search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்
    X
    ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    அந்த பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன்

    குவால்காம் நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.


    குவால்காம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சிப்செட்-ஐ விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய பிராசஸர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 என அழைக்கப்பட இருக்கிறது. 

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடல் புதிய பிரசாஸர் கொண்டு அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் சியோமி மற்றும் மோட்டோரோலா நிறுவன மாடல்களில் இந்த பிரசாஸர் முதலில் வழங்கப்படும் என கூறப்பட்டது.

     ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    முந்தைய மாடல்களை போன்று இல்லாமல், ஒன்பிளஸ் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்கள் மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன.

    அம்சங்களை பொருத்தவரை புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் வளைந்த குவாட் ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 8 ஜிபி அல்லது 12 ஜிபி ரேம், 128 ஜிபி அல்லது 256 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி வைடு சென்சார், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 12, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×