என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    இந்த இயர்போனில் இடம்பெறவுள்ள மேக்னெட்டிக் அம்சம், பயனர்கள் எளிதாக பாடல்களை ஒலிக்கவும், நிறுத்தவும் உதவும் என கூறப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் புல்லட்ஸ் ஒயர்லெஸ் Z2 இயர்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த இயர்போன்கள் கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு நிறங்களில் வருகிறது. இந்த இயர்போன்களில் வி5.0 ப்ளூடூத் கனெக்டிவிட்டி தரப்பட்டுள்ளது.

    மேலும் நெக்பேண்ட் ஸ்டைலில் வரும் இந்த இயர்போனில் 3 பட்டன்கள் தரப்பட்டிருக்கும். இதன் மூலம் வால்யூம் அளவு, மியூசிக் பிளே பேக் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகிறது. 

    இதில் இன் இயர் ஆங்குலர் சிலிக்கான் டிப்ஸ் வழங்கப்பட்டிருக்கும். மேலும் இதில் உள்ள மேக்னெட்டிக் அம்சம், பயனர்கள் எளிதாக பாடல்களை ஒலிக்கவும், நிறுத்தவும் உதவும்.

    இந்த ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் இடம்பெறுமா என இன்னும் உறுதியாக தெரியவில்லை. சோனி LDAC ஹை-ரெஸ் ஆடியோவை இந்த இயர்போன் சப்போர்ட் செய்யும் என கூறப்படுகிறது.

    இந்த ஒன்பிளஸ் புல்லட் ஒயர்லெஸ் Z2-ன் விலை இந்தியாவில் ரூ.1,999-ஆக இருக்கும் என கருதப்படுகிறது.
    இந்த ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்டு மாதம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் மூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z Flip, கேலக்ஸி Z Fold ஆகிய மடிக்கக்கூடிய போன்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது 3-ஆக மடிக்ககூடிய சாம்சங் போனையும் அந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்டு மாதம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த போனில் ரோலபிள் டிஸ்பிளே அல்லது 3-ஆக மடிக்கக்கூடிய டிஸ்பிளே இருக்கும் என்றும், குறைந்த அளவில் மட்டுமே இந்த போன் விற்பனைக்கு கொண்டு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு B4 மற்றும் Q4 என்ற கோட்நேம் வைக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சாம்சங் இந்த வருட தொடக்கத்தில் பிளக்ஸ் எஸ், ஃபிளக்ஸ் ஜி மற்றும் ஃபிளக்ஸ் சிலைடபிள் என்ற 3 ஸ்மார்ட்போன்களை காட்சிப்படுத்தியது. இந்த போன்கள் மடிக்கக்கூடியதாகவும் இருந்தது. இந்நிலையில் இந்த போன்களின் மேம்படுத்தப்பட்ட வடிவமே ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.
    ஜிஃபை கண்டுபிடித்ததற்காக வில்ஹிட்டுக்கு வெப்பி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
    இன்று இணையம் முழுவதும் GIF என்ற அசையும் படத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக கமெண்ட் செய்வதற்கும், ரியாக்ட் செய்வதற்கும் ஜிஃப் படங்கள் அதிகம் பயன்பட்டு வருகின்றன. ஜிஃபை பயன்படுத்தாதவர்கள் என யாருமே இருக்க முடியாது. 

    இந்நிலையில் இந்த ஜிஃப் அசையும் படத்தை கண்டுபிடித்த கணிப்பொறி விஞ்ஞானி ஸ்டீபன் வில்ஹிட் கொரோனா காரணமாக கடந்த வாரம் காலமானார். அவருக்கு வயது 74. இந்த செய்தி தற்போது தான் வெளியே தெரியவந்துள்ளது. வில்ஹிட் ஜிஃப் படத்தை 1987-ம் ஆண்டு கண்டுபிடித்தார்.  இவரது முதல் ஜிஃப் இமேஜ் பறக்கும் விமானத்தின் படமாகும்.

    அவர் அப்போது கண்டுபிடித்த ஜிஃப் இன்று இணைய உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

     ஜிஃபை கண்டுபிடித்ததற்காக வில்ஹிட்டுக்கு வெப்பி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
    இந்த அறிவிப்புக்கு பின் பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஆப்பிள் நிறுவனம் புதிய ஹார்ட்வேர் சப்ஸ்கிரிப்ஷன் சேவையை தொடங்கவுள்ளது. 

