என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    பழைய அம்சங்களுடன் இயங்கும் போன்களில் வாட்ஸ்ஆப் சேவைகளை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
    வாட்ஸ்ஆப் நிறுவனம் இன்று முதல் பழைய ஓஎஸ்களில் இயங்கும் ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் கைஓஎஸ் போன்களுக்கு வாட்ஸ்ஆப் இயங்காது என அறிவித்துள்ளது.

    வாட்ஸ்ஆப்பில் சமீபத்தில் பல விதமான அம்சங்கள் இடம்பெற்ற அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பழைய அம்சங்களுடன் இயங்கும் வாட்ஸ்ஆப் சேவைகளை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    இதன்படி ஆண்ட்ராய்டு போன்களில் ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஐபோன்களில் ஐஓஎஸ் 10 அல்லது அதற்கு பிந்தைய வெர்ஷன்களில் தான் வாட்ஸ்ஆப் இனி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐஓஎஸ் 15 அப்டேட் வெளியாகியுள்ள நிலையில் பழைய ஐஓஎஸ் போன்களில் வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தப்படுகிறது. 

    கைஓஎஸில் அதன் வெர்ஷன் 2.5 அல்லது அதற்கு பிந்தைய வெர்ஷன்களில் மட்டுமே வாட்ஸ்ஆப் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 ஆகியவை கைஓஎஸ் 2.5க்கு பிந்தைய வெர்ஷனில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
    கடந்த பிப்ரவரி மாதம் வெளியான பட்ஜெட்டின் போது மின்னணு பொருட்கள் மீதான சுங்க வரியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மத்திய அரசு அறிவித்தது.
    மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பட்ஜெட் அறிக்கையில் மின்னணு பொருட்கள் மீதான சுங்க வரியில் பல மாற்றங்களை அறிவித்தது. இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், ஹெட்ஃபோன்கள், இயர்பட்ஸ் ஆகியவற்றின் விலைகளில் இன்று முதல் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை, மொபைல் போன் சார்ஜர்களின் டிரான்ஸ்பார்மர் பாகங்கள், மொபைல் கேமரா லென்ஸ்கள் மற்றும் பிற சாதனங்களுக்கான சுங்க வரி 5 முதல் 12.5 சதவிதமாக அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் செலவு குறையும் என்பதால் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், ஸ்மார்ட்போன்களின் விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியாளர்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால்  ஸ்மார்ட்வாட்சுகள், ஃபிட்னஸ் பேண்டுகள் போன்ற சாதனங்களை வாங்க விரும்புபவர்களுக்கும் விலை குறைய வாய்ப்புள்ளது.

    இயர்பட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளது. இதனால் வயர்லெஸ் இயர்பட்கள், நெக்பேண்ட் ஹெட்ஃபோன்கள் போன்றவற்றின் விலை உயரும் என கூறப்படுகிறது.

    அதேபோன்று ப்ரீமியம் ஹெட்ஃபோன்களின் நேரடி இறக்குமதிக்கு 20 சதவீதம் கூடுதல் கட்டணத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் ஹெட்போன்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

    பட்ஜெட்டில், கம்ப்ரசர்கள், குளிர்சாதனப் பெட்டிகள் தயாரிக்கப் பயன்படும் பாகங்கள் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று முதல் ஏசி விலையும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
    எட்ஜ் எடிட்டர், வெப் செலக்ட் ஆகிய இரண்டு அம்சங்களை மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்துள்ளது.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது எட்ஜ் பிரவுசரில் கிராமர் எடிட்டர், ஸ்மார்ட் வெப் செலக்‌ஷன் இரண்டு புதிய அம்சங்களை கொண்டுவரவுள்ளது. இந்த அம்சங்கள் மாணவர்கள், அலுவலக பணியார்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

    Microsoft Edge Editor- இதில் மைக்ரோசாஃப்ட் கிராமர் எடிட்டர், நாம் இணையத்தில் இமெயிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு பதிவோ எழுதும்போது அதில் உள்ள எழுத்து, இலக்கண பிழைகளை சுட்டிக்காட்டும். 

