என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    காயின்ஸ்விட்ச், யுக் மெட்டாவெர்ஸ் என்ற நிறுவனங்கள் இணைந்து இந்த வருடத்திற்கான ஹோலி பண்டிகையை மெட்டாவெர்ஸில் ஏற்பாடு செய்துள்ளன.
    மெட்டாவெர்ஸ் என்ற மெய்நிகர் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட உருவாக்கப்பட்டுள்ள உலகில் நாம் விரும்பியதை செய்யலாம்.

    அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு பண்டிகையை மெட்டாவெர்ஸில் கொண்டாட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது ஹோலி பண்டிகையையும் மெட்டாவெர்ஸில் கொண்டாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    காயின்ஸ்விட்ச், யுக் மெட்டாவெர்ஸ் என்ற நிறுவனங்கள் இணைந்து இந்த வருடத்திற்கான ஹோலி பண்டிகையை மெட்டாவெர்ஸில் ஏற்பாடு செய்துள்ளன.

    இணையவாசிகள் மெட்டாவெர்ஸில் இணைந்து ஹோலி பண்டிகையை தங்களது குடும்பத்தினரை சந்தித்து கொண்டாடலாம். ஹோலி பண்டிகையை முன்னிட்டு இசை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவை மெட்டாவெர்ஸில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    மெட்டாவெர்ஸில் ஹோலி கொண்டாட்டம்

    மெட்டாவெர்ஸில் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்கு ஸ்மார்ட்போன் பயனர்கள் Yug Metaverse என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டவுன்லோட் செய்ய வேண்டும். பின் அந்த செயலியில் அக்கவுண்ட் தொடங்கி நமது அவதாரை உருவாக்கிகொள்ள வேண்டும்.

    பின் அந்த செயலியில் ஹோலி என்ற வென்யூவை தேர்ந்தெடுத்து நண்பர்களுடன் இணைந்து ஹோலி கொண்டாடலாம். 
    இந்த டிவி குவாட் கோர் பிராசஸருடன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரியை கொண்டுள்ளது.
    ஜியோமி நிறுவனம் ரெட்மி மேக்ஸ் 100 என்ற 100 இன்ச் ஸ்மார்ட் டிவியை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இந்த டிவி ஸ்கிரீன் 2,540mm அளவை கொண்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள எல்.சி.டி பேனல் 4கே ரெஷலியூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், DCI-P3 கலர் காமுட்டை கொண்டுள்ளது.

    மேலும் இந்த டிவியில் டால்பி ஆடியோ, டால்பி அட்மோஸ், டிடிஎஸ்-ஹெச்டி ஆடியோ ஆகியவற்றிருக்கான சப்போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவி குவாட் கோர் பிராசஸருடன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரியை கொண்டுள்ளது. 

    இந்த டிவி MIUI மென்பொருளில் இயங்குகிறது. இதில் வைஃபை 6, 2 ஹெச்.டி.எம்.ஐ 2.1 போர்ட்டுகள், 15W ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த ரெட்மி மேக்ஸ் 100 டிவியின் விலை இந்திய மதிப்பில் ரூ.2,39,400-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சீனாவில் இந்த டிவி வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் இந்த டிவி அறிமுகமாகும் தேதி வெளியாகவில்லை.
    சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க நாம் நினைவில் வைத்துகொள்ள வேண்டிய 5 விஷயங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது.
    இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான வணிக பரிவர்த்தனைகள் யூபிஐ மூலமாகத்தான் நடைபெறுகிறது. யூபிஐ பரிவர்த்தனைகள் எந்த அளவுக்கு நமக்கு எளிதாக இருக்கிறதோ, அதேசமயம் மோசடி நடைபெறுவதற்கும் வழிவகுக்கிறது.

    யூபிஐ பரிவரத்தனை குறித்து விழிப்புணர்வு இல்லாதவர்கள் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துவிடுகின்றனர். இந்நிலையில் சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க நாம் நினைவில் வைத்துகொள்ள வேண்டிய 5 விஷயங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது.

