என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஐபோன் எஸ்இ 2022 போனை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள நிலையில், முந்தைய மாடல் போனின் விற்பனையை நிறுத்தியுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் எஸ்இ 2020 போன் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது. அந்நிறுவனம் நேற்று முந்தினம் புதிய ஐபோன் எஸ்இ 2020-ஐ அறிமுகம் செய்தது. இதையடுத்து தனது பழைய மாடல் போனான ஐபோன் எஸ்இ 2020-ஐ தனது இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளது. 

    இருப்பினும் அந்த போன் க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட சில இணையதளங்களில் கிடைக்கிறது. மேலும் கையிருப்பு இருக்கும் ஐபோன் எஸ்.இ 2020 போன்களை விற்பதற்காக தள்ளுபடியை அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஐபோன் எஸ்இ 2020 போனில் 4.7 இன்ச் டிஸ்பிளே, ஆப்பிள் ஏ13 பயோஒனிக் சிப்செட், ஐபோஎஸ் 13, 7 எம்பி கேமரா முன்பக்க கேமரா, 12 எம்பி பின்புற கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளது.

    இந்த போன் 3 ஜிபி + 256 ஜிபி, 3 ஜிபி + 128 ஜிபி, 3 ஜிபி + 64 ஜிபி ஆகிய வேரியண்டுகளில் கிடைக்கிறது.
    இந்த போனில் சமீபத்திய வரவான Qualcomm Snapdragon 8 Gen 1 chipset பிராசஸர் இடம்பெறும் என கூறப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 10 ப்ரோவை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த போன் மார்ச் 22 அல்லது மார்ச் 24-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

    இதில் சமீபத்திய வரவான Qualcomm Snapdragon 8 Gen 1 chipset பிராசஸர் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதில் ஹாசல்பிளாட்டுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட 3 லென்ஸ் கேமரா செட்டப் இடம்பெறும் என கூறப்படுகிறது. மேலும் இதில் 2கே ரெஷலியூஷன் உள்ள 6.7-inch LTPO2 டிஸ்பிளே, 120Hz, HDR 10+ மற்றும் 1300 nits பீக் பிரைட்னஸை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    ஒன்பிளஸ் 10 ப்ரோ

    இந்த போன் ஒன்பிளஸின் ஆக்சிஜன் ஓஎஸ், ஆண்ட்ராய்டு 12-ல் இயங்கும் என்றும், 5000mAh பேட்டரி, 80W வேகமான சார்ஜிங், 50W ஒயர்லெஸ் சார்ஜிங் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் விலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
    உலக அளவில் பாதுகாப்பான வெப் பிரவுசராக கருதப்படும் பயர்பாக்ஸ் பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
    உலக அளவில் முக்கிய பிரவுசர்களில் ஒன்றாக பயர்பாக்ஸ் இருக்கிறது. ஓப்பன்சோர்ஸ் புரோகிராம் பிரவுசரான இது தனிநபர் தரவுகளை சேகரிக்காததால் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில் தற்போது மொசில்லா பயர்பாக்ஸ் பிரவுசரில் ஜீரோ-டே வல்னபிரிட்டி வகையைச் சார்ந்த இரண்டு பக்ஸுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பக்ஸ்கள், பயனர்களின் கணினியில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும், அவற்றை நீக்குவதற்கு பயர்பாக்ஸ் புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது. 

    பயனர்களின் கணினி அந்த பக்ஸால் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு பயர்பாக்ஸ் பிரவுசரை அப்டேட் செய்ய வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
    ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் 2 லைட்டிற்கு 10 நாட்கள் பேட்டரி லைஃப் தரப்பட்டுள்ளது
    ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி வாட்ச் 2 லைட் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது.

    இந்த வாட்ச் 1.55 இன்ச்  TFT டிஸ்பிளே, 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 வாட்ச் ஃபேசஸ், 100 ஒர்க்கவுட் மோட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. HIIT, யோகா உள்ளிட்ட 17 ப்ரொபஷனல் மோட்ஸும் இதில் இடம்பெற்றுள்ளது.

    மேலும் இந்த வாட்ச் 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டென்ஸ் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் 50 மீட்டர் வரை நீரில் மூழ்கினாலும் வாட்ச் பாதுகாப்பாக இருக்கும்.

