என் மலர்

  தொழில்நுட்பச் செய்திகள்

  ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போன்
  X
  ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போன்

  ரூ.14,999 விலையில் ரியல்மி அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்போன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த போனை ஐசிஐசிஐ கார்டுகள் கொண்டு வாங்குபவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  ரியல்மி நிறுவனம் ரியல்மி 9 5ஜி மற்றும் ரியல்மி 9 5ஜி எஸ்இ ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

  ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, 90Hz மற்றும் ரிப்பிள் ஹோலோகிராஃபிக் டிசைனுடன் இடம்பெற்றுள்ளது. இந்த போன் MediaTek Dimensity 810 5G chipset பிராசஸரை கொண்டுள்ளது. 

  கேமராவை பொறுத்தவரை இதில் 3 கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. 40 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்ஸல் பிளாக் & வைட் சென்சார், 2 எம்பி 4 செ.மீ மெகா பிக்ஸல் மேக்ரோஒ சென்சார், 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

  5000mAh பேட்டரி, 18W டார்ட் சார்ஜ் தொழில்நுட்பம் இந்த கேமராவில் தரப்பட்டுள்ளது. இதன்மூலம்  ஒருமுறை சார்ஜ் செய்தால் 22 மணி நேரம் வீடியோ பிளே பெக்கை பெற முடியும்.

  இந்த போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.14,999 என்றும், 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.17,499 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த போன் வரும் மார்ச் 14 முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த போனை ஐசிஐசிஐ வங்கி டெபிட், கிரெடிட் கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.1500 உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ரியல்மி 9 5ஜி எஸ்.இ

  ரியல்மி 9 5ஜி எஸ்.இ ஸ்மார்ட்போனில் 144Hz ஸ்கீரின் ரெஃப்ரெஷ்ரேட், ரிப்பில் ஹோலோகிராஃபிக் டிசைன் கொண்ட 6.6 இன்ச் டிஸ்பிளே, Qualcomm Snapdragon 778 5G பிராசஸர் ஆகியவை தரப்பட்டுள்ளன.

  கேமராவை பொறுத்தவரை இதில் 48 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்ஸல் பிளாக் & வைட் சென்சார், 2 மெகா பிக்ஸல் 4 செ.மீ மெகாபிக்ஸல் மேக்ரோ சென்சார், 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரி, 30W டார்ட் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ள இந்த போனை சார்ஜ் செய்தால் 53 மணி நேரம் காலிங் டைம் பெறலாம்.

  இந்த போனின் 6ஜிபி ரேம்+ 64 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.19,999-ஆகவும், 8ஜிபி ரேம்+128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.22,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  இந்த போனை ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த போன்கள் மார்ச் 14-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
  Next Story
  ×