என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
இந்த செயலிகள் அப்டேட் ஆவதை போல வைரஸ்களை போனில் நிறுவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் பிளேஸ்டோரில் அதிக அளவில் ட்ரோஜன் மற்றும் மால்வேர் பாதிப்புக்கு உள்ளான செயலிகள் இடம்பெற்றிருப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக கிரிப்டோகரன்சி வேலட்டுகள், மேனேஜ்மெண்ட் செயலிகள், இன்வெஸ்ட்மெண்ட் க்ளோன் செயலிகள், போட்டோ எடிட்டர்கள் ஆகிய செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அதில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பாதிக்கப்பட்ட செயலிகளை கூகுள் கண்டுபிடித்து நீக்கினாலும் சில செயலிகள் தொடர்ந்து நீடிக்கிறது
இந்த செயலிகள் பயனர்களுக்கு தெரியாமல் கட்டண சந்தாவிற்கும், முறைகேடான இணையதளங்களை இயக்கவும் அனுமதி வழங்கிவிடுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் வாட்ஸ்ஆப் செயலிகளின் மாறுபட்ட போலி வடிவங்களான ஜிபிவாட்ஸ்ஆப், ஓபி வாட்ஸ்ஆப், வாட்ஸ்ஆப் பிளஸ் ஆகிய செயலிகளால் பயனர்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த செயலிகள் அப்டேட் ஆவதை போல வைரஸ்களை போனில் நிறுவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 10 ப்ரோ இந்த மாத கடைசியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பிற வெளியீடுகள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் வரும் செப்டம்பர் மாதம் வரை அறிமுகம் செய்யவுள்ள 6 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இணையத்தில் கசிந்துள்ளது.
ஏற்கனவே ஒன்பிளஸ் 10 ப்ரோ இந்த மாத கடைசியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஏப்ரல் மாதத்தில் ஒன்பிளஸ் நார்ட் சி.இ 2 லைட் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து ஏப்ரல் மாதம் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் ஒன்பிளஸ் நார்ட் 2T, மே மாதம் ஒன்பிளஸ் 10R, ஜூலை மாதம் ஒன்பிளஸ் நார்ட் 3(நார்ட் ப்ரோ), அடுத்த ஓரிரு மாதங்களில் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா (10 ப்ரோ பிளஸ்) ஸ்மார்ட்போன்களும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
இதைத்தவிர ஒன்பிளஸ் நார்ட் TWS இயர்பட்ஸ் மற்றும் நார்ட் ஸ்மார்ட் வாட்சும் வெளியாகவுள்ளது. இந்த ஸ்மார்ட் வார்ட்ச் இந்திய மதிப்பில் ரூ.10,000-ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோர், ஆப்பிள் டிவி, ஆப்பிள் மியூசிக் உள்ளிட்ட சேவைகள் நேற்று மதியம் முடங்கியது.
ஆப்பிள் நிறுவனத்தின் சேவைகள் திடீரென நேற்று மத்தியத்திற்கு மேல் சிக்கலை சந்தித்தது. ஆப்பிளின் ஆப் ஸ்டோர், ஆப்பிள் டிவி, ஆப்பிள் மியூசிக் உள்ளிட்ட சேவைகள் இயங்காமல் சில பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் தற்போது ஆப்பிள் சேவை மீண்டும் சிக்கல் இல்லாமல் பயன்பாட்டுக்கு வந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த சேவை முடக்கம் டி.என்.எஸ் எனப்படும் சர்வர் பிரச்சனையின் காரணமாக ஏற்பட்டது என்றும், தற்போது மீண்டும் பழைய நிலைக்கு ஆப்பிள் சேவைகள் வந்துவிட்டது எனவும் விளக்கம் அளித்துள்ளது.
இந்த போனில் ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஒப்போ நிறுவனம் ஒப்போ ஏ16இ என்ற புதிய ஆரம்ப நிலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி+ ஐபிஎஸ் எல்.சி.டி பேனல், 720x1600 பிக்ஸல் ரெஷலியூஷனுடன் வருகிறது. மேலும் இந்தில் MediaTek Helio P22 பிராசஸர் தரப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை இதில் 13 மெகாபிக்ஸல் ஏ.ஐ கேமரா எல்.இ.டி ஃபிளாஷுடன் வழக்கப்பட்டுள்ளது. 5 மெகாபிக்ஸல் கேமரா செல்ஃபிக்காக முன்பக்கத்தில் தரப்பட்டுள்ளது.
