search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    முற்றிலும் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் - கவனம் ஈர்க்கும் நத்திங் நிறுவனரின் எச்சரிக்கை பதிவு!
    X

    முற்றிலும் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் - கவனம் ஈர்க்கும் நத்திங் நிறுவனரின் எச்சரிக்கை பதிவு!

    • ஸ்மார்ட்போன் ரென்டர் இன்பினிக்ஸ் கம்யுனிட்டி எக்ஸ் கிளப்-இல் பதிவிடப்பட்டு இருக்கிறது.
    • ரென்டர்களின் படி ஸ்மார்ட்போனின் பின்புற டிசைன் எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன் சீரிசை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இது தோற்றத்தில் நத்திங் போன் 2 போன்றே காட்சியளிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் கேமிங் சார்ந்த சாதனமாக இருக்கும் என்றும் இதன் டிசைன், தற்போது பிரபலமாக உள்ள நத்திங் போன் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    டிப்ஸ்டரான முகுல் ஷர்மா தனது டுவிட்டரில் வெளியிட்ட தகவல்களின் படி புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் "GT" என்று அழைக்கப்படும் என அவர் தெரிவித்து இருந்தார். புதிய ஸ்மார்ட்போன் ரென்டர் இன்பினிக்ஸ் கம்யுனிட்டி எக்ஸ் கிளப்-இல் பதிவிடப்பட்டு இருக்கிறது. ரென்டர்களின் படி ஸ்மார்ட்போனின் பின்புற டிசைன் எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    ரென்டரில் இந்த ஸ்மார்ட்போன் இடதுபுறத்தில் டூயல் கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது. இதோடு நத்திங் போன் 2 மாடலில் இருக்கும் எல்இடி ஸ்ட்ரிப்களை போன்றே இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனிலும் டிசைன் அவுட்லைன் இடம்பெற்று இருக்கிறது. இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனில் இது எல்இடி லைட்களாக இருக்குமா அல்லது வெறும் டிசைன் மட்டும் இப்படி காட்சியளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இன்பினிக்ஸ்-இன் புதிய ஸ்மார்ட்போன் விவரங்களை டுவிட்டரில் பார்த்த நத்திங் நிறுவன தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய், டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவின் பதிவுக்கு பதில் அளித்துள்ளார். அதில், "வழக்கறிஞர்களை தயார் நிலையில் வைப்பதற்கான நேரம்" என்று கூறி மகிழ்ச்சியில் சிரிக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார்.

    புதிய ஸ்மார்ட்போன் பற்றி இன்பினிக்ஸ் சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று டிப்ஸ்டர் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில், புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    முன்னதாக நத்திங் போன் 1 போன்றே காட்சியளிக்கும் சாதனம் பார்சிலோனாவில் இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காணப்பட்டது. இந்த மாடலில் நத்திங் போனில் வழங்கப்பட்டு இருப்பதை போன்ற எல்இடி மெக்கானிசமும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×