என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 119 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ரூ. 119 சலுகை பலன்களை சத்தமின்றி மாற்றியமைத்து இருக்கிறது. இந்த சலுகையில் தற்போது தினமும் 300 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இத்துடன் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் போன்ற பலன்களும் வழங்கப்படுகிறது. 

    முன்னதாக 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ். வழங்கி வந்த ரூ. 98 சலுகை கடந்த ஆண்டு மே மாதம் நிறுத்தப்பட்டு இந்த ஆண்டு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இத்துடன் வேலிடிட்டியும் 14 நாட்கள் என மாற்றப்பட்டு, 300 எஸ்.எம்.எஸ். பலன் மட்டும் நீக்கப்பட்டது.

     கோப்புப்படம்

    ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி அந்நிறுவனம் ஏற்கனவே வழங்கிவந்த ரூ. 98 சலுகை விலை தான் ஜியோ ரூ. 119 என மாற்றப்பட்டது. விலை உயர்வு டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. ரூ. 119 சலுகையில் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது.

    இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.


    இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் நோட் 11 மற்றும் நோட் 11எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய நோட் 11 மாடலில் 6.7 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், 50 எம்.பி. பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், ஏ.ஐ. சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய நோட் 11எஸ் மாடலில் 6.95 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஹீலியோ ஜி96 பிராசஸர், 50 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. டெப்த், 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 16 எம்.பி. செல்பி கேமரா, டூயல் எல்.இ.டி. பிளாஷ், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

    இன்பினிக்ஸ் நோட் 11எஸ்

    இன்பினிக்ஸ் நோட் 11 மாடல் கிளேசியர் கிரீன், செலஸ்டியல் ஸ்னோ, கிராபைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4ஜி.பி.+64ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 20 ஆம் தேதி துவங்குகிறது.

    இன்பினிக்ஸ் நோட் 11 எஸ் மாடல் சிம்பனி சியான், ஹேஸ் கிரீன் மற்றும் மித்ரில் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6ஜி.பி.+64ஜி.பி. மாடல் விலை ரூ. 12,999 என்றும் 8ஜி.பி.+128ஜி.பி. மாடல் விலை ரூ. 14,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 23 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
    நாய்ஸ் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் 42 மணி நேர பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.


    அணியக்கூடிய சாதனங்களுக்கு பெயர்போன நாய்ஸ் பிராண்டு இந்திய சந்தையில் நாய்ஸ் பட்ஸ் பிரைமா பெயரில் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் அல்ட்ரா-லோ லேடென்சி மோட் கொண்டிருக்கிறது.

    புதிய பட்ஸ் பிரைமா மாடலில் அழைப்புகள், இசை, சிரி அல்லது கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை இயர்பட் மூலமாகவே இயக்கலாம். இதில் உள்ள 6 எம்.எம். டிரைவர்கள் தெளிவான ஆடியோ, என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்களை வழங்குகிறது. இத்துடன் ப்ளூடூத் 5, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     நாய்ஸ் பட்ஸ் பிரைமா

    இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 42 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்து 2 மணி நேரம் பயன்படுத்தலாம். நாய்ஸ் பட்ஸ் பிரைமா மாடல் விற்பனை டிசம்பர் 14 ஆம் தேதி துவங்குகிறது. 

    நாய்ஸ் பட்ஸ் பிரைமா ப்ளிப்கார்ட் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ. 5,999 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் ரூ. 1,799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு 2 சி.இ. ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு கோர் எடிஷன் (சி.இ.) ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இது ஒன்பிளஸ் நார்டு மாடலை சார்ந்து உருவாக்கப்பட்ட வேரியண்ட் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஐ.வி.2201 எனும் மாடல் நம்பர் மற்றும் இவான் எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போனின் விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது.

     ஒன்பிளஸ் நார்டு 2 சி.இ.

    அம்சங்களை பொருத்தவரை புதிய ஒன்பிளஸ் நார்டு 2 சி.இ. மாடலில் 6.4 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 900 5ஜி பிராசஸர், 6 ஜி.பி. துவங்கி அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. இத்துடன் 128 ஜி.பி. அல்லது 256 ஜி.பி. என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் மற்றும் 16 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மர்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். கொண்டிருக்கும் என தெரிகிறது.
    பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பிட்காயின் பற்றிய பதிவு வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


    பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமரின் அக்கவுண்டில் 'இந்தியாவில் பிட்காயின் சட்டப்பூர்வ பரிவர்த்தனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது,' எனும் டுவிட் இடம்பெற்று இருந்தது.

