என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ஐபோன் 14 சீரிஸ் போன்களில் அதிநவீன சாட்டிலைட் அம்சம் ஒன்று இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சீரிஸ் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த சீரிஸில் இடம்பெறவுள்ள சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி இந்த போன்களில் அதிநவீன சாட்டிலைட் அம்சம் ஒன்று இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று ஐபோன் 14 சீரிஸில் மினி வேரியண்ட இடம்பெறாது எனவும் கூறப்படுகிறது.
ஐபோன் 14 மாடல் போன்கல் டி27 மற்றும் டி28 என்ற கோட் நேமை கொண்டுள்ளன. இதில் 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் டிஸ்பிளே இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த போன்களில் இடம்பெறவுள்ள டிஸ்பிளே ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸின் டிஸ்பிளேவுடன் கொஞ்சம் நீண்டதாக இருக்கும், மேலும் சாதாரண நாட்ச் இருக்கும் இடத்தில் நாட்ச்+பில் டிசைன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 14 சீரிஸில் ஏ15 பயோனிக் சிப்செட் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீரிஸில் ஜியோமி 12, ஜியோமி 12 ப்ரோ, ஜியோமி 12எக்ஸ் என்ற 3 போன்கள் இடம்பெற்றுள்ளன.
ஜியோமி நிறுவனத்தின் ஜியோமி 12 சீரிஸ் உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது. ஃபிளாக்ஷிப் போனான இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த சீரிஸ் உலக அளவில் வெளியாகியுள்ளது.
இந்த சீரிஸில் ஜியோமி 12, ஜியோமி 12 ப்ரோ, ஜியோமி 12எக்ஸ் என்ற 3 போன்கள் இடம்பெற்றுள்ளன.
ஜியோமி 12 மற்றும் ஜியோமி 12 எக்ஸ் 6.28-inch FHD+ AMOLED டிஸ்பிளேவை பெற்றுள்ளன. ஜியோமி 12 ப்ரோ சற்றே நீளமான 6.73-inch WQHD+ E5 AMOLED டிஸ்பிளே 120Hz டயனமிக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எல்.டி.பி.ஓ பேக்பிளேன் தொழில்நுட்பத்துடன் வருகிறது. ஜியோமி 12 மற்றும் 12 ப்ரோவில் premium Snapdragon 8 Gen 1 chipset கிடைத்துள்ளன. ஜியோமி 12எக்ஸ்-ல் Snapdragon 870 chipset இடம்பெற்றுள்ளது.
கேமராவை பொறுத்தவரை ஜியோமி 12 மற்றும் 12 எக்ஸ் போனில் 50 மெகாபிக்ஸல் சோனி IMX766 பிரைமரி சென்சார், 13 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார், 5 மெகாபிக்ஸல் மேக்ரோ சென்சார் இடம்பெற்றுள்ளன. ஜியோமி 12 ப்ரோ போனில் 50 மெகாபிக்ஸல் சோனி IMX707 பிரைமரி சென்சார், 50 மெகாபிக்ஸல் போட்ரெய்ட் சென்சார், 50 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் இடம்பெற்றுள்ளன.

12 எக்ஸ் மாடலில் 4,500mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இடம்பெற்றுள்ளது. 12 ப்ரோவில் 4,600mAh பேட்டரி 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இடம்பெற்றுள்ளது. மேலும் ப்ரோ மாடலில் 50W ஒயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் ஒயர்லெஸ் சார்ஜிங்கையும் வழங்குகிறது.
ஜியோமி 12-ன் 8ஜிபி/128 ஜிபி விலை இந்திய மதிப்பில் ரூ.57,200-ஆக உள்ளது. ஜியோமி ப்ரோ 8ஜிபி/256ஜிபி மாடலில் விலை இந்திய மதிப்பில் ரூ76,300-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜியோமி 12எக்ஸ் போனின் 8ஜிபி/128 ஜிபி விலை ரூ.49,600-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திறமை வாய்ந்த இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, அவர்களது படைப்புகள் இந்த ஓடிடியில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ஷாரூக்கான் எஸ்.ஆர்.கே+ என்ற புதிய ஓடிடி செயலியை தொடங்கவுள்ளார்.
