என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சியோமி நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி விரைவில் தனது பிளாக்‌ஷிப் சியோமி 12 மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் சியோமி 12 அல்ட்ரா அந்நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக உருவாகி வருகிறது. சியோமி 12 சீரிஸ் மாடல்களுடன் இந்த ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    பல்வேறு உயர் ரக அம்சங்கள் மட்டுமின்றி சியோமி 12 சீரிஸ் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சியோமி 12 சீரிஸ் - சியோமி 12, 12 ப்ரோ, 12 அல்ட்ரா மற்றும் சியோமி 12 அல்ட்ரா என்ஹான்ஸ்டு எடிஷன் உள்ளிட்ட மாடல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த பிளாக்‌ஷிப் சீரிஸ் அடுத்த ஆண்டு முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாகிறது.

     சியோமி எம்ஐ 11

    புதிய ஸ்மார்ட்போன் பற்றி சியோமி தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இதுபற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனின் ரெண்டர் லீக் ஆகி இருக்கிறது. புதிய ரெண்டரின் படி சியோமி 12 மூன்று கேமரா சென்சார்கள், எல்.இ.டி. பிளாஷ், கூடுதலாக மற்றொரு சென்சார் கொண்டிருக்கும்.

    இந்த ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. சியோமி 12 அல்ட்ரா மாடலில் நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, பெரிஸ்கோப் டெலிபோட்டோ ஜூம் கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. 
    ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஒன்பிளஸ் பட்ஸ் இசட் இயர்போனின் மேம்பட்ட மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

     
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பட்ஸ் இசட்2 வயர்லெஸ் இயர்பட்ஸ் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு ஒன்பிளஸ் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் பட்ஸ் இசட் இயர்பட்ஸ்-இன் மேம்பட்ட மாடல் ஆகும். புதிய இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியுடன் பெரிய டைனமிக் டிரைவர்களை கொண்டிருக்கிறது. 

    மேலும் இதன் பேட்டரி பேக்கப் முந்தைய பட்ஸ் இசட் மாடலை விட அதிகம் ஆகும். புதிய பட்ஸ் இசட்2 மாடலில் ப்ரோ கேமிங் மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மொபைல் கேமர்களுக்கு லோ லேடன்சி மூலம் சிறப்பான அனுபவத்தை வழங்கும். புதிய ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 நத்திங் இயர் 1 மற்றும் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2

    ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 விலை 99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 7,600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய இயர்பட்ஸ் பியல் வைட் மற்றும் அப்சிடியன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
    சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் ரெண்டர் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் பிரஸ் ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் மற்றும் அம்சங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், இம்முறை வெளியாகி இருக்கும் ரெண்டரில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது.

    அதன்படி புதிய கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் முந்தைய மாடலை விட 20 கிராம் எடை குறைவாகவும், மெல்லியதாகவும் இருக்கிறது. இந்த மாடலில் 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் இன்பினிட்டி ஒ டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. 

     சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ.

    இத்துடன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 6ஜி.பி./128 ஜி.பி. மற்றும் 8ஜி.பி./256ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யு.ஐ. 3.1 ஓ.எஸ்., 12 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 32 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடல் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி பைண்ட் என் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.


    ஒப்போ நிறுவனம் இன்னோ டே 2021 நிகழ்வில் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. பைண்ட் என் பெயரில் அழைக்கப்படும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3, ஹூவாய் மேட் எக்ஸ்2 மற்றும் இதர மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ஒப்போ பைண்ட் என் திறக்கப்பட்ட நிலையில் 7.1 இன்ச் டிஸ்ப்ளேவும், மடிக்கப்பட்ட நிலையில் 5.49 இன்ச் டிஸ்ப்ளேவும் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 2 லட்சம் முறைக்கும் அதிகமாக மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

     ஒப்போ பைண்ட் என்

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 35 வாட் சூப்பர்வூக் மற்றும் 15 வாட் ஏர்வூக் சார்ஜிங், 10 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஓ.எஸ். 12, ஆண்ட்ராய்டு மல்டி-டாஸ்கிங் ஜெஸ்ட்யூர்களுடன் புதிய ஜெஸ்ட்யூர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புகைப்படங்களை எடுக்க 50 எம்.பி. கேமரா, 16 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 13 எம்.பி. டெலிபோட்டோ கேமரா மற்றும் இரண்டு செல்பி கேமராக்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பிரைமரி கேமராவை கொண்டே செல்பி படங்களும் எடுத்துக் கொள்ளலாம். 

