என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
அறிமுகமாகியுள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலை குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சாம்சங் நிறுவனம் அனைவரும் எதிர்பார்த்த கேலக்ஸி எம்33 5ஜி மற்றும் கேலக்ஸி எம்23 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை ஸ்பெயினில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அவற்றை விரிவாக இப்போது பார்க்கலாம்:
சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி
- 6.6-இன்ச் (2408×1080 பிக்சல்ஸ்) FHD+ LCD Infinity-V டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- Exynos 1200 Octa-Core (2.4GHz Dual + 2GHz Hexa) பிராசஸர், Mali-G68 GPU
- 6GB ரேம், 128GB ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 1TB வரை நீட்டித்துக்கொள்ளலாம்.
- ஆண்ட்ராய்டு 12, சாம்சங் ஒன் UI 4.1
- இரட்டை சிம்
- f/1.8 அப்பெர்சருடன் 50 மெகாபிக்ஸல் பின்புற கேமரா, எல்.இ.டி ஃபிளாஷ், 5MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா f/2.2 அப்பெர்சருடன், 2MP டெப்த் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா f/2.4 அப்பெர்ச்சருடன்
- f/2.2 அப்பெர்ச்சருடன் 8MP முன்பக்க கேமரா
- பக்கவாட்டில் உள்ள ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்
- டைமென்சன்: 165.4 x 76.9 x 9.4mm; எடை: 215g
- 5G SA/NSA, டூயல் 4G VoLTE, வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் + க்ளோநேஸ்
- 6,000mAh பேட்டரி 25W வேகமான சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி எம்23 5ஜி
- 6.6-இன்ச் (2408×1080 pixels) FHD+ LCD Infinity-V டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- Octa Core (2.2GHz Dual + 1.8GHz Hexa Kryo 570 CPUs) Snapdragon 750G 8nm மொபைல் பிளாட்பார்ம் Adreno 619 GPU உடன்.
- 4GB ரேம், 128GB ஸ்டோரேஜ், 1TB நீட்டிக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 12, சாம்சங் ஒன் UI 4.1
- இரட்டை சிம்
- 50MP பின்பக்க கேமரா f/1.8 அப்பெர்ச்சருடன், 8MP அல்ட்ரா வைட் கேமரா f/2.2 அப்பெர்ச்சருடன், 2MP டெப்த் சென்சார் f/2.4 அப்பெர்ச்சருடன்
- 8MP முன்பக்க கேமரா f/2.2 அப்பெர்ச்சருடன்
- பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- டைமென்சன்: 165.5 x 77 x 8.4mm; எடை: 198g
- 5G SA / NSA, Dual 4G VoLTE, வைஃபை 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.0, GPS + GLONASS, USB Type-C
- 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்த போன்களின் விலை குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்த கார்டை பயன்படுத்துபவர்களுக்கு சலுகைகள், கேஷ்பேக்குகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
ஏர்டெல் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து ஏர்டெல் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்கஸ் செயலிக்கு சென்று இந்த கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கார்ட் ஆக்டிவேட் செய்யப்பட்டவுடன் ரூ.500 அமேசான் இ-வவுச்சர் வழங்கப்படும்.
இந்த கார்ட்டை பயன்படுத்தி ஏர்டெல் சேவைகளுக்கு கட்டணம் செலுத்தும்போது 25 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும். மேலும் மின்சாரம், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பில் கட்டணங்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக், ஸ்விக்கி, ஜொமேட்டோ, பிக்பாஸ்கெட் ஆகியவற்றில் ஆர்டர் செய்யும்போது 10 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகின்றன.
மொபைல், டிடிஹெச் ரீசார்ச், ஏர்டெல் பிளேக், எக்ஸ்ட்ரீம் ஃபைபர் ஆகிய சேவைகளுக்கு இந்த கார்டு மூலம் பணம் செலுத்தும்போது 25 சதவீதம் கேஷ்பேக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தால் தனியாக இனி யூடியூப் வீடியோ டவுன்லோடர்கள், கிளிப் கட்டர்கள் செயலிகளை நாம் பயன்படுத்த வேண்டியதில்லை என அந்நிறுவனம் தெரிவித்துளது.