    இந்த வாட்சில் ஜிபிஎஸ் டிராக்கிங் இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் சேட்சுரேஷன் அளவை கன்ட்ரோல் செய்யும் ஸ்கேனர், 24 மணி நேரம் இதய துடிப்பை ஆராயும் மானிட்டரிங், தூக்கம் மற்றும் ஸ்ட்ரெஸ் மானிட்டரிங் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

    இதுமட்டுமின்றி மூச்சு பயிற்சி மற்றும் மாதவிடாய் சுழற்சியை அளவிடும் அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளன.

    இந்த வாட்சிற்கு 10 நாட்கள் பேட்டரி லைஃப் தரப்பட்டுள்ளது. மேலும் இதில் 262mAh பேட்டரி, மேக்னடிக் சார்ஜிங் போர்ட் ஆகியவையும் இதில் தரப்பட்டுள்ளன.

    இந்த ஸ்மார்ட் வாட்சின் விலை ரூ.4,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனை ஹெச்.டி.எஃப்.சி கார்டு கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ரெட்மி நிறுவனம் ரெட்மி நோட் ப்ரோ, ரெட்மி நோட் ப்ரோ+ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

    ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67-inch full-HD+ AMOLED Dot டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடனும், 1,200 நிட்ஸ் பீக் பிரைட்னஸுடனும் வழங்கப்பட்டுள்ளது. இதில் MediaTek Helio G96 SoC பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 

    கேமராவை பொறுத்தவரை இந்த போனில் 108 மெகா பிக்ஸல் f/1.9 லென்ஸ் கொண்ட சாம்சங் ஹெச்.எம்2 பிரைமர் சென்சார், f/2.2 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா, f/2.2 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார்,  f/2.45 லென்ஸ் கொண்ட 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    இதில் 5000mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வழங்கப்படவுள்ளது.

    மேலும் பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்த போனின் 6ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.17,999-ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.19,999-ஆகவும் உள்ளது. இந்த போன் மார்ச் 23-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போன் மார்ச் 23-ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

    ரெட்மி நோட் 11 ப்ரோ, ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி

    இதேபோன்று ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனில் 6.67-inch full-HD+ (1,080x2,400 pixels) AMOLED டிஸ்பிளே, 120Hz ரெப்ரெஷ்ரேட், 1,200 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் octa-core Qualcomm Snapdragon 695 SoC பிராசஸர் இடம்பெற்றுள்ளது.

    கேமராவை பொறுத்தவரை ப்ரோ+ 5ஜி போனில் f/1.9 லென்ஸ் கொண்ட 108 மெகாபிக்ஸல் சாம்சங் ஹெச்.எம்2 பிரைமரி சென்சார், f/2.2 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா, f/2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா, f/2.45 லென்ஸ் கொண்ட 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை இடபெற்றுள்ளன. இந்த போனில் 5000mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த போனில் 6ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.20,999-ஆகவும், 8 ஜிபி ரேம்+ 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.22,999-ஆகவும், 8ஜிபி ரேம்+256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.24,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனை ஹெச்.டி.எஃப்.சி கார் கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படும். இந்தபோன் வரும் மார்ச் 15-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
    இந்த அம்சம் இந்த வருடத்தின் பின்பகுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
    ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கு எவ்வளவு ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் போதாமல் போய்விடும்.  ஸ்டோரேஜை கிளியர் செய்வதற்கு நாம் அதிகம் பயன்படுத்தாத மொபைல் செயலிகளை அன் இன்ஸ்டால் செய்துகொண்டிருப்போம். மீண்டும் ஒரு கட்டத்தில் தேவைப்படும்போது அந்த செயலியை இன்ஸ்டால் செய்ய முயற்சித்தால் இடம் இருக்காது. 

    இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு நாம் அதிகம் ஸ்டோரேஜ் உள்ள போன்களை வாங்க வேண்டும். ஆனால் இது எல்லோராலும் முடியாது. இந்நிலையில் இந்த சிக்கலை தீர்ப்பதற்கு கூகுள், ஆண்ட்ராய்டு போன்களில் புதிய அம்சம் ஒன்றை கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளது.

