என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
கருத்து சுதந்திரத்தை பாதிக்காத வகையில் சமூக வலைதளங்கள் இயங்குகிறதா என எலான் மஸ்க் கேள்வி எழுப்பினார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களில் நிறுவனர் எலான்மஸ்க் புதிய சமூக வலைதளம் ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய சமூக வலைதளத்தை தொடங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகம் இயங்குவதற்கு அடிப்படையான ஒன்று. ட்விட்டர் அத்தகைய சுதந்திரமான பேச்சுகளுக்கு அனுமதி அளிக்கிறதா என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பலர் இல்லை என பதிவிட்டிருந்தனர். அதை தொடர்ந்து புதிய சமூக வலைதளத்தை எதிர்பார்க்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஒருவர் ஓபன் சோர்ஸ் தளத்தை உருவாக்கினால் நன்றாக இருக்கும், அது வெளிப்படை தன்மையுடன் இயங்க வேண்டும் எனவும் கூறினார்.
உடனே அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், இதுகுறித்து தீவிரமாக யோசித்து வருகிறேன் என கூறியுள்ளார்.
எம்.ஐ மிக்ஸ் ஃபோல்டு போன் இந்தியாவில் அறிமுகமாகவில்லை. இருப்பினும் எம்.ஐ மிக்ஸ் ஃபோல்டு 2 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவை சேர்ந்த ஜியோமி நிறுவனம் தனது இரண்டாவது மடிக்கும் வகை ஃபோல்டபிள் போனான எம்.ஐ மிக்ஸ் ஃபோல்ட் 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த போன் குறித்து அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் புதிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
இதன்படி இந்த போனின் 8 இன்ச் இண்டர்நெல் டிஸ்பிளே, 6.5 இன்ச் கவர் டிஸ்பிளே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் Qualcomm Snapdragon 8 Gen 1 Plus SoC பிராசஸர் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து குவால்காம் தரப்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
எம்.ஐ மிக்ஸ் ஃபோல்டு போன் இந்தியாவில் அறிமுகமாகவில்லை. இருப்பினும் எம்.ஐ மிக்ஸ் ஃபோல்டு 2 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 3 கேமரா செட் அப் இடம்பெறுகிறது. ஆனால் பிரைமரி கேமராக்களை தவிர மீதம் இரண்டு கேமராக்களின் மெகாபிக்ஸல் குறித்து தெரியவரவில்லை.
மோட்டோ நிறுவனம் புதிய மோட்டோ ஃபிரண்டியர் என்ற ஃபிளாக்ஷிப் போனை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 200 மெகாபிக்ஸல் கொண்ட பவர்ஃபுல் பிரைமரி கேமரா இடம்பெறவுள்ளது. இதன்மூலம் உலகின் முதல் 200 எம்பி கேமராவாகவும் ஃபிரண்டியர் இருக்கவுள்ளது.
மேலும் இந்த போனில் 6.67-inch OLED டிஸ்பிளே, 144Hz கொண்ட ஃபுல்ஹெச்.டி+ ரெஷலியூஷன். Qualcomm Snapdragon 8 Gen 1 Plus பிராசஸர், 12 ஜிபி LPDDR5 RAM, 256ஜிபி UFS 3.1 மெமரி, 4500 mAh பேட்டரி, 125W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை இடம்பெறுகின்றன.
கேமராவை பொறுத்தவரை இதில் 3 கேமரா செட் அப் இடம்பெறுகிறது. ஆனால் பிரைமரி கேமராக்களை தவிர மீதம் இரண்டு கேமராக்களின் மெகாபிக்ஸல் குறித்து தெரியவில்லை.
இந்த போன் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படும் தேதி விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
தற்போது சோதனை முறையில் இருக்கும் இந்த அம்சம் விரைவில் அனைத்து வீடியோக்களுக்கும் வரவுள்ளது.
உலகம் முழுவதும் பெரிதும் பார்க்கப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றாக யூடியூப் இருக்கிறது. தினம் பல கோடிக்கணக்கான வீடியோக்கள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பார்க்கப்படுகின்றன.
