என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
இந்தியாவின் லாவா, டிக்ஸன் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களுடன் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
சீனாவில் 3 முக்கிய ஸ்மார்ட்போன் பிராண்டுகளான ஜியோமி, ஒப்போ, விவோ ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் போன்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதன்மூலம் எலக்ரானிக்ஸ் உற்பத்திக்கான மையமாக இந்தியா உருவாகும் என தெரிவித்துள்ளன.
இந்தியாவின் லாவா இண்டர்நேஷனல், டிக்ஸன் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும்பட்சத்தில் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் லாவா, டிக்ஸனின் தொழிற்சாலைகளில் அசம்பிள் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் சந்தைகளை கைப்பற்றியிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் உலக அளவில் தங்களை நிறுவிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சீனாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் சீனா -அமெரிக்கா பிரச்சனையின் காரணமாக ஐரோப்பிய, அமெரிக்க சந்தைகளை எட்டவில்லை என்றும், இந்தியாவில் இருந்து போன்கள் தயாரிக்கும்பட்சத்தில் எளிதாக உலக சந்தையை எட்ட முடியும் எனவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் எஸ்.இ 2022 வெளியான நிலையில், பழைய போன்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் எஸ்.இ ஸ்மார்ட்போனை இரண்டு நாட்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து அந்நிறுவனத்தின் ஐபோன் 12 மாடலுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது.
இதன்படி ஐபோன் 12-ன் 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.53,999-க்கும், 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.60,999-க்கும், 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.69,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதைத் தவிர இந்த போனை பேங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு ரூ.1000 வரை 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். அதேபோன்று பேங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டு இ.எம்.ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.1,500 தள்ளுபடியும், சிட்டிபேங்க் கிரெடிட் எம்.ஐ.எம் பரிவர்த்தனைகளுக்கு ரூ.1,250 தள்ளுபடியும் வழங்கப்படும்.
மேலும் இந்த போனை வாங்குபவர்களுக்கு ரூ.14,900 வரை எஸ்சேஞ் ஆஃபர்களும் உண்டு.
கூகுள் நிறுவனம் கூகுள் மேசேஜ்கள், போட்டோஸ், கூகுள் அசிஸ்டெண்ட், லைவ் டிரான்ஸ்கிரைப், கூகுள் டிவி, ஜிபோர்ட் ஆகியவற்றில் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் அனைத்து ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் சில புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி கூகுள் மேசேஜ்கள், போட்டோஸ், கூகுள் அசிஸ்டெண்ட், லைவ் டிரான்ஸ்கிரைப், கூகுள் டிவி, ஜிபோர்ட் ஆகியவற்றில் புதிய அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன.
கூகுள் மெசேஜ்
கூகுள் மெசேஜ்களில் வெளியான புதிய அப்டேட்டுகளின்படி இனி ஐபோன் பயனர்களால் மெசேஜ்களில் அனுப்பப்படும் ரியாக்ஷன்கள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எமோஜியாக காட்டப்படும்.
அதேபோன்று கூகுள் போட்டோகளின் லிங்கை மெசேஜ்ஜில் அனுப்பினால் அதில் இருக்கும் வீடியோக்களும், புகைப்படங்களும் அனுப்பப்பட்ட ரெஷலியூஷனிலேயே காட்டப்படும்.
இதுமட்டுமின்றி பயனர்களுக்கு தனிபட்ட முறையில் வரும் மெசேஜ்கள் தனியாகவும், மற்ற மெசேஜ்கள் பிஸ்னஸ் டேப்பிலும் தனித்தனியாக தொகுக்கப்படும். அதேபோன்று ஒடிபி மேசேஜ்கள் தானாகவே 24 மணி நேரத்தில் அழிந்துவிடும்.
பயனர்கள் படிக்க மறந்த அல்லது கூடுதலாக வரும் மேசேஜ்களை நியாபகப்படுத்துவதற்கு தனி அம்சமும் இந்த புதிய அப்டேட்டில் இடம்பெறும். இதில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட நினைவுப்படுத்தல்களும் அடங்கும்.
