என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஏற்கனவே வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்போது அவற்றை பாஸ் செய்யும் அம்சம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில அம்சங்கள் இடம்பெறுவதாக அறிவித்துள்ளது.
    வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிய வாய்ஸ் மெசேஜ் அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. 

    ஏற்கனவே வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்போது அவற்றை பாஸ் செய்யும் அம்சம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில அம்சங்கள் இடம்பெறுவதாக அறிவித்துள்ளது.

    இதன்படி Out of Chat Playback என்ற அம்சம் இதில் இடம்பெறௌள்ளது. இதன்மூலம் பயனர்கள் சேட்டிற்கு வெளியேயும் வாய்ஸ் மெசேஜை கேட்க முடியும். அதாவது ஒருவரது சேட் பாக்ஸில் இருந்து வெளியே வந்தாலும் கூட அவர் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் பின்னால் பிளே ஆகும்.

    Pause/ Resume Recording- நாம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் போது அவற்றை பாதியில் நிறுத்திவைத்து பின்னர் மீண்டும் அனுப்பும் வகையில் இந்த அம்சம் இடம்பெறுகிறது.

    Waveform Visualaization: நாம் அனுப்பும் ஆடியோ வேவ் அமைப்பில் தெளிவாக காட்டப்படும். இதன்மூலம் நாம் ரெக்கார்ட் செய்யும்போதும், கேட்கும்போதும் எதுவரை கேட்டிருக்கோம் என்பதை எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

    Draft Preview: நாம் பேசி முடித்த வாய்ஸ் மெசேஜை அனுப்புவதற்கு முன் நாமே கேட்கும் வகையில் இந்த அம்சம் இடம்பெற்றுள்ளது.

    Remember Playback: இதன்மூலம் வாய்ஸ்மெசேஜ் கேட்பதை நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தால், எதில் இருந்து விட்டோமோ அதில் இருந்தே மெசேஜ் பிளே ஆகும்.

    Fast Playback on forwarded messages: நமக்கு வந்த வாய்ஸ் மெசேஜ்ஜை நாம் கூடுதல் வேகத்தில் கேட்கும் வகையில் இந்த அம்சம் இடம்பெற்றுள்ளது.
    ட்விட்டரின் இந்த அம்சம் இந்திய பயனர்களுக்காகவே கொண்டுவரப்படுகிறது.
    உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக ட்விட்டர் இருக்கிறது. இதில் ஸ்பேஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது ட்விட்டர் கிரிக்கெட் டேப் அம்சம் ஒன்றை கொண்டு வர பரிசோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

    இந்த கிரிக்கெட் டேபில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டிகள், அந்த போட்டிகள் குறித்த சமீபத்திய ட்வீட்டுகள், லைவ் ஸ்கோர்போர்டுகள் ஆகியவை இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

    தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டி குறித்த அப்டேட்டுகளும் இந்த கிரிக்கெட் டேபில் சோதனை முறையில் சில பயனர்களுக்கு மட்டும் காட்டப்பட்டு வருகிறது.

    இத்துடன் அந்த போட்டிகளில் உள்ள டாப் பிளேயர்ஸ், டீம் ரேங்கிங்ஸ் குறித்த விட்ஜெட்டுகள், கிரிக்கெட்டில் உள்ள நிகழ்வுகள், ஹைலைட்டுகள், ஆஃப் ஃபீல்டில் நடைபெறும் சம்பவங்கள் ஆகியவற்றின் வீடியோக்கள் ஆகியவை கிரிக்கெட் டேபில் இடம்பெறும். இதற்காக ட்விட்டர் ஒளிபரப்பு நிறுவனத்துடன் இணைந்து செயல்படவுள்ளது.

    ஸ்டாஸ்போர்ட்ஸ், கிரிக்பஸ், போடியா மஜும்தார் ஆகியவற்றுடன் டிவிட்டர் இணையவுள்ளது.

