என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
இன்ஸ்டாகிராம் சேவையில் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் அனைவரிடமும் பிறந்த தேதி விவரங்களை பதிவிட அந்நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.
செயலியை பயன்படுத்தும் முன் பிறந்த தேதி விவரங்களை பதிவிடக் கோரி இன்ஸ்டாகிராம் தனது பயனர்களை வலியுறுத்தி வருகிறது. முன்னதாக வயது உறுதிப்படுத்துவதை கட்டாயமாக்கப்போவதாக இன்ஸ்டாகிராம் அறிவித்து இருந்தது. அந்த வகையில் அறிவிப்பு வெளியான எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது இதனை செயல்படுத்த துவங்கி உள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் 13 வயதுக்கும் குறைவானவர்கள் செயலியை பயன்படுத்த விடாமல் செய்ய இன்ஸ்டாகிராம் முடிவு செய்துள்ளது. பிறந்த தேதி விவரங்களை கொண்டு ஒவ்வொரு வயதினருக்கு ஏற்ற விளம்பரங்களை வழங்கவும் இன்ஸ்டாகிராம் திட்டமிட்டிருக்கலாம்.

புதிய திட்டத்தை செயல்படுத்த இன்ஸ்டாகிராம் தரவுகளை பார்க்க முயற்சிக்கும் போது இடையில் பிறந்த தேதி விவரங்களை பதிவிட வலியுறுத்திகிறது. மேலும் இந்த ஆப்ஷனை நிராகரித்து விட்டு செயலியை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படவில்லை.
"இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு முன்பாக, இந்த அக்கவுண்ட் ஏதேனும் வியாபாரம் அல்லது பெட் சார்ந்து இருந்தாலும் பிறந்த தேதியை வழங்க வேண்டும்," என்பதை திரிவிக்கும் திரை இன்ஸ்டாகிராமில் குறுக்கிடுகிறது. "இதன் மூலம் இளம் சமுதாயத்தினரை பாதுகாக்க முடியும். மேலும் உங்களின் பிறந்த தேதியை வைத்துக் கொண்டு விளம்பரங்கள் உள்பட, உங்களின் அனுபவத்தை மேம்படுத்துவோம். இது உங்களின் பொது ப்ரோபைலின் அங்கமாக இருக்காது," என இன்ஸ்டாகிராம் தெரிவித்து இருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் போல்டு ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றிய புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. சமீபத்திய ஆண்ட்ராய்டு 12L வெர்ஷனில் டேப்லெட் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கென பல்வேறு பிரத்யேக அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இத்துடன் கூகுள் டென்சர் சிப்செட் கொண்டு கூகுள் நிறுவனம் தனது வன்பொருள் பிரிவில் அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து இருப்பது தெரியவந்தது.
இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் வெளியான தகவல்களில் பிக்சல் போல்டு ஸ்மார்ட்போன் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. டிஸ்ப்ளே வினியோகம் சந்தையில் அதிக பரீட்சயம் கொண்ட ராஸ் யங் இந்த தகவலை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பிக்சல் போல்டு மாடல் எப்போது அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி கூகுள் பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 வெளியீட்டை தொடர்ந்து இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவித்து இருக்கிறார். மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்ட்ராய்டு 13 வெர்ஷனில் மடிக்கக்கூடிய சாதனங்களுக்கு சிறந்த சப்போர்ட் வழங்குவது பற்றிய குறியீடுகள் இடம்பெற்று இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
விலையை பொருத்தவரை புதிய பிக்சல் போல்டு மாடல் விலை 1400 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3 மாடலை விட 400 டாலர்கள் குறைவு, கேலக்ஸி Z ப்ளிப் 3 மாடலை விட 400 டாலர்கள் அதிகம், ஆனால் கூகுள் பிக்சல் 6 மாடலை விட 800 டாலர்கள் வரை அதிகம் ஆகும்.
மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் புதிய மோட்டோ ரெவோ 2 சீரிஸ் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை வெவ்வேறு அளவுகள், டிஸ்ப்ளே ரெசல்யூஷனில் ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கின்றன.