    இந்த புதிய அம்சத்திற்கு ‘ஆப் ஆர்கைவிங்’ என பெயரிட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தை பயன்படுத்துவது மூலம் மொபைல் செயலியின் ஸ்டோரேஜ் 60 சதவீதம் வரை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் நமது தனிநபர் தரவுகள் எதுவும் பாதிக்கப்படாது. 

    ஸ்டோரேஜ்

    இந்த அம்சத்தில் செயலியை அன் இன்ஸ்டால் செய்வதற்கு பதில் ஆர்கைவ்ட் ஏபிகேவாக மாற்றிகொள்ள முடியும். அதன்பின் தேவைப்படும்போது செயலியை ரீஸ்டோர் செய்து மீண்டும் பழைய வடிவத்திற்கு கொண்டு வந்துவிடலாம்.

    இந்த அம்சம் இந்த வருடத்தின் பின்பகுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த புதிய அம்சம் பயனர்கள் மற்றும் டெவலப்பர்கள் இரண்டு பேருக்கும் பெரும் அளவில் பயன்படும். குறிப்பாக பயனர்கள் அதிகம் செயலிகளை அன் இன்ஸ்டால் செய்வதை தடுக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த சேவையில் பணம் அனுப்புவது மட்டுமின்றி கேஸ் பில், மொபைல் ரீசார்ஜ் செய்யலாம், வங்கிக் கணக்கில் இருப்பை சரி பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இண்டர்நெட் இல்லாத சாதாரண செல்போன்களிலும் கூட இனி யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்யப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதற்காக 'யுபிஐ- 123 பே' என்ற சேவையை அவர் தொடங்கி வைத்தார்.  

    இந்தியாவில் 40 கோடி வாடிக்கையாளர்கள் சாதாரண செல்போன் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவர்கள் டிஜிட்டல் நவீனமயத்தில் பங்கேற்கும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    இந்த 'யுபிஐ123 பே' சேவையில், சாதாரண போன் வைத்திருக்கும் பொதுமக்கள் வங்கிக்கு சென்று தங்களது செல்போன் எண்ணை, வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். பின் டெபிட் கார்டு எண்ணை உள்ளீடு செய்து, யுபிஐ பாஸ்வேர்டு உருவாக்க வேண்டும். அதன்பிறகு பரிவர்த்தனை செய்யலாம். 

    இந்த சேவையில் 4 வகையில் பணம் அனுப்பலாம். சாதாரண போன்களுக்கு என்று உருவாக்கப்பட்டிருக்கும் செயலியை பயன்படுத்தி பணம் அனுப்பலாம். ஐவிஆர் எண்ணுக்கு கால் செய்து அதில் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரது வங்கி எண் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து பணம் அனுப்பலாம்.

    இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர் போன்ற கருவியை கொண்டு பணம் அனுப்பலாம். ஆர்.பி.ஐ கொடுத்திருக்கும் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தும் பணம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சேவையில் பணம் அனுப்புவது மட்டுமின்றி கேஸ் பில், மொபைல் ரீசார்ஜ் போன்றவற்றையும் செய்யலாம். வங்கிக் கணக்கில் இருப்பை சரி பார்க்கலாம், ஸ்மார்ட்போன் ஸ்கேன் அண்ட் பே செய்யப்படும் இடங்களிலும் கூட இந்த சேவை மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஐபோன் எஸ்இ 2022 மார்ச் 18-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
    அனைவரும் எதிர்பார்த்த ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

    இந்த ஐபோனில் iOS 15 வழங்கப்பட்டுள்ளது. 4.7 இன்ச் ரெட்டினா ஹெச்.டி டிஸ்பிளே 750x1334 ரெஷலியூஷன், 3262ppi பிக்ஸல் டென்சிட்டி, 625 nits வரை பிரைட்னஸ் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

    இந்த போன் இதுவரை உள்ள ஸ்மார்ட்போன்களிலேயே கடினமான கண்ணாடியை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இது ஏ15 பயோனிக் சிப்பை கொண்டுள்ளது. இதில் 12 மெகாபிக்ஸல் கேமரா சென்சார் f/1.8 வைட் ஆங்கிள் லென்சுடன் பின்பக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா டீப் ஃயூஷன், ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர் 4, போட்டோகிராபிக் ஸ்டைல்ஸ் ஆகியவை உள்ளன. இந்த போன் 60fps வரை 4கே வீடியோ ரெக்கார்டிங்கை வழங்குகிறது. இந்த கேமரா சப்பையர் கிரிஸ்டல் லென்ஸ் கவர் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