    இத்துடன் கிரிக்கெட்டின் முக்கிய நிகழ்வுகள் நோட்டிஃபிகேசனாகவும் அனுப்பப்படவுள்ளது. ட்விட்டரின் இந்த அம்சம் இந்தியாவில் மட்டுமே கொண்டுவரப்படுகிறது.
    இந்த அம்சத்தின் மூலம் ஒவ்வொருமுறையும் நாம் கூகுள் பேயில் கேமராவை ஓபன் செய்து ஸ்கேன் செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இன்று உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் யூபிஐ சேவைகளில் ஒன்றாக ஜிபே இருக்கிறது. தற்போது இந்த ஜிபேயில் விரைவாக பணம் அனுப்பும் புதிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி பின் லேப்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து கூகுள் நிறுவனம் ‘Tap to Pay’ என்ற அம்சத்தை ஜிபேயில் அறிமுகம் செய்துள்ளது.

    இதன்படி கடையில் பொருட்கள் வாங்குபவர்கள் ஸ்கேன் செய்வதற்கு பதில் அவர்களது போனை டேப் செய்தால் போதும். கூகுள் பேவிற்கு தானாகவே சென்று யூபிஐ பின் கேட்கப்படும். அதன்பின் யூபிஐ பின்-ஐ டைப் செய்தால் பணம் விரைவாக சென்று விடும்.

    இந்த அம்சத்தின் மூலம் ஒவ்வொருமுறையும் நாம் கூகுள் பேயில் கேமராவை ஓபன் செய்து ஸ்கேன் செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 7 முதல் இந்த உலகில் இந்த விளம்பர நிகழ்ச்சி மெட்டாவெர்ஸ் உலகில் நடைபெறவுள்ளது.
    மெய்நிகர் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் மெட்டாவெர்ஸ் இன்று உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து வருகிறது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பயனர்கள் மெட்டாவெர்ஸிலேயே நடத்தும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

    கே.ஜி.எஃப் படத்தின் 2-வது பாகம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்த விளம்பர நிகழ்ச்சி  மெட்டாவெர்ஸில் நடைபெறவுள்ளதாக அப்படக்குழு தெரிவித்துள்ளது.

    கேஜிஎஃப் வெர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த தோற்றங்களை உருவாக்கிக்கொள்ளலாம். மேலும் கேஜிஎஃப் உலகையும் சுற்றிப்பார்க்கலாம். 

    ஏப்ரல் 7 முதல் இந்த உலகில் இந்த விளம்பர நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
    பிஎஸ் பிளஸ் எசன்ஷியல், எக்ஸ்ட்ரா மற்றும் பிரிமியம் ஆகிய 3 திட்டங்கள் இந்த சேவையில் இடம்பெற்றுள்ளன.
    உலகம் முழுவதும் வீடியோ கேம் பிரியர்கள் பயன்படுத்தும் முன்னணி சாதனமாக சோனி பிளே ஸ்டேஷன் இருக்கிறது. இந்த பிளே ஸ்டேஷன் வைத்திருப்பவர்கள் கேம்களை வாங்கி விளையாட வேண்டும். 

    இதற்கு பதில் சந்தா மூலம் கேம்களை விளையாட சோனி நிறுவனம் புதிய பிளே ஸ்டேஷன் பிளஸ் சேவையை வரும் ஜூன் முதல் அறிமுகம் செய்யவுள்ளது. 

    இந்த சேவை மூன்று திட்டங்களை வழங்குகிறது. பிளே எஸ்டேஷன் பிளஸ் எசன்ஷியல்ஸ் சேவையில்  மாதத்திற்கு 2 கேம்களை டவுன்லோட் செய்துகொள்ளலாம், சிறப்பு தள்ளுபடிகள், சேவ் செய்யப்பட்ட கேம்களுக்கு கிளவுட் ஸ்டோரேஜ், ஆன்லைன் மல்டிபிளேயர் ஆக்சஸ் ஆகியவை வழங்கப்படும்.