உலகம் முழுவதும் வீடியோக்களை பதிவிடும் பிரபல இணையதளமாக யூடியூப் உள்ளது. யூடியூப்பில் தினமும் கோடிக்கணக்கான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. பயனர்கள் வீடியோக்களை பார்ப்பதுடன் தங்களுக்கு விருப்பமான வீடியோவை பகிர்ந்தும் வருகின்றனர்.
இந்நிலையில் பயனர்களுக்கு முழு வீடியோவையும் பகிராமல் தங்களுக்கு பிடித்த விஷயங்களை மட்டும் கட் செய்து பகிரும் வகையில் புதிய அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி பயனர்கள் 60 நொடிகளுக்கு வீடியோக்களை கட் செய்து பகிர முடியும். இதற்கு கிளிப் என பெயரிடப்பட்டுள்ளது. யூடியூப் வீடியோவிற்கு கீழ் லைக், ஷேர், சேவ் ஆகிய ஐகான்களுக்கு மத்தியில் இந்த கிளிப் அம்சம் இடம்பெறும். தற்போது குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும்.

இந்த அம்சத்தால் தனியாக இனி யூடியூப் வீடியோ டவுன்லோடர்கள், கிளிப் கட்டர்கள் செயலிகளை நாம் பயன்படுத்த வேண்டியதில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தள்ளுபடி விற்பனையில் ஸ்மார்ட்போன்களை எஸ்பிஐ கிரெடிட் கார்ட்டில் வாங்குபவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஃபிளிப்கார்டின் பிங் சேவிங்ஸ் டே விற்பனை வரும் மார்ச் 12-ம் தேதி தொடங்கி மார்ச் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள், லேப்டாப்கள் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன.
ஃபிளிப்கார்ட் வெளியிட்ட தகவலின் படி, பிக் சேவிங் டே விற்பனையில் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். ஸ்மார்ட்வாட்சுகளுக்கு 60 சதவீதம் தள்ளுபடியும், லேப்டாப்களுக்கு 40 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும்.
ஸ்மார்ட்வாட்சை பொறுத்தவரை டிஜோ வாட்ச் 2, ரியல்மி வாட்ச் 2, ஃபயர் போல்ட் நிஞ்சா ப்ரோ மேக்ஸ், அமேசாஜ்ஃபிட் பிப் யூ ஆகியவை தள்ளுபடி விற்பனையில் இடம்பெறுகின்றன. லேப்டாப்பை பொறுத்தவரை ஆசுஸ், டெல், ஹெச்.பி, லெனோவா ஆகியவை இடம்பெறுகின்றன.
மேலும் இந்த விற்பனையில் ஸ்மார்ட் மற்றும் ஃப்ளூடூத் ஸ்பீக்கர்கள், ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் ஆகியவைகளுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றன.
டி.எஸ்.எல்.ஆர், மிரர்லெஸ் கேமரா, சவுண்ட் பார்களுக்கும், கீபோர்ட், மவுஸ் உள்ளிட்ட கணினி பாகங்களுக்கும் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. டேப்லெட்டுகளுக்கு 45 சதவீதம் தள்ளுபடி தரப்படவுள்ளது.

இதுதவிர மைக்ரோ எஸ்டி கார்டுகள், ஹெச்.டி.டி, எஸ்.டிடி ஆகியவைகளுக்கு 60 சதவீஇதம் வரை தள்ளுபடியும், கேமிங் சாதனங்களுக்கு 80 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படவுள்ளது.
இந்த தள்ளுபடி விற்பனையில் ஸ்மார்ட்போன்களை எஸ்பிஐ கிரெடிட் கார்ட்டில் வாங்குபவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மார்ச் 12-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த போனை ஃபிளிப்கார்ட், ரியல்மி.காம் ஆகிய தளங்களில் வாங்கலாம்.
ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் ரியல்மி சி35 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த போனில் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, 90.7 ஸ்கிரீன் டூ பாடி ரேட்சியோவுடன் வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஆக்டோ கோர் Unisoc T616 SoC பிராசஸர் தரப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை ரியல்மி சி35 போனில் f/1.8 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்சல் பின்புற கேமரா, f/2.4 அபார்ச்சர் கொண்ட 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர், 2f/2.8 லென்ஸ் கொண்ட மோனோகிரோம் சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 மெகா பிக்சல் சோனி IMX355 முன்பக்க கேமரா இடம்பெற்றுள்ளது.