    முன்பக்கத்தில் 7 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா f/2.2 லென்சுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த செல்ஃபி கேமரா நேர்ச்சுரல், ஸ்டூடியோ, ஸ்டேஜ், ஸ்டேஜ் மோனோ, ஹைகீ போனோ உள்ளிட்ட 6 போர்ட்ரைட் லைட்டிங் எஃபெக்ட்ஸ்களை சப்போர்ட் செய்கிறது. மேலும் இந்த கேமராவிலும் டீப் ஃபூஷன், ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர் 4 தரப்பட்டுள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் முன்பக்க கேமராவிக் 1080p ரெக்கார்டிங்கை வழங்கியுள்ளது. இத்துடன் டைம்லேப்ஸ் வீடியோ, நைட்மோட் டைம்லேப்ஸும் இதில் இடம்பெற்றுள்ளன.

    ஐபோன் எஸ்இ 2022 பயோமெட்ரிக் ஆந்தண்டிகேஷனுக்கான ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொண்ட டச் ஐடியுடன் வருகிறது. அதுமட்டுமின்றி இதில் உள்ள இன்பில்ட் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 15 மணி நேர வீடியோ பிளேபேக் நேரத்தையும், 50 மணி நேர ஆடியோ பிளேபேக் நேரத்தையும் வழங்குகிறது.

    இந்த போனுக்கு Qi ஸ்டாண்டர்ட் பேஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. 20W வயர்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சார்ஜர் போனுடன் வராது.

    இந்த போனின் 64 ஜிபி மாடலின் விலை ரூ.43,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.48.900-ஆகவும், 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.58,900-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தபோன் மிட்நைட், ஸ்டார்லைட், ப்ராடக்ட் ரெட் ஆகிய நிறங்களில் வருகிறது. ஐபோன் எஸ்இ 2022 மார்ச் 18-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த ஐபேட் ஏர் 2022-க்கு வரும் மார்ச் 11-ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கவுள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் ஏர் 2022 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஐபேட் ஏர், ஐபேட் ஓஎஸ் 15-ல் இயங்குகிறது. இதில் 10.9 இன்ச் எல்.இ.டி லிக்விட் ரெட்டினா டிஸ்பிளே, 2360x1640 ரெஷலியூஷனுடன் வழங்கப்படுள்ளது. இதன் டிஸ்பிளே 500 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ், பி3 வைட் கலர் காமுட், ட்ரூ டோன் வைட் பேலன்ஸ் சப்போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

    ஐபேட் ஏர் 2022-ல் ஆக்டாகோர் எம்1 சிப் பிராசஸரை கொண்டுள்ளது. இது இதற்கு முன் இருந்த ஐபேட் ஏரை விட 60 சதவீதம் அதிகமான சிபியூ பெர்ஃபார்மன்ஸ், 2 மடங்கு அதிக கிராபிக்ஸ் பெர்பார்மன்ஸை தருகிறது. இந்த சிப்பில் ஆப்பிள் நியூரல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவை கொண்டு செயல்படுவதற்கு உதவுகிறது.

    ஐபேட் ஏரில் 12 மெகாபிக்ஸல் வைட் பின்புற கேமரா f/1.8 லென்ஸ் தரப்பட்டுள்ளது. இதில் ஃபோகஸ் பிக்ஸல் கொண்ட ஆட்டோ ஃபோகஸ், பனோரமா, ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர், போட்டோ ஜியோடேகிங், இமேஜ் ஸ்டேபிளைஷேசன், பர்ஸ்ட் மோட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதுமட்டுமின்றி 24,25,30,60 fps 4கே ரெக்கார்டிங்கை தருகிறது. இதில் 120fps-ல் 1080p ஸ்லோமோஷன் சப்போர்ட்டும் இருக்கிறது.