அதன்படி ரெவோ 2 சீரிஸ் 32 இன்ச் HD, 40 மற்றும் 43 இன்ச் FHD, 43, 50 மற்றும் 55 இன்ச் 4K ஆண்ட்ராய்டு 11 ஸ்மார்ட் டி.வி.க்கள் ஆகும். இவற்றில் டால்பி ஆடியோ, 24W ஸ்பீக்கர்கள், டூயல் பேண்ட் வைபை மற்றும் டேட்டா சேவர் போன்ற அம்சங்கள் உள்ளன. இதன் 4K டி.வி. மாடல்களில் டால்பி விஷன், டால்பி அட்மோஸ், 4D சவுண்ட், MEMC மற்றும் ALLM அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ZX2 மற்றும் ரெவோ மாடல்களை தொடர்ந்து புது மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதன் அம்சங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா டி.வி. மாடல்களில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ள. எனினும், மோட்டோ டி.வி. மாடல்களில் சற்றே வித்தியாசமான V வடிவ ஸ்டாண்ட் வழங்கப்பட்டு உள்ளது.

மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் அம்சங்கள்:
- 32 இன்ச் 1366x768 HD ரெடி டிஸ்ப்ளே
- 40, 43 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே
- 43, 50, 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
- குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர்
- மாலி G31 MP2 GPU (HD மற்றும் FHD)
- மாலி G52 MP2 GPU (4K)
- 2GB ரேம்
- 8GB மெமரி
- ஆண்ட்ராய்டு டி.வி. 11
- வைபை 802.11 ac (2.4GHz), ப்ளூடூத் Bluetooth, (HD மற்றும் FHD) / 3 (4K) x HDMI போர்ட்கள், 2x USB 2.0, ஈத்தர்நெட்
- 24W பாக்ஸ் ஸ்பீக்கர்கள்
- டால்பி ஆடியோ (HD மற்றும் FHD)
- டால்பி அட்மோஸ் (4K)
விலை விவரங்கள்:
- மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 32 இன்ச் HD ரெடி டி.வி. ரூ. 13 ஆயிரத்து 999
- மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 40 இன்ச் FHD டி.வி. ரூ. 20 ஆயிரத்து 990
- மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 43 இன்ச் FHD டி.வி. ரூ. 23 ஆயிரத்து 990
- மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 43 இன்ச் 4K டி.வி. ரூ. 26 ஆயிரத்து 990
- மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 50 இன்ச் 4K டி.வி. ரூ. 31 ஆயிரத்து 990
- மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 55 இன்ச் 4K டி.வி. ரூ. 37 ஆயிரத்து 999
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் தனது நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு 2T மற்றும் நார்டு 3 ஸ்மார்ட்போன் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களில் ஒன்பிளஸ் நார்டு 2T இந்த மாதமே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
புதிய ஒன்பிளஸ் நார்டு 2T மாடல் NBTC சான்று பெற்று இருப்பதை அடுத்து இந்த தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் TDRA சான்று பெற்று இருந்த நிலையில் தற்போது NBTC சான்றையும் பெற்று இருக்கிறது. இரு சான்றுகளிலும் ஒன்பிளஸ் நார்டு 2T ஸ்மார்ட்போன் CPH2399 எனும் மாடல் நம்பரை கொண்டுள்ளது. புதிய ஒன்பிளஸ் நார்டு 2T மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நார்டு 2 ஸ்மார்ட்போனின் மைனர் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் என தெரிகிறது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
ஒன்பிளஸ் நார்டு 2T மாடலில் 6.43 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1300 பிராசஸர், 8GB/12GB LPDDR4x ரேம் மற்றும் 128GB/256GB UFS 2.2 மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும். இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 12 வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4500mAh பேட்டரி, 80 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருக்கிறது.