ஜிபோர்ட்
கூகுள் கீபோர்டில் கிராமர் கரக்ஷன் அம்சம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாம் டைப் செய்யும் வாக்கியங்களில் உள்ள இலக்கண பிழைகள் கண்டறிந்து காட்டப்படும். அதேபோல ஜிபோர்டில் 2000-க்கும் அதிகமான புதிய எமோஜ்ஜிகள் ஸ்டிக்கர்களாக தரப்படவுள்ளது. பிக்சல் பயனர்கள் தாங்கள் டைப் செய்யும் வார்த்தைகளை வண்ணமயமான ஸ்டிக்கர்களாக ஜிபோர்ட் மூலம் மாற்றலாம்.
லைவ் டிரான்ஸ்கிரைப்
நாம் பேசுவதை வார்த்தைகளாக மொழிபெயர்த்து தரும் லைவ் டிரான்ஸ்கிரைப் செயலி இனி அனைத்து ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பிக்ஸல் மற்றும் சாம்சங் போன்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இந்த அப்டேட்டை இனி மற்ற ஆண்ட்ராய்டு போன் பயனர்களும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
அதேபோன்று வைஃபை அல்லது டேட்டா இல்லாதவர்களும் லைவ் டிரான்ஸ்கிரைப்பை பயன்படுத்தும் வகையில் ஆஃப்லைன் மோடும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் போட்டோஸ்
கூகுள் போட்டோஸில் புதிய போட்டோ பிளர் மோடை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் தங்கள் கேமரா செயலியில் போட்ரெய்ட் ஆப்ஷன் இல்லாத ஸ்மார்ட்போன் பயனர்களும் பிளர் செய்யப்பட்ட போட்டோக்களை எடுக்கலாம்.
ஆண்ட்ராய்டு டிவி
கூகுள் ஆண்ட்ராய்டு டிவிக்கும் புதிய பேட்டை வழங்கவுள்ளது. இதில் நமக்கு பிடித்த நிகழ்ச்சிகளை நாம் ஒரே ஒரு டச்சின் மூலம் ஹைலைட் செய்து வைத்துகொள்ள முடியும்.
கூகுள் அசிஸ்டெண்ட்
கூகுள் நிறுவனம் தனது கூகுள் அசிஸ்டெண்ட் சேவையில் பார்க்கிங்கிற்கு கட்டணம் செலுத்தும் அம்சத்தையும் கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் கூகுள் அசிஸ்டெண்டில் வாய்ஸ் கமெண்ட் கொடுப்பது மூலம் நாம் கூகுள் பேயில் இருந்து பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம், நமது பார்க்கிங் ஸ்டேட்டஸ் என்ன என்பதையும் சரிபார்க்கலாம்.

டிஜிட்டல் வெல் பீயிங்
கூகுள் நிறுவனம் ஸ்கிரீன் டைமை கணக்கிடும் புதிய விட்ஜெட்டை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் நாம் அதிகம் பயன்படுத்தும் 3 செயலிகளில் நாம் செலவிடும் நேரத்தை கணக்கிடமுடியும். அதேபோன்று நாம் செயலிகள், ஃபோக்கஸ் மோட், பெட் டைம் மோடுக்கும் டைமர் வைத்துகொள்ள முடியும்.
நியர்பை ஷேர்
இறுதியாக கூகுள் நியர்பை ஷேர் என்ற அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் நாம் விரும்பும் போட்டோ, வீடியோ, டாக்குமெண்டுகளை இனி ஒருவருக்கு மட்டும் இல்லாமல் ஒரே நேரத்தில் பலருக்கும் அனுப்ப முடியும். இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு 6 மற்றும் அதற்கு மேற்பட்ட ஓஎஸ்களில் இடம்பெறும் என கூறப்படுகிறது.
ஏர்டெல் வழங்கும் தினம் 1ஜிபி டேட்டா, 1.5 ஜிபி டேட்டா ரீசார்ஜ் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வை அறிவித்தன. இதனால் பயனர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் குறைந்த பட்ஜெட்டில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கான திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன.
தற்போது ஏர்டெல்லில் உள்ள குறைந்த பட்ஜெட் திட்டங்களை காணலாம்.
ஏர்டெல் நிறுவனம் ரூ.209-க்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை 21 நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ.239-க்கு 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள் உள்ளிட்டவற்றை 24 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.265-க்கு ரீசார்ஜ் செய்தால் தினம் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ்களை 28 நாட்களுக்கு பெறலாம்.