    இதன்மூலம் ஐபோன், ஐபேட், இயர்பட்ஸ் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த விரும்புபவர்கள் அதனை சொந்தமாக விலைக்கு வாங்காமல், மாதம் சில தொகை என சந்தா கட்டி பயன்படுத்திகொள்ள முடியும். சந்தா முடிந்தவுடன் சாதனங்களை திருப்பி தர வேண்டும்.

    இந்த திட்டம் தற்போது தயாரிப்பு நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் வசதியில்லாதவர்கள் கூட ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ஐபோன் அப்கிரேட் திட்டம் என்ற சேவையை வழங்கி வருகிறது. இதன்படி வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு குறிப்பிட்ட தொகையை கட்டி பழைய ஐபோனை புதிய ஐபோனாக அப்கிரேட் செய்துகொள்ள முடியும். இந்த திட்டம் போல ஹார்ட்வேர் திட்டமும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த அறிவிப்புக்கு பின் பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஏர்டெல்லின் இந்த சேவையுடன் 5000-க்கும் மேற்பட்ட செயலிகள், கேம்ஸ்களும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
    ஏர்டெல் நிறுவனம் தனது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் விலையை ரூ.2,499-ல் இருந்து ரூ.2000-ஆக குறைத்துள்ளது. இந்த விலை புதிதாக ஏர்டெல் டிஜிட்டல் டிவி கனெக்‌ஷன் வாங்குபவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த விலை குறைப்புடன் டிஸ்னி+ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனி லிவ், இரோஸ் நவ், ஹங்காமா மற்றும் இதர ஓ.டி.டி சேவைகளுக்கான சந்தாவையும் ஏர்டெல் இலவசமாக வழங்குகிறது.

    இந்த விலை குறைப்பு குறைந்த காலசலுகையாக மட்டுமே வழங்கப்படவுள்ளது. இந்த எக்ஸ்ட்ரீம்பாக்ஸ் ஆண்ட்ராய்டு 9.0 ஓ.எஸ்ஸில் இயங்குகிறது. இதில் 5000-க்கும் மேற்பட்ட செயலிகள், கேன்ஸ்கள் தரப்பட்டுள்ளன. மேலும் இதில் க்ரோம்கேஸ்ட் வசதியும் உண்டு.
    கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல்முறையாக டிக்டாக், ஷேர் இட், யூ.சி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.
    இந்திய அரசு இதுவரை 320 செயலிகளை தடை செய்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள செயலிகள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. 

    இதற்கு பதில் அளித்த வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி சோம் பிரகாஷ் கூறியதாவது:-

    அனைவருக்கும் பாதுகாப்பான, நம்பிக்கையான இணையத்தை வழங்க, ஐடி சட்டம் 2000, 69ஏ பிரிவின் கீழ் 320 மொபைல் செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. 

    இதில் அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தவை. சீனா கடந்த 2000 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை வெறும் 250 கோடி டாலர் வரை மட்டுமே இந்தியாவில் நேரடி முதலீடு செய்துள்ளது. இந்தியாவிற்கு கிடைத்துள்ள அந்நிய முதலீட்டில் வெறும் 0.43 சதவீதம் மட்டுமே சீனாவுடையது. இதனால் இந்திய பொருளாதாரத்திற்கு எதுவும் பாதிப்பு இல்லை.

    கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல்முறையாக டிக்டாக், ஷேர் இட், யூ.சி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. அதன்பின் பப்ஜி உள்ளிட்ட செயலிகள் தடை செய்யப்பட்டன. சமீபத்தில் இந்தியா 49 சீன செயலிகளை தடை செய்தது. இந்த செயலிகள் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட செயலிகளின் போலி வடிவங்கள் தான்.

