என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    இந்த இயர்பட்கள் வரும் மார்ச் 29-ம் தேதி முதல் ஃபிளிப்கார்டில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ என்கோ ஏர் 2 இயர்பட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்டில் 13.4mm கம்போசிட் டைடனிஸ்ட் டைப்கிராம் டிரைவர்கள் தரப்பட்டுள்ளன.

    ட்ரன்ஸ்லூசன்ட் ரவுண்ட் டிசைனில் வந்துள்ள இந்த இயர்பட்கள் 24 மணி நேரம் பேட்டரி பேட்டரி லைஃபை வழங்குகிறது.

    மேலும் ஒவ்வொரு இயர்பட்டும் முழுமையாக சார்ஜ் செய்தால் 4 மணி நேரம் வரை சார்ஜ் நிற்கும் என ஒப்போ தெரிவித்துள்ளது.

    வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இந்த இயர்பட்கள் கிடைக்கின்றன. 

    ஒப்போ என்கோ ஏர் 2 TWS இயர்பட்களின் விலை ரூ.2,499-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்கள் வரும் மார்ச் 29-ம் தேதி முதல் ஃபிளிப்கார்டில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த போனை எஸ்பிஐ வங்கி கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.2000 உடனடி தள்ளுபடி உண்டு.
    ஒப்போ நிறுவனம் கே10 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனில்  Snapdragon 680 SoC பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ (1080x2412) டிஸ்பிளே, 90Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் தரப்பட்டுள்ளது.

    கேமராவை பொறுத்தவரை இதில் 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்ஸல் பொக்கே கேமரா, 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இரவில் குறைந்த வெளிச்சத்தில் தரமான போட்டோக்களை எடுக்க இதன் நைட்ஸ்கேப் மோட் உதவுகிறது. மேலும் இந்த போனில் 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமராவும் தரப்பட்டுள்ளது.

    இந்த போனிற்கு 5000mAh பேட்டரி, 33W SuperVOOC சார்ஜிங் சப்போர்ட்டும் தரபட்டுள்ளன. இந்த போனின் 6ஜிபி ரேம்+128 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.14,990-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 8ஜிபி ரேம்+128 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.16,990-ஆக உள்ளது.

    பிளாக் கார்பன் மற்றும் ப்ளூ பிளேம் நிறங்களில் வெளி வரும் இந்த ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 29-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

    இந்த போனை எஸ்பிஐ வங்கி கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.2000 உடனடி தள்ளுபடி உண்டு. ஸ்டாண்டர்ட் சார்டர்ட் பேங்க் மற்றும் பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
    சுமார் 1 லட்சம் பேர் வரை டவுன்லோட் செய்துள்ள இந்த செயலி குறித்து புகார் அளிக்கப்பட்டாலும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படவில்லை.
    கூகுள் பிளே ஸ்டோரில் ஆயிரத்திற்கும் அதிகமான செயலிகள் பயன்பாட்டுக்கு கிடைக்கின்றன. இதில் பெரும்பான்மையான செயலிகள் இலவசமாக கிடைப்பதால் நாமும் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம். ஆனால் இத்தகைய செயலிகளால் நமது பாதுகாப்பு பறிபோகும் அபாயம் உள்ளது.

    குறிப்பாக ப்ரேடோ என்ற நிறுவனம் craftsart cartoon photo tools என்ற செயலி குறித்து எச்சரித்துள்ளது. நமது புகைப்படத்தை கார்டூனாக மற்றித்தரும் இந்த செயலியை நாம் பயன்படுத்த பேஸ்புக் கணக்கு மூலம் லாகின் செய்ய வேண்டும்.

    ஆனால் அந்த செயலி நமது கணக்கை ஃபேஸ்புக்கிற்குள் லாக் இன் செய்யாமல் அந்த தகவல்களை மற்றொரு சர்வருக்கு அனுப்பி விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நாம் கார்டூனாக மாற்றுவதற்கு அப்லோட் செய்யும் புகைப்படங்களும் திருடப்படும் என கூறப்படுகிறது.

