என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கிய நிலையில் வோடஃபோன் - ஐடியா நிறுவனம் 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
    ஐபிஎல் போட்டிகளில் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை காணும் வகையில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

    இதன்படி ரூ.499-க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ்கள்  28 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் வழங்கப்படுகிறது.

    அதேபோல ரூ.1066-க்கு ரீசார்ஜ் செய்தால் தினம் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 84 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் உண்டு.
    இந்த போனை HDFC வங்கி கார்ட் கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடியும் வழங்கப்படும்.
    போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த போன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 13 ஆகிய இயங்குதளங்களில் இயங்கும். இதில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி+, சூப்பர் AMOLED டிஸ்பிளே 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட்டுடன் வருகிறது.

    இந்த போனில் Snapdragon 695 SoC, Adreno 619 GPU இடம்பெற்றுள்ளன.

    கேமராவை பொறுத்தவரை இதில் 64 மெகாபிக்ஸல் Samsung ISOCELL GW3 பிரைமரி சென்சார் f/1.8 லென்ஸ், 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் ஷூட்டர் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் லென்ஸ் தரப்பட்டுள்ளது.

    குளோபல் வேரியண்ட் போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா சென்சார் தரப்பட்டுள்ளது.

    செல்ஃபி கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா f/2.45 லென்சுடன் தரப்பட்டுள்ளது.

    இதில் 5000 mAh Li-Polymer battery, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

    அம்சங்கள்

    இந்த போனின் 6ஜிபி ரேம்/64 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.18,999-ஆகவும், 6ஜிபி ரேம்/128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.19,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் டாப் வேரியண்ட்டான 8ஜிபி ரேம்/128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.21,999-ஆக நிர்ணயம் எய்யப்பட்டுள்ளது.

    இந்த போனை HDFC வங்கி கார்ட் கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடியும் வழங்கப்படும். மேலும் போக்கோ எக்ஸ்2, போக்கோ எக்ஸ்3 மற்றும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனை இக்ஸ்சேஞ்ச் செய்தால் கூடுதலாக ரூ.3000 சலுகையும் உண்டு.
    இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு 8 மெகாபிக்ஸல் பின்பக்க கேமரா, 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளன.
    ஐடெல் நிறுவனம் ஐடெல் விஷன் 3 என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 

    இந்த ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஹெச்.டி+ ஐபிஎஸ் டிஸ்பிளே, 3ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.

    கேமராவை பொறுத்தவரை இதில் ஏ.ஐ சப்போர்ட் உள்ள 8 மெகாபிக்ஸல் டூயல் ரியர் கேமரா, எல்.இ.டி பிளாஷுடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் கேமராவில் ஏ.ஐ பியூட்டி மோட், போட்ரெய்ட் மோட், லோ லைட் மோட், ஹெச்.டி.ஆர் மோட் ஆகியவையும் உள்ளன. 

    5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ள இதில் வாட்டர் டிராப் நாட்ச், ஏ.ஐ பியூட்டி மோட் ஆகியவையும் உள்ளன.

    5000 mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ள இந்த போனின் விலை ரூ.7999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு ஜியோ 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களில் 1 வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது.
    ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் 10 அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் தொடரை முன்னிட்டு ஜியோ நிறுவனம், ஹாட்ஸ்டார் டிஸ்னி+ சேவையை வழங்கும் 2 புதிய ரிசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.

    இதன்படி ஜியோ ரூ.555 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 55 ஜிபி டேட்டா, 55 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் 1 வருடத்திற்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் இலவசம். இத்துடன் ஜியோ செயலிகளுக்கும் சந்தா வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் இலவச அழைப்புகள், எஸ்.எம்.எஸ்கள் கிடையாது.

    ஜியோ ஏற்கனவே ரூ.2999 திட்டத்தை வழங்கி வந்தது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு இந்த திட்டத்துடன் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா 1 வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் தினம் 2.5 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் அன்லிமிட்டெட் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ்கள் தினமும் இலவசம்.
    ஸ்மார்ட்போன் மூலம் இதயம், கண் பரிசோதனைகளை செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டு வருகிறது.
    கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி இதயம் மற்றும் கண் கோளாறு சார்ந்த பிரச்சனைகளை கண்டறியும் வசதியை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. 