ஏர்டெல்லில் ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்தால் தினம் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்களை ரூ.299-க்கு பெறலாம்.
இதைத்தவிர தினமும் 1.5 ஜிபி டேட்டா தரும் நீண்ட அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களையும் இப்போது பார்க்கலாம்.
ரூ.479 திட்டத்தில் தினம் 1.5 ஜிபி டேட்டா 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் இலவச அழைப்புகள், எஸ்.எம்.எஸ்களும் உண்டு. ரூ.666 ரீசார்ஜ் திட்டத்தில் தினம் 1.5 ஜிபி டேட்டா 77 நாட்களுக்கு வழங்கப்படும். ரூ.799-க்கு தினம் 1.5 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படும்.
நோக்கியா சமீபத்தில் குறைந்த விலை சி21, சி21 பிளஸ் மற்றும் சி2 2nd எடிஷன் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் இனி நோக்கியாவின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வெளியிடப்போவதில்லை என அறிவித்துள்ளது.
நோக்கியாவிற்கு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை விட பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் தான் ஈடுபாடு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. சந்தையில் வெளி வரும் ரூ.50,000க்கும் அதிக விலையுள்ள ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் பெரிதாகச் சென்றடையவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
நோக்கியா குறைந்த விலை 5ஜி போன்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. விரைவில் 5ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் டெக் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா சமீபத்தில் குறைந்த விலை சி21, சி21 பிளஸ் மற்றும் சி2 2nd எடிஷன் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த டிவிக்கான முன்பதிவு வரும் மார்ச் 12 முதல் மார்ச் 16 பரை நடைபெறவுள்ளது.
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் புதிய இன்ஃபினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவி 32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடல்களில் கிடைக்கிறது.
இன்ஃபினிக்ஸ் எக்ஸ்3 32 இன்ச் மாடல் டிவியில் ஹெச்.டி ரெடி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. 43 இன்ச் மாடல் டிவியில் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே 122 சதவீத sRGB கலர் காமுட் கவரேஜ்ஜுடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த டிவிகளில் ஆன்டி ஃப்ளூரே தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது கடினமான நீல ஒளியை விலக்குகிறது, மேலும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வரை இந்த டிவி வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிவி ஹெச்.டி.ஆர் 10 சப்போர்ட்டுடன் வருகிறது.
இந்த டிவியில் 4 Cortex A55 cores கொண்ட quad core Realtek RTD2841 பிராசஸர் இடம்பெற்றுள்ளது. 1ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் இதில் வழங்கப்பட்டுள்ளன.
இந்த டிவியில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. 32 இன்ச் மாடல் 20W அவுட்புட் தரும் 2 பாக்ஸ் ஸ்பீக்கர்களுடனும், 43 இன்ச் மாடல் மொத்தமாக 36W அவுட்புட் தரும் 2 பாக்ஸ் ஸ்பீக்கர்கள், 2 ட்வீட்டர்கள் வழங்கப்படவுள்ளது. 2 டிவிகளும் டால்பி ஆடியோவை சப்போர்ட் செய்யும்.
இந்த டிவியில் 3 ஹெச்.டி.எம்.ஐ போர்ட்டுகள், 2 யூ.எஸ்.பி போர்ட்டுகள், எதர்னட் போர்ட், மினி YPbPr வீடியோ அவுட்புட் போர்ட், 3.5 எம்.எம் ஹெட்போன்ஸ் ஜேக் இடம்பெற்றுள்ளன.
இந்த டிவி ஆண்ட்ராய்டு டிவி 11 ஓ.எஸ்ஸில் இயங்குகிறது.
நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம், யூடியூப், கூகுள் அசிஸ்டெண்ட், க்ரோம்கேஸ்ட் ஆகிய அம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட் டிவியின் 32 இன்ச் மாடலின் விலை ரூ.11,999-ஆகவும், 43 இன்ச் மாடலின் விலை ரூ.19,999 எனவும் நிர்ணயம் செய்யப்ப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு உதவுவதற்காக ரூ.7.65 கோடி சேர்ப்பதே தங்களது இலக்கு என தெரிவித்துள்ளது.