    மேலும் அந்த வார்த்தைகளுக்கு மாற்றான சரியான வார்த்தைகளை பரிந்துரைக்கும். இந்த அம்சம் கிராமர்லிக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. குறிப்பாக கிராமர்லியை நாம் பிரவுசரில் ஆட் ஆன் செய்ய வேண்டும். ஆனால் மைக்ரோசாஃப்டின் இந்த புதிய அம்சத்தை பிரவுசரில் ஆட் ஆன் செய்ய வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளது.

    இந்த மைக்ரோசாஃப்ட் எட்ஜ் எடிட்டர் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ளது. இருப்பினும் நாம் பிரவுசரை எந்த மொழியில் பயன்படுத்துகிறோமோ அதே மொழியில் தான் இந்த எடிட்டர் இயங்கும். இதுத்தவிர நாம் வார்த்தைகளை டைப் செய்யும்போது அடுத்த வார்த்தைகளை பரிந்துரை செய்யும் அம்சமும் இந்த வெப் எடிட்டர் சேவையில் இடம்பெற்றுள்ளது. தற்போது ஆங்கிலம், ஸ்பேஷிஷ், பிரெஞ்ச், இத்தாலி, போர்த்துகீஸ் ஆகிய மொழிகளில் உள்ள இந்த எடிட்டர் விரைவில் பிற மொழிகளிலும் வரவுள்ளது.

    Web select - இந்த அம்சத்தின் மூலம் நாம் இணையத்தில் இருந்து எழுத்துக்களை எளிதாக காப்பி செய்ய முடியும். பொதுவாக இணையதளங்களில் டேபிள்களுக்குள் இருக்கும் வார்த்தைகளை காப்பி செய்து பேஸ்ட் செய்தால் அதில் உள்ள எழுத்துக்கள் முன்னுக்கு பின் களைந்து ஒழுங்கில்லாமல் இருக்கும். அதேபோல புகைப்படங்களை காப்பி செய்துவைக்கும்போது அது வார்த்தைகளுக்கு இடையே பொருந்தாது. ஆனால் இந்த வெப் செலக்ட் மூலம் நாம் ஒழுங்குமுறையாக வார்த்தைகளை காப்பி செய்துகொள்ளலாம். அல்லது ஸ்க்ரீன் ஷாட்டாகவும் சேவ் செய்து பயன்படுத்திகொள்ளலாம்.

    இந்த இரண்டு அம்சங்களையும் பெற எட்ஜ் பிரவுசரை அப்டேட் செய்திருக்க வேண்டும்.
    கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் நிதி சார்ந்த செயலிகள், சேவைகளில் கவனம் செலுத்தி வருவதால், ஆப்பிளும் தனது வாடிக்கையாளர்களுக்கென நிதி சேவைகளை தொடங்கவுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் புதிய நிதி சார்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இதன்மூலம் நிதி சார்ந்த அனைத்து சேவைகளையும் பயனர்களுக்கு வழங்கவுள்ளது. 

    தற்போது அமெரிக்காவில் மட்டும் ஆப்பிள் பே உள்ளிட்ட சேவைகள் செயல்பட்டு வரும் நிலையில் அனைத்து நாடுகளிலும் ஆப்பிளின் நிதி சேவைகள் இன்னும் சில ஆண்டுகளில் வரவுள்ளன.

    ஆப்பிள் ஏற்கனவே கிரெடிட் கார்ட் மற்றும் பணம் அனுப்பும் சேவை ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வட்டி இல்லாத இ.எம்.ஐ சேவையையும் அறிமுகம் செய்தது. தற்போது ஆப்பிள் நிறுவனம் அனைத்து நிதி சார்ந்த சேவைகளையும் உள்ளடக்கிய ‘Apple Pay in 4' என்ற சேவையை அமல்படுத்துவதற்காக பணியாற்றி வருகிறது.