    1) யூபிஐ பின் பணம் அனுப்புவதற்கு மட்டுமே கேட்கப்படும். பணம் பெறுவதற்கு யாராவது பின் நம்பர்கள் கேட்டால் தர வேண்டாம்.

    2) பணம் அனுப்பும் முன் போன் நம்பர், பெயர், யூபிஐ ஐடி ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே பணம் அனுப்பவும்.

    3) யூ.பி.ஐ பின்னை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம்.

    4) தெரியாத நபர்களிடம், கடைகளுக்கு சென்று பணம் அனுப்புவதற்கு யூ.பி.ஐ ஐடியை தர வேண்டாம். யூ.பி.ஐ மூலம் பணம் அனுப்ப தெரியாதவர்கள் வங்கி மூலம் பணம் அனுப்புவதே நல்லது.

    5) யூ.பி.ஐ குறித்த சந்தேகங்கள், பிரச்சனைகளுக்கு வங்கி அல்லது யூபிஐ சேவையை வழங்கும் நிறுவனத்தை மட்டும் தொடர்புகொள்ளவும்.
    இந்த சேவைக்காக டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் வணிக பிரிவான டாடா டிஜிட்டல், ஐசிஐசி வங்கியுடன் இணைந்து செயல்படவுள்ளது.
    இந்தியாவில் யூபிஐ பண பரிவர்த்தனை சேவையை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

    இந்த துறையில் பேடிஎம்,போன்பே, கூகுள் பே, அமேசான் பே என பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தற்போது டாடா குழுமமும் இந்த துறையில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளது. டாடா குழுமத்தின் யூ.பி.ஐ செயலிக்கு ‘டாடா நியு’ என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த சேவைக்காக டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் வணிக பிரிவான டாடா டிஜிட்டல், ஐசிஐசி வங்கியுடன் இணைந்து செயல்படவுள்ளது. டாடாவின் இந்த நியு சேவை, பிற யூபிஐ செயலிகளை விட அதிவேகமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த டாடா நியு யூபிஐ செயலி அடுத்த மாதம் ஐபிஎல் தொடரின் போது அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு யூபிஐ செயலிகளும் கேஷ்பேக், கூப்பன்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகின்றன. இதே வகையில் டாடா நியு செயலியிலும் பல வகையான சலுகைகள், கேஷ்பேக்குகள் வழங்கப்படவுள்ளன.

    இதைத்தவிர டாடா டிஜிட்டலின் பிற செயலிகளான பிக்பாஸ்கெட், 1 எம்.ஜி, குரோமா, டாடா கிளிக், ஃபிளைட் புக்கிங் சேவை ஆகியவற்றையும் இந்த நியு செயலியிலேயே பயன்படுத்த முடியும்.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் 7-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்த போனை ஹெச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
    ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்த போனில் 6.7 இன்ச் ஹெச்.டி பிளஸ் டிஸ்பிளே, 20.6:9 ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ, 400 நினிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆகியவை தரப்பட்டுள்ளன். இதன் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பேனலால் பாதுகாக்கப்படுகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 11, MIUI 13 ஓ.எஸ்ஸில் இயங்குகிறது.

    இந்த போனில் அடெர்னோ 610 ஜிபியூவுடன்  Qualcomm Snapdragon 680 SoC பிராசஸர் தரப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரையில் f/1.8 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் கேமரா, 2 மெகா பிக்ஸல் போட்ரெய்ட் கேமரா, 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    இந்த போனின் 4ஜிபி ரேம்+ 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.10,999-ஆகவும், 6 ஜிபி/128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.12,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த போன் வரும் மார்ச் 24-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த போனை ஹெச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
    நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் தங்கள் நண்பர்களுக்கு பாஸ்வேர்ட் பகிர்வதை தடுக்க நெட்ஃபிலிக்ஸ் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
    உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஓடிடி தளங்களில் ஒன்றாக நெட்ஃபிலிக்ஸ் இருக்கிறது. பலர் ஒரே நெட்ஃபிலிக்ஸ் கணக்கை தங்கள் நண்பர்களும் பயன்படுத்தும் வகையில் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகியவற்றை தந்து உதவுகின்றனர். இந்நிலையில் இந்த நடவடிக்கைக்கு முடிவுக்கட்டும் வகையில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் புதிய முடிவை எடுத்துள்ளது.