    டுவிட் வெளியான சில நிமிடங்களில் அக்கவுண்ட் மீட்கப்பட்டது என பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 'பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் அக்கவுண்ட் சிறிது நேரத்திற்கு ஹேக் செய்யப்பட்டது. இதுபற்றி டுவிட்டருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அக்கவுண்ட் உடனடியாக மீட்கப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில் பதிவான டுவிட்களை தவிர்க்கவும்,' என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

     டுவிட்டர்

    முன்னதாக செப்டம்பர் 2020 வாக்கில் பிரதமரின் தனிப்பட்ட வலைதளம் ஹேக் செய்யப்பட்டு, அப்போதும் பிட்காயின்களை விளம்பரப்படுத்தும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது.


    ரியல்மி நிறுவனத்தின் அக்டோபர் மாத ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த விவரங்களை கவுண்ட்டர்பாயிண்ட் எனும் தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி அக்டோபர் மாதத்தில் ரியல்மி நிறுவனம் இந்தியாவின் இண்டாவது மிகப்பெரும் ஸ்மார்ட்போன் பிராண்டாக உருவெடுத்து இருக்கிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 18 சதவீதம் பங்குகளை பெற்று அசத்தியிருக்கிறது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்ற பண்டிகை கால சிறப்பு விற்பனையில் ரியல்மி 52 சதவீத பங்குகளுடன் முதலிடம் பிடித்தது. மற்ற ஆன்லைன் வலைதளங்களை சேர்க்கும் போது ரியல்மி 27 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. 

     ரியல்மி

    ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன. ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரையிலான 5ஜி போன் பிரிவில் ரியல்மி 8எஸ் 5ஜி அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தை சியோமி பிடித்து இருக்கிறது. இந்நிறுவனம் சந்தையில் 20 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. 

    சியோமி, ரியல்மி நிறுவனங்களை தொடர்ந்து 16 சதவீத பங்குகளுடன் சாம்சங் மூன்றாவது இடத்திலும், 13 சதவீத பங்குகளுடன் விவோ நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. முன்னதாக ரியல்மி நிறுவனம் உலகம் முழுக்க 10 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை எனும் மைல்கல்லை எட்டியது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா மாடல் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் டேப்லெட் மாடலான கேலக்ஸி டேப் எஸ்8 பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த மாடல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா மாடலில் 14.6 இன்ச் டிஸ்ப்ளே, 8 எம்.பி. + 5 எம்.பி. கேமரா என இரட்டை முன்புற லென்ஸ்கள், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

     சாம்சங் டேப்லெட்

    இத்துடன் 12,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. புதிய டேப்லெட் மாடலை சாம்சங், கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடலுடன் ஜனவரியில் அறிமுகம் செய்யுமா அல்லது கேலக்ஸி எஸ்22 சீரிசுடன் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    புதிய கேலக்ஸி டேப் எஸ்8 விலை 1,178 டாலர்கள் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1249 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம். முந்தைய கேலக்ஸி டேப் எஸ்7 மாடல் விலை 975 டாலர்கள் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 1153 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போன் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.


    மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அறிமுகம் செய்யப்பட்டதும், ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு சீன சந்தையில் துவங்கியது. இந்த நிலையில், மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 முன்பதிவு நிறுத்தப்பட்டதாக லெனோவோ மொபைல் வியாபார பிரிவு பொது மேலாளர் சென் ஜின் தெரிவித்துள்ளார். 

     மோட்டோ எட்ஜ் எக்ஸ்30

    ஐந்து இலக்க யூனிட்கள் இதுவரை விற்றுத்தீர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 விற்பனை டிசம்பர் 15 ஆம் தேதி துவங்குகிறது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 2999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 35,683 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 மாடலில் 6.7 இன்ச் பிளெக்சிபில் ஒ.எல்.இ.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 50 எம்.பி. வைடு ஆங்கில் பிரைமரி கேமரா, 50 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கில் மேக்ரோ கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா, 60 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய சாதனம் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய சாதனம் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. புதிய சாதனம் பற்றிய விவரங்கள் மர்மமாகவே இருக்கின்றன. இது விரைவில் அறிமுகமாக இருக்கும் ஒன்பிளஸ் 9ஆர்.டி. மாடல் இல்லை. இந்த சாதனம் ஐ.வி.2201 எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது.