    இதன்மூலம் லட்சக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் ஆரோக்கிய நிலையை வீட்டில் இருந்தே கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து கூகுள் கூறியதாவது,

    இதய துடிப்பு மற்றும் செயல்பாட்டை கண்டறியும் செயல்முறையை நாங்கள் பரிசோதனை செய்து வருகிறோம். ஸ்மார்ட்போனை நெஞ்சில் வைப்பதன் மூலம்  மைக்ரோபோன்களை கொண்டு இதயம் துடிக்கும் சத்தத்தை பதிவு செய்ய முடியும். மருத்துவர்கள் ஸ்தெதஸ்கோப் உதவியை கொண்டு இதயம் மற்றும் நுரையீரல் சார்ந்த ஆரோக்கியத்தை கண்டறிகின்றனர். இதனை ஸ்மார்ட்போன் மைக்ரோபோனை கொண்டே செய்ய நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்.

    இந்த மருத்துவ பரிசோதனையின் ஆரம்ப கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். ஆனால் விரைவில் ஸ்மார்ட்போன் செயல்முறையை செயல்படுத்துவோம்.

    அதேபோல ஸ்மார்ட்போன் மூலம் கண்பரிசோதனை செய்யும் அம்சத்தையும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். 

    ஸ்மார்ட்போன் கேமராக்களை கொண்டு நீரிழிவு மற்றும் நீரிழிவு அல்லாத கண் சார்ந்த பிரச்சனைகளை கண்டறிய திட்டமிட்டுள்ளோம். இதற்காக EyePACS மற்றும் Chang Gung மருத்துவமனையின் உதவியை நாடியுள்ளோம்.

    எங்கள் விஞ்ஞானிகள் மருத்துவர்களின் உதவியுடன் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.
    இந்த மாத தொடக்கத்தில் வாட்ஸ்ஆப் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த இந்த அம்சம் தற்போது ஐ.ஓஎஸ் பயனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
    வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது வாய்ஸ் மெசேஜ் சேவையில் ‘பாஸ்’ அம்சத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.

    இதன்மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்போது பயனர்கள் தாங்கள் பேசுவதை பாதியில் நிறுத்திவிட்டு, மீண்டும் சிறிது நேரம் கழித்து கூட தொடர முடியும். இதற்கு முன் ஒரு முறை நிறுத்திவிட்டால் அந்த மெசேஜ்ஜை அனுப்பிவிட வேண்டும் அல்லது டெலிட் செய்துவிட வேண்டும் என்ற இரண்டு தேர்வுகள் மட்டுமே இருந்தன.

    இந்த மாத தொடக்கத்தில் வாட்ஸ்ஆப் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த இந்த அம்சம் தற்போது ஐ.ஓஎஸ் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கும் இந்த சேவை அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ்ஆப் வாய்ஸ் மெசேஜ்

    விரைவில் வாட்ஸ்ஆப், பயனர்கள் வாட்ஸ்ஆப் அழைப்புகளில் எளிதாக இணைவதற்கு லிங்க் அனுப்பும் அம்சத்தையும் கொண்டுவரவுள்ளது. இதன்மூலம் நமது தொடர்பில் இல்லாதவர்கள் கூட அந்த லிங்கை கிளிக் செய்து அழைப்பில் இணையலாம்.
    தற்போது செல்போன் பயன்படுத்தும் 10.15 சதவீதம் பேர் பி.எஸ்.என்.எல் சேவை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த ஆண்டு இறுதியில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அமல்படுத்தப்படும் என தகவல் தொடர்பு மந்திரி தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார்.

    உத்தரப்பிரதேச எம்.பி குன்வார் ரேவதி ராமன் சிங், மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது இந்தியாவில் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பினார். இதற்கு தேவுசின் சவுகான் இந்த ஆண்டுக்குள் வழங்கப்படும் என பதிலளித்துள்ளார்.

    தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் போட்டியிட்டு வரும் பி.எஸ்.என்.எல் இழப்பை சந்தித்து வருகிறது. இதை சரி செய்வதற்காக மத்திய அரசு பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவற்றை இணைக்க முடிவெடுத்துள்ளது. தற்போது இந்தியாவில் 10.15 சதவீதம் வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல் வைத்துள்ளது.

    இன்னும் வாடிக்கையாளர்களை விரிவு செய்யும் வகையில் 4ஜி சேவை கொண்டுவரப்படவுள்ளது.

    மேலும் இந்த ஆண்டு இறுத்திக்குள் 5ஜி சேவையும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் மந்திரி தெரிவித்துள்ளார்.
    கொரோனா 2-வது அலையின்போது பலரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
    மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஜி.ஆர்.எஸ் இந்தியா என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் ஸ்மார்ட்போனை கொண்டு இயங்கும் ஆக்சிஜன் கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது.

    இந்த ஆக்சிஜன் கருவிக்கு ஆக்சிஜன் பிளஸ் என பெயரிடப்பட்டுள்ளது. எளிதாக எடுத்து செல்லக்கூடிய இந்த கருவியை மருத்துவ அவசரநிலையின்போது பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு இந்தியாவின் மலைப்பிரதேசங்களில் இந்த ஆக்சிஜன் கருவியை எடுத்து செல்வது எளிமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

    கொரோனா 2-வது அலையின்போது பலரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உயிரிழந்தனர். ஆக்சிஜனை உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்ப்பதும் அரசுக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்த நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆக்சிஜன் கருவி உருவாக்கப்ப்பட்டுள்ளது.

    இந்த கருவி ஆக்சிஜனை நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்பேக் போல இருக்கும். இதனை மொபைல் செயலியுடன்  இணைத்து கண்காணிக்க முடியும். முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் இந்த ஆக்சிஜன் கருவியை எளிதாக பயன்படுத்தலாம்.

    இந்த கருவி காப்புரிமை பெறுவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
    இந்த ஸ்மார்ட்போனில் டூயல் பின்புற கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இன்ஃபினிக்ஸ் 6 பிளஸ் ஸ்மார்ட்போனை நைஜீரியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    இந்த போனில் quad-core MediaTek Helio A22 SoC பிராசஸர், 500 nits பீக் பிரைட்னஸ் கொண்ட 6.6 இன்ச் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.

    கேமராவை பொறுத்தவரை 8 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 0.08 மெகாபிக்ஸல் QVGA கேமரா என இரண்டு கேமராக்கள் பின்புறமும், 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா முன்புறமும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இதில் 5000 mAh பேட்டரி உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    2ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் தரப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.10,700-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.
    5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்தபின், இந்த வருட சுதந்திர தினத்தின்போது 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது.
    ஏர்டெல் நிறுவனம் அதிவேக 5ஜி சேவையை அறிமுகம் செய்ய தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளது.

    ஏர்டெல் நிறுவனம் தனது அதிவேக 5ஜி நெட்வொர்க் மற்றும் குறைந்த லேட்டன்ஸி திறனை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த லோ லேட்டன்ஸி திறன்மூலம் அதிக அளவிலான டேட்டாவை மிக குறைந்த நேரத்தில் ஸ்ட்ரீம் செய்ய முடியும்.

    இத்துடன் ஐ.ஓ.டி என அழைக்கப்படும் இணைய சேவை தொடர்பான கிளவுட் கேமிங், அணிந்துகொள்ளக்கூடிய சாதனங்கள், ட்ரோன்கள் ஆகியவற்றில் 5ஜி செயல்படும் விதம் குறித்தும் காட்டப்பட்டது. 5ஜி உதவியுடன் முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவின் உருவம் ஹோலோகிராமில் உருவாக்கப்பட்டது. 1983 உலகக்கோப்பையின்போது கபில் தேவ் 175 ரன்கள் அடித்த காட்சி 5ஜி ஹோலோகிராம் மூலம் மறு உருவாக்கம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