    இதன்படி நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் தங்கள் கணக்கில் நண்பர்களை இணைப்பதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

    நெட்ஃபிலிக்ஸில் சில திட்டங்களில் தனி புரொஃபைல் உருவாக்கிக்கொள்ளும் அம்சமும் இருக்கிறது. ஆனாலும் பல நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் தங்கள் நண்பர்களுக்கு பாஸ்வேர்டை கொடுத்து ஒரே கணக்கை பயன்படுத்திகொள்கின்றனர். இந்த நடவடிக்கை நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும், இதற்கு பதில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யப்போவதாகவும் நெட்ஃபிலிக்ஸ் அறிவித்துள்ளது. 

    இந்த திட்டத்தில் ஒரே வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் நெட்ஃபிலிக்ஸ் சேவையை தனியாக கட்டணம் இல்லாமல் பயன்படுத்தலாம். ஆனால் வேறு இடங்களில் இருந்து ஒரே நெட்ஃபிலிக்ஸ் கணக்கை பயன்படுத்தும் நபர்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரே கணக்கில் கூடுதலாக உறுப்பினர்களை சேர்க்க இந்திய மதிப்பில் ரூ.200 வரை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்தியாவில் இன்னும் அறிமுகமாகத நிலையில் பிற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    24 மணி நேரத்தில் 3 பேர் வரை இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் வாட்ஸ்ஆப் பயனர்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

    இந்தியாவில் வெளியாகியுள்ள காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்தின் இலவச இணைப்பு சைபர் குற்றவாளிகள் மூலம் வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படுகிறது. அதை கிளிக் செய்பவர்களுடைய போன் மால்வேர் மற்றும் பிற வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் நொய்டா உள்ளிட்ட சில நகரங்களில் வாட்ஸ்ஆப்பில் வந்த இலவச இணைப்பை கிளிக் செய்து பலர் பணத்தை இழந்துள்ளதாக புகார்களும் எழுந்துள்ளன. 24 மணி நேரத்தில் 3 பேர் இந்த மோசடியில் சிக்கி ரூ.30 லட்சம் வரை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சைபர்குற்றவாளிகளால் அனுப்பப்படும் மால்வேர் வங்கி கணக்குகளை ஹேக் செய்து தொகைகளை திருடி வருவதாகவும், வாட்ஸ்ஆப் மூலம் ஏதாவது லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
    இந்த ரீசார்ஜ் திட்டத்தை பி.எஸ்.என்.எல் செல்ஃப் கேர் செயலி மூலம் ரீசார் செய்பவர்களுக்கு 4 சதவீதம் தள்ளுபடியும் உண்டு.
    பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிய ஆன்வெல் பிளான் வவுச்சரை அறிமுகம் செய்துள்ளது

    இந்த திட்டத்தின் மூலம் ரூ.797-க்கு ரீசார்ஜ் செய்தால் முதல் 60 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 2ஜிபி ஹைஸ்பீடு டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்கள் வழங்கப்படும். 

    60 நாட்களுக்கு பிறகு அழைப்புகளும், டேட்டாவும் வழங்கப்படாது. ஆனால் வேலிடிட்டி மட்டும் அடுத்த 10 மாதங்களுக்கு செயல்பாட்டில் இருக்கும். டேட்டா மற்றும் அழைப்புகள் தேவைப்படுபவர்கள் தனியாக டாக்டைம் வவுச்சர்கள், டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்துகொண்டு மீதம் உள்ள நாட்களின் வேலிடிட்டியை பெறலாம்.

    பி.எஸ்.என்.எல்லை இரண்டாவது சிம்மாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் பெறிதும் பயன் தரும் என கூறப்பட்டுள்ளது.

    மேலும் இந்த திட்டத்தை ஜூன் 12-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டியுடன் சேர்த்து கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டியும் வழங்கப்படவுள்ளது.