    அந்த வகையில் இந்த சாதனம் புதிய நார்டு மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும், இது நார்டு சி.இ. மாடலின் மேம்பட்ட வெர்ஷனா அல்லது புதிய ஒன்பிளஸ் சாதனமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.  சமீபத்தில் நார்டு 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டதால், உடனடியாக மற்றொரு நார்டு ஸ்மார்ட்போன் அறிமுகமாகுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் ஆர்.டி. ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது அந்நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 9 ஆர்.டி. மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். முன்னதாக ஒன்பிளஸ் 9ஆர்.டி. ஸ்மார்ட்போனும் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
    கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு கேம்களை எப்போது விண்டோஸ் இயங்குதளத்திற்கு கொண்டு வரும் என்ற விவரங்களை பார்ப்போம்.
     

    விண்டோஸ் ஓ.எஸ். தளங்களில் ஆண்ட்ராய்டு கேம்களை அடுத்த ஆண்டு கொண்டுவர கூகுள் திட்டமிட்டுள்ளது. இதற்கென கூகுள் பிரத்யேக கூகுள் பிளே கேம்ஸ் செயலியை உருவாக்கி வருகிறது. இந்த செயலி விண்டோஸ் தளத்திற்கென உருவாகி இருக்கிறது. இது கூகுள் பிளேவில் உள்ள கேம்களை விண்டோஸ் லேப்டாப், டேப்லெட் மற்றும் கணினிகளில் விளையாட வழி செய்யும்.

    இந்த அம்சம் வழங்கப்பட்டால் போன், டேப்லெட், குரோம்புக் மற்றும் விண்டோஸ் கணினிகளிடையே சீம்லெஸ் ஸ்விட்ச் செய்ய முடியும் என கேம்களுக்கான ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் பிளே இயக்குனர் கிரெக் ஹார்டிரெல் தெரிவித்தார். ஒரு சாதனத்தில் விளையாடிய கேமினை, விட்ட இடத்தில் இருந்து மற்றொரு சாதனத்தில் விளையாட முடியும்.

     கூகுள் பிளே கேம்ஸ்

    கூகுள் பிளே கேம்ஸ் செயலியை கூகுள் வழங்குகிறது. இது விண்டோஸ் 10 மற்றும் அதன் பின் வெளியான இயங்குதளங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. தற்போது இந்த செயலிக்கான டீசரை மட்டும் கூகுள் வெளியிட்டு இருக்கிறது.

    ரியல்மி நிறுவனத்தின் புதிய ஜி.டி. 2 ப்ரோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    ரியல்மி நிறுவனத்தின் ஜி.டி. 2 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ரியல்மி ஜி.டி. 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 1 டி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் மெமரியை தெரிவிக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், ரியல்மி யு.ஐ. 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 12, 3 ஜி.பி. விர்ச்சுவல் ரேம் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

     ரியல்மி ஜி.டி.

    முந்தைய தகவல்களின் படி ரியல்மி ஜி.டி. 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, 32 எம்.பி. செல்பி கேமரா, 50 எம்.பி. பிரைமரி கேமரா, 50 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என தெரிகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.


    தென் கொரியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் தனது கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகைகள் சாம்சங் பிரத்யேக விற்பனை மையங்கள், சாம்சங் வலைதளம் மற்றும் முன்னணி ஆப்லைன் விற்பனை மையங்களில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் டிசம்பர் 22 ஆம் தேதி வரை வழங்கப்படுகின்றன.

    சிறப்பு சலுகையின் படி கேலக்ஸி எஸ்21 பிளஸ் வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 10 ஆயிரம் கூடுதல் கேஷ்பேக் அல்லது ரூ. 5 ஆயிரம் அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது.


     சாம்சங் ஸ்மார்ட்போன்

    இத்துடன் கேலக்ஸி எஸ்21 வாங்கும் போது ரூ. 10 ஆயிரம் உடனடி தள்ளுபடி, வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் கூடுதல் கேஷ்பேக் மற்றும் ரூ. 5 ஆயிரம் அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது. 

    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் ரூ. 81,999 துவக்க விலையில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. இதன் 8 ஜி.பி. + 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 85,999 ஆகும். கேலக்ஸி எஸ்21 ஸ்டாண்டர்டு வேரியண்ட் ரூ. 61,999 விலையிலும், டாப் எண்ட் மாடல் ரூ. 65,999 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது.
    ×