    தற்போது ஆப்பிளின் ஆப்பிள் பே சேவை மட்டும் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கிறது. ஆனால் ஆப்பிள் கார்ட், ஆப்பிள் கேஷ் போன்ற சேவைகள் அமெரிக்காவில் மட்டுமே தற்போது இருந்து வருகின்றன. இவற்றை விரிவுப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதுதவிர பிற வங்கி சார்ந்த செயல்பாடுகளையும் இந்த புதிய ஆப்பிள் சேவையில் செய்ய முடியும் என கூறப்படுகிறது.

    தற்போது கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் நிதி சார்ந்த செயலிகள், சேவைகளில் கவனம் செலுத்தி வருவதால், ஆப்பிளும் தனது வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேக நிதி சேவையை தொடங்கவுள்ளது.
    இந்த புதிய ட்வீட் டெக்கில் விளம்பரங்கள் காட்டப்படாது என்றும், பயனர்களுக்கு பயன் தரும் வகையில் பலதரப்பட்ட அம்சங்கள் இடம்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
    முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனம் ட்வீட்டெக் என்ற சேவையை வழங்கி வருகிறது. இந்த சேவையின் மூலம் பயனர்கள் பலதரப்பட்ட ட்விட்டர் கணக்குகள், தலைப்புகள் மற்றும் ஹேஷ்டேக்குகளை ஒரே நேரத்தில் பார்க்க முடியும். 

    பெரிய நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதளம் சார்ந்த பணியாளர்களுக்கு இந்த ட்வீட்டெக் பெரிதும் உதவி வருகிறது. இந்நிலையில் ட்வீட்டெக் பயன்படுத்துபவர்களிடம் கட்டணம் வசூலிக்க ட்விட்டர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லது ட்விட்டர் ப்ளூ எனப்படும் சந்தா செலுத்தி ட்விட்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ட்விட்டெக் இனி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

    இந்த புதிய ட்வீட் டெக்கில் விளம்பரங்கள் காட்டப்படாது என்றும், பயனர்கள் எளிதாக பலதரப்பட்ட அம்சங்கள் இடம்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்த அறிவிப்பை ட்விட்டர் விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தற்போது குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அம்சங்கள் விரைவில் உலகம் முழுவதும் வரவுள்ளன.
    உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. இதில் ரீல்ஸ், ஸ்டோரிஸ் என ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கின்றன. இந்நிலையில் தற்போது புதிதாக 7 அம்சங்களை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. 

    இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டில் இந்த அம்சங்களை காணலாம்.

    Reply while you browse: நாம் ஹோம் ஃபீடில் இருக்கும்போது மெசேஜ் வந்தால் தனியாக இன்பாக்ஸ் சென்று ரிப்ளை செய்யாமல் போஸ்ட் பார்த்துகொண்டே ரிப்ளை செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாம் மெசேஜ்ஜிற்கு ரிப்ளை செய்யும்போது பேக்ரவுண்ட் அனைத்தும் பிளர் ஆகி விடும்.

    Quickly send to friends: இந்த அப்டேட் மூலம் நாம் ஒரு பதிவை எளிதாக ஷேர் செய்ய முடியும். ஷேர் பட்டனை அழுத்தி பிடித்தால் அதில் நாம் ஷேர் செய்ய வேண்டிய நபர்களின் ப்ரொஃபைல்கள் காட்டும்.

    See Who's Online: இன்ஸ்டாகிராமில் நாம் நண்பர்களுடன் சேட் செய்வதற்கு ஏற்றவகையில் யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்று காட்டப்படும்.

    Play, Pause and re-play: இன்ஸ்டாகிராம் பயனர்கள் 30 நொடிகள் பிரிவீவ் உள்ள பாடல்களை நண்பர்களுடன் சேட்டில் ஷேர் செய்ய முடியும். இந்த அம்சம் ஆப்பிள் மியூசிக், அமேசான் மியூசிக்கின் உதவியுடன் இயங்குகிறது. விரைவில் ஸ்பாட்டிஃபையும் இதில் இணையவுள்ளது.