ஷாரூக் கான் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து எஸ்.ஆர்.கே+ ஓடிடி சேவை குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஓடிடியில் ஷாரூக் நடித்த படங்கள் இடம்பெறும் என்றும், திறமை வாய்ந்த இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு அவர்களது படைப்புகள் எஸ்.ஆர்.ஹெச் பிளஸ்ஸ்ல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
ஹாரூக் கானின் இந்த புதிய முயற்சிக்கு முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது ஒரு சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைத்து யூடியூப் செயலிகளுக்குமே தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் யூடியூப் செயலியில் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் நாம் வீடியோவில் வரும் ஆடியோவை வார்த்தைகள் வடிவில் பெற முடியும். ஏற்கனவே யூடியூப் டெஸ்க்டாப் தளத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த அம்சம் தற்போது மொபைல் செயலியிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தின் மூலம் நாம் வீடியோக்களில் வரும் வசனம், வரிகளை தேடத்தேவையில்லை. வீடியோக்கள் பக்கத்தில் இருக்கும் டிரான்ஸ்கிரிப்ட் ஆப்ஷனை கிளிக் செய்தால் முழு ஸ்கிரிப்டும் காட்டப்படும். அதில் நாம் தேவையான வார்த்தைகளை தேடி படிக்கலாம்.
தற்போது ஒரு சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைத்து யூடியூப் செயலிகளுக்குமே தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கேமராவால் அதிக தரம் வாயந்த புகைப்படங்களையும், முழு நீல 30fps-ல் 4கே வீடியோவையும் எடுக்க முடியும்.
பிரபல கேமரா தயாரிப்பு நிறுவனமான FujiFilm புதிய FUJIFILM X-T30 II மிரர்லெஸ் கேமராவை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்து எக்ஸ் சீரிஸ் மிரர்லெஸ் டிஜிட்டல் கேமரா வகைகளின் புதிய வரவாகும். இதில் உள்ள மென்பொருளில் மேம்படுத்தபட்ட ஏ.எஃப் ஸ்பீடு, பிரிசிஷன், இமேஜ் தர்ம் ஆகியவை தரப்பட்டுள்ளன. இந்த கேமரா அதிக ரெஷலியூஷன் உடைய 1.6ட்3 மில்லியன் டாட் கொண்ட எல்.சி.டி பேனலை கொண்டுள்ளது.
மேலும் இதில் 26.1 மேக்பிக்ஸல் X-Trans CMOS 4 சென்சார், எக்ஸ் பிராசஸர் 4 அதிவேக இமேஜ் பிராசஸிங் இன்ஜின் தரப்பட்டுள்ளன. இந்த கேமராவால் அதிக தரம் வாயந்த புகைப்படங்களையும், முழு நீல 30fps-ல் 4கே வீடியோவையும் எடுக்க முடியும்.
பிளாக் மற்றும் சில்வர் நிறத்தில் வரும் இந்த கேமரா பாடியின் விலை ரூ.88,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 18-55 mm லென்ஸுடன் வெளிவரும் கேமராவின் விலை ரூ.1,24,999 என்றும், 15-45mm லென்ஸுடன் வெளிவரும் கேமராவின் விலை ரூ.99,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சேவை விரைவில் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது.
முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக பின்டிரஸ்ட் இருந்து வருகிறது. புகைப்படங்களை பகிரும் சமூக வலைதளமான இதில் தற்போது இ-காமர்ஸ் சேவையும் இடம்பெறபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் கூறுகையில், பயனர்கள் இனி நேரடியாக பின்டிரஸ்ட் செயலியில் இருந்தே ஷாப்பிங் செய்து பொருட்களை வாங்க முடியும் என தெரிவித்துள்ளது.
