search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஜிடி நியோ 3
    X
    ஜிடி நியோ 3

    வெறும் 5 நிமிடத்தில் 50 சதவீதம் சார்ஜ்- நாளை அறிமுகமாகவுள்ள ரியல்மி ஜிடி நியோ 3

    இந்த போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 இன்டர்னல் ஸ்டோரேஜ்ஜுடன் வரும் என கூறப்பட்டுள்ளது.
    ரியல்மி நிறுவனம் நாளை ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் 120Hz ரெஃப்ரெஷ் ரெட் மற்றும் 1000Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட AMOLED டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல் ஹெச்டி+ ரெஷலியூஷன் மற்றும் இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் தரப்பட்டுள்ளது. இந்த போன் MediaTek Dimension 8100 பிராசஸரை கொண்டிருக்கும்.

    கேமராவை பொறுத்தவரை இதில் 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் மேக்ரோ சென்சார், ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் முக்கிய அம்சமாக பிரைமரி கேமராவில் ஃபிளாக்‌ஷிப் Sony IMX766 சென்சார் இடம்பெறவுள்ளது. செல்ஃபி கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸலை கொண்டிருக்கும்.

    4,500 பேட்டரி, 150 அல்ட்ரா வேகம் சார்ஜிங் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த போனை சார்ஜ் செய்தால் 5 நிமிடத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீதம் சார்ஜ் ஏறிவிடும். 

    இந்த போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 இன்டர்நெல் ஸ்டோரேஜ்ஜுடன் வரும். இந்த போனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
    Next Story
    ×