இந்த போனில் 4230 mAh பேட்டரி, ஃபேஸ் அன்லாக் அம்சம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
இந்த போனுக்கான அதிகாரப்பூர்வ விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த போனின் 3 ஜிபி/32 ஜிபியின் விலை ரூ.9,990-ஆகவும், 4ஜிபி+64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.11,990-ஆகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோவின் 5 ரீசார்ஜ் திட்டங்களில் இலவச டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது.
அனைவரும் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரை இலவசமாக காண உதவும் ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
ஜியோவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 75 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படும். மேலும் 200 ஜிபி வரை டேட்டாவை ரோல் ஓவர் செய்துகொள்ளலாம். டேட்டா தீர்ந்துவிட்டால் ரூ.10-க்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த திட்டத்தி அமேசான், நெட்ஃபிலிக்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்களுக்கான சந்தா இலவசமாக வழங்கப்படும்.
ஜியோவின் ரூ.3119 ரீசார்ஜ் திட்டத்தில் தினம் 2 ஜிபி டேட்டா+ கூடுதல் 10 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவும் உண்டு.
ஜியோவின் ரூ.1499 திட்டத்தில் தினம் 2 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படும். இதிலும் டிஸ்னி+ஹாட் ஸ்டார் பிரீமியம் சந்தா 1 வருடத்திற்கு இலவசம்.
ரூ.4199 திட்டத்தில் தினம் 3 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இத்துடன் 1 வருடத்திற்கான டிஸ்ன்பி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவும் இலவசம்.
ரூ.601-க்கு தினம் 3 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் 1 வருடத்திற்கு டிஸ்னி+ஹாட் ஸ்டார் சந்தா இலவசம்.
இந்தியாவின் இந்த நடவடிக்கையை பிறநாடுகளும் கவனித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இன்று ஓடிடி சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 40 முதல் 50 ஓடிடி தளங்கள் வரை இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஒடிடி தளங்கள் எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இன்றி செயல்பட்டு வருகின்றன. இதையடுத்து ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் கடந்த ஆண்டு இந்திய அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளன.
இதன்படி ஓடிடியில் வரும் வீடியோக்கள் வயதின் அடிப்படையில் 5 வகைகளாக பிரிக்கப்படவுள்ளது. அனைவரும் பார்க்கும் வகையில் உள்ள வீடியோக்களுக்கு U சான்றிதழும், 7 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்க்கூடிய வீடியோக்களுக்கு U/A 7+, 13 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கக்கூடிய வீடியோக்களுக்கு U/A 13+, 16 வயதுடையவர்களுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கக்கூடிய வீடியோக்களுக்கு U/A 16+ மற்றும் வயது வந்தவர்கள் பார்க்கக்கூடிய வீடியோக்களுக்கு A சான்றிதழ்கள் வழங்கபட வேண்டும் என கூறப்பட்டுளது.
இதில் U/A 13+ வீடியோக்களுக்கு பெற்றோர் பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் அனுமதியுடன் மட்டுமே வீடியோ ஒளிபரப்பப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.
ஓடிடி தளங்களுக்கான கட்டுப்பாடு இந்தியாவில் மட்டுமே அமல்படுத்தப்படவுள்ளது. இதையடுத்து இந்தியாவின் இந்த நடவடிக்கையை பிறநாடுகளும் கவனித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த சீரிஸில் மேஜிக்புக் எக்ஸ்14 மற்றும் எக்ஸ் 15 என்ற இரண்டு லேப்டாப்கள் இடம்பெற்றுள்ளன.