மேலும் 5ஜி, 4ஜி எல்.டி.இ., டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.1, ஜி.பி.எஸ். மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட், அலர்ட் ஸ்லைடர், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்படுகின்றன. புகைப்படங்களை எடுக்க நார்டு 2T மாடலில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மோனோகுரோம் லென்ஸ் மற்றும் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
கூகுள் குரோம் பிரவுசரில் ஏற்பட்டுள்ள புது பாதுகாப்பு குறைபாடு, அதில் இருந்து எப்படி தப்பித்துக் கொள்வது என்ற விவரங்களை பார்ப்போம்.
சைபர் துறை நிறுவனமான CERT-IN டெஸ்க்டாப்களுக்கான கூகுள் குரோம் பிரவுசரில் மிக முக்கிய பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக எச்சரிக்கை தகவலை வெளியிட்டு உள்ளது. இந்த குறைபாடு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும் அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. CERT-IN வெளியிட்டுள்ள தகவல்களில் அதிக பிழைகள் நிறைந்த கூகுள் குரோம் வெர்ஷன்கள் பற்றி தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மென்பொருளில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை கூகுள் குரோம் வெர்ஷன் 101.0.4951.41 மற்றும் அதற்கு முன் வெளியாகி இருந்த அப்டேட்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாக CERT-IN தெரிவித்து உள்ளது. இந்த பிழை காரணமாக ஹேக்கர்கள் ஆர்பிடரி குறியீடுகளை பயன்படுத்தி பயனரின் மிக முக்கிய தகவல்களை அபகரிக்க முடியும். ஹேக்கர் பாதுகாப்பு தடைகளை எதிர்கொண்டு, பஃபர் ஓவர்ஃபுளோ செய்ய முடியும்.
இந்த குறைபாட்டில் இருந்து பாதுகாப்பாக இருக்க பயனர்கள் கூகுள் குரோம் வெர்ஷன் 101.0.4951.41-க்கு அப்டேட் செய்வது அவசியம் ஆகும். இதற்கு முன் வெளியான வெர்ஷன்களை ஹேக்கர்கள் எளிதில் குறிவைத்து மிக முக்கிய தகவல்களை அபகரித்து விட முடியும். இந்த குறைபாடுகள் இருப்பது பற்றி கூகுள் நிறுவமும் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் அவற்றை பட்டியலிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வாட்ச் சீரிஸ் 8 மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து புதிய வாட்ச் மாடல் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலில் உடலின் வெப்பநிலையை அறிந்து கொள்ளும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக மார்க் குர்மான் வெளியிட்ட தகவல்களில் புதிய ஆப்பிள் வாட்ச் மாடலில் உடல் வெப்பநிலையை கண்டறியும் சென்சார் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், தற்போது மிங் சி கியோ வெளியிட்டுள்ள தகவல்களில் ஆப்பிள் தனது புதிய வாட்ச் மாடலில் உடல் வெப்பநிலையை கண்டறியும் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்து இருக்கிறார்.

இந்த வசதியை முந்தைய ஆப்பிள் வாட்ச் 7 மாடலிலேயே வழங்க ஆப்பிள் முயற்சி செய்தது. எனினும், தவிர்க்க முடியாத காரணங்களால் இதனை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது. ஆனால் இந்த ஆண்டு அறிமுகமாகும் வாட்ச் மாடலில் இந்த அம்சம் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய அம்சம் வழங்கப்படும் பட்சத்தில் பயனர்களால் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 கொண்டு உடலின் வெப்ப நிலையை கண்டறிந்து கொள்ள முடியும். இது தெர்மோமீட்டர் போன்று செயல்பட்டு பயனருக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை தெரிவிக்கும். புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஐபோன் 14 வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம்.
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் தனது 4K ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சோனி நிறுவனம் இந்தியாவில் தனது ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களை அப்டேட் செய்து, புதிய பிரேவியா X75K 4K டி.வி. மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டி.வி. மாடல்களில் 4K அல்ட்ரா HD LED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளன. புதிய ஆண்ட்ராய்டு டி.வி. X1 4K பிராசஸர், லைவ் கலர் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
இந்த டி.வி. 4K ரெசல்யூஷனில் மிகத் துல்லியமான கலர் மற்றும் காண்டிராஸ்ட்-ஐ வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள 4K பிராசஸரில் X1 X ரியாலிட்டி ப்ரோ தொழில்நுட்பம் உள்ளது. இத்துடன் டால்பி ஆடியோ, கிளியர் பேஸ் தொழில்நுட்பம், பேஸ் ரிப்ளெக்ஸ் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள லோ-எண்ட் சவுண்ட் அம்சம் திரைப்படங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் மியூசிக் உள்ளிட்டவைகளை பார்க்கும் போது அச்சதலான அனுபவத்தை வழங்குகிறது.