இட்ச்.ஐஓ (itch.io) என்ற இணையதளம், உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் மக்களுக்கு 1000 மேற்பட்ட கேம்கள், டிஜிட்டல் புத்தகங்கள், காமிக்ஸ்களை இலவாசமாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
ரஷியாவுக்கு எதிரான போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு குறைந்தபட்சம் 10 டாலர்கள் நிதியுதவி வழங்குபவர்களுக்கு 566 வீடியோ கேம்கள், 317 டேபிள் டாப் கேம்கள் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன. இதற்காக 700-க்கும் மேற்பட்ட கேம் தயாரிப்பாளர்கள் உதவ வந்துள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு உதவுவதற்காக ரூ.7.64 கோடி சேர்ப்பதே தங்களது இலக்கு என்றும், இதுவரை 75 சதவீத இலைக்கை அடைந்துவிட்டதாகவும் அந்த இணையதளம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போனை ஐசிஐசிஐ கார்டுகள் கொண்டு வாங்குபவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் ரியல்மி 9 5ஜி மற்றும் ரியல்மி 9 5ஜி எஸ்இ ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, 90Hz மற்றும் ரிப்பிள் ஹோலோகிராஃபிக் டிசைனுடன் இடம்பெற்றுள்ளது. இந்த போன் MediaTek Dimensity 810 5G chipset பிராசஸரை கொண்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை இதில் 3 கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. 40 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்ஸல் பிளாக் & வைட் சென்சார், 2 எம்பி 4 செ.மீ மெகா பிக்ஸல் மேக்ரோஒ சென்சார், 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.
5000mAh பேட்டரி, 18W டார்ட் சார்ஜ் தொழில்நுட்பம் இந்த கேமராவில் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 22 மணி நேரம் வீடியோ பிளே பெக்கை பெற முடியும்.
இந்த போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.14,999 என்றும், 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.17,499 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போன் வரும் மார்ச் 14 முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த போனை ஐசிஐசிஐ வங்கி டெபிட், கிரெடிட் கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.1500 உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 9 5ஜி எஸ்.இ ஸ்மார்ட்போனில் 144Hz ஸ்கீரின் ரெஃப்ரெஷ்ரேட், ரிப்பில் ஹோலோகிராஃபிக் டிசைன் கொண்ட 6.6 இன்ச் டிஸ்பிளே, Qualcomm Snapdragon 778 5G பிராசஸர் ஆகியவை தரப்பட்டுள்ளன.
கேமராவை பொறுத்தவரை இதில் 48 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்ஸல் பிளாக் & வைட் சென்சார், 2 மெகா பிக்ஸல் 4 செ.மீ மெகாபிக்ஸல் மேக்ரோ சென்சார், 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரி, 30W டார்ட் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ள இந்த போனை சார்ஜ் செய்தால் 53 மணி நேரம் காலிங் டைம் பெறலாம்.
இந்த போனின் 6ஜிபி ரேம்+ 64 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.19,999-ஆகவும், 8ஜிபி ரேம்+128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.22,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போனை ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போன்கள் மார்ச் 14-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
இந்த மென்பொருளுடன் ஏராளமான ராயல்டி இல்லாத வீடியோக்கள், ஆடியோக்கள், புகைப்படங்கள் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பலரும் ஸ்மார்ட்போன்களில் வீடியோக்களை எடுத்து யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுக்கின்றனர். அதன்மூலம் வருமானமும் ஈட்டுகின்றனர். இதனால் வீடியோ எடுப்பது, எடிட் செய்வது ஆகியவை இன்று அடிப்படியாக அனைவரும் பயன்படுத்தும் திறனாக இருக்கிறது.
