search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    கம்ப்யூட்டர் கேம்கள்
    X
    கம்ப்யூட்டர் கேம்கள்

    இனி அதிவேகத்தில் வீடியோ கேம் விளையாட முடியும்...மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்யவுள்ள புதிய தொழில்நுட்பம்

    இந்த டிரெக்ட் ஸ்டோரேஜ் ஒரு நொடியில் பல்வேறு ஜிபி வேகத்தை பெறும் வகையில் எஸ்.எஸ்.டியின் வேகத்தை அதிகப்படுத்தும் என கூறப்படுகிறது.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிரெக்ட் ஸ்டோரேஜ் என்ற புதிய கேமிங் தொழில்நுட்பத்தை விண்டோஸ் பயனர்களுக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த தொழில்நுட்பத்தின் மூலம் வீடியோ கேம் விளையாடுபவர்கள் தாமதமின்றி வேகமாக கேமிங்கில் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த டிரெக்ட் ஸ்டோரேஜ் ஒரு நொடியில் பல்வேறு ஜிபி வேகத்தை பெறும் வகையில் எஸ்.எஸ்.டியின் வேகத்தை அதிகப்படுத்தும். இதன்மூலம் வீடியோ கேம்கள் அதிவேகமாக லோட் ஆகும் என கூறப்படுகிறது.

    மைக்ரோசாஃப்ட் டிரெக்ட் ஸ்டோரேஜ்

    இந்த தொழில்நுட்பம் விண்டோஸ் 11-ல் முழு ஆற்றலுடன் வேலை செய்யும் என்றும், விண்டோஸ் 10-ல் போதுமான அளவு வேகத்தை வழங்கும் என கூறப்படுகிறது.

    இந்த டிரெக்ட் ஸ்டோரேஜ் தொழில்நுட்பம் வரும் மார்ச் 22-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×