இந்நிலையில் பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க யூடியூப் புதிய அம்சம் ஒன்றை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருப்பது போல ரியாக்ஷன்ஸ் அம்சம் யூடியூப்பில் வெளியாகவுள்ளது. தற்போது வாட்ஸ்ஆப்பில் சோதனையில் இருக்கும் ரியாக்ஷன்ஸ் யூடியூப்பிலும் சோதனை நிலையில் இருக்கிறது.
இதுவரை பேஸ்புக்கில் லைக், டிஸ்லைக், கமெண்ட் என்ற மூன்று ஆப்ஷன்கள் மட்டுமே பயனர்கள் வீடியோ குறித்து கருத்து பரிமாறும் வண்ணம் இருந்தது. இதில் சமீபத்தில் டிஸ்லைக் அம்சம் நீக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது யூடியூப் ரியாக்ஷன் அம்சத்தை கொண்டுவரவுள்ளது.

இதன்மூலம் பயனர்கள் தங்களுக்கு பிடித்த யூடியூப் வீடியோக்களுக்கு எமோஜ்ஜிகள் மூலம் ரியாக்ட் செய்ய முடியும். குறிப்பாக வீடியோ ஓடிக்கொண்டிருக்கும்போதே தங்களுக்கு பிடித்த இடங்களில் ரியாக்ட் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியோப் 8 ரியாக்ஷன் கொண்ட எமோஜிக்களை தற்போது வழங்கவுள்ளது. விரைவில் கூடுதல் எமோஜ்ஜிக்களும் இதில் சேர்க்கப்படவுள்ளன.
தற்போது சோதனைக்காக ஒருசில வீடியோக்களில் மட்டுமே நாம் எமோஜ்ஜிக்களை பயன்படுத்த முடியும்.
இந்த ஸ்மார்ட்போனை எஸ்பிஐ வங்கி கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.2000 உடனடி தள்ளுபடி உண்டு. ஸ்டாண்டர்ட் சார்டர்ட் பேங்க் மற்றும் பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஒப்போ கே10 ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் Snapdragon 680 SoC பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ (1080x2412) டிஸ்பிளே, 90Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் தரப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை இதில் 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்ஸல் பொக்கே கேமரா, 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இரவில் குறைந்த வெளிச்சத்தில் தரமான போட்டோக்களை எடுக்க இதன் நைட்ஸ்கேப் மோட் உதவுகிறது. மேலும் இந்த போனில் 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமராவும் தரப்பட்டுள்ளது.
இந்த போனிற்கு 5000mAh பேட்டரி, 33W SuperVOOC சார்ஜிங் சப்போர்ட்டும் தரபட்டுள்ளன. இந்த போனின் 6ஜிபி ரேம்+128 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.14,990-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 8ஜிபி ரேம்+128 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.16,990-ஆக உள்ளது.
பிளாக் கார்பன் மற்றும் ப்ளூ பிளேம் நிறங்களில் வெளி வரும் இந்த ஸ்மார்ட்போனை எஸ்பிஐ வங்கி கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.2000 உடனடி தள்ளுபடி உண்டு. ஸ்டாண்டர்ட் சார்டர்ட் பேங்க் மற்றும் பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
இந்த போனை வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.600 சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா சி01 பிளஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. பட்ஜெட் விலை போனான இதில் தற்போது புதிய 32 வேரியண்ட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போனின் சிறப்பம்சங்களாக 5.45 இன்ச் ஹெச்.டி+ டிஸ்பிளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ, 295ppi பிக்ஸல் டென்சிட்டி, 1.6Hz 1.6GHz octa-core Unisoc SC9863a SoC பிராசஸர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
கேமராவை பொறுத்தவரை இதில் f/2.4 அப்பேர்சர் கொண்ட 5 மெகாபிக்ஸல் கேமரா, 2 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா தரப்பட்டுள்ளன. இரண்டு கேமராக்களிலும் LED ஃபிளாஷ் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 3000mAh பேட்டரி, 5w சார்ஜிங் உள்ள இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது 2ஜிபி ரேம்+16 ஜிபி மெமரி வேரியண்டில் மட்டுமே வெளியானது. ரூ.5,999-ல் அறிமுகமான இந்த போனின் விலை தற்போது ரூ.6,299-ஆக இருக்கிறது.