    இன்ஸ்டாகிராம்

    Send Messages Quietly: நண்பர்களை தொந்தரவு செய்யாமல் சத்தமில்லாமல் மெசேஜ் அனுப்பும் அம்சமும் இன்ஸ்டாகிராமில் இடம்பெற்றுள்ளது. @Silent என்ற வார்த்தையை மெசேஜ்ஜிற்கு முன் பயன்படுத்தினால் அவர்களுக்கு நோட்டிஃபிகேஷன் செல்லாமல் மெசேஜ் அனுப்பப்படும்.

    Keep it on the lo-fi: இன்ஸ்டாகிராம் நிறுவனம் லோஃபி சேட் தீமை அறிமுகம் செய்யவுள்ளது. இதன்மூலம் மற்றவருடன் நாம் உரையாடுவது தனிப்பட்ட வகையில் இருக்கும்.

    Create a poll with friends: இன்ஸ்டாகிராமில் குரூப் சேட்டில் வாக்கெடுப்பு வைக்கும் அம்சமும் இடம்பெறவுள்ளது.

    தற்போது குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அம்சங்கள் விரைவில் உலகம் முழுவதும் வரவுள்ளன.
    இந்த போன் வரும் ஏப்ரல் 6-ம் தேதி பகல் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட், ரியல்மி தளங்களில் விற்பனைக்கு வருகிறது.
    ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி சி31 ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.

    இந்த போனில் ஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாக கொண்ட UI R எடிஷன் வழங்கபப்டவுள்ளது. மேலும் 6.5 இன்ச் HD+ எல்.சிடி டிஸ்பிளே 120Hz டச் சாம்பிளிங் ரேட்டுடன் வருகிறது. மேலும் இதில் 12nm Unisoc T612 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    கேமராவை பொறுத்தவரை இதில்f/2.2 லென்ஸ் கொண்ட 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, f/2.4 லென்ஸ் கொண்ட மேக்ரோ கேமரா, f/2.8 லென்ஸ் கொண்ட மோனொகுரோம் சென்சார் இடம்பெறவுள்ளன. மேலும் இதில் 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமராவும் இடம்பெற்றுள்ளது.

    சைட் மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட், 5000 mAh பேட்டரி, 10W சார்ஜிங் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இந்த போனில் இடம்பெறவுள்ளன.

    இந்த போனின் 3ஜிபி/32ஜிபி மாடலின் விலை ரூ.8,999-ஆகவும், 4ஜிபி/64ஜிபி வேரியண்டின் விலை ரூ.9,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    வரும் ஏப்ரல் 6-ம் தேதி பகல் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட், ரியல்மி தளங்களில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.
    இந்த இயர்போன்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் வரை டோட்டல் பிளே பேக் வழங்கப்படுகிறது.
    ரியல்மி நிறுவனம் ரியல்மி பட்ஸ் ஏர் 3 இயர்போன்களை வரும் ஏப்ரல் 7ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. 

    இந்த இயர்போனில் TUV Rheinland சான்றிதழ் வழங்கப்பட்ட நாய்ஸ் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. இது வெளிப்புற இரைச்சலை 42 db வரை குறைக்கும். மேலும் இதில் இரண்டு மைக்ரோபோன்கள், 10mm டயனமிக் பேஸ் பூஸ்ட் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த இயர்போன்களை ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் இணைத்துகொள்ளலாம். இந்த இயர்போனில் உள்ள IPX5 வியர்வை மற்றும் நீரினால் இயர்போன் பாதிக்கப்படாமல் காக்கிறது. மேலும் இந்த இயர்போன்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் வரை டோட்டல் பிளே பேக் வழங்கப்படுகிறது. மேலும் வெறும் 10 நிமிட சார்ஜில் 100 நிமிடம் பிளே பேக் டைமும் வழங்கப்படுகிறது.