    தற்போது 1 லட்சம் பேர் வரை டவுன்லோட் செய்துள்ள இந்த செயலி குறித்து புகார் அளிக்கப்பட்டாலும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அது நீக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த போனில் ஆரம்ப நிலை octa-core unisoc T612 சிப்செட், 3 பின்புற கேமராக்கள் தரப்பட்டுள்ளன.
    ரியல்மி நிறுவனம் நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனை இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    பட்ஜெட் போனான இதில் 6.6 இன்ச் FHD+ டிஸ்பிளே, 2408x1080 பிக்ஸல் ரெஷலியூஷன், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஆரம்ப நிலை octa-core unisoc T612 சிப்செட் தரப்பட்டுள்ளது.

    கேமராவை பொறுத்தவரை f/1.8 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், f/2.4 அப்பெர்ச்சர் கொண்ட மோனோகிரோம் போட்ரெய்ட் சென்சார், f/2.4 அப்பேர்ச்சர் கொண்ட மேக்ரோ சென்சார், 8 மெகாபிக்ஸல் ஏஐ செல்ஃபி சென்சார் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் 5000mAh பேச்சரி, 18W சார்ஜிங் சப்போர்ட்டும் தரப்பட்டுள்ளது.

    இந்த போனின் 4ஜிபி/64 ஜிபி மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ.10,600-ஆகவுள்ளது. 4ஜிபி/128 ஜிபி மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ.11,700-ஆகவுள்ளது.

    இந்த போனின் இந்திய வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
    மத்திய பிரதேச போலீசார் வோடஃபோன் ஐடியா, ஏர்டெல், பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டனர்.
    மத்திய பிரதேசத்தில் போலி அடையாள சான்றிதழ்களை கொண்டு வாங்கப்பட்ட சிம் கார்டுகளை தடை செய்யக்கோரி சைபர் போலீசார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டனர்.

    இதையடுத்து வோடஃபோன் ஐடியா நிறுவனம் சுமார் 8000 சிம்கார்டுகளை பிளாக் செய்துள்ளது.

    மத்திய பிரதேசம் குவாலியரில் கார் விற்பனை செய்வதாக போலி விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி கும்பல் ஒன்று மோசடி செய்து வந்துள்ளது. அந்த கும்பலின் போன் நம்பர்களை ஆராய்ந்த போது அது வேறு நபர்களின் பெயர்களில் இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த கும்பல் வேறு நபர்களின் அடையாள அட்டைகளை கொண்டு சிம் கார்ட்டுகளை பெற்றுள்ளனர். அவர்களுக்கு 8 பேர் வரை உதவி செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாங்கப்பட்ட சிம்கார்டுகளை பிளாக் செய்யக்கோரி வோடஃபோன் ஐடியா, ஏர்டெல், பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்களுக்கு போலீசார் வலியுறுத்தினர். 

    இதையடுத்து வோடஃபோன் நிறுவனத்திடம் இருந்து மட்டும் சுமார் 8000 சிம் கார்டுகள் வரை மோசடி கும்பல் பெற்றுள்ளது. அந்த சிம்கார்டுகளை வோடஃபோன் தடை செய்தது.

    தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடையாளங்களை சரிபார்த்தபின்னரே சிம்கார்ட்டை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    பிளேஸ்டேஷன் 5 ஸ்டாண்டர்ட் எடிஷனின் விலை ரூ.49,990-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ் 5-ன் டிஜிட்டல் எடிஷனின் விலை ரூ.39,990-ஆக உள்ளது.
    சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் அனைவரும் விரும்பும் கேமிங் கன்சோலாக இருக்கிறது. சோனியின் பிளே ஸ்டேஷன் 5 கடந்த நவம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது.

    அதன்பின் சோனி பிளேஸ்டேஷன் 5 ரசிகர்களுக்கு கிடைக்காமலேயே இருந்தது. உலகம் முழுவதும் நிலவும் செமி கண்டெக்டர் சிப் பற்றாக்குறை பிளே ஸ்டேஷன் தயாரிப்புக்கு பெரும் தடையாக இருப்பது அதன் காரணமாக கூறப்பட்டது.