இந்த ஆண்ட்ராய்டு டி.வி. பயனர்களுக்கு பிடித்தமான தரவுகள், சேவைகள் மற்றும் சாதனங்களுக்கு அக்சஸ் வழங்குகிறது. இத்துடன் இந்த டி.வி. ஆப்பிள் ஏர் பிளே 2 மற்றும் ஹோம்கிட் சப்போர்ட் கொண்டுள்ளது. சோனி ஸ்மார்ட் டி.வி.யை இயக்க அலெக்சாவை இணைத்து, டி.வி.யின் அம்சங்களை குரல் வழியே இயக்க முடியும். இத்துடன் பில்ட் இன் குரோம் காஸ்ட் வசதி உள்ளது. இதை கொண்டு வீடியோக்கள், கேம் மற்றும் செயலிகளை ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் இருந்து டி.வி.யில் இயக்க முடியும்.
இந்தியாவில் சோனி 43 இன்ச் KD-43X75K மாடல் விலை ரூ. 55 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இதன் 50 இன்ச் KD-50X75K மாடல் விலை ரூ. 66 ஆயிரத்து 990 என துவங்குகிறது. 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்களின் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. புதிய சோனி ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்கள் நாடு முழுக்க அனைத்து சோனி விற்பனை மையங்கள், முன்னணி விற்பனை மையகங்கள், ஆன்லைன் வலைதளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் சலுகைகளுடன் நெட்ப்ளிக்ஸ் சந்தாவை இலவசமாக வழங்குகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஏர்டெல் நிறுவனத்தின் எக்ஸ்-ஸ்டிரீம் பைபர் பிராட்பேண்ட் இணைப்புடன் முதல் முறையாக நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது. இது ஏர்டெல் புரோபஷனல் மற்றும் இன்பிணிட்டி திட்டங்களுடன் வழங்கப்படுகிறது. ஜியோ பைபர் போன்ற போட்டி நிறுவன சலுகைகளுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மாதம் ரூ. 1,498 கட்டணம் கொண்ட ஏர்டெல் புரோபஷனல் பிளானிற்கு மாறுவோர் மற்றும் அப்கிரேடு செய்வோருக்கு தற்போது நெட்ப்ளிக்ஸ் பேசிக் பிளான் வழங்கப்படுகிறது. மாதம் ரூ. 199 விலையில் கிடைக்கும் நெட்ப்ளிக்ஸ் பேசிக் பிளானை கொண்டு 480ஜ தரவுகளை ஒர்றை ஸ்கிரீனில் பார்த்து ரசிக்க முடியும். இந்த பிளானில் அன்லிமிடெட் டேட்டா, 300Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.

தற்போதைய நெட்ப்ளிக்ஸ் மட்டுமின்றி அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் போன்றவைகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. ஏர்டெல் இன்பினிட்டி பிளானிற்கு அப்கிரேடு அல்லது மாறுவோருக்கு நெட்ப்ளிக்ஸ் பிரீமியம் பிளான் வழங்கப்படும். ஏர்டெல் இன்பினிட்டி பிளான் கட்டணம் ரூ. 3 ஆயிரத்து 999 ஆகும். இத்துடன் வழங்கப்படும் நெட்ப்ளிக்ஸ் பிரீமியம் பிளான் மாத கட்டணம் ரூ. 649 ஆகும்.