    பிளேஸ்டேஷன் பிளஸ் எக்ஸ்டிராவில் 400க்கும் மேற்பட்ட பிஎஸ் 4 மற்றும் பிஎஸ் 5 கேம்கள், பிளேஸ்டேஷன் ஸ்டூடியோஸ் கேட்லாக்கில் உள்ள பிளாக்பஸ்டர் ஹிட்ஸ் ஆன கேம்கள், டவுன்லோட் செய்து விளையாடி கொள்ளலாம். இத்துடன் சிறப்பு தள்ளுபடிகள், கிளவுட் ஸ்டோரேஜ், ஆன்லைன் மல்டிபிளேயர் ஆகிய அம்சங்களும் உண்டு.

    பிளே ஸ்டேஷன் பிளஸ் பிரீமியம் சேவையில் அனைத்து வகையான பிளே ஸ்டேஷன், பிஎஸ்2, பிஎஸ்பி ஜெனரெஷன் கேம்களுடன் மல்டிபிளேயர் ஆப்ஷன், கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

    இந்தியாவில் பிளே ஸ்டேஷன் பிளஸ் எக்ஸ்ட்ரா மாதம் ரூ.800, 4 மாதங்களுக்கு ரூ.2000, வருடத்திற்கு ரூ.5000 என்ற கட்டணத்திலும், பிஎஸ் பிளஸ் பிரீமியம் மாதம் ரூ.1000, வருடத்திற்கு ரூ.6000 என்ற கட்டணத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பெரும்பாலான பயனர்கள் ஸ்மார்ட்போனுக்கு மாறி வருவதால், இந்த யூபிஐ123 பே சேவைக்கு வரவேற்பு இருக்காது எனவும் கருதப்படுகிறது.
    ஸ்மார்ட்போன், இணையவசதி இல்லாமல் யூ.பி.ஐ மூலம் பணம் அனுப்பும் யூ.பி.ஐ123பே வசதியை இந்த மாதம் தொடக்கத்தில் இந்திய அரசு அறிமுகம் செய்தது.

    இன்று வரை 37,000 பயனர்கள் இந்த யூ.பி.ஐ123 பே சேவையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21,833 வெற்றிகரமான பரிவர்த்தனைகளும் அச்சேவையின் மூலம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்த யூபிஐ சேவையை இந்தியாவிற்கு வெளியேயும் கொண்டு செல்ல NPCI திட்டமிட்டு வருகிறது. தற்போது BHIP UPI-ஐ சிங்கப்பூர், பூடான், ஐக்கிய அரபு அமீரகம், நேபால் ஆகிய நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதை தொடர்ந்து யூபிஐ123 பேவையும் கொண்டு சேர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

    அதேசமயம் பெரும்பாலான பயனர்கள் ஸ்மார்ட்போனுக்கு மாறி வருவதால், இந்த யூபிஐ123 பே சேவைக்கு வரவேற்பு இருக்காது எனவும் கருதப்படுகிறது.
    வைரஸ், பாக்டீரியா மற்றும் பிற காற்று மாசுக்களில் இருந்து இந்த ஹெட்போன்கள் நம்மை பாதுகாக்கும் என கூறப்படுகிறது.
    டைசன் ஜோன் நிறுவனம் காற்றை சுத்திகரிக்கும் ஹெட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த ஹெட்போன்களின் இயர்கப்புகளில் 2 மோட்டார்கள் உள்ளன. இது சுத்திகரிக்கப்பட்ட காற்றை மூக்கு மற்றும் வாய்களுக்கு அனுப்புகிறது. இந்த இயர்போன் லோ, மீடியம், ஹை மற்றும் ஆட்டோ என 4 வகையான சுத்திகரிப்பு மோட்களை வழங்குகிறது.

    இந்த இயர்போன்களில் உள்ள இன்பில்ட் ஆக்சலெரோமீட்டர்கள் நமக்கு தேவையான நேரத்தில் சுத்திகரிப்பு மோட்களை தானாகவே மாற்ற உதவுகிறது.