இந்நிலையில் சாதாரண மக்கள் வீடியோ எடிட் செய்வதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது வீடியோ எடிட்டர் மென்பொருளான ‘clipchamp’-ஐ விண்டோஸ் 11 ஓஎஸ்ஸுடன் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. பழைய விண்டோஸ் பயனர்கள் மைக்ரோசாஃப்ட் ஸ்டோருக்கு சென்று கிளிப்சேம்பை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த மென்பொருளுடன் ஏராளமான ராயல்டி இல்லாத வீடியோக்கள், ஆடியோக்கள், புகைப்படங்கள் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் அஜூர் நிறுவனத்தின் துணைக்கொண்டு உருவாக்கப்பட்ட டெக்ஸ்ட் டூ ஸ்பீச் ஜெனரேட்டரும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் யாருடைய உதவியும் இல்லாமல் 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் வாய்ஸ் ஓவர்கள் உருவாக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
இவரது அனைத்து வீடியோக்களும் வைரலாகி வருவதாகவும், பிபிசி உள்ளிட்ட பெரும் செய்தி நிறுவனங்களே இவரது வீடியோக்களை எடுத்து பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு இரண்டு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரினால் உக்ரைன் மக்கள் பெரிதாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டை சேர்ந்த ஒரு பெண் மிகப்பெரிய டிக்டாக் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
உக்ரைனை சேர்ந்த 20 வயது பெண்ணான மார்தா வாசுயுடா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் தனது பொழுதுபோக்கிற்காக டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். இவருக்கு சில நூறு பார்வையாளர்கள் மட்டுமே இருந்த நிலையில் உக்ரைன் - ரஷியா போர் ஆரம்பித்த ஒரே இரவில் போர் சம்பந்தமான வீடியோக்களை டிக்டாக்கில் வெளியிட்டு டிக்டாக் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

தனது தோழி ஒருவரை சந்திக்க அவர் பிரிட்டன் சென்றிருந்தபோது ரஷியா உக்ரைன் மீது படையெடுத்தது. இதையடுத்து அவர் உக்ரைனில் உள்ள நண்பர்களின் டெலிகிராம் சேனல்களுக்கு சென்று அவர்கள் பதிவிடும் வீடியோக்களை எடுத்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் ஒரே இரவில் 1 கோடிக்கும் மேலான பார்வையாளர்களை பெற்றுள்ளார்.
இவரது அனைத்து வீடியோக்களும் வைரலாகி வருவதாகவும், பிபிசி உள்ளிட்ட பெரும் செய்தி நிறுவனங்களே இவரது வீடியோக்களை எடுத்து பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பிக்ஸல் போன்களுக்கு மட்டுமே வெளியாகியுள்ள இந்த அப்டேட் விரைவில் மற்ற ஆண்ட்ராய்டு போன்களுக்கும் வரும் என கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு 12L அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்ட்ராய்டு 12L அப்டேட் பழைய Pixel 3a முதல் Pixel 5a வரையிலான ஸ்மார்ட்போன்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் பிற பிக்சல் போன்களுக்கும் புதிய அப்டேட் கிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது.
இந்த புதிய அப்டேட்டின் சிறப்பம்சமாக வாய்ஸ் அழைப்புகளுக்கு நேரடி கேப்ஷன் வழங்கப்படுகிறது. இதற்கு முன் வீடியோக்களுக்கு மட்டுமே நேரடி கேப்ஷன்கள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புதிய அம்சத்தின் மூலம், வாய்ஸ் அழைப்புகளில் மற்றவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதையும் நாம் திரையில் வார்த்தைகளாக காணலாம். காது கேளாதோருக்கு இந்த அம்சம் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

புதிய பேட்டரி விட்ஜெட்டும் இந்த அப்டேட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பேட்டரி திறன், எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கும் போன்ற தகவல்கள் இந்த விட்ஜெட்டில் காட்டப்படும்.
தற்போது பிக்ஸல் போன்களுக்கு மட்டுமே வெளியாகியுள்ள இந்த அப்டேட் விரைவில் மற்ற ஆண்ட்ராய்டு போன்களுக்கும் வரும் என கூறப்படுகிறது.
அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை கவுண்டர்பாயிண்ட் குளோபல் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் ஆப்பிள் ஐபோன்12 போன் முதலிடத்தை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து 2-வது இடத்தில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் இருக்கிறது. 3-வது இடத்தில் ஐபோன் 13, 4-வது இடத்தில் ஐபோன் 12 ப்ரோ, 5-வது இடத்தில் ஐபோன் 11 அதிகம் விற்கப்பட்ட போன்களாக இருக்கிறது. முதல் 5 இடங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் போன்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.

6-வது இடத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ12, 7-வது இடத்தில் ஜியோமி ரெட்மி 9ஏ, 8-வது இடத்தில் ஆப்பிள் ஐபோன் எஸ் எஸ்இ 2020, 9-வது இடத்தில் ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், 10-வது இடத்தில் ரெட்மி 9 ஆகிய போன்கள் அதிகம் விற்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலை கவுண்டர்பாயிண்ட் குளோபல் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.