தற்போது இந்த சேவை பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள இந்த சேவை, விரைவில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு பின் உலகம் முழுவதும் கொண்டு வரப்படவுள்ளது.
இந்த புதிய சேவையில் பயனர்கள் தங்களுக்கு வேண்டிய வகையில் ஷாப்பிங் பக்கங்களை தேர்வு செய்யலாம். மேலும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிப்பாளர்கள், பிராண்டுகள் பரிந்துரைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பொருட்களை விற்பனை செய்பவர்களும் எளிதாக பொருட்களின் பட்டியலை உருவாக்கி, விலை மாற்றங்களையும் செய்ய முடியும் என கூறியுள்ளது.
இந்த சேவை உக்ரைனில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா தொடர்ந்து பல்வேறு வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் கூகுள் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வான்வெளி தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைகளை வழங்கும் சேவையை கூகுள் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கூகுள் தெரிவிக்கையில், லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கைகளை நம்பியே பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர். இதனால் உக்ரைன் அரசுடன் இணைந்து இந்த சேவையை தொடங்கியிருக்கிறோம்.
பூகம்பங்கள் குறித்த எச்சரிக்கைகளுக்கு நாங்கள் பயன்படுத்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உக்ரைனில் நடைபெறவுள்ள விமான தாக்குதல்கள் குறித்த எச்சரிகைகளை அனுப்புகிறோம் என தெரிவித்துள்ளது.
இந்த சேவை உக்ரைனில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போன்ககளை எஸ்.பி.ஐ கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.750 கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் பிங் சேவிங்ஸ் டேஸ் 2022 விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிக்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.
ஐபோன் எஸ்இ (2020): ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ (2020) ரூ.39,900-ல் இருந்து ரூ.9,901 விலை குறைக்கப்பட்டு ரூ.29,999-க்கு கிடைக்கிறது. இந்த போனை எஸ்பிஐ கிரெடிட் கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.750 கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.
மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன்: ரூ.24,999 மதிப்புள்ள மோட்டோ எட்ஜ் 20 ஃப்யூஷன் போன் ரூ.4,500 குறைக்கப்பட்டு ரூ.20,499-ஆக கிடைக்கிறது.
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.15,999-ல் இருந்து ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்ஃபினிக்ஸ் நோட் 11 ஸ்மார்ட் போன் ரூ.14,999-ல் இருந்து ரூ.3500 குறைக்கப்பட்டு ரூ.11,499-க்கு விற்கப்படுகிறது.
மேற்கூறிய போன்ககளை எஸ்.பி.ஐ கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.750 கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அப்டேட்டுகளில் டவுன்லோட் மேனேஜர், லைவ் ஸ்ட்ரீம் உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இன்று உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் செயலியாக டெலிகிராம் இருக்கிறது. வாட்ஸ்அப் போல இல்லாமல் டெலிகிராமில் நிறைய அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் டெலிகிராம் நிறுவனம் டெலிகிராம் செயலிக்கு புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டுகளில் டவுன்லோட் மேனேஜர், டவுன்லோட் மேனேஜர் உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
டவுன்லோட் மேனேஜர்
டெலிகிராம் ஏற்கனவே 2ஜிபி வரையிலான ஃபைல்ஸை ஷேர் செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் தற்போது டவுன்லோட் மேனேஜர் என்ற புதிய அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின்படி நாம் ஒரே நேரத்தில் எத்தனை ஃபைல்களை டவுன்லோட் செய்கிறோம் என்பதை காண முடியும், அதே நேரத்தில் எந்த ஃபைலை முதலில் டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதையும் தேர்வு செய்ய முடியும்.
அட்டாச்மெண்ட் மெனு
இந்த அம்சத்தின் மூலம் நாம் பல ஃபைல்களை ஒரே நேரத்தில் தேர்வு செய்து ஷேர் செய்ய முடியும். மேலும் இந்த அம்சத்தில் நாம் எந்த ஃபைல்களை சமீபத்தில் அனுப்பியிருக்கிறோம் என்பதையும் கண்காணிக்கவும், அனுப்பிய ஃபைல்களை தேடி எடுக்கவும் முடியும்.