    இந்த சுத்திகரிப்பு அம்சத்தில் எலக்ட்ரோஸ்டேட்டிக் ஃபில்டரேஷன் தரப்பட்டுள்ளது. இது 0.1 மைக்ரான் அளவிலான தூசுகளை கூட 99 சதவீதம் வடிகட்டிவிடும். தூசு, மகர்ந்த துகள்கள், பாக்டீரியா, வைரஸ் மற்றும் காற்றில் உள்ள நைடரஜன் ஆக்ஸைடு, சல்பர் டை ஆக்சைடு, ஓசோனை கூட இந்த ஹெட்போன்கள் வடிகட்டும் என கூறப்படுகிறது.

    இந்த ஹெட்போன்களை டைசன் ஜோன் செயலியுடன் இணைத்து சுத்திகரிப்பை நாம் கண்காணிக்கலாம். செட்டிங்குகளையும் மாற்றிக்கொள்ளலாம்.

    மேலும் இந்த ஹெட்போனில் உள்ள நியோடைமியம் டிரைவர்கள் நியூட்ரலான சவுண்ட் சிக்னேச்சர்களை வழங்குகிறது. மேலும் இதில் உள்ள ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மோட்களும் ஆடியோவை ஆம்பிளிஃபை செய்ய உதவுகிறது.
    ஆப்பிள் பயனர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஜி.எஸ்.எம்.ஏ என அழைக்கப்படும் அமைப்பு ஸ்மார்ட்போன்களில் சீரியல் நம்பர்களை சேகரித்து வைக்கும் தளமாக இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போன்களின் தற்போதைய நிலையும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதாவது குறிப்பிட்ட பதிவு எண்ணை உடைய ஒரு ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டதா, திருடப்பட்டுவிட்டதா அல்லது முழுதும் பணம் செலுத்தப்படாமல் இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

    குறிப்பிட்ட ஒரு ஸ்மார்ட்போன் திருடப்பட்டு விட்டது என ஜி.எஸ்.எம்.ஏவிடம் புகார் அளித்தால் அதன் பதிவு எண்ணை கொண்டு அந்த ஸ்மார்ட்போனுக்கு நெட்வொர்க் இணைப்பு எதுவும் கிடைக்காமல் தடுக்க முடியும். திருடப்பட்ட போனை பிறர் ஏமாந்து வாங்காமல் தடுக்கவும் முடியும். இத்தகைய பயன்களுக்காகவே இந்த ஜி.எஸ்.எம்.ஏ உதவுகிறது.

    இந்நிலையில் ஜி.எஸ்.எம்.ஏவில் தொலைந்ததாக அல்லது திருடப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட ஆப்பிள் போன்களை ஆப்பிள் ஸ்டோர்ஸ் அல்லது ஆப்பிளின் அங்கீகாரம் பெற்ற ஆப்பிள் சர்வீஸ் செண்டர்களில், சர்வீஸ் செய்ய முடியாது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மொபைல் ஜீனியஸ், ஜிஎஸ்.எக்ஸ் சிஸ்டம்ஸ் ஆகியவற்றில் தொலைந்ததாக, திருடப்பட்டுவிட்டதாக பதிவு செய்யப்பட்ட ஆப்பிள் போன்களுக்கும் சர்வீஸ் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கை திருட்டு மற்றும் மோசடியில் இருந்து ஆப்பிள் பயனர்களை காப்பாற்றும் என நம்பப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2 போன்களுக்கு திடீரென விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனம், ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை நாளை அறிமுகம் செய்யவுள்ளது. இதையடுத்து ஒன்பிளஸ் 9 5ஜி, ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