    இவ்வாறு மத்திய அமைச்சகம் பதிலளித்துள்ளது.
    பிக்பாஸ்கெட் 20 நிமிடத்தில் டெலிவரி செய்யும் சேவையை வழங்கி வந்தாலும், இந்த புதிய சேவையில் முக்கிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது.
    பிக்பாஸ்கட் நிறுவனம் பி.பி எக்ஸ்பிரஸ் சேவையை அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சேவையின்படி வாடிக்கையாளர்களுக்கு 1 மணி நேரத்திற்குள் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பிக்பாஸ்கெட் பிபி நவ் என்ற சேவையையும் வழங்கி வருகிறது. இதில் 20 நிமிடங்களில் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யப்படுகின்றன. ஆனால் இந்த சேவையின் கீழ் 3,500 வகையான பொருட்கள் வரை மட்டுமே டெலிவரி செய்யப்பட்டு வந்தன. தற்போது தொடங்கப்படவுள்ள பிபி எக்ஸ்பிரஸ் சேவையின் கீழ் 8000 வகையான பொருட்கள் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பிபி நவ் சேவையில் 450 ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்குபவர்களுக்கு மட்டும் டெலிவரி செய்யப்பட்டு வந்த நிலையில், பிபி எக்ஸ்பிரஸில் 800 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு மட்டுமே டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    யூடியூப்பில் நிலவி வரும் போலியான மருத்துவம் சார்ந்த தகவல்களை கட்டுப்படுத்த இந்த அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    யூடியூப் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் வீடியோ தளமாக உள்ளது. யூடியூப்பில் ஏராளமான வீடியோக்கள் காணக்கிடைக்கின்றன.

    குறிப்பாக ஆரோக்கியம் சார்ந்த வீடியோக்கள் கோடிக்கணக்கில் யூடியூப்பில் இருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை அதிகாரப்பூர்வ தகவல் கிடையாது. யூடியூப் பயனர்கள் பலர் தங்களுக்கு தெரிந்த ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களையே யூடியூப்பில் அப்லோட் செய்கின்றனர். இதனை பின்பற்றும் பார்வையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உண்டு. இந்த பிரச்சனையை சரிசெய்ய யூடியூப் இரண்டு புதிய அம்சங்களை கொண்டு வந்துள்ளது.

    இதன்படி யூடியூப்பில் ‘Health Source information panels' என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சத்தில் ஒவ்வொரு வீடியோவுக்கும் கீழ்அந்த வீடியோ அதிகாரப்பூர்வ மருத்துவ நிபுணர்கள், நிறுவனங்களிடம் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதா என காட்டும். ஒரு மருத்துவ வீடியோவில் கூறப்பட்ட தகவல்கள் உண்மை தானா என்பதையும் இந்த புதிய அம்சத்தில் வழங்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

    அதேபோல ‘Health content shelves' என்ற புதிய அம்சமும் இடம்பெற்றுள்ளது. இந்த அம்சத்தின்படி நாம் ஆரோக்கியம் குறித்த வீடியோக்களை தேடினால், அதிகாரப்பூர்வ சேனல்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களை மட்டுமே யூடியூப் முன்னிலைப்படுத்தி காட்டும். உதாரணமாக நாம் மூட்டுவலி நிவாரணம் என்று தேடினால் அதிகாரப்பூர்வமாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ செயல்முறைகள் மட்டுமே இதில் காட்டப்படும்.
    சமீபத்தில் தந்தையான ஆண் ஊழியர்களும் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்த்துகொள்ள 8 வாரம் விடுமுறை எடுத்துகொள்ளலாம் என ஏர்டெல் அறிவித்துள்ளது.
    ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. அந்நிறுவனம் தனது பெண் ஊழியர்கள் யாருக்கேனும் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு மாதம் ரூ.7000 உதவித்தொகை தரப்போவதாக அறிவித்துள்ளது.

    குழந்தைக்கு 18 மாதங்கள் ஆகும் வரை ரூ.7000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பெண் ஊழியர்கள் குழந்தையை தத்தெடுத்தாலும் இந்த தொகை வழங்கப்படும் என கூறியுள்ளது.

    ஏர்டெல்

    இதைத்தவிர பெண் ஊழியர்கள் 26 வாரங்கள் மகப்பேறு விடுமுறை எடுத்துகொள்ளலாம், அதன்பிறகு 24 வாரங்களுக்கு தாங்கள் விரும்பும் நேரங்களில் வேலை செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இத்துடன் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என ஒரு வருடத்திற்கு கூடுதல் விடுமுறையும் வழங்கப்படவுள்ளது.

