search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர்
    X
    சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர்

    ரூ. 7,999 விலையில் புது சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர், 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்பி கேமரா உள்ளது.

    பிளாஸ்டிக் பாடி கொண்டிருக்கும் புது ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

     சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர்

    சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் அம்சங்கள்

    - 6.5 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
    - 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர்
    - ஐ.எம்.ஜி.8322 ஜி.பி.யு.
    - 2 ஜிபி ரேம்
    - 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
    - 5 எம்.பி. செல்பி கேமரா
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
    - 5,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் விரைவில் நாடு முழுக்க விற்பனைக்கு வர இருக்கிறது.
    Next Story
    ×