search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெட்ப்ளிக்ஸ்"

    • நெட்ப்ளிக்ஸ் சேவையில் புதிதாக 60 லட்சம் பேர் இணைந்திருப்பதாக அந்நிறுவனம் அறிவிப்பு.
    • இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தள பயன்பாடுகளில் புதிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பாஸ்வேர்டு ஷேரிங் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. புதிய அறிவிப்பு காரணமாக இந்திய பயனர்கள் இனி தங்களது அக்கவுன்ட் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது.

    கடந்த மே மாதத்தில் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் பாஸ்வேர்டு ஷேரிங் சேவை நிறுத்தப்பட்டது. இந்த சேவை நிறுத்தப்பட்டதில் இருந்து நெட்ப்ளிக்ஸ் சேவையில் சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் தான், நெட்ப்ளிக்ஸ் சேவையில் ஒரே அக்கவுன்ட்-ஐ பலர் பயன்படுத்துவதற்கான வசதி நீக்கப்பட்டு இருக்கிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் நெட்ப்ளிக்ஸ் அக்கவுன்ட்-ஐ அவர்களது வீடு, வெளியில் செல்லும் இடங்கள் மற்றும் பயணங்கள் என எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இதோடு டிரான்ஸ்பர் ப்ரோபைல், மேனேஜ் அக்சஸ் மற்றும் டிவைசஸ் போன்ற புதிய அம்சங்களை பயன்படுத்த முடியும். நெட்ஃப்ளிக்ஸ்-இன் புதிய அறிவிப்பு மூலம், அந்நிறுவனம் IP முகவரி, டிவைஸ் ஐடி, அக்கவுன்ட் ஆக்டிவிட்டி உள்ளிட்ட விவரங்கள் அடிப்படையில், அக்கவுன்ட்-ஐ யார் பயன்படுத்துகின்றார்கள் என்பதை அறிந்து கொள்கிறது.

    புதிய மாற்றம் காரணமாக பயனர்கள், நெட்ப்ளிக்ஸ் ஹவுஸ்ஹோல்டு-ஐ செட்டப் செய்து கொள்ள வேண்டும். இந்த அக்கவுன்ட் பயனர் வீடு அல்லது வசிக்கும் இடமாக இருத்தல் அவசியம் ஆகும். ஒரே இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்துவோர் மட்டுமே இந்த அக்கவுன்ட்-ஐ பயன்படுத்த முடியும்.

    மற்ற இணைப்பில் இருந்து நெட்ப்ளிக்ஸ் அக்கவுன்ட்-இல் லாக் இன் செய்தால், அவ்வாறு செய்வோருக்கு புதிய அக்கவுன்ட் உருவாக்குவதற்கான நோட்டிபிகேஷன் அனுப்பப்படுகிறது.

    • நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தனது சலுகைகளை மாற்றியமைக்க முடிவு செய்து இருக்கிறது.
    • இந்தியாவில் விரைவில் குறைந்த விலை புதிய சலுகைகளை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் விளம்பரங்கள் அடங்கிய சலுகைகளை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புது சலுகைகள் விலை எப்படி இருக்கும் என தெரியவந்துள்ளது. இதில் அமெரிக்க விலை விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    புதிய சலுகைகள் அதிக பணம் சேமித்து தரும் வகையில் காணப்படுகின்றன. இதோடு ஏராளமான புது வாடிக்கையாளர்களை சேவைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில் நெட்ப்ளிக்ஸ் விளம்பரங்கள் அடங்கிய சலுகைகள் விலை 7இல் இருந்து அதிகபட்சம் 9 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 559 முதல் ரூ. 719 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.


    அமெரிக்க சந்தையில் தற்போது நெட்ப்ளிக்ஸ் மாதாந்திர சலுகைகள் விலை 9.99 டாலர்களில் தொடங்கி 19.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,239 முதல் ரூ. 1599 வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புது சலுகைகள் விலை கணிசமான அளவு குறைவு தான் எனலாம். விலை மட்டுமின்றி விளம்பரங்கள் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளன.

    அந்த வகையில், ஒரு மணி நேரத்திற்கு நான்கு நிமிடங்கள் வரை விளம்பரங்கள் வரும் என கூறப்படுகிறது. இவை நிகழ்ச்சி தொடக்கம், மத்தியில் வரும் என தெரிகிறது. முந்தைய தகவல்களில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் விளம்பரங்கள் இடம்பெறாது என கூறப்பட்டுள்ளது.

    நெட்ப்ளிக்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் இணைந்து விளம்பரங்கள் வழங்குவது பற்றி கூட்டணி அமைத்து இருப்பதாக அறிவித்துள்ளன. நெட்ப்ளிக்ஸ் ஒரிஜினல் மூவிஸ் மற்றும் சீரிஸ் உள்ளிட்டவைகளில் விளம்பரங்கள் இடம்பெறாது என கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் விளம்பரங்கள் அடங்கிய சலுகைகள் விலை வித்தியாசமாக இருக்கும். தற்போது நெட்ப்ளிக்ஸ் பேசிக் மொபைல் பிளான் விலை மாதம் ரூ. 149 என தொடங்குகிறது. அந்த வகையில் விளம்பரங்கள் அடங்கிய சலுகைகள் விலை ரூ. 100க்கும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    ×