    இந்த இயர்பட்டில் டிராஸ்பரன்ஸி மோடும் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த ரியல்மி பட்ஸ் ஏர் 3 இயர்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.5000-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஹேக்கர்களிடம் பயனர்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் ஐபி முகவரி ஆகியவற்றை ஆப்பிள், மெட்டா மற்றும் டிஸ்கார்ட் நிறுவனங்கள் தந்துள்ளன.
    ஆப்பிள், மெட்டா மற்றும் டிஸ்கார்ட் ஆகிய நிறுவனங்கள் ஹேக்கர்களிடம் ஏமாந்து தங்களது பயனர்கள் குறித்த தரவுகளை அளித்துள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

    ஹேக்கர்கள் தாங்கள் உயரதிகாரிகள் என கூறி தரவுகளை கேட்டதால் மேற்கூறிய 3 நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் ஐபி முகவரி ஆகியவற்றை தந்துள்ளன.

    இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்த நிறுவனங்கள், சாதாரண நேரத்தில் அதிகாரிகள் வாரண்ட் அல்லது கையெழுத்திடப்பட்ட கடிதத்தை கொண்டு தரவுகளை கேட்பார்கள். ஆனால் அவசரநிலை என்று வரும்போது நீதிமன்றத்தின் உத்தரவு தேவையில்லை. நேரடியாகவே டெக் நிறுவனங்களிடம் இருந்து தரவுகளை பெறலாம். இதை பயன்படுத்தி ஹேக்கர்கள் பயனர்களின் தரவுகளை பெற்றுக்கொண்டனர் என தெரிவித்துள்ளன.

    இந்த குற்ற வேலைகளை செய்தது ஹேக்கிங் தெரிந்த இளைஞர்கள் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், அவசரநிலையில் இவ்வாறு தரவுகளை கேட்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி உறுதி செய்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை நிறுவனங்கள் பின்பற்றி வந்தாலும், இதுபோன்ற தவறுகள் நிகழ்ந்துவிடுவதாக கூறப்படுகிறது.
    ஜியோ தனது செயல்படாத வாடிக்கையாளர்களை நீக்குவதால் அதிகப்படியான வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
    டிராய் அமைப்பு கடந்த ஜனவரி மாதத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    இதன்படி ஜியோ நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 93.32 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.  ஜியோ தனது செயல்படாத வாடிக்கையாளர்களை நீக்குவதால் அதிகப்படியான  வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

    இத்துடன் வோடஃபோன் நிறுவனம் 3.89 லட்சம் வாடிக்கையாளர்களையும், பி.எஸ்.என்.எல் 3.77 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன.

    இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஏர்டெல் மட்டும் புதிதாக 7.14 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை கடந்த ஜனவரி மாதம் பெற்றுள்ளது.

    மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் 95.3 லட்சம் மொபைல் எண்கள் போர்ட் செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் 54.9 லட்சம் விண்ணப்பங்கள் ஜோன் 1-ல் இருந்தும், 40 லட்சம் விண்ணபங்கள் ஜோன் 2-ல் இருந்தும் வந்ததில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒயர்லைன் வாடிக்கையாளர்களை பொறுத்தவரை ஜியோ 3 லட்சம் புதிய ஒயர்லைன் சந்தாதாரர்களை பெற்றுள்ளது. ஏர்டெல் 94 ஆயிரம் சந்ததாதாரர்கள், பிஎஸ்என்எல் 32098 சந்ததாதாரர்கள், குவாட்ரண்ட் 16749 சந்தாதாரரக்ளை பெற்றுள்ளன. வோடஃபோன் நிறுவனமும் நிறைய ஒயர்லைன் சந்ததாரர்களை இழந்துள்ளது.

