search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    நெட்ஃபிலிக்ஸ்
    X
    நெட்ஃபிலிக்ஸ்

    நெட்ஃபிலிக்ஸ் கொடுத்த ஷாக்- இனி இதற்கும் கட்டணம் நிர்ணயிக்க முடிவு

    நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் தங்கள் நண்பர்களுக்கு பாஸ்வேர்ட் பகிர்வதை தடுக்க நெட்ஃபிலிக்ஸ் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
    உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஓடிடி தளங்களில் ஒன்றாக நெட்ஃபிலிக்ஸ் இருக்கிறது. பலர் ஒரே நெட்ஃபிலிக்ஸ் கணக்கை தங்கள் நண்பர்களும் பயன்படுத்தும் வகையில் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகியவற்றை தந்து உதவுகின்றனர். இந்நிலையில் இந்த நடவடிக்கைக்கு முடிவுக்கட்டும் வகையில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் புதிய முடிவை எடுத்துள்ளது.

    இதன்படி நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் தங்கள் கணக்கில் நண்பர்களை இணைப்பதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

    நெட்ஃபிலிக்ஸில் சில திட்டங்களில் தனி புரொஃபைல் உருவாக்கிக்கொள்ளும் அம்சமும் இருக்கிறது. ஆனாலும் பல நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் தங்கள் நண்பர்களுக்கு பாஸ்வேர்டை கொடுத்து ஒரே கணக்கை பயன்படுத்திகொள்கின்றனர். இந்த நடவடிக்கை நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும், இதற்கு பதில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யப்போவதாகவும் நெட்ஃபிலிக்ஸ் அறிவித்துள்ளது. 

    இந்த திட்டத்தில் ஒரே வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் நெட்ஃபிலிக்ஸ் சேவையை தனியாக கட்டணம் இல்லாமல் பயன்படுத்தலாம். ஆனால் வேறு இடங்களில் இருந்து ஒரே நெட்ஃபிலிக்ஸ் கணக்கை பயன்படுத்தும் நபர்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரே கணக்கில் கூடுதலாக உறுப்பினர்களை சேர்க்க இந்திய மதிப்பில் ரூ.200 வரை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்தியாவில் இன்னும் அறிமுகமாகத நிலையில் பிற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×