    ஏர்டெல்லின் 5ஜி சேவையின் மூலம் 1 ஜிபிபிஎஸ் வேகத்திற்கு மேல், 20ms லேட்டன்ஸிக்கும் குறைவாக கிடைக்கும் 4கே வீடியோக்களை 50 பயனர்கள் தடை இல்லாமல் ஸ்மார்ட்போனில் கண்டுகளித்தனர்.  மல்டிபிள் கேமரா ஆங்கிள், 360 டிகிரி இன் ஸ்டேடியம் காட்சி, ஷாட் அனாலிசிஸ் ஆகியவையும் 5ஜி மூலம் காட்டப்பட்டது.

    5ஜி சேவைமூலம் துல்லியமான ஹோலோகிராம்களை உருவாக்கி எந்த இடத்திற்கு வேண்டுமனாலும் அனுப்ப முடியும், இணைய சந்திப்பு, இணைய நிகழ்ச்சி, நேரலை செய்திகள் ஆகியவற்றில் இந்த ஹோலோகிராம் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

    இன்னும் 2  மாதத்தில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் இந்த வருட சுதந்திர தினத்தின்போது 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது.
    இந்த லேப்டாப்பில் இன்டல் செலிரான் N4500 பிராசஸர், இன்டல் UHD இண்டகிரேட்டட் கிராபிக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
    சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி க்ரோம்புக் 2 360 லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சாதனம் என கூறப்படுகிறது.

    இந்த லேப்டாப்பில் 360 டிகிரி கன்வெர்டபிள் டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 12.4 இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்பிளே, 350 நிட்ஸ் பிரைட்னஸ் ஆகியவை தரப்பட்டுள்ளன. 

    இந்த க்ரோம்புக்கில் வைஃபை 6, இன்டல் செலிரான் N4500 பிராசஸர், இன்டல் UHD இண்டகிரேட்டட் கிராபிக்ஸ், 4ஜிபி ரேமுடன் 64 ஜிபி அல்லது 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    இந்த லேப்டாப்பில் 45.5Whr பேட்டரி தரப்பட்டுள்ளது. இது 10 மணி நேரம் வரையிலான பேட்டரி லைஃபை கொண்டுள்ளது. மேலும் 1 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா, 720p ரெக்கார்டிங் அம்சம், நேனோ செக்யூரிட்டி ஸ்லாட் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ள இந்த லேப்டாப்பின் விலை இந்திய மதிப்பில் ரூ.35,000-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது பிரிட்டனில் வெளியாகியுள்ள இந்த லேப்டாப்பின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.
    இந்த போனில் 12nm Unisoc T612 பிராசஸர், ட்ரிப்பிள் கேமரா செட்டப் ஆகியவை வழங்கப்படவுள்ளது.
    ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி சி31 ஸ்மார்ட்போனை வரும் 31-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த போனில் ஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாக கொண்ட UI R எடிஷன் வழங்கபப்டவுள்ளது. மேலும் 6.5 இன்ச் HD+ எல்.சிடி டிஸ்பிளே 120Hz டச் சாம்பிளிங் ரேட்டுடன் வருகிறது. மேலும் இதில் 12nm Unisoc T612 பிராசஸர் வழங்கப்படவுள்ளது.

    கேமராவை பொறுத்தவரை இதில்f/2.2 லென்ஸ் கொண்ட 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, f/2.4 லென்ஸ் கொண்ட மேக்ரோ கேமரா, f/2.8 லென்ஸ் கொண்ட மோனொகுரோம் சென்சார் இடம்பெறவுள்ளன. மேலும் இதில் 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமராவும் இடம்பெற்றுள்ளது.

    சைட் மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட், 5000 mAh பேட்டரி உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இந்த போனில் இடம்பெறவுள்ளன.

    இந்த போனின் 3ஜிபி/32ஜிபி மாடலின் விலை ரூ.8,500-ஆகவும், 4ஜிபி/64ஜிபி வேரியண்டின் விலை ரூ.9,600-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×