ஹானர் நிறுவனம் புதிய மேஜிக்புக் எக்ஸ் சீரிஸ் லேப்டாப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சீரிஸில் மேஜிக்புக் எக்ஸ்14 மற்றும் எக்ஸ் 15 என்ற இரண்டு லேப்டாப்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த லேப்டாப்களில் இன்டல் 10-வது ஜெனரேஷன் பிராசஸர்கள் Core i5-10210U மற்றும் Core i3-1010U ஆப்ஷன்களில் வழங்கப்பட்டுள்ளன. இந்த லேப்டாப்கள் குறைந்த விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள்:-
- 14-இன்ச் / 15-இன்ச் 1920 x 1080 பிக்ஸல்கள் 16:9 டிஸ்பிளே, TÜV Rheinland Certified
- 2.1 GHz (4.1GHz வரை) Core i3-10110U dual-core / 1.6GHz (up to 4.2GHz) Core i5-10210U quad-core பிராசஸர் இன்டல் UHD கிராப்பிக்ஸுடன் இடம்பெற்றுள்ளது
- 8ஜிபி / 16ஜிபி 2666MHz DDR4 டூயல் சேனல் ரேம், 256ஜிபி / 512ஜிபி எஸ்.எஸ்.டி
- விண்டோஸ் 10 ஹோம்
- 3.5mm ஆடியோ ஜாக், ஃபிங்கர் பிரிண்ட் பவர் பட்டன்
- பாப்-அப் வெப் கேம்
- மேஜிக் லிங்க் 2.0
- வைஃபை 802.11 ac (டூயல்-பேன்ட்), ப்ளூடூத் 5.0, USB டைப்-சி x 1 (சார்ஜிங் மற்றும் டேட்டா டிரான்ஸ்பர் சப்போர்ட்டுடன்), HDMI x 1, USB3.0 (Type A) x 1, USB2.0 (Type A) x 1
- X 14 டைமென்சன்கள்: 409 x 283 x 72mm; எடை: About 1.38kg
- X 15 டைமென்சன்கள்: 475 x 283 x 72mm; எடை: About 1.56kg
- மேஜிக் புக் X 14– 56Wh பேட்டரி 13.2h லோக்கல் வீடியோ பிளேபேக் வரை
- மேஜிக்புக் 15 – 42Wh பேட்டரி 7h லோக்கல் பிளேபேக் வரை
தனது கணவரின் உயிரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியதாக ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக்கிற்கு பெண் ஒருவர் கடிதம் எழுதிய நிலையில், அவருக்கு பதில் அளித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் இன்று உலகம் முழுவதும் பெரும் அளவில் பயன்பட்டு வருகிறது. குறிப்பாக ஆரோக்கிய வாழ்க்கைமுறையை மேற்கொள்பவர்களுக்கு ஆப்பிள் வாட்சின் பல அம்சங்கள் உதவியாக இருக்கிறது.
இந்நிலையில் ஆப்பிள் வாட்ச் ஹரியானாவில் மருத்துவர் ஒருவருடைய உயிரையே காப்பாற்றியுள்ளது.
ஹரியானா மாநிலம் யமுனா நகரில் பல் மருத்துவராக பணியாற்றி வரும் நிதிஷ் சோப்ரா ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6-ஐ கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தி வந்துள்ளார்.
சமீபத்தில் அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிதிஷ் சோப்ராவின் மனைவி ஆப்பிள் வாட்சை கொண்டு ஈ.சி.ஜி பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் இதைய துடிப்பில் சில தடுமாற்றங்கள் இருப்பதை அறிந்த அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே அவருக்கு பரிசோதனை செய்ததில் இதையத்தில் 99.9 அடைப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இதன்பின் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சோப்ரா காப்பாற்றப்பட்டார்.
இதையடுத்து சோப்ராவின் மனைவி ஆப்பிள் தலைமை செயலதிகாரி டிம் குக்கிற்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதற்கு பதில் அளித்த டிக் குக், “நீங்கள் சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடியதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஆரோக்கியமாக இருங்கள். நன்றி” என பதிலளித்துள்ளார்.
இந்த போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 இன்டர்னல் ஸ்டோரேஜ்ஜுடன் வரும் என கூறப்பட்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் நாளை ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் 120Hz ரெஃப்ரெஷ் ரெட் மற்றும் 1000Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட AMOLED டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல் ஹெச்டி+ ரெஷலியூஷன் மற்றும் இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் தரப்பட்டுள்ளது. இந்த போன் MediaTek Dimension 8100 பிராசஸரை கொண்டிருக்கும்.
கேமராவை பொறுத்தவரை இதில் 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் மேக்ரோ சென்சார், ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் முக்கிய அம்சமாக பிரைமரி கேமராவில் ஃபிளாக்ஷிப் Sony IMX766 சென்சார் இடம்பெறவுள்ளது. செல்ஃபி கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸலை கொண்டிருக்கும்.
4,500 பேட்டரி, 150 அல்ட்ரா வேகம் சார்ஜிங் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த போனை சார்ஜ் செய்தால் 5 நிமிடத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீதம் சார்ஜ் ஏறிவிடும்.