    இந்த ரீசார்ஜ் திட்டத்தைல் பி.எஸ்.என்.எல் செல்ஃப் கேர் செயலி மூலம் ரீசார் செய்பவர்களுக்கு 4 சதவீதம் தள்ளுபடியும் உண்டு.
    அமேசான் மொபைல் சேவிங்ஸ்டே விற்பனையில் அனைத்து போன்களுக்கும் பலவீதமான கேஷ்பேக், தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.
    அமேசான் நிறுவனத்தின் மொபைல் சேவிங்ஸ் டே விற்பனை மார்ச் 19 வரை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

    இதன்படி ஒன்பிளஸ் நார்ட் சி.இ 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,999-ல் இருந்து ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.21,999-க்கு விற்பனை ஆகிறது. அதேபோன்று ஒன்பிளஸ் நார்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999-ல் இருந்து ரூ.1,500 குறைக்கப்பட்டு ரூ.28,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதைத்தவிர ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் ரூ.49,999-க்கும், ரூ.36,999-க்கும் கிடைக்கின்றன.

    இந்த போன்களை குறிப்பிட்ட வங்கி கார்டுகளில் வாங்கும்போது சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

    மற்றொரு ஸ்மார்ட்போன் நிறுவனமான iQoo நிறுவனத்தின் iQoo 9 ப்ரோ 8ஜிபி/256 ஜிபி வேரியண்ட் தள்ளுபடி விலையில் ரூ.64,990-க்கு கிடைக்கிறது. இந்த போனை எந்த வங்கி கார்டு கொண்டு வாங்கினாலும் ரூ.4000 உடனடி தள்ளுபடியும் உண்டு. மேலும் இந்த போன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.3000 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதைத்தவிர iQoo Z3 மற்றும் iQoo Z5 ஸ்மார்போன்கள் ரூ.16,990-க்கும், ரூ.20,990-க்கும் கிடைக்கின்றன.

    ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி நார்சோ 50ஏ மற்றும் ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.1,500 வங்கி கேஷ்பேக், ரூ.2000 வரை அமேசான் கூப்பன்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் ரியல்மி நார்சோ 50ஏ ரூ.9,749-க்கும், ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.13,499-க்கும் கிடைக்கிறது. ரியல்மி நார்சோ 50 ஸ்மார்போன் ரூ.12,999-ல் இருந்து விலை குறைப்பு செய்யப்பட்டு ரூ.11,699-க்கு கிடைக்கிறது.

    ஸ்மார்ட்போன்கள்

    ஜியோமியின் Qualcomm Snapdragon 870 SoC பிராசஸர் கொண்ட எம்.ஐ 11எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.22,999-க்கு கிடைக்கிறது. இந்த போனுக்கு கூடுதலாக ரூ.5,000 வரை தள்ளுபடியும் உண்டு. ஜியோமி 11 லைட் என்.இ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.26,999-ல் இருந்து விலை குறைக்கப்பட்டு ரூ.21,499-க்கு கிடைக்கிறது. இதில் வங்கி தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும் அடங்கும்.

    தள்ளுபடியில் எம்.ஐ 11எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.36,999-ல் இருந்து ரூ.31,999-க்கும், ரெட்மி ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.19,999-க்கும், ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் ரூ.15,499-க்கும் கிடைக்கிறது. மேலும் ரெட்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் கேஷ் ஆஃபர் மூலம் ரூ.17,999-க்கு கிடைக்கும்.

    இத்துடன் ஸ்மார்ட்போன் ஆக்ஸசரிஸ்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் ஆக்சஸரிஸ்கள் ரூ.69-ல் இருந்து தொடங்குகின்றன. மேற்கூறிய போன்களை அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.1,500 உடனடி தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    அறிமுக சலுகையாக ஹெச்.டி.எஃப்.சி வங்கி கார்டு மூலம் இந்த போனை வாங்குபவர்களுக்கு ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.
    iQoo நிறுவனம் தனது புதிய iQoo Z6 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    இந்த போன் 6.58-inch full-HD+ டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சேம்பிளிங் ரெட்டுடன் வருகிறது. இதில் octa-core Snapdragon 695 SoC பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ், ஃபன்டச் ஓ.எஸ் 12 ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    கேமராவை பொறுத்தவரை இந்த போனில் f/1.8 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்சல் பிரைமரி சாம்சங் ISOCELL JN1 சென்சார், 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் கேமரா, 2 மெகாபிக்ஸல் போக்கே கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    மேலும் இந்த போனில் 16 மெகாபிக்ஸல் சாம்சங் 3P9 செல்ஃபி கேமரா f/2.0 லென்சுடன் வழங்கப்பட்டுள்ளது.

