என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    வோடஃபோன்-ஐடியா
    X
    வோடஃபோன்-ஐடியா

    ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ள வோடஃபோன்-ஐடியா

    ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கிய நிலையில் வோடஃபோன் - ஐடியா நிறுவனம் 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
    ஐபிஎல் போட்டிகளில் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை காணும் வகையில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

    இதன்படி ரூ.499-க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ்கள்  28 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் வழங்கப்படுகிறது.

    அதேபோல ரூ.1066-க்கு ரீசார்ஜ் செய்தால் தினம் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 84 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் உண்டு.
    Next Story
    ×