    அதேபோல சமீபத்தில் தந்தையானவர்களும் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்த்துகொள்ள 8 வாரங்களுக்கு விடுமுறை எடுத்துகொள்ளலாம் அறிவித்துள்ளது.
    நேற்று நடைபெற்ற விழாவில் நத்திங் போன் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
    நத்திங் நிறுவனத்தின் விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அதன் நிறுவனர் கார்ல் பெய், தனது நிறுவனத்தின் சாதனங்கள் ஆப்பிள் சாதனங்களுக்கு மாற்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

    மேலும் நத்திங் நிறுவனத்தின் நத்திங் போன் (1) வரும் மாதங்களில் அறிமுகமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போனில் சமீபத்திய Qualcomm Snapdragon பிராசஸர் வழங்கப்பட்டிருக்கும் என்றும், ஆண்ட்ராய்டு மற்றும் நத்திங் ஓ.எஸ்ஸில் இயங்கும் என கூறப்படுகிறது. 

    இந்த போனின் இயக்கம் வேகமாகவும், மென்மையாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ப்ளாட்வேர்கள் எதுவும் இந்த போனில் தரப்படாது. நத்திங் போனிற்கு 3 வருடம் ஓ.எஸ் அப்டேட்டுகள் உறுதியாக வழங்கப்படும். 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்டுகளும் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போன் குறித்த மேலும் தகவல்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஃபேவரைட் ஆப்ஷனுக்கு சென்று பயனர்கள் தங்களுக்கு பிடித்த 50 கணக்குகளை தேர்ந்தெடுத்துகொள்ளலாம்.
    இன்ஸ்டாகிராம் செயலி உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக இருக்கிறது. இதில் வழங்கப்பட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், ரீல்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் மக்களை வெகுவாக ஈர்க்கக்கூடியதாக இருக்கின்றன.

    இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் விரும்பும் வகையில் புது புது அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தொடங்கப்பட்டபோது இருந்து, பிறகு நீக்கப்பட்ட அம்சம் ஒன்று தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    இதன்படி ஹோம்ஃபீடை (Home Feed) பயனர்கள் இனி தாங்கள் விரும்பும் வகையில் மாற்றிகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஹோம்ஃபீடில் Following, Favourites என்ற இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படும். பயனர்கள் ஃபாலோயிங் என்ற ஹோம்ஃபீடை தேர்ந்தெடுத்தால், அவர்கள் பின் தொடரும் அனைத்து கணக்குகளில் இருந்தும், அவர்கள் அதிகம் பார்க்கும் தகவல்களின் அடிப்படையில் பரிந்துரைகளும் பதிவுகளாக ஹோம் ஃபீடில் காட்டப்படும்.

    இன்ஸ்டாகிராமின் புதிய அம்சம்

    இதுவே பயனர்கள் ஃபேவரைட்ஸ் என்ற ஹோம்ஃபீட்டை தேர்ந்தெடுத்தால், தங்களுக்கு பிடித்த கணக்குகளில் இருந்து வரும் பதிவுகளை மட்டும் பார்த்துகொள்ளலாம். 

    இந்த ஃபேவரைட் ஆப்ஷனுக்கு சென்று பயனர்கள் தங்களுக்கு பிடித்த 50 கணக்குகளை தேர்ந்தெடுத்துகொள்ளலாம். அந்த 50 கணக்குகளில் பதிவிடப்படும் தகவல்கள் மட்டும் ஃபேவரைட் ஆப்ஷனில் காட்டப்படும்.
    இந்த போனை ஹெச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.
    ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.

    இந்த போனில் 6.7 இன்ச் ஹெச்.டி பிளஸ் டிஸ்பிளே, 20.6:9 ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ, 400 நினிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆகியவை தரப்பட்டுள்ளன். இதன் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பேனலால் பாதுகாக்கப்படுகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 11, MIUI 13 ஓ.எஸ்ஸில் இயங்குகிறது.

    இந்த போனில் அடெர்னோ 610 ஜிபியூவுடன்  Qualcomm Snapdragon 680 SoC பிராசஸர் தரப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரையில் f/1.8 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் கேமரா, 2 மெகா பிக்ஸல் போட்ரெய்ட் கேமரா, 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    இந்த போனின் 4ஜிபி ரேம்+ 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.10,999-ஆகவும், 6 ஜிபி/128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.12,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த போனை ஹெச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.
    ×