இந்த போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரியின் விலை ரூ.11,999-ஆகவும், 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரியின் விலை ரூ.12,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 12-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த போனை ஃபிளிப்கார்ட், ரியல்மி.காம் ஆகிய தளங்களில் வாங்கலாம்.
கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து கூகுள் நிறுவனம், சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாசாரத்தை சேர்ந்த பெண்களை குறிப்பிடும் வகையில் இந்த சிறப்பு டூடுல் அமைந்துள்ளது.
மருத்துவம், விண்வெளி, கலை, உள்ளிட்ட பல துறைகளில் சாதனை படைத்து வரும் பெண்களின் வெற்றியை பறைசாற்றும் வகையில் அனிமேஷன் காட்சிகள் இந்த டூடுளில் இடம்பெற்றுள்ளன.
கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இந்த தொழில்நுட்பம் கூகுள் சாதனத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் நிறுவனம் புதிய தொழில்நுட்பம் ஒன்றிருக்கு காப்புரிமை கோரியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் நமது சருமத்தை தொடுவதன் மூலம் ஸ்மார்ட் சாதனங்களை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
‘ஸ்கின் இன்டர்ஃபேஸ்’ என இந்த தொழில்நுட்பத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் வாட்ச்சை பயன்படுத்தும் பயனர்கள் வாட்சின் திரையை தொடாமல் வாட்ச் பக்கத்தில் உள்ள சருமத்தை தொட்டால் போதும். அதன் மூலம் நமக்கு வரும் அழைப்புகளை அட்டெண்ட் செய்ய முடியும், சத்தத்தை அதிகரிக்க முடியும், செட்டிங்ஸை மாற்ற முடியும்.

அதேபோல காது பக்கத்தில் தொடுவதன் மூலம் இயர்பட்களையும் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த தொழில்நுட்பம் கூகுள் சாதனத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் QM 215 சிப்செட் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.
ஜியோ நிறுவனத்தின் ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இன்று முதல் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகமாகி ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முதல் இந்த போன் கடைகளிலும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 5.45 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் புரொடக்ஷன், குவால்காம் ஸ்நாப்டிராகன் QM 215 சிப்செட், குவாட் கோர் பிராசஸர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 13 மெகா பிக்ஸல் பின்புற கேமராவும், 8 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமராவும் இடம்பெற்றுள்ளது.

இந்த போன் ஆண்ட்ராய்டு 11 கோ ஓஎஸ்ஸை அடிப்படையாக கொண்ட பிரகதி ஓ.எஸ்ஸில் இயங்கும். இந்த போனில் பல ஜியோ செயலிகள் இடம்பெற்றுள்ளன.
3,500mAh பேட்டரி, 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட இந்த போனின் விலை கடைகளில் ரூ.6,499-ஆகும்.
வாட்ஸ்அப்பில் வரப்போகும் இந்த அம்சம் முதலில் ஐஓஎஸ்ஸில் அறிமுகமாகும் என்றும், பிறகு ஆண்ட்ராய்டு, கணினிக்கும் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பிரபல குறுந்தகவல் பரிமாற்ற செயலியாக இருக்கும் வாட்ஸ்அப், பயனர்களுக்கு புது புது அம்சங்களை வெளியிட்டு வருகிறது.
வீடியோ கால், ஆடியோ கால், வாய்ஸ் மெசேஜ் உள்ளிட்ட பல அம்சங்கள் வாட்ஸ்அப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்பில் போலிங் (கருத்துக்கணிப்பு) வசதியும் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அம்சம் குரூப் சேட்டில் இடம்பெறும். குரூப்பில் உள்ள நபர்கள் கருத்துக்கணிப்பில் கலந்துக்கொண்டு வாக்களிக்கலாம். அதன் முடிவுகளும் குரூப்பிலேயே காட்டப்படும் என கூறியுள்ளது.

இதேபோன்ற போலிங் அம்சம் இதற்கு முன் டெலிகிராம் செயலியில் மட்டுமே இடம்பெற்றிருந்தது.
வாட்ஸ்அப்பில் வரப்போகும் இந்த அம்சம் முதலில் ஐஓஎஸ் பயனர்களுக்கு அறிமுகமாகும் என்றும், பிறகு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும், கணினிக்கும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த போனை ஃபிளிப்கார்ட் ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்ட் வாங்குவது மூலம் 5 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும்.
ஆசுஸ் நிறுவனத்தின் 'ஆசுஸ் 8z' ஸ்மார்ட்போன இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது.