    இதன்படி ஒன்பிளஸ் 9 5ஜி 8ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.49,999-ல் இருந்து ரூ.5000 குறைக்கப்பட்டு ரூ.44,999-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல 12 ஜிபி வேரியண்டின் விலையும் ரூ.5000 குறைக்கப்பட்டு ரூ.49,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.64,999-ல் இருந்து ரூ.5000 குறைக்கப்பட்டு ரூ.59,999-க்கு விற்பனை ஆகிறது. 12 ஜிபி வேரியண்டின் விலை ரூ.69,999-ல் இருந்து ரூ.5000 குறைக்கப்பட்டு ரூ.64,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த விலை குறைப்பு சில நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.
    3 வேரியண்டுகளில் வெளியாகி இருக்கும் இந்த போன் விலை அனைத்தும் ரூ.11,000-க்கும் கீழ் உள்ளன.
    ரெட்மி நிறுவனம் ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இந்த போனில் 6.53 இன்ச் HD+ டிஸ்பிளே, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸுடன் கிடைக்கிறது.

    இதில் octa-core MediaTek Helio G25 SoC பிராசஸர் தரப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை 13 மெகாபிக்ஸல் சென்சார் எல்.இ.டி பிளாஷுடன் பின்பக்கமும், 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா முன்பக்கமும் தரப்பட்டுள்ளன. இந்த கேமராவில் உள்ள ஏ.ஐ கேமரா 5.0 தொழில்நுட்பம் 27 சீன்கள் வரை அடையாளம் காண்கிறது. 5000mAh பேட்டரி 10W சார்ஜ் உள்ளிட்ட அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

    இந்த போனின் 4ஜிபி+64ஜிபி வேரியண்டின் விலை இந்திய மத்திப்பில் சுமார் ரூ.8,300-ஆகவும்,  4ஜிபி+128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.9,500-ஆகவும், 6ஜிபி+128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.10,700-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
    இந்த குற்றச்சாட்டில் ஏற்கனவே சாம்சங், ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்கள் சிக்கியுள்ள நிலையில், தற்போது ஜியோமி மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
    சாம்சங் சமீபத்தில் வெளியிட்ட சாம்சங் கேலக்ஸி 22 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பிற செயலிகளின் செயல்பாட்டை குறைத்து சில செயலிகளின் செயல்பாட்டை மட்டும் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தற்போது ஜியோமியும் இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது.

    ஜியோமி சமீபத்தில் வெளியிட்ட ஜியோமி 12 ப்ரோ, ஜியோமி 12எக்ஸ் போன்களில் இந்த பிரச்சனை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோமி போன்களில் சில செயலிகள் மட்டும் கேம்களாக கருத்தப்பட்டு பிராசஸர்கள் வேகமாக இயங்கும் வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் பிற செயலிகளின் செயல்பாடு குறைக்கப்படுவதாகவும், செயற்கையாக போனின் செயல்வேகத்தை அதிகரித்து காட்டுவதாகவும் ஜியோமியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே ஒன்பிளஸ் நிறுவனமும் இந்த குற்றச்சாட்டில் சிக்கிய நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்கள் போட்டியாளர்களை எதிர்கொள்வதற்கு போலியாக ஸ்மார்ட்போன் செயல்வேகத்தை உயர்த்தி காட்ட இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுவதாக கருதப்படுகிறது.
    பிலிப்பைன்ஸில் அறிமுகமாகவுள்ள இந்த டேப்லெட் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரியல்மி நிறுவனம் மலிவு விலை, கைக்கு அடக்கமான ரியல்மி பேட் மினி டேப்லெட்டை பிலிப்பென்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த பேடில் 8.7 இன்ச் டிஸ்பிளே 84.59 சதவீதம் ஸ்க்ரீன் டூ பாடி ரேட்ஷியோவுடன் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த டேப்லெட் Unisoc T616 Soc பிராசஸரில் இயங்கும் என கூறப்படுகிறது.

    மேலும் இதில் சன்லைட் மோட், Mali G57 GPU, 8 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 5 மெகாபிக்ஸல் முன்பக்க ஷூட்டர் கேமரா ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டேப்லெட் 7.6mm அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த டேப்லெட்டில் 6400 mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவையும் தரப்பட்டுள்ளன. இந்த டேப்லெட் 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ.12,000-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிலிப்பைன்ஸை தொடர்ந்து இந்தியாவிலும் இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×