    இந்த ஐபேடில் 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் செல்ஃபி கேமரா, மெஷின் லேர்னிங் பேக்ட் சென்டர் ஸ்டேஜ்ஜுடன் வழங்கப்பட்டுள்ளது. இது ஃபேஸ்டைம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும்போது கேமராவை அட்ஜெஸ்ட் செய்யும். இந்த முன்பக்க கேமராவில் 122 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வீவ், f/2.4 லென்சுடன் வழங்கப்பட்டுள்ளது.

    ஐபேட் ஏர் 2022

    ஐபேட் ஏரில் 28.6Wh லித்தியம் பாலிமர் பேட்டரி தரப்பட்டுள்ளது. இது 10 மணி நேரம் வெப் பிரவுசிங் அல்லது வைஃபையில் வீடியோ பிளே பேக்கை வழங்குகிறது. வைஃபை+செல்லுலார் வேரியண்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் வெப் பிரவுசிங்கிற்கு 9 மணி நேரம் சார்ஜை வழங்கும். இதில் 20W USB-C பவர் அடாப்டர் தரபப்ட்டுள்ளது.

    இந்த ஐபேட் ஏரின் வைஃபை மட்டும் உள்ள 64 ஜிபி வேரியாண்டின் விலை ரூ.54,900-ஆகவும், வைஃபை+ செல்லுலார் வசதியுள்ள 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.68,900-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐபேடின் 256 ஜிபி வேரியண்டின் விலை இன்னும் கூறப்படவில்லை.

    இந்த ஐபேட் மார்ச் 11-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படுகிறது.
    இந்த மேக் ஸ்டூடியோ, ஸ்டூடியோ டிஸ்பிளே வரும் மார்ச் 18-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் புதிய மேக் ஸ்டூடியோ, ஸ்டூடியோ டிஸ்பிளேவை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    மேக் ஸ்டூடியோ எம்1 மேக்ஸ் சிப் மற்றும் புதிய எம்1 அல்ட்ரா சிப்செட் என்ற இரண்டு வேரியண்டுகளில் வருகிறது. இந்த எம்1 மேக்ஸ் சிப் கொண்டுள்ள புதிய மேக் ஸ்டூடியோ  16 கோர் ஜியோன் பவர்ட் மேக் ப்ரோவை விட 50 சதவீதம் வேகமாக வேலை செய்யக்கூடியது. மேலும் கோர் ஐ9 கொண்ட 27 இன்ச் ஐமேக்கை விடவும் 2.5 மடங்கு அதிவேகம் கொண்டது. எம்1 அல்ட்ரா கான்ஃபிகரேஷன் 27 இன்ச் ஐமேக்கை விட 3.8 மடங்கு வேகத்தையும், மேக் ப்ரோவை விட 60 சதவீதம் வேகத்தையும் கொண்டது.

    மேக் ஸ்டூடியோ

    இந்த மேக் ஸ்டூடியோவின் பின்பக்கத்தில் தண்டர்போல்ட் 4 போர்ட்ஸ், 10 ஜிபி எதர்நெட் போர்ட், 2 யூஎஸ்பி ஏ போர்ட்ஸ், ஹெச்.டி.எம்.ஐ, ஆடியோ ஜாக் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் எம்1 மேக்ஸ் வேரியண்ட் யூ.எஸ்.பி டைப் சி போர்ட்ஸ் ஆகியவறை கொண்டுள்ளது.

    எம்1 அல்ட்ரா வேரியண்டில் 2 தண்டர்போல்ட் 4 போர்ட்டுகளும், வைஃபை 6 மற்றும் ஃப்ளூடூத் 5 ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

    எம்1 மேக்ஸ் வேரியண்ட் 32 ஜிபி யூனிஃபைட் மெமரி (ரேம்), 512 ஜிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.1,89,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எம்1 அல்ட்ரா பேஸ் வேரியண்ட் 64 ஜிபி யூனிஃபைட் மெமரி, 1 டிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ்ஜுடன் வருகிறது. இதன் விலை ரூ.3,89,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேக் ஸ்டூடியோ டிஸ்பிளே

    மேக் ஸ்டூடியோவுடன் சேர்த்து ஆப்பிள் நிறுவனம் புதிய ஸ்டூடியோ டிஸ்பிளேவையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்டூடியோ டிஸ்பிளே 27 இன்ச், 5கே டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 600 நிட்ஸ் வரை பிரைட்னஸையும், பி3 வைட் கலர் மேகட் சப்போர்ட்டையும், ட்ரூ டோன் ஃபீச்சரையும் கொண்டுள்ளது.