செமி டிராஸ்பெரண்ட் இண்டர்ஃபேஸ்
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு டெலிகிராம் செயலி சற்று டிரான்ஸ்பரண்ட் டிசைனையும் வழங்குகிறது.
ஃபோன்நம்பர் லிங்க்ஸ்
இந்த அம்சத்தின்மூலம் டெலிகிராம் பயனர்கள் இனி யூசர் நேம்களை கொண்ட லிங்கினை உருவாக்க முடியும். நாம் பிறருக்கு போன் நம்பர் தராமல் இந்த லிங்கை கொடுத்து டெலிகிராமில் தொடர்புகொள்ள செய்யலாம்.

லைவ் ஸ்ட்ரீம்
டெலிகிராமில் ஏற்கனவே அன்லிமிட்டட் நபர்களுக்கு நேரலை ஸ்ட்ரீமிங் செய்ய முடியும். இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் ஸ்டூடியோ, எக்ஸ்ஸ்பிளிட் பிராட்கேஸ்டர் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் டூல்களை பயன்படுத்தியும் டெலிகிராமில் லைவ் ஸ்ட்ரீம் செய்ய முடியும். இதில் ஓவர்லே, மல்டி ஸ்க்ரீன் லே அவுட்ஸ் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.
t.me பக்கங்கள்
டெலிகிராம் பயனர்கள் t.me லிங்கை உருவாக்கி நமது புரொஃபைல், போஸ்ட்டுகளை பிரவுசரில் பிரீவிவ் செய்ய முடியும்.
பிற ஹூவாய் ஸ்மார்ட்போன்களை போலை போலவே கூகுள் செயலிகள் மற்றும் சேவைகளை இந்த போன் சப்போர்ட் செய்யாது.
ஹூவாய் நிறுவனம் ஹூவாய் நோவா 9 எஸ்.இ என்ற புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனை மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் 6.78-inch full-HD+ Huawei FullView TFT LCD, 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 270Hz டச் சாம்பிளிங் ரேட், 16.7 மில்லியன் கலர்ஸ் ஆகியவற்றுடன் இடம்பெற்றுள்ளன.
மேலும் இந்த போனிற்கு Snapdragon 680 பிராசஸர், Adreno 610 GPU வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை 108 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார், 2 மெகா பிக்ஸல் மேக்ரோ கேமரா சென்சார் தரப்பட்டுள்ளன. இவற்றுடன் 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமராவும் தரப்பட்டுள்ளது.
பிற ஹூவாய் ஸ்மார்ட்போன்களை போலை போலவே கூகுள் செயலிகள் மற்றும் சேவைகளை இந்த போன் சப்போர்ட் செய்யாது.
மேலும் இந்த போனில் 66W அதிவேக சார்ஜிங், 4000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட இந்த போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.20,000-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது மலேசியாவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போனின் விலை ரூ.12,999-க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி 10 பட்ஜெட் போனை வரும் மார்ச் 17-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த போனில் ஸ்நாப்டிராகன் சிப்செட் இடம்பெறவுள்ளதால் இது கடந்த தலைமுறை போன்களை விட 2 மடங்கு அதிவேகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் டெக்ஸ்சர் பேக் பேனல், 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா கொண்ட 3 பின்புற கேமராக்கள், டெப்த் மற்றும் ஏ.ஐ சென்சார் ஆகியவை வழங்கப்படவுள்ளன.
மேலும் இதில் பிளாக்பஸ்டர் டிஸ்பிளே, பெரிய பேட்டரி இடம்பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த போனின் விலை ரெட்மி 10 பிரைம் விலையை விட குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது ரெட்மி 10 பிரைமின் 4ஜிபி+65 ஜிபி வேரியண்டின் விலை ரூ.12,999-ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் நிறுவனத்தின்சாம்சங் கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்22+, கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்கள் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்22-ல் 6.1 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இது 48–120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்குகிறது. இந்த டிஸ்பிளேவை பாதுகாக்க கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பேனல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது 4nm octa-core Snapdragon 8 Gen 1 SoC பிராசஸர் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்ஸில் இயங்குகிறது.