    ஒப்போ பைண்ட் என் விற்பனை சீனாவில் டிசம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது. இதன் 8 ஜி.பி./ 256 ஜி.பி. விலை இந்திய மதிப்பில் ரூ. 92,290 என்றும் 12 ஜி.பி. / 512 ஜி.பி. விலை இந்திய மதிப்பில் ரூ. 1,07,873 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் ஏ8 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.


    சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 10.5 இன்ச் 1920x1200 பிக்சல் டி.எப்.டி. டிஸ்ப்ளே, ஆக்டாகோர் பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி., 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. மெமரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. 

    புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய கேலக்ஸி டேப் ஏ8 மாடலில் 7040 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி, எல்.டி.இ., டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8

    இந்த டேப்லெட் ஒன் யு.ஐ. இண்டர்பேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் மல்டி-டாஸ்கிங், ஸ்ப்லிட் ஸ்கிரீன், டிராக் அண்ட் ஸ்ப்லிட் அம்சங்கள் உள்ளது. புதிய சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல்- கிரே, பின்க், கோல்டு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் இந்திய வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.


    கூகுள் நிறுவனம் ஏற்கனவே எதிர்பார்த்தப்படி இந்தியாவில் பிக்சல் 6 வெளியீட்டை புறக்கணித்து விட்டது. எனினும், சிலர் அமெரிக்காவில் இருந்து புதிய பிக்சல் 6 5ஜி மாடல்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்கின்றனர். தற்போது பிக்சல் 6 5ஜி மாடல் இந்தியாவில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    அமேசான் இந்தியா வலைதளத்தில் புதிய பிக்சல் 6 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 67,400 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கைண்டா கோரல், ஸ்டார்மி பிளாக் மற்றும் சோர்டா சீஃபோம் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 75,999 ஆகும்.

     அமேசான் ஸ்கிரீன்ஷாட்

    இந்தியாவில் பிக்சல் 6 5ஜி மாடல்கள் அறிமுகமாகவில்லை. இவற்றை மூன்றாம் தரப்பினர் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து லாபத்திற்காக விற்பனை செய்கின்றனர். அமேசான் இந்தியா பிரைம் சான்றுடன் பிக்சல் 6 சீரிஸ் விற்பனை செய்யப்படுகிறது.

    சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் சாம்சங் டிஸ்ப்ளே பேனல் வழங்கப்பட இருக்கிறது.


    சியோமி நிறுவனம் தனது மிக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனத்தின் யு.டி.ஜி. பேனலை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங் மற்றும் கார்னிங் நிறுவனங்கள் இணைந்து யு.டி.ஜி. (அல்ட்ரா தின் கிளாஸ்) மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே பேனலை கடந்த ஆண்டு உருவாக்கின.

    கேலக்ஸி போல்டு/ப்ளிப் சீரிஸ் மாடல்களில் யு.டி.ஜி. பேனல்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சில சீன நிறுவனங்கள் சி.பி.ஐ. (கலர்லெஸ் பாலிமைடு) பேனல்களை பயன்படுத்துகின்றன. ஹூவாய் மேட் எக்ஸ் மாடலிலும் இதே பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது.

     சியோமி மிக்ஸ் போல்டு

    சாம்சங் டிஸ்ப்ளேவின் யு.டி.ஜி. பேனல் விரைவில் அறிமுகமாக இருக்கும் சியோமி மிக்ஸ் போல்டு 2 மாடலில் வழங்கப்பட இருக்கிறது. இந்த மாடலில் சாம்சங் டிஸ்ப்ளேவின் 8.01 இன்ச் ஒ.எல்.இ.டி. பேனல், முன்புறம் டி.சி.எல். சி.எஸ்.ஒ.டி. 6.52 இன்ச் பேனல் வழங்கப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 1 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் தனது சலுகை கட்டணங்களை உயர்த்தியது. விலை உயர்வு டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 1 விலையில் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. 

    புதிய ரூ. 1 விலை ஜியோ சலுகை 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 100 எம்.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 100 எம்.பி. டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 64 கே.பி.யாக குறைக்கப்பட்டு விடும். எனினும், பயனர்கள் மீண்டும் ரூ. 1 விலை சலுகைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 

     மைஜியோ ஆப் ஸ்கிரீன்ஷாட்

    இந்த சலுகையை பெற முதலில் உங்களின் மொபைல் நம்பருக்கு புதிய சலுகை வழங்கப்பட்டு இருக்கிறதா என தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ய மை ஜியோ செயலியின் ரீசார்ஜ் ஆப்ஷன் சென்று வேல்யூ பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து அதர் பிளான்ஸ் பகுதியில் ரூ. 1 சலுகையை காணலாம்.
    ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஐபோன் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐபோன் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில், புதிய ஐபோன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. 

    அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் 14 ப்ரோ மாடலில் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், அதிகபட்சம் 2 டி.பி. மெமரி, 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 ஜி.பி. ரேம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

     ஐபோன்

    இதுவரை வெளியான ஐபோன்களில் ஆப்பிள் அதிகபட்சம் 12 எம்.பி. கேமரா சென்சார்களே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இம்முறை 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன்காரணமாக புதிய மாடல்களில் அதிகபட்சம் 8கே வரையிலான வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்படலாம்.

    ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே கன்சோல் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.


    ரெட்மியின் 2022 ரெட்மி 10 ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே கன்சோல் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களும் தெரியவந்துள்ளது.

    அதன்படி 2022 ரெட்மி 10 மாடல் இருவித ரேம் ஆப்ஷன்கள், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் அமெரிக்காவின் எப்.சி.சி. வலைதளத்திலும் இடம்பெற்று இருந்தது.

     ரெட்மி 10

    மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் 1080x2400 ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு சார்ந்த எம்.ஐ.யு.ஐ. 12.5 வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடல் 4ஜி.பி.+64ஜி.பி. மற்றும் 6ஜி.பி.+128ஜி.பி. என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சீரிஸ் சிப்செட், பிரைமரி கேமராவுடன் 8 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ், 2 எம்.பி. ஆம்னிவிஷன் கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இந்தியாவில் 2022 ரெட்மி 10 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.
    ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் மடிக்கக்கூடிய ஐபோன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் 2024 வாக்கில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

    புதிய மடிக்கக்கூடிய ஐபோனிற்கான ப்ரோடோடைப் மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கென சாம்சங் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே சாம்பில்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு வினியோகம் செய்துள்ளது. சாம்சங் மட்டுமின்றி எல்.ஜி. டிஸ்ப்ளே நிறுவனமும் ஆப்பிள் நிறுவனத்திற்கு மடிக்கக்கூடிய பேனல்களை வினியோகம் செய்வதாக கூறப்படுகிறது.

     ஐபோன்

    முந்தைய தகவல்களின்படி மடிக்கக்கூடிய ஐபோன் 8 இன்ச் பிளெக்சிபில் ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்பட்டது. ஆப்பிள் இதுவரை மடிக்கக்கூடிய சாதனத்தை அறிமுகம் செய்யாத நிலையில், சாம்சங் ஏற்கனவே மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து சந்தையில் குறிப்பிடத்தக்க பங்குகளை பெற்று இருக்கிறது.
    முன்னணி ஓ.டி.டி. தளமான நெட்ப்ளிக்ஸ் இந்தியாவில் தனது சேவை கட்டணத்தை குறைப்பதாக திடீரென அறிவித்து இருக்கிறது.


    நெட்ப்ளிக்ஸ் இந்தியா சேவை கட்டணம் குறைக்கப்பட்டது. இதனால் நெட்ப்ளிக்ஸ் சந்தா கட்டணம் முன்பை விட 18 முதல் 60 சதவீதம் வரை குறைந்துள்ளது. புதிய விலை குறைப்பு காரணமாக இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் சந்தா துவக்க விலை ரூ. 149 என துவங்குகிறது.

    முன்னதாக ரூ. 199 விலையில் வழங்கப்பட்டு வந்த நெட்ப்ளிக்ஸ் மொபைல் சந்தா தற்போது ரூ. 149 என மாறி இருக்கிறது. இதேபோன்று நெட்ப்ளிக்ஸ் பேசிக் சந்தா விலை ரூ. 499 இல் இருந்து தற்போது ரூ. 199 என மாறியுள்ளது.

     நெட்ப்ளிக்ஸ்

    இத்துடன் நெட்ப்ளிக்ஸ் ஸ்டாண்டர்டு சந்தா விலை ரூ. 649-இல் இருந்து ரூ. 499 என மாறி இருக்கிறது. நெட்ப்ளிக்ஸ் பிரீமியம் சந்தா விலை ரூ. 799-இல் இருந்து தற்போது ரூ. 649 என குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து சந்தாவும் ஒரு மாத வேலிடிட்டி கொண்டவை ஆகும். 

    சமீபத்தில் அமேசான் பிரைம் சந்தா விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டதை அடுத்த நெட்ப்ளிக்ஸ் தனது சந்தா கட்டணங்களை குறைத்து இருக்கிறது. விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு நெட்ப்ளிக்ஸ் இந்தியா அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் வெளியிடப்பட்டு உள்ளது.
    ×