தற்போது வெளியாகியுள்ள 2ஜிபி ரேம்+ 32ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.6,799-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.600 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம் 16ஜிபி வேரியண்ட் போனை ரூ.5,699-க்கும். 32 ஜிபி போனை ரூ.6,199-க்கும் வாங்கலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ தமிழக பள்ளி மாணவர்களை பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான புகைப்படங்களை ஆப்பிள் ஐபோன் 13 மினியில் எடுத்து வெளியிட்ட 40 மேல்நிலைப்பள்ளி மாணவர்களை ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ பாராட்டியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் ஏப்ரல் 17-ம் தேதி வரை எக்மோர் அருங்காட்சியகத்தில் நடைபெறும் சென்னை போட்டோ பினாலே நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வி.ஆர் மாலில் உள்ள ஆப்ட்ரானிஸ் ஸ்டோரிலும் இந்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த புகைப்பட போட்டியில் 12 வயது மாணவர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்பட கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், தமிழ்நாடு முடிவே இல்லாத கதைகளை கொண்டுள்ளது. அங்கே பலதரப்பட்ட உணவு, கட்டிடக்கலை, நிலப்பரப்பு, கலச்சாரங்கள் நிறைந்துள்ளன. தமிழகத்தை புகைப்படங்கள் மூலம் கண்டறிவது புதிவித அனுபவத்தை தரும் என தெரிவித்துள்ளனர்.
Forty high school students from Tamil Nadu, India captured the vibrance of their communities on iPhone 13 mini. Now their work is featured in the student showcase at the historic Egmore Museum for the Chennai Photo Biennale. #ShotOniPhonehttps://t.co/t0DhNYWGvmpic.twitter.com/I30DTwZkbT
— Tim Cook (@tim_cook) March 25, 2022
ஒருமாத வேலிடிட்டி என்பது 28 நாட்களாகவே இருந்து வந்த நிலையில் ஜியோ நிறுவனம் காலண்டர் மாத வேலிடிட்டி என 30 நாட்கள் வேலிடிட்டி தரும் ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்பு 30 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களை வழங்கி வந்தன. பின் திடீரென வேலிடிட்டி நாட்கள் 28-ஆக குறைக்கப்பட்டன.
இதனால் ஒருமாத வேலிடிட்டி என்பது 28 நாட்களாகவே இந்தியாவில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் காலண்டர் மாத வேலிடிட்டி என 30 நாட்கள் வேலிடிட்டி தரும் ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்படி ரூ.259 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டட் அழைப்புகள், தினம் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்கள் 30 நாட்களுக்கு வழங்கப்படும்.
வழக்கமாக 28 நாட்களில் இருந்து முழுதாக ஒரு மாத வேலிடிட்டி திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆப்பிளை போலவே பிற தொழிநுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தயாரிப்புகளை குறைக்கவுள்ளன.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13, ஐபோன் எஸ்இ 3 ஆகிய ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பை 20 சதவீதம் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஐபோன் எஸ்இ 2022 ஸ்மார்ட்போனை 30 லட்சம் யூனிட்டுகள் தயாரிக்க ஆப்பிள் திட்டமிட்டிருந்த நிலையில், 20 லட்சம் மட்டும் தயாரிக்கவுள்ளது. அதேபோன்று ஐபோன் 13 சீரிஸ் ஸ்மார்ட்போன் தயாரிப்பும் 20 லட்சம் அளவிற்கு குறைக்கப்படவுள்ளது.
உலகம் முழுவதும் நிலவி வரும் சிப் பற்றாக்குறை, ரஷியா உக்ரைன் போர் மற்றும் அதிகரிக்கும் பணவீக்கம் ஆகிய காரணங்களால் ஐபோன் உற்பத்தி குறைக்கப்படவுள்ளது. ஆப்பிளை போலவே பிற தொழிநுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களையும் மேற்கூறிய காரணங்கள் பாதிக்கும் என கூறப்படுகிறது.