கேமராவை பொறுத்தவரை 3 பின்புற கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் f/1.8 வைட் ஆங்கில் லென்ஸ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலிஷேசன் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா ஒயிட் ஷூட்ட, 10 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ ஷூட்டர் வழங்கப்பட்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ கால்களுக்கு f/2.2 லென்ஸ் கொண்ட 10 மெகாபிக்ஸல் செல்பி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போனில் 5ஜி, 4ஜி எல்.டி.இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், டைப் சி யூஎஸ்பி போர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன.
சென்சார் போர்டில் ஆக்ஸலரோமீட்டர், ஆம்பியன் லைட், பேரோமீட்டர், கைரோ, ஹால், மேக்னெட்டோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், ஐபி68 தூசு மற்றும் வாட்டர் ரெசிஸ்டெண்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த போனில் 3,700mAh பேட்டரி, 25W ஒயர் சார்ஜர், 15W ஒயர்லெஸ் சார்ஜிங் தரப்பட்டுள்ளது.
இதன் விலையை பொறுத்தவரை 8 ஜிபி ரேம்+ 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.72,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22+, கேலக்ஸி எஸ்22 கொண்டுள்ள அதே அம்சங்களை கொண்டுள்ளது. கூடுதலாக இந்த போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் Wi-Fi 6E மற்றும் அல்ட்ரா வைட்பேண்ட் சப்போர்ட்டுடன் வருகிறது. இதில் 4,500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 45W ஒயர் சார்ஜிங், 15W ஒயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒயர்லெஸ் பவர் ஷேர் சப்போர்ட்டையும் வழங்குகிறது.
இதன் 8ஜிபி ரேம்+128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.84,999-ஆகவும், 8ஜிபி ரேம்+ 256 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.88,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா போனில் 6.8 இன்ச் Edge QHD+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே தரப்பட்டுள்ளது. இதன் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் 1–120Hz-ஆகவும், டச் சாம்பிளிங் ரேட் 240Hz-ஆகவும் இருக்கிறது. இது Snapdragon 8 Gen 1 SoC பிராசஸர், ஆண்ட்ராய்டு 12, One UI 4.1-ல் இயங்குகிறது.
கேமராவை பொறுத்தவரை இதில் பின்பக்கம் 4 கேமரா செட் அப் வழங்கப்பட்டுள்ளது. இது f/1.8 லென்சுடன் 108 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 12 மெகாபிக்ஸச்ல் அல்ட்ரா வைட் ஷூட்டர், 3x ஆப்டிக்கல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்ஸல் டெலி போட்டோ ஷூட்டர் மற்றும் 10x ஆப்டிக்கல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிபோட்டோ ஷூட்டர் லென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
செல்பி மற்றும் வீடியோ கால்களுக்கு 40 மெகாபிக்ஸல் செல்பி கேமரா f/2.2 லென்சுடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6இ, 5.2 வெர்ஷன் ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், சி டைப் யூஎஸ்பி போர்ட், ஆன் போர்ட் சென்சாரில் ஆக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், பேரோ மீட்டர், கைரோ, ஹால், மேக்னெட்டோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், இன் டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார், எஸ் பென் ஸ்டைலெஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
5000mAh பேட்டரி சப்போர்ட் கொண்ட இந்த போனில் 45W ஒயர் சார்ஜிங்கும், 15W ஒயர்லெஸ் சார்ஜிங்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 12ஜிபி ரேம்+256 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.1,09,999-ஆகவும், 12ஜிபி + 512ஜிபி வேரியண்டின் விலை ரூ.1,18,999-ஆகவும், நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