இந்த போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 இன்டர்நெல் ஸ்டோரேஜ்ஜுடன் வரும். இந்த போனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த அம்சத்தின் மூலம் பயனர்களுக்கு கூடுதல் தனியுரிமை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூகுள் விளக்கம் அளித்துள்ளது.
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு, கூகுள் செயலியில் கடைசி 15 நிமிட தேடுதல் ஹிஸ்டரியை நீக்கும் செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
தற்போது சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்களுக்கு கூடுதல் தனியுரிமை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூகுள் விளக்கம் அளித்துள்ளது.
இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்கு பயனர்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள கூகுள் அப்ளிகேஷனை ஓபன் செய்ய வேண்டும். பின் அதில் புரோஃபைல் படத்தை க்ளிக் செய்து ‘Delete last 15 Min’ என்ற ஆப்ஷனை பயன்படுத்தி கடைசி 15 நிமிட ஹிஸ்ட்ரியை டெலிட் செய்யலாம்.
ஆப்பிள் வெளியிட்டுள்ள இந்த புதிய ஐஓஎஸ் அப்டேட்டினால் ஐபோன் பயனர்கள் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
ஆப்பிள் நிறுவனம் கடந்த 14-ஆம் தேதி iOS 15.4 அப்டேட்டை வெளியானது.
மாஸ்க் போட்டிருந்தாலும் ஃபேஸ் ஐடியை பயன்படுத்தி ஐபோனை அன்லாக் செய்யும் அம்சம் உட்பட நூற்றுக்கணக்கான அம்சங்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், இந்த அப்டேட்டில் பல சிக்கல் இருப்பதாக ஐபோன் பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த அப்டேட்டிற்கு பிறகு பேட்டரி சார்ஜ் விரைவா குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் பயனர்கள் போனை 97 சதவீதம் வரை சார்ஜ் செய்த பின், சார்ஜிலிருந்து எடுத்தால் பேட்டரி 100 சதவீதம் காட்டுவதாகவும், 5 நிமிடத்திற்கு பிறகு அல்லது போனை ரீ-ஸ்டார்ட் செய்தவுடனேயே பேட்டரி திறன் குறைந்து விடுவதாக தெரிவித்துள்ளனர். சிலருக்கு வெறும் 10 நிமிடத்தில் சார்ஜ் முழுதும் இறங்கிவிடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த புகார்களுக்கு ஆப்பிள் நிறுவனம் இன்னும் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய ஐஓஎஸ்15.4 அப்டேட் ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் Xs, ஐபோன் Xs Max, ஐபோன் Xr, ஐபோன் எக்ஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் ஐபோன் 6s, ஐபோன் 6s பிளஸ், ஐபோன் எஸ்.இ (1வது தலைமுறை), ஐபோன் எஸ்.இ (2வது தலைமுறை), ஐபாட் டச் (7வது தலைமுறை) ஆகிய ஆப்பிள் மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரஷியா அனைத்து வகை தொழில்நுட்ப விஷயங்களையும் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்துள்ளது.
ரஷியா -உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 24 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ரஷியாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் ரஷியாவில் தங்களது சேவையை நிறுத்திகொண்டன.
ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் தங்களது சேவையை நிறுத்தின. இதனால் ஆத்திரமடைந்த ரஷியா ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தடை செய்தது.
பின் கடந்த மார்ச் 14-ம் தேதி இன்ஸ்டாகிராம் செயலியையும் ரஷியா முடக்கியது. இந்த நடவடிக்கையால் ரஷியாவில் இருந்த 8 கோடிக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பயனர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் விபிஎன் உள்ளிட்ட சேவைகள் மூலம் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த தொடங்கினர்.
இதையடுத்து ரஷியா, இன்ஸ்டாகிராமிற்கு பதிலாக ரோஸ்கிராம் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ரோஸ்கிராம் செயலியின் வடிவமைப்பு பணி நடைபெற்று வருவதாகவும், மார்ச் 28-ம் தேதி முதல் இந்த செயலி பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் இந்த ரோஸ்கிராம் செயலியில் இருக்கும். ரோஸ்கிராம் மூலம் பயனர்கள் வருவாயும் ஈட்ட முடியும் என ரஷியா தெரிவித்துள்ளது.
மேலும் அனைத்து வகை தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களையும் உள்நாட்டிலேயே தயாரிக்க ரஷியா முடிவெடுத்துள்ளது.