ஏர்டெல் இன்பினிட்டி பிளானில் அன்லிமிடெட் டேட்டா, 1Gbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இத்துடன் அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்ப்ளிக்ஸ் பிரீமியம், எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் மற்றும் பல்வேறு இதர சலுகைகள் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் பிராட்பேண்ட் பிளான்களுடன் நெட்ப்ளிக்ஸ் சேவையை ஆக்டிவேட் செய்ய, ஏர்டெல் தேங்ஸ் செயலியின் கீழ்புறமாக ஸ்கிரால் செய்து என்ஜாய் யுவர் ரிவார்ட்ஸ் (Enjoy your rewards) பகுதியில் டிஸ்கவர் தேங்ஸ் பெனிஃபிட் (Discover Thanks Benefit) ஆப்ஷனில் உள்ள நெட்ப்ளிக்ஸ் ஐகானை கிளிக் செய்து
கிளைம் (Claim) மற்றும் புரோசீட் (Proceed) ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.
அமேசான் வலைதளத்தில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
அமேசான் இந்தியா வலைதளத்தில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் விலை ரூ. 12 ஆயிரத்து 999 எனி நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதுவரை இதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அமேசான் சம்மர் சேல் பெயரில் நடைபெற்று வரும் சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனிற்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி அமேசான் தளத்தில் புதிய ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு ரூ. 1,250 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது மேலும் ரூ. 1000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் 4GB + 64GB மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் தள்ளுபடி கூப்பனை சேர்க்கும் போது போனின் விலை ரூ. 11 ஆயிரத்து 749 ஆக குறைந்து விடும். மேலும், இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரெட்மி நோட் 11 விலை ரூ. 10 ஆயிரத்து 749 ஆக குறைந்து விடுகிறது. இந்த சலுகை நான்கு நாட்கள் அதாவது மே 6 ஆம் தேதி வரை வழங்கப்படும்.

ரெட்மி நோட் 11 அம்சங்கள்:
- 6.43 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4GB LPDDR4X ரேம், 64GB மெமரி
- 6GB LPDDR4X ரேம், 128GB UFS 2.2 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆணட்ராய்டு 11 மற்றும் MIUI 13
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8
- 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
- 2MP டெப்த் கேமரா
- 2MP மேக்ரோ கேமரா
- 13MP செல்பி கேமரா, f/2.4
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53)
- டூயல் 4ஜி வோல்ட்இ, பைவை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 33W ப்ரோ பாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்து இருக்கிறது. இதில் மின்சாதனங்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சாம்சங் நிறுவனம் Fab Grab Fest பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்தஉ இருக்கிறது. ஒரு வாரம் நடைபெறும் சிறப்பு விற்பனையில் சாம்சங் டிஜிட்டல் சாதனங்கள், கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்கள், டேப்லெட்கள், லேப்டாப், அக்சஸரீக்கள் மற்றும் அணியக்கூடிய சாதனங்களுக்கு ஏராளமான சலுகைகள், கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
நேற்று (மே 1) தொடங்கிய சிறப்பு விற்பனை மே 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அனைத்து சலுகைகளும் சாம்சங் வலைதளம்,ஸ சாம்சங் ஸ்டோர்களில் கிடைக்கும்.
சலுகை விவரங்கள்:
- சாம்சங் டி.வி.க்களை வாங்கும் போது அதிகபட்சம் 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை நியோ QLED டி.வி., மற்றும் கிரிஸ்டல் 4K UHD டி.வி மாடல்களுக்கும் அடங்கும்.
- சாம்சங் நிறுவனத்தின் அனைத்து விதமான டிஜிட்டல் சாதனங்களுக்கும் 57 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. விண்ட்-ஃபிரீ ஏ.சி., டுவின் கூலிங் பிளஸ் டபுள் டோர் குளிர்சாதன பெட்டி, கர்ட் மேஸ்ட்ரோ டபுள் டோர் குளிர்சாதன பெட்டி மற்றும் ஏ.ஐ. இகோ பபுள் வாஷிங் மெஷின்கள் வழங்கப்படுகின்றன.