    இந்நிலையில் இந்தியாவில் தற்போது மீண்டும் பிளே ஸ்டேஷன் 5 விற்பனைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு நாளை மதியம் 12 மணி முதல் தொடங்குகிறது. நாளை பிளே ஸ்டேஷன் 5-ஐ புக் செய்பவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதி டெலிவரி செய்யப்படும்.

    விருப்பமுள்ளவர்கள் பிளே ஸ்டேஷன் 5-ஐ ஃபிளிக்பார்ட், கேம்ஸ் தி ஷாப், கேம் லூட், விஜய் சேல்ஸ், க்ரோமா ஆகிய இடங்களில் வாங்கலாம்.
     
    பிளே ஸ்டேஷன் 5 ஸ்டாண்டர்ட் எடிஷனின் விலை ரூ.49,990-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ் 5-ன் டிஜிட்டல் எடிஷனின் விலை ரூ.39,990-ஆக உள்ளது.

    பிளே ஸ்டேஷன் 5 முன்பதிவு செய்பவர்களுக்கு பிஎஸ் 5 கன்சோல் மற்றும் டூயல் சென்ஸ் கண்ட்ரோலர் வழங்கப்படும்.
    இந்த மெசேஜ் ரியாக்ட் அம்சத்தை டெஸ்க்டாப் வாட்ஸ்ஆப் வெப்பிற்கும் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
    வாட்ஸ்ஆப் இன்று உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியாக இருக்கிறது.

    இந்த செயலியில் வாய்ஸ் கால், வீடியோ கால், வாய்ஸ் மெசேஜ் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது வாட்ஸ்ஆப்பில் மெசேஜ்ஜுக்கு பதில் சொல்லாமல் ரியாக்ட் செய்யும் அம்சமும் இடம்பெற்றுள்ளது.

    இதன்படி நமக்கு வந்திருக்கும் மெசேஜ்ஜை அழுத்தி பிடித்தால் ஃபேஸ்புக்கில் இருப்பது போலவே 6 எமோஜிக்கள் காட்டப்படும். இதில் நமக்கு எது தேவையோ அதை கிளிக் செய்து ரியாக்ட் செய்யலாம். தற்போது பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் கிடைக்கவுள்ளது.

    இந்த மெசேஜ் ரியாக்ட் அம்சத்தை டெஸ்க்டாப் வாட்ஸ்ஆப் வெப்பிற்கும் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
    விவோ எக்ஸ்80 சீரிஸில் விவோ எக்ஸ்80, எக்ஸ்80 ப்ரோ மற்றும் எக்ஸ்80 ப்ரோ+ என்ற 3 போன்கள் இடம்பெறவுள்ளன.
    விவோ நிறுவனம் விவோ எக்ஸ் நோட், விவோ எக்ஸ் ஃபோல்ட், விவோ பேட் மற்றும் விவோ எக்ஸ்80 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

    இதில் விவோ எக்ஸ் நோட் 7 இன்ச் 2கே சாம்சங் E5 AMOLED டிஸ்பிளே, 120 Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. மேலும் இதில் 3டி அல்ட்ராசோனிக் வைட் ஏரியா ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது.

    கேமராவை பொறுத்தவரை 50 மெகாபிக்ஸல் Samsung S5KGN1 பிரைமரி சென்சார், 48-மெகாபிக்ஸல் Sony IMX598 சென்சார், 12-மெகாபிக்ஸல் Sony IMX663 சென்சார் மற்றும் 8-மெகாபிக்ஸல் OV08A10 சென்சார் ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போன்  Snapdragon 8 Gen 1 SoC-ல் இயங்கும் என்றும், 5000mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் இதில் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

    விவோ நிறுவனம் தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான விவோ எக்ஸ் ஃபோல்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் AMOLED பிரைமரி டிஸ்பிளே மற்றும் 8 இன்ச் ஃபோல்டபிள் டிஸ்பிளே இடம்பெறவுள்ளது. மேலும் இதில் குவாட் பின்பக்க கேமராக்களும், 4600mAh பேட்டரியும் தரப்படவுள்ளன.