    ஃபைபர் பிராட்பேண்டை பொறுத்தவரையும் ஜியோ அதிகபட்சமான வாடிக்கையாளர்களை கடந்த ஜனவரி மாதம் பெற்றுள்ளது. ஏர்டெல், பிஎஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
    ரியல்மி 8 பயனர்கள் புதிய அப்டேட்டை பெற தங்களது ஸ்மார்ட்போனை RMX3085_11.A.24 அல்லது RMX3085_11.A.26 அப்டேட்டில் வைத்திருக்க வேண்டும்.
    ரியல்மி நிறுவனம் ரியல்மி 8 ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டை அடிப்படியாக கொண்ட ரியல்மி யூ.ஐ 3.0 அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த புதிய அப்டேட் RMX3085_11.C.06 யூ.ஐ வெர்ஷனுடன் வருகிறது. மேலும் இதில் ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்த புதிய அப்டேட்டில் மறு டிசைன் செய்யப்பட்ட ஐகான்களுடன் ஹோம் ஸ்க்ரீன் லேஅவுட் கொடுக்கப்பட்டுள்ளது. அது குவாண்டம் அனிமேஷன் இன்ஜின் 3.0-வை பயன்படுத்தியுள்ளது. இதன்மூலம் 300-க்கும் அதிகமான அனிமேஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த புதிய அப்டேட்டில் பேக்ரவுண்ட் ஸ்ட்ரீம் மோட் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் போன் லாக் ஆகி இருந்தாலும் ஆடியோ அல்லது வீடியோவை பேக்ரவுண்டில் பிளே செய்ய முடியும். மேலும் ரியல்மி புக் மற்றும் ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு இடையே பயனர்கள் எளிதாக மாறும் வகையில் இந்த அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஃபிளெக்ஸிபிள் விண்டோஸ் என்ற அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் பயனர்கள் மை ஃபைல்களில் இருந்து ஃபைலை இழுத்து ஃப்ளோட்டிங் விண்டோவிற்கு கொண்டு வர முடியும். அதேபோல போட்டோ செயலிகளில் இருந்து போட்டோக்களையும் கொண்டு வர ஃப்லோட்டிங் விண்டோவிற்கு கொண்டு வர முடியும்.

    இந்த புதிய படேட்டில் குயிக் லாஞ்ச் என்ற அம்சமும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் நமது ஸ்மார்ட்போன் நாம் அதிகம் பயன்படுத்தும் ஆப்களை அடையாளம் கண்டு ஓபன் செய்ய உதவுகிறது. இத்துடன் கேமராவில் உள்ள கஸ்டமிஷேஷன் ஆப்ஷன், புதிய ஜூம் ஸ்லைடர் ஆகிய பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

    ரியல்மி 8 பயனர்கள் புதிய அப்டேட்டை பெற தங்களது ஸ்மார்ட்போனை RMX3085_11.A.24 அல்லது RMX3085_11.A.26 அப்டேட்டில் வைத்திருக்க வேண்டும். இந்த புதிய அப்டேட் வெர்ஷன் RMX3085_11.C.06 என்ற பெயரை கொண்டுள்ளது. மேலும் இது ஒவ்வொரு பயனர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
    இன்று வெளியாகும் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ சில்வர் எடிஷன், புல்லட்ஸ் ஒயர்லெஸ் Z2 ஆகிய சாதனங்களும் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
    ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று இரவு 7.30 மணிக்கு அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ சில்வர் எடிஷன், புல்லட்ஸ் ஒயர்லெஸ் Z2 ஆகிய சாதனங்களும் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

    வெளியான தகவலின்படி ஒன்பிளஸ் 10 ப்ரோ போனில் 6.7 இன்ச் QHD+ AMOLED டிஸ்பிளே, 1300 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ், ஸ்னேப் டிராகன் 8 ஜென் 1 ப்ராசஸர் இடம்பெறும் என கூறப்படுகிறது.

    மேலும் இதில் HASSELBLAD 48 மெகாபிக்ஸல் SONY IMX789 சென்சார் (F/1.8) ஆப்டிகள் இமேஜ் ஸ்டேபிலைஷேனனுடன் வருகிறது. அத்துடன் 50 மெகாபிக்ஸல் Samsung ISOCELL JN1 அல்ட்ரா வைட் சென்சார், 8 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ லென்ஸ் OIS சப்போர்ட்டுட இடம்பெறுகிறது. 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமர இதில் தரப்பட்டுள்ளது.

    5000mAh பேட்டரி, 80W ஃபிளாஷ் சார்ஜிங், டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர் ஆகிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த போனின் ஒரு வேரியண்ட் விலை ரூ.66,999-ஆகவும், மற்றொரு வேரியண்டின் விலை ரூ.71,999-ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×