    Iqoo Z6 ஸ்மார்ட்போன்

    இதில் 5000 mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

    இந்த போனின் 4ஜிபி ரேம், 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.15,499-ஆகவும், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மாடலின் விலை ரூ.16,999-ஆகவும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடலின் விலை ரூ.17,999-ஆகவும் உள்ளது.

    இந்த போன் மார்ச் 22-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அறிமுக சலுகையாக ஹெச்.டி.எஃப்.சி வங்கி கார்டு மூலம் இந்த போனை வாங்குபவர்களுக்கு ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மெட்டாவெர்ஸில் இயங்குபவர்கள் என்.எஃப்.டியில் தங்களுக்கு பிடித்த டிஜிட்டல் உடை, தோற்றத்தை வாங்கிக்கொள்ளலாம் என மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார்.
    இன்று உலகம் முழுவதும் அதிகம் பேசப்படும் பொருளாக என்.எஃப்.டி இருக்கிறது.

    என்.எஃப்.டி எனப்படும் “நான் ஃபங்கியபில் டோக்கன்” ஒரு வகை டிஜிட்டல் டோக்கன் ஆகும். நிஜ உலக சொத்துக்கள் அல்லது டிஜிட்டல் கலைப்படைப்புகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ்களை உருவாக்கி, அவற்றை விற்பதற்கு என்.எஃப்.டி டோக்கன்கள் உதவுகின்றன.

    இந்த என்.எஃப்.டியை விரைவில் இன்ஸ்டாகிராமிற்கு கொண்டு வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுயதாவது:-

     இன்னும் சில மாதங்களில் என்.எஃப்.டி இன்ஸ்டாகிராமிற்கு கொண்டு வரப்படும். அதை வாங்குவதற்கும் விற்பதற்கும் கிரிப்டோ வேலட்டும் இன்ஸ்டாகிராமில் இடம்பெறும். மெட்டாவெர்ஸில் இயங்குபவர்கள் என்.எஃப்.டியில் தங்களுக்கு பிடித்த டிஜிட்டல் உடை, தோற்றத்தை வாங்கிக்கொள்ளலாம்.

    இவ்வாறு மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
    இந்த டிரெக்ட் ஸ்டோரேஜ் ஒரு நொடியில் பல்வேறு ஜிபி வேகத்தை பெறும் வகையில் எஸ்.எஸ்.டியின் வேகத்தை அதிகப்படுத்தும் என கூறப்படுகிறது.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிரெக்ட் ஸ்டோரேஜ் என்ற புதிய கேமிங் தொழில்நுட்பத்தை விண்டோஸ் பயனர்களுக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த தொழில்நுட்பத்தின் மூலம் வீடியோ கேம் விளையாடுபவர்கள் தாமதமின்றி வேகமாக கேமிங்கில் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த டிரெக்ட் ஸ்டோரேஜ் ஒரு நொடியில் பல்வேறு ஜிபி வேகத்தை பெறும் வகையில் எஸ்.எஸ்.டியின் வேகத்தை அதிகப்படுத்தும். இதன்மூலம் வீடியோ கேம்கள் அதிவேகமாக லோட் ஆகும் என கூறப்படுகிறது.

    மைக்ரோசாஃப்ட் டிரெக்ட் ஸ்டோரேஜ்

    இந்த தொழில்நுட்பம் விண்டோஸ் 11-ல் முழு ஆற்றலுடன் வேலை செய்யும் என்றும், விண்டோஸ் 10-ல் போதுமான அளவு வேகத்தை வழங்கும் என கூறப்படுகிறது.

    இந்த டிரெக்ட் ஸ்டோரேஜ் தொழில்நுட்பம் வரும் மார்ச் 22-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×