என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

மேக் ஸ்டூடியோ
ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள மேக் ஸ்டூடியோ, மேக் ஸ்டூடியோ டிஸ்பிளே- இத்தனை சிறப்பம்சங்கள் இதில் இருக்கிறதா?
இந்த மேக் ஸ்டூடியோ, ஸ்டூடியோ டிஸ்பிளே வரும் மார்ச் 18-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் புதிய மேக் ஸ்டூடியோ, ஸ்டூடியோ டிஸ்பிளேவை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
மேக் ஸ்டூடியோ எம்1 மேக்ஸ் சிப் மற்றும் புதிய எம்1 அல்ட்ரா சிப்செட் என்ற இரண்டு வேரியண்டுகளில் வருகிறது. இந்த எம்1 மேக்ஸ் சிப் கொண்டுள்ள புதிய மேக் ஸ்டூடியோ 16 கோர் ஜியோன் பவர்ட் மேக் ப்ரோவை விட 50 சதவீதம் வேகமாக வேலை செய்யக்கூடியது. மேலும் கோர் ஐ9 கொண்ட 27 இன்ச் ஐமேக்கை விடவும் 2.5 மடங்கு அதிவேகம் கொண்டது. எம்1 அல்ட்ரா கான்ஃபிகரேஷன் 27 இன்ச் ஐமேக்கை விட 3.8 மடங்கு வேகத்தையும், மேக் ப்ரோவை விட 60 சதவீதம் வேகத்தையும் கொண்டது.

இந்த மேக் ஸ்டூடியோவின் பின்பக்கத்தில் தண்டர்போல்ட் 4 போர்ட்ஸ், 10 ஜிபி எதர்நெட் போர்ட், 2 யூஎஸ்பி ஏ போர்ட்ஸ், ஹெச்.டி.எம்.ஐ, ஆடியோ ஜாக் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் எம்1 மேக்ஸ் வேரியண்ட் யூ.எஸ்.பி டைப் சி போர்ட்ஸ் ஆகியவறை கொண்டுள்ளது.
எம்1 அல்ட்ரா வேரியண்டில் 2 தண்டர்போல்ட் 4 போர்ட்டுகளும், வைஃபை 6 மற்றும் ஃப்ளூடூத் 5 ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
எம்1 மேக்ஸ் வேரியண்ட் 32 ஜிபி யூனிஃபைட் மெமரி (ரேம்), 512 ஜிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.1,89,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எம்1 அல்ட்ரா பேஸ் வேரியண்ட் 64 ஜிபி யூனிஃபைட் மெமரி, 1 டிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ்ஜுடன் வருகிறது. இதன் விலை ரூ.3,89,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேக் ஸ்டூடியோவுடன் சேர்த்து ஆப்பிள் நிறுவனம் புதிய ஸ்டூடியோ டிஸ்பிளேவையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்டூடியோ டிஸ்பிளே 27 இன்ச், 5கே டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 600 நிட்ஸ் வரை பிரைட்னஸையும், பி3 வைட் கலர் மேகட் சப்போர்ட்டையும், ட்ரூ டோன் ஃபீச்சரையும் கொண்டுள்ளது.
இந்த டிஸ்பிளேவில் மேலே 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா வீடியோ கான்ஃபரன்சிங்கிற்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 3 மைக் அரே, 96W பாஸ்த்ரூ வரை சப்போர்ட் செய்யும் தண்டர்போல்ட் 4 போர்ட் தரப்பட்டுள்ளன.
இத்துடன் சக்திய்வாய்ந்த 6 ச்பீக்கர் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. இதில் 4 வூஃபர்கள், 2 ட்விடர்கள் உள்ளன. இந்த டிஸ்பிளேயில் ஏ13 சிப் இடம்பெற்றுள்ளது. மேலும் செண்டர் ஸ்டேஜ், ஸ்பேஷியல் ஸ்டூடியோ, ஹே சிரி வாய்ஸ் கமெண்ட்ஸ் ஆகியவையும் உள்ளன.
இதன் ஸ்டாண்டர்ட் கிளாஸ் வேரியண்டின் விலை ரூ.1,59,900-ஆகவும், நேனோ டெக்ஷர் கிளாஸ் வேரியண்டின் விலை ரூ.1,89,900-ஆகவும் உள்ளது.
இந்த மேக் ஸ்டூடியோ, ஸ்டூடியோ டிஸ்பிளே வரும் மார்ச் 18-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
Next Story