search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Carl Pei"

    • ஸ்மார்ட்போன் ரென்டர் இன்பினிக்ஸ் கம்யுனிட்டி எக்ஸ் கிளப்-இல் பதிவிடப்பட்டு இருக்கிறது.
    • ரென்டர்களின் படி ஸ்மார்ட்போனின் பின்புற டிசைன் எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன் சீரிசை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இது தோற்றத்தில் நத்திங் போன் 2 போன்றே காட்சியளிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் கேமிங் சார்ந்த சாதனமாக இருக்கும் என்றும் இதன் டிசைன், தற்போது பிரபலமாக உள்ள நத்திங் போன் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    டிப்ஸ்டரான முகுல் ஷர்மா தனது டுவிட்டரில் வெளியிட்ட தகவல்களின் படி புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் "GT" என்று அழைக்கப்படும் என அவர் தெரிவித்து இருந்தார். புதிய ஸ்மார்ட்போன் ரென்டர் இன்பினிக்ஸ் கம்யுனிட்டி எக்ஸ் கிளப்-இல் பதிவிடப்பட்டு இருக்கிறது. ரென்டர்களின் படி ஸ்மார்ட்போனின் பின்புற டிசைன் எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    ரென்டரில் இந்த ஸ்மார்ட்போன் இடதுபுறத்தில் டூயல் கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது. இதோடு நத்திங் போன் 2 மாடலில் இருக்கும் எல்இடி ஸ்ட்ரிப்களை போன்றே இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனிலும் டிசைன் அவுட்லைன் இடம்பெற்று இருக்கிறது. இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனில் இது எல்இடி லைட்களாக இருக்குமா அல்லது வெறும் டிசைன் மட்டும் இப்படி காட்சியளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இன்பினிக்ஸ்-இன் புதிய ஸ்மார்ட்போன் விவரங்களை டுவிட்டரில் பார்த்த நத்திங் நிறுவன தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய், டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவின் பதிவுக்கு பதில் அளித்துள்ளார். அதில், "வழக்கறிஞர்களை தயார் நிலையில் வைப்பதற்கான நேரம்" என்று கூறி மகிழ்ச்சியில் சிரிக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார்.

    புதிய ஸ்மார்ட்போன் பற்றி இன்பினிக்ஸ் சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று டிப்ஸ்டர் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில், புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    முன்னதாக நத்திங் போன் 1 போன்றே காட்சியளிக்கும் சாதனம் பார்சிலோனாவில் இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காணப்பட்டது. இந்த மாடலில் நத்திங் போனில் வழங்கப்பட்டு இருப்பதை போன்ற எல்இடி மெக்கானிசமும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நத்திங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியாகுமா என்ற கேள்விக்கு விடை கிடைத்தது.
    • நத்திங் நிறுவனம் சமீபத்தில் தான் தனது நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

    ஸ்மார்ட்போன் சந்தையில் ஏராளமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. சாம்சங், ஒப்போ, மோட்டோரோலா மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் கவனம் செலுத்த துவங்கிவிட்டன.

    இந்த நிலையில், நத்திங் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யுமா என்ற கேள்விக்கு, அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் பதில் அளித்துள்ளார்.

    அதன்படி நத்திங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் தற்போதைக்கு அறிமுகமாகாது என நத்திங் தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கார்ல் பெய் கூறும் போது,

    "இப்போதைக்கு வாய்ப்பில்லை. தற்போது யாரும் வந்து, எனது போனில் மடிக்கக்கூடிய வசதி வேண்டும் என்று கூறுவதில்லை. உற்பத்தியாளர்கள் பயனர்களிடம் புகுத்த நினைக்கும் கண்டுபிடிப்பகாவே, நான் அவற்றை பார்க்கின்றேன்," என்று தெரிவித்தார்.

    சில நிறுவனங்கள் இதனை உற்பத்தி செய்து வருகின்றன. கிட்டத்தட்ட இவை அனைத்தும் ஒரே மாதிரியே காட்சியளிக்கின்றன. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருப்பதை கார்ல் பெய் எடுத்துரைத்து இருக்கிறார்.

    • சர்வதேச சந்தையில் நத்திங் போன் 2 மாடல் அடுத்த மாதம் அறிமுகமாகிறது.
    • நத்திங் போன் 2 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது.

    நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் ஜூலை 11-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய நத்திங் போன் 2 மாடலின் சிப்செட், டிஸ்ப்ளே அளவு மற்றும் பேட்டரி திறன் போன்ற விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், நத்திங் போன் 2 மாடலின் யுஎஸ்பி டைப் சி கேபிள் எப்படி காட்சியளிக்கும் என்பதை விளக்கும் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.

    அதன்படி நத்திங் போன் 2 மாடலுடன் வழங்கப்படும் யுஎஸ்பி டைப் சி கேபிள், நத்திங் போன் 1 உடன் வழங்கப்பட்டதை விட முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. நத்திங் போன் 2 உடன் வழங்கப்படும் யுஎஸ்பி டைப் சி கேபிள், சில்வர் நிற ஃபினிஷ் செய்யப்பட்டு, வெளிப்புறம் டிரான்ஸ்பேரன்ட் டிசைன் கொண்டிருக்கிறது.

     

    டைப் சி கேபிள் நத்திங் பிரான்டிங் கொண்டிருக்கிறது. கேபிள் நிறம் வெள்ளை நிறத்தில் உள்ளது. நத்திங் போன் 2 மாடலுடன் சார்ஜர் வழங்கப்படாது என்று தெரிகிறது. நத்திங் நிறுவனம் 45 வாட் சார்ஜரை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்கிறது.

    நத்திங் போன் 1 மாடலில் அதிகபட்சம் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்-க்கான சப்போர்ட் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் நத்திங் போன் மாடலில் எவ்வளவு சார்ஜிங் வேகம் வழங்கப்படும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

     

    எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை புதிய நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் டாப் எண்ட் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, Full HD+ ரெசல்யூஷன், OLED பேனல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    நத்திங் போன் 2 மாடலுக்கு மூன்று ஆண்டுகள் முக்கிய ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்கிரேடுகள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்படும் என்று நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் புதிய நத்திங் ஒஎஸ் பயனர்களுக்கு அதிவேக அனுபவம் மற்றும் புதிய அம்சங்களை வழங்கும் என்று தெரிவித்து இருக்கிறது.

    ×