ஐபோன் 13 மாடல் ஸ்மார்ட்போனை ஒத்த வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 5.9 இன்ச் Samsung E4 AMOLED டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்.டி, ஸ்னாப்டிராகன் 888 SoC தரப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை, பின்பக்கத்தில் 64 மெகாபிக்சல் சோனி IMX686 பிரைமரி சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் சோனி IMX363 செகண்டரி சென்சார் என 2 கேமராக்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் 12 மெகாபிக்சல் கொண்ட Sony IMX663 செல்ஃபி கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர 4000mAh பேட்டரி, 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன், டைப் சி சார்ஜிங் போர்ட் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெறுகின்றன.
8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்ஜில் மட்டுமே வெளிவரும் இந்த போனின் விலை ரூ.42,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போனை ஃபிளிப்கார்ட் ஆக்ஸில் வங்கி கிரெடிட் கார்ட் வாங்குவது மூலம் 5 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும். மேலும் இந்த போனுடன் இணைந்து வாங்கினால் கூகுள் பிக்ஸல் பட்ஸ் ஏ சீரிஸை ரூ.6,999-க்கு பெறலாம்.
இந்தியாவில் தற்போது மாதம் ரூ.299 திட்டமே குறைந்த விலை ஹாட்ஸ்டார் டிஸ்னி+ திட்டமாக இருக்கிறது.
டிஸ்னி நிறுவனம் தனது டிஸ்னி பிளஸ் ஓடிடி சேவையில் குறைந்த விலை திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சேவை அமெரிக்காவில் இந்த வருடத்தில் அறிமுகமாகி, பின் மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஸ்னி நிறுவனம் கூறியதாவது:-
டிஸ்னி பிளஸ் சேவை பல்வேறு தரப்பட்ட பயனர்களை சென்றடைவதற்காக இந்த விலை குறைந்த திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதில் மற்ற திட்டங்களை போல அல்லாமல் விளம்பரங்கள் இடம்பெறும். அதனால் வாடிக்கையாளர்கள் குறைந்த விலை கொடுத்தால் போதும். இதன்மூலம் வாடிக்கையாளர்கள், விளம்பரதாரர்கள், ஓடிடி நிகழ்ச்சியை உருவாக்குபவர்கள் மூன்று பேரும் பயனடைவர்.
இவ்வாறு டிஸ்னி நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் டிஸ்னி பிளஸ் நிறுவனம் ஹாட் ஸ்டாருடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இங்கு விளம்பரம் இல்லாத குறைந்த விலை திட்டமாக மாதம் ரூ.299 திட்டம் இருக்கிறது. விரைவில் வர இருக்கும் திட்டம் மேலும் குறைந்த விலையில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவில் சுமார் 6.6 கோடி பேர் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். ரஷிய அரசின் இந்த அறிவிப்பால் அந்த நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்பு 12 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷியாவை தனிமைப்படுத்துவதற்காக கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் சேவைகளுக்கு அந்நாட்டில் கட்டுப்பாடுகளை விதித்தன.
ஃபேஸ்புக் நிறுவனத்தை பொறுத்தவரை, ரஷியாவில் பேஸ்புக் பக்கத்தில் விளம்பரங்கள் செய்வதற்கும், அதன்மூலம் வருமானம் பெறுவதற்கும் தடை விதித்தது. கூகுள் நிறுவனமும், ரஷிய நாட்டின் அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் தங்கள் இணைய சேவைகள் மூலம் வருமானம் பெறுவதை தடை செய்யும் வகையில் கட்டுப்பாடுகள் விதித்தது.
இவ்வாறு பெரும் நிறுவனங்கள் ரஷிய மக்கள் தங்கள் சேவையை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், ரஷிய அரசு ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதங்கள் இயங்குவதற்கு முழுதாக தடை விதித்துள்ளது.
மேலும் ரஷிய ராணுவம் குறித்து வதந்தி பரப்புவோர்களுக்கு 15 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும்படி சட்டத்தில் வழிவகை செய்யப்படும் என்றும் ரஷிய அரசு தெரிவித்துள்ளது.
ரஷியாவில் சுமார் 6.6 கோடி பேர் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். ரஷிய அரசின் இந்த அறிவிப்பால் பேஸ்புக்குக்கு நஷ்டம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு ரஷிய மக்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.






