறது.

     ஒப்போ போல்டு

    கீக்பென்ச் விவரங்களின் படி புதிய ஒப்போ போல்டு ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 அல்லது ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர், 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஒப்போ போல்டு மாடலில் 8 இன்ச் ஓ.எல்.இ.டி. எல்.டி.பி.ஓ. பேனல், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    மேலும் இதில் 50 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. வைடு ஆங்கில் லென்ஸ், 13 எம்.பி. கேமரா, 32 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்படலாம்.
    விண்டோஸ் 11 அப்டேட் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பிரபல நோட்பேட் செயலியில் டார்க் மோட் வசதியை வழங்கி இருக்கிறது.


    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய விண்டோஸ் 11 ஓ.எஸ். அந்நிறுவனத்தின் முந்தைய ஓ.எஸ்.-ஐ விட முற்றிலும் வித்தியாசமாகவும், புதிதாகவும் காட்சியளிக்கிறது. ஓ.எஸ். வெளியீட்டை தொடர்ந்து விண்டோஸ் 11 இன்சைடர் பில்டு வெர்ஷன்களை மைக்ரோசாப்ட் உருவாக்கி வருகிறது.

    சமீபத்திய இன்சைடர் பில்டு வெர்ஷன் நோட்பேட் செயலியில் டார்க் மோட் வசதியை வழங்குகிறது. விண்டோஸ் 11 கணினியில் டார்க் மோட் ஆக்டிவேட் ஆகி இருப்பின், நோட்பேட் செயலியை திறந்தால் தானாக அது டார்க் மோடில் இயங்கும். இத்துடன் நோட்பேட் செயலியின் ரைட் க்ளிக் மெனுவில் ஃபைண்ட் அண்ட் ரீப்ளேஸ் அம்சம் வழங்கப்படுகிறது.

     நோட்பேட் டார்க் மோட்

    செயலியை தொடர்ந்து மிக எளிமையான ஒன்றாகவே வழங்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டு இருக்கிறது. இதன் காரணமாக நோட்பேட் செயலியில் அதிகளவு மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. மாறாக பெருமளவு அம்சங்கள் நிறைந்த டெக்ஸ்ட் எடிட்டர் தேவைப்படும் பட்சத்தில் மைக்ரோசாப்ட் வொர்ட் செயலியை பயன்படுத்தலாம்.
    இன்ஸ்டாகிராம் செயலியல் பயனர் நலன் கருதி புதிய பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    இன்ஸ்டாகிராம் செயலியில் 'டேக் ஏ பிரேக்' (Take a Break) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் இளைஞர்களை பாதுகாக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்ச்சியாக அதிக நேரம் செயலியில் செலவிடுவோரை, சிறிது நேரம் மற்ற பணிகளை செய்ய நினைவூட்டும். 

    முதற்கட்டமாக இந்த அம்சம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வழங்கப்படுகிறது. மற்ற நாடுகளில் இந்த அம்சம் வரும் மாதங்களில் வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக இந்த அம்சம் பற்றிய அறிவிப்பு செப்டம்பர் மாத வாக்கில் வெளியிடப்பட்டது.

     இன்ஸ்டா ஸ்கிரீன்ஷாட்

    இந்த அம்சத்தை செட்டிங்ஸ் பேனலில் செயல்படுத்த முடியும். இந்த அம்சத்தில் பத்து நிமிடங்கள், 20 நிமிடங்கள் அல்லது 30 நிமிடங்கள் என பயனர் விரும்பும் கால இடைவெளியில் நினைவூட்டியை செயல்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு 12 வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
     

    ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 12 வழங்க துவங்கி இருப்பதை அடுத்து, ஒன்பிளஸ் நிறுவனம் புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கும் மூன்றாவது பெரும் நிறுவனமாக இருக்கிறது. முன்னதாக கூகுள் மற்றும் சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட்டது.

    புதிய ஆக்சிஜன் ஓ.எஸ். ஸ்மார்ட்போனில் சிஸ்டம்-லெவல் மேம்படுத்தல்கள் மற்றும் புது அம்சங்களை வழங்குகிறது. மேலும் யூசர் இண்டர்பேஸ் சார்ந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அப்டேட் ஓ.டி.ஏ. முறையில் வழங்கப்படுகிறது. இதனை எக்ஸ்.டி.ஏ. டெவலப்பர்கள் கண்டறிந்து தகவல் தெரிவித்தனர்.

     ஆண்ட்ராய்டு 12

    இந்த அப்டேட் அளவில் 4.04 ஜி.பி.-யாக உள்ளது. இதனால் ஸ்மார்ட்போனினை அப்டேட் செய்யும் போது வைபை நெட்வொர்க்கில் இணைவதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும் ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை பேக்கப் எடுத்துக் கொள்வதும் அவசியம் ஆகும்.

    புதிய ஓ.எஸ். அப்டேட் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அப்டேட் கிடைக்காதவர்கள் ஸ்மார்ட்போனை அப்டேட் செய்ய சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


    மோட்டோரோலா நிறுவனம் டிசம்பர் 9 ஆம் தேதி ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    இதனிடையே மோட்டோரோலா நிறுவனம் அண்டர் ஸ்கிரீன் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. லெனோவோ நிறுவன மொபைல் பிரிவுக்கான பொது மேலாளர் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் அண்டர் ஸ்கிரீன் கேமரா கொண்டிருக்கும் என தெரிவித்து இருக்கிறார்.

     மோட்டோ எட்ஜ் எக்ஸ்30  டீசர்

    இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்ட முதல் அண்டர் ஸ்கிரீன் கேமரா ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 60 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட இருக்கிறது. எட்ஜ் எக்ஸ்30 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அசத்தலான புல்-ஸ்கிரீன் அனுபவத்தை வழங்குகிறது.

    இதில் வழங்கப்பட இருக்கும் மற்ற அம்சங்கள் ரகசியமாகவே உள்ளன. எனினும், தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் பார்க்க எட்ஜ் எக்ஸ்30 போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.
    ×