என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

சாம்சங் ஸ்மார்ட்போன்
பட்ஜெட் விலையில் சாம்சங் அறிமுகம் செய்யவுள்ள ஸ்மார்ட்போன்
இந்த ஸ்மார்ட்போன் 3 கேமரா செட்டப்புடன், ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெஷலியூஷனுடன் வெளிவருகிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த போனில் இன்ச் TFT Infinity-V டிஸ்பிளே full-HD+ (1,080x2,408 pixels) ரெஷலியூஷனுடன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் Exynos 850 SoC பிராசஸர், OneUI 4.1 ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்ஸில் இயங்கும் என கூறப்படுகிறது.
கேமராவை பொறுத்தவரை இதில் f/2.2 அப்பேர்சர் லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் சென்சார், f/2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்ஸல் மேக்ரோ மற்றும் டெப்த் சென்சார் கேமராக்கள் வழங்கப்படவுள்ளன. முன்பக்கத்தில் 8 மெகாபிக்ஸல் கொண்ட செல்ஃபி கேமரா f/2.2 லென்ஸுடன் வழங்கப்படவுள்ளது.
மேலும் இந்த போனில் 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் வருகிறது. இந்த போனில் க்னாக்ஸ் செக்யூரிட்டி மற்றும் சைட் மவுண்டட் ஃப்ங்கர்பிரிண்ட் சென்சாரும் இடம்பெற்றுள்ளது.
இந்த போனின் 4 ஜிபி/64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.14,999 ஆகவும், 4ஜிபி/128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.15,999-ஆகவும், 6ஜிபி/128 ஜிபியின் விலை ரூ.17,499-ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