வரும் மார்ச் 31-ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த மினி கணினியின் விலை குறித்து தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Apcsilmic நிறுவனம் உலகின் மிகச்சிரிய கணினியை அறிமுகம் செய்யவுள்ளது. பார்ப்பதற்கு வைஃபை ரவுட்டர் போல சிறிய அளவில் இருக்கும் இந்த கணினியில் Snapdragon 7c 8 core 2.4GHz பிராசஸர், விண்டோஸ் 11 ஓ.எஸ், 4ஜிபி+64ஜிபி, 6ஜிபி+128 ஜிபி, 8ஜிபி+256ஜிபி வேரியண்டில் மெமெரி, 2 ஹெச்.டி.எம்.ஐ போர்ட்டுகள், 2 யூ.எஸ்.பி 2.0 போர்ட்டுகள், 1 யூ.எஸ்.பி 3.0 போர்ட், 5வது ஜெனரேஷன் வைஃபை 4ஜி நெட்வொர்க் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
ஹோம் தியேட்டர், கேமிங், அலுவலக வேலைகள், டிஜிட்டல் ஆர்ட் உள்ளிட்ட கிராஃபிக்ஸ் வேலைகளை இதில் எளிதாகவும், வேகமாகவும் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணினியில் 2கே ரெஷலியூஷன் வழங்கப்பட்டுள்ளது. ஹெச்.டி.எம்.ஐ மூலம் 2 மானிட்டர்கள் இதில் இணைத்துகொள்ளலாம். அதிக மின்சாரத்தையும் இந்த கணினி பயன்படுத்தாது என்பதால் மின் தேவையும் குறையும் என கூறப்படுகிறது.
வரும் மார்ச் 31-ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த மினி கணினியின் விலை குறித்து தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை லைக், ரியாக் செய்யும் அம்சத்தை கொண்டு வந்தது. அதை தொடர்ந்து தற்போது இந்த புதிய அம்சத்தையும் இன்ஸ்டாகிராம் கொண்டு வரவுள்ளது.
உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது.
புகைப்படங்களை பதிவேற்றும் செயலியாக இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்யப்பட்டாலும் தொடர்ந்து வீடியோ, ஸ்டோரிஸ், வாய்ஸ் மெசேஜ், ரீல்ஸ் ஆகிய அம்சங்களை இன்ஸ்டாகிராம் கொண்டு வந்தது.
இதில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் அம்சத்திற்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. வழக்கமாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸுக்கு பயனர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ’Send Message' என்ற ஆப்ஷன் தற்போது பயனில் உள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸுக்கு வாய்ஸ் மெசேஜ் மற்றும் புகைப்படங்கள் மூலம் ரிப்ளை செய்யும் புதிய அம்சத்தை கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை லைக், ரியாக் செய்யும் அம்சத்தை அந்நிறுவனம் கொண்டு வந்தது. அதை தொடர்ந்து தற்போது வாய்ஸ் ரிப்ளை, இமேஜ் ரிப்ளை அம்சங்களும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் வரவுள்ளன.
தற்போது ஸ்மார்ட்போன் கேமராக்களின் தரம் உயர உயர மீடியா ஃபைல்களின் அளவும் கூடுவதை கருத்தில் கொண்டு இந்த அம்சம் கொண்டு வரப்படவுள்ளது.
இன்று உலகம் முழுவதும் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது.
வாட்ஸ்ஆப்பில் வீடியோ, ஆடியோ அழைப்புகள், வாய்ஸ் மெசேஜ்கள், ஸ்டிக்கர்கள் என ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கின்றன. இவற்றுடன் புகைப்படங்கள், வீடியோக்கள், டாக்குமெண்டுகள் ஆகியவற்றையும் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்ப முடியும். ஆனால் 100 எம்.பி அளவிலான ஃபைல்களை மட்டுமே வாட்ஸ்ஆப்பில் தற்போதுஅனுப்பும் வகையில் இருக்கிறது.
இந்நிலையில் இனி 2 ஜிபி வரையிலான ஆவணங்களை அனுப்பும் அம்சத்தை வாட்ஸ்ஆப் சோதனை செய்து வருகிறது. தற்போது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டில் வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷன் 2.22.8.5, 2.22.8.6 மற்றும் 2.22.8.7 ஆகியவற்றுக்கும், ஆண்ட்ராய்டில் பீட்டா வெர்ஷன் 22.7.0.76-க்கும் இந்த அம்சம் தரப்பட்டுள்ளது.
தற்போது ஸ்மார்ட்போன் கேமராக்களின் தரம் உயர உயர மீடியா ஃபைல்களின் அளவும் கூடுவதை கருத்தில் கொண்டு இந்த 2ஜிபி அம்சம் கொண்டுவரப்படவுள்ளது.