    இத்துடன் விவோ தனது முதல் டேப்லெட்டான விவோ பேடையும் அறிமுகம் செய்யவுள்ளது. அதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் சிப்செட் மற்றும் 8040mAh பேட்டரி இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.

    இதைத்தவிர விவோ எக்ஸ்80 சீரிஸையும் அறிமுகம் செய்யவுள்ளது. இதில் விவோ எக்ஸ்80, எக்ஸ்80 ப்ரோ மற்றும் எக்ஸ்80 ப்ரோ+ என்ற 3 போன்கள் இடம்பெறவுள்ளன. 
    இந்த ஸ்மார்ட்போன் 3 கேமரா செட்டப்புடன், ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெஷலியூஷனுடன் வெளிவருகிறது.
    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த போனில்  இன்ச் TFT Infinity-V டிஸ்பிளே full-HD+ (1,080x2,408 pixels) ரெஷலியூஷனுடன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்‌ஷனுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த போன்  Exynos 850 SoC பிராசஸர், OneUI 4.1 ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்ஸில் இயங்கும் என கூறப்படுகிறது.

    கேமராவை பொறுத்தவரை இதில் f/2.2 அப்பேர்சர் லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் சென்சார், f/2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்ஸல் மேக்ரோ மற்றும் டெப்த் சென்சார் கேமராக்கள் வழங்கப்படவுள்ளன. முன்பக்கத்தில் 8 மெகாபிக்ஸல் கொண்ட செல்ஃபி கேமரா f/2.2 லென்ஸுடன் வழங்கப்படவுள்ளது.

    மேலும் இந்த போனில் 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் வருகிறது. இந்த போனில் க்னாக்ஸ் செக்யூரிட்டி மற்றும் சைட் மவுண்டட் ஃப்ங்கர்பிரிண்ட் சென்சாரும் இடம்பெற்றுள்ளது.

    இந்த போனின் 4 ஜிபி/64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.14,999 ஆகவும், 4ஜிபி/128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.15,999-ஆகவும், 6ஜிபி/128 ஜிபியின் விலை ரூ.17,499-ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஏற்கனவே மைக்ரோசாஃப்ட் கேம்பாஸ் சந்தாவில் கூடுதல் கட்டணம் செலுத்தியவர்களுக்கு 8 மாத சந்தா இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் வீடியோ கேம் விளையாடுபவர்கள் கணினி அல்லது எக்ஸ்பாக்ஸ் சாதனங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். 

    இவர்களுக்கு என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கேம் பாஸ் சந்தா சேவை மற்றும் எக்ஸ்பாக்ஸ் கோல்ட் சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த சேவைகளுக்கு விலை குறைப்பை மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.

    இதன்படி 1 மாதத்திற்கான கேம் பாஸ் சந்தா ரூ.699-ல் இருந்து ரூ.499-ஆக குறைக்கப்பட்டுள்ளது. 3 மாதத்திற்கான சந்தா ரூ.2,099-ல் இருந்து ரூ.1,499-ஆகவும், 6 மாதத்திற்கான சந்தா ரூ.4,199-ல் இருந்து ரூ.2,999-ஆகவும், 12 மாதத்திற்கான சந்தா ரூ.8,399-ல் இருந்து ரூ.5,999-ஆகவும், 24 மாதத்திற்கான சந்தா ரூ.16,799-ல் இருந்து ரூ.11,999-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று பிசி கேம் பாஸ் 1 மாதத்திற்கான சந்தா ரூ.489-ல் இருந்து ரூ.349-ஆகவும், 3 மாதத்திற்கான சந்தா ரூ.1,467-ல் இருந்து ரூ.1,049-ஆகவும், 6 மாதத்திற்கான சந்தா ரூ.2,934-ல் இருந்து ரூ.2,099-ஆகவும், 12 மாதத்திற்கான சந்தா ரூ.5,858-ல் இருந்து ரூ.4,199-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