    இந்த டிஸ்பிளேவில் மேலே 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா வீடியோ கான்ஃபரன்சிங்கிற்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 3 மைக் அரே, 96W பாஸ்த்ரூ வரை சப்போர்ட் செய்யும் தண்டர்போல்ட் 4 போர்ட் தரப்பட்டுள்ளன.

    இத்துடன் சக்திய்வாய்ந்த 6 ச்பீக்கர் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. இதில் 4 வூஃபர்கள், 2 ட்விடர்கள் உள்ளன. இந்த டிஸ்பிளேயில் ஏ13 சிப் இடம்பெற்றுள்ளது. மேலும் செண்டர் ஸ்டேஜ், ஸ்பேஷியல் ஸ்டூடியோ, ஹே சிரி வாய்ஸ் கமெண்ட்ஸ் ஆகியவையும் உள்ளன.

    இதன் ஸ்டாண்டர்ட் கிளாஸ் வேரியண்டின் விலை ரூ.1,59,900-ஆகவும், நேனோ டெக்‌ஷர் கிளாஸ் வேரியண்டின் விலை ரூ.1,89,900-ஆகவும் உள்ளது.

    இந்த மேக் ஸ்டூடியோ, ஸ்டூடியோ டிஸ்பிளே வரும் மார்ச் 18-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளம், யூடியூப் சேனல் மற்றும் ஆப்பிள் டிவி செயலியில் இந்த நிகழ்ச்சியை நேரலையில் காணலாம்.
    ஆப்பிள் நிறுவனத்தின் டிஜிட்டல் சாதன அறிமுக நிகழ்ச்சி இரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த நிகழ்வில் அனைவராலும் பெரிதும் எதிபார்க்கப்படும் ஐபோன் எஸ்இ 2022, ஐபோன் எஸ் இ+, ஐபோன் எஸ் இ 5ஜி ஆகிய போன்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. பழைய ஐபோன் எஸ் இ-யை விட மேம்படுத்தபட்ட அம்சங்களுடன் வெளியாகும் இந்த போன் இந்திய மதிப்பில் ரூ.30,000-க்கும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத் தவிர கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 13 மாடலில் கிரீன் கலர் வெர்ஷன் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    அதேபோன்று இன்று ஐபேட் ஏர் 5 வெளியாகவுள்ளதாக கூறப்ப்படுகிறது. இதில் சமீபத்திய ஏ15 பயோனிக் பிராசஸர், 5ஜி சப்போர்ட் உள்ளிட்டவை இடம்பெறும் என கூறப்படுகிறது.

    ஐபோன் 13 கிரீன்

    மேக் கணினிகளை பொறுத்தவரை, எம்2, எம்1 ப்ரோ, எம்1 மேக்ஸ் மற்றும் அதிசக்தி கொண்ட எம்1 மேக்ஸ் சிப்களை கொண்ட மேக் சாதனங்கள் வெளியாகவுள்ளன.

    மேக்புக் ப்ரோ, மேக்புக் ஏர், மேக் மினி ஆகியவை எம்2 சிப்பை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஐமேக் ப்ரோ, எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் ஆப்ஷனுடனும், புதிய மேக் மினி எம்1 ப்ரோ சிப்புடனும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வருடம் வெளியாகவுள்ள மேக்புக் ஏர், கடந்த ஆண்டு வெளியான மேக்புக் ப்ரோவை போலவே டிசைனில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது பல நிறங்களிலான டிசைன்கள் மற்றும் மினி எல்.இ.டிக்களை கொண்டிருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளம், யூடியூப் சேனல் மற்றும் ஆப்பிள் டிவி செயலியில் இந்த நிகழ்ச்சியை நேரலையில் காணலாம்.
    லேப்டாப் பேட்டரி நீடித்து உழைக்கவும், நீண்ட நேரம் சார்ஜ் நிற்கவும் நாம் செய்யவேண்டியது என்ன என்பதை பார்க்கலாம்.
    இன்றைய சூழலில் கல்வி, பணி இடங்கல் ஆகியவற்றில் லேப்டாப்களின் தேவை அதிகரித்துள்ளது. லேப்டாப்களை நாம் கவனமாக பயன்படுத்தாவிட்டால் நாளடைவில் பேட்டரி செயழிலக்க தொடங்கிவிடும். சராசரியாக 4-6 மணி நேரம் சார்ஜ் நிற்பதில் இருந்து குறைந்து, சார்ஜரை இணைத்தால் மட்டுமே லேப்டாப்பை பயன்படுத்த முடியும் என்ற நிலைக்கு சென்று விடும்.

