'லக்கி பாஸ்கர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். லக்கி பாஸ்கர் திரைப்படம் உலகம் முழுவதும் 111 கோடிக்கும் மேல் வசூலித்தது.
'லக்கி பாஸ்கர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் உலகம் முழுவதும் 111 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

லக்கி பாஸ்கர் திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில், இப்படம் வரும் 30ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com