    இறுதியாக எக்ஸ்பாக்ஸ் லைவ் கோல்ட் சந்தா சேவை 1 மாதத்திற்கு ரூ.489-ல் இருந்து ரூ.349-ஆகவும், 6 மாதத்திற்கான சந்தா ரூ.1,049-ல் இருந்து ரூ.749-ஆகவும், 12 மாதத்திற்கான சந்தா ரூ.2,799-ல் இருந்து ரூ.1,999-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த விலை குறைப்பு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே மைக்ரோசாஃப்ட் கேம்பாஸ் சந்தாவில் கூடுதல் கட்டணம் செலுத்தியவர்களுக்கு 8 மாத சந்தா இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உணவு டெலிவரியை விரைவு படுத்த வேண்டும் என பணியாட்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படாது என்றும், ஒருவேளை தாமதமாக டெலிவரி செய்தால் அவர்களது சம்பளம் பிடிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.
    ஜொமேட்டோ நிறுவனம் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் சேவையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

    அதிகம் உணவு டெலிவரி செய்யப்படும் இடங்களில் மட்டும் இந்த சேவை தொடங்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மக்கள் உணவு ஆர்டர் செய்ய வேண்டும் என திட்டமிடுவதில்லை, திடீரென ஆர்டர் செய்கிறார்கள். அவர்கள் காத்திருக்கவும் விரும்பவில்லை. அதனால் 10 நிமிடங்களில் அவர்கள் விரும்பிய உணவை டெலிவரி செய்யும் சேவை தொடங்கப்படவுள்ளது. 

    உணவு அதிகம் டெலிவரி செய்யப்படும் இடங்களில் எந்தெந்த உணவுகள் அதிகம் ஆர்டர் செய்யப்படுகின்றன, எந்த உணவகங்களில் அதிகம் ஆர்டர் செய்கிறார்கள், எந்த வாடிக்கையாளர்கள் அதிகமாக அர்டர் செய்கிறார்கள் என்பது போன்ற தரவுகளின் அடிப்படையில் இந்த 10 நிமிட டெலிவரி சேவை தொடங்கப்படும்.

    அதேசமயம் உணவு டெலிவரியை விரைவு படுத்த வேண்டும் என பணியாட்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படாது, ஒருவேளை தாமதமாக டெலிவரி செய்தால் அவர்களது சம்பளம் பிடிக்கப்படாது.

    இவ்வாறு தீபிந்தர் கோயல் விளக்கம் அளித்துள்ளார். 
    ஆப்பிள், கூகுள் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதால் ஆப்பிள் சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் தனது வெப் ஸ்ட்ரீமிங் சேவையான ஆப்பிள் டிவியை உலகம் முழுவதும் அளித்து வருகிறது. பயனர்கள் ஆப்பிள் டிவியில் தங்களுக்கு விருப்பமான திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை கண்டு களிக்கலாம். ஆப்பிள் சாதனங்கள், ஆண்ட்ராய்டு சாதனங்கள், அமேசான் சாதனங்கள் உள்ளிட்டவற்றில் இந்த ஆப்பிள் டிவி சேவையை பயனர்கள் பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் டிவி சேவையை ஆண்ட்ராய்டு டிவி பயனர்களுக்கு நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் மற்றும் கூகுள் டிவி க்ரோம்கேஸ்ட் ஸ்ட்ரீமிங் சாதனங்கள் ஆகியவற்றில் ஆப்பிள் டிவி சேவை வழங்கப்படாது என்றும், சேவையை பயன்படுத்த விரும்புவோர் ஐபோன், ஐபேட் மற்றும் பிற ஆப்பிள் சாதனங்களை கொண்டு பயன்படுத்தலாம் எனவும் செய்தி வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

    ஆப்பிள், கூகுள் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதால் ஆப்பிள் சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    ×