    இந்நிலையில் லேப்டாப் பேட்டரி நீடித்து உழைக்கவும், நீண்ட நேரம் சார்ஜ் நிற்கவும் நாம் செய்யவேண்டியது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்:-

    கன்ட்ரோல் பேனலுக்கு சென்று ’பவர் சேவர்’ மோட் பயன்படுத்துவது நம் சார்ஜ் நீண்ட நேரம் நீடித்து நிற்க உதவும். இதன்மூலம் லேப்டாப் பயன்பாட்டில் இருக்கும்போது குறைந்த பவரையே எடுத்துகொள்ளும்.

    பேட்டரி ஆரோக்கியத்தை ஆய்வு செய்யும் செயலிகளை பயன்படுத்தலாம். இதன்மூலம் எப்போதெல்லாம் அதிகம் சார்ஜ் பயன்படுத்தபடுகிறது என்பதை தெரிந்துகொண்டு கட்டுப்படுத்தலாம்.

    மவுஸ், எக்ஸ்டர்னல் வைஃபை, எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர், ப்ளூடூத் ஆகியவை அதிகம் சார்ஜை குறைக்கும். இவற்றை பயன்படுத்தாதபோது ஆஃப் செய்வது நல்லது.

    திரையின் பிரைட்னஸ் அளவை குறைப்பது நல்லது. நம் கண்களுக்கு பாதிப்பு இல்லாத அளவுக்கு பிரைட்னஸை கையாள வேண்டும்.

    லேப்டாப் சார்ஜ் முழுதாக தீர்ந்துபோவதும் பேட்டரியை பாதிப்படையவைக்கும். அதனால் சார்ஜ் குறைந்து இருக்கும்போதே மீண்டும் சார்ஜ் செய்துகொள்வது நல்லது. 

    லேப்டாப்பை பயன்படுத்தாதபோது அணைத்துவிடவும். இல்லையென்றால் ஸ்லீப் மோடிற்கு பதில் ஹைபர்நெட் மோட்டில் லேப்டாப்பை வைத்துக்கொள்ளவும்.

    லேப்டாப்
    அதிக வெப்பமும் லேப்டாப் பேட்டரியை பாதிப்படைய செய்யும். குளிர்ந்த, காற்றோட்டமான இடத்தில் லேப்டாப்பை வைத்துகொள்ளவும். முடிந்தவரை லேப் டெஸ்க் வைத்து பயன்படுத்தவும்.

    ஒரே நேரத்தில் பல மென்பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். குறிப்பாக எக்ஸல் ஷீட்டுகள், பவர் பாய்ண்ட், போட்டோஷாப் ஆகியவற்றை செய்யும்போது அதிகம் சார்ஜ் செலவாகும். அதேபோன்று கிராஃபிக்ஸ் அதிகம் இருக்கும் மென்பொருட்களும் பேட்டரியை வேகமாக குறைக்கும். அதிகபட்சம் 2 புரோகிராம்களுக்கு மேல் வேண்டாம்.

    நாம் பிளக்பாயிண்ட்டுக்கு பக்கத்தில் இருந்தால் பேட்டரியை நீக்கிவிட்டு பயன்படுத்தலாம். சராசரியாக ஒரு லேப்டாப் பேட்டரி 500 முதல் 700 முறை வரை முழுமையாக சார்ஜ் ஏற்றப்படும் வரை ஆரோக்கியமாக இருக்கும். அதன்பின் அதன் ஆற்றல் குறையத்தொடங்கும்.  இதனால் பிளக்பாயிண்ட் பக்கத்தில் பேட்டரியை கழற்றி விடுவது நல்லது.

    ஸ்கிரீன் சேவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதேபோன்று ஆட்டோமேட்டிக்காக செயல்படும் அப்ளிகேஷன்களை அணைத்து வைக்கவும்.
    ×