- சாம்சங் ஷாப் ஆப் மூலம் பொருட்களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் ரூ. 4 ஆயிரத்து 500 வரை சேமிக்க முடியும். ஸ்மார்ட்போன், டேப்லெட், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் அக்சஸரீக்களுக்கு 50 சதவீத வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- சாம்சங் கேலக்ஸி புக் 2 லேப்டாப் மாடலுக்கு 16 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
வங்கி சலுகைகள்:
இத்துடன் சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு வங்கி சார்ந்த சலுகைகளை வழங்க சாம்சங் நிறுவனம் பல்வேறு தனியார் வங்கிகளுடன் கூட்டணி அமைத்து உள்ளது.
கூகுள் நிறுவனம் பயனர் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்கும் நோக்கில் தனது தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் செய்து இருக்கிறது.
கூகுள் நிறுவனம் தனது பிரைவசி பாலிசியை மாற்றியமைத்து உள்ளது. இதன் மூலம் பயனர்கள் இனி தங்களின் தனிப்பட்ட தகவல்களை கூகுள் சர்ச் ரிசல்ட்களில் இருந்து நீக்க கூகுள் நிறுவனத்திடம் வலியுறுத்த முடியும். பயனர்கள் இனி தங்களின் மொபைல் போன் நம்பர்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை (PII - personally identifiable information) சர்ச் என்ஜின் ரிசல்ட்களில் இருந்து நீக்க வலியுறுத்த முடியும்.
புதிய கூகுள் பிரைவசி பாலிசி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து அவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. PII போன்ற வழிமுறைகளை பின்பற்றி தனிப்பட்ட தகவல்களை திருடுவது, கண்காணிப்பது மற்றும் பணத்தை அபகரிப்பது போன்ற அச்சுறுத்தல்களை ஏற்படுத்த முடியும்.

முன்னதாக பயனர்கள் கூகுள் நிறுவனத்திடம் தங்களின் தகவல்களை நீக்கக் கோரும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. எனினும், இது முகவரி நம்பர், வங்கி விவரங்கள், புகைப்படங்கள் மற்றும் மருத்துவ குறிப்புகளோடு நிறுத்தப்பட்டு விட்டன. கூகுள் பிளே ஸ்டோரிலும் பாதுகாப்பு செக்ஷனை கூகுள் உருவாக்கி இருக்கிறது.
கூகுள் மேற்கொண்டு இருக்கும் புதிய நடவடிக்கை தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்கள் சார்ந்த பிரச்சினைகளை பெருமளவு தவிர்க்க வழி செய்யும். முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள், மொபைல் நம்பர்கள் மட்டுமின்றி லாக் இன் விவரங்களையும் பாதுகாக்க முடியும். பயனர்கள் தங்களின் PII அடங்கிய இணைய முகவரிகளை நீக்கும் வழிமுறைகளை கூகுள் சப்போர்ட் வலைப்பக்கத்திற்கு சென்று மேற்கொள்ள முடியும்.
அமெரிக்காவின் சியாட்டில் பகுதியில் உலகின் முதல் NFT அருங்காட்சியகம் திறக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றிய விவரங்களை பார்ப்போம்.
உலகின் முதல் நிரந்தர NFT அருங்காட்சியகம் சீயாட்டில் நகரில் திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பிளாக்செயின் சார்ந்த டிஜிட்டல் ஆர்ட் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. NFT-க்கள் ஒரு வகையான டிஜிட்டல் சொத்து ஆகும். சமீப காலங்களில் இவை மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றன. NFT-க்கள் பிளாக்செயினில் (நெட்வொர்க்டு கம்ப்யூட்டர்களில் வைக்கப்பட்ட பரிவரத்தனைகள்) இடம்பெற்றுள்ளன.
இந்த அருங்காட்சியகம் ஜனவரி 14 ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், ஆர்டிஸ்ட், கிரியேட்டர்கள் மற்றும் கலெக்டர்கள் தங்களின் NFT-க்களை காட்சிப்படுத்த வழி செய்கின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் வெளி உலகிற்கு டிஜிட்டல் ஆர்ட் பற்றிய புது சந்தையை அறிமுகம் செய்து, அதுபற்றிய தகவல்களை விளக்க முடியும்.

உள்ளூர் டிஜிட்டல் ஆர்டிஸ்ட் மாக்சிம் சர்குய் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, ஏப்ரல் 16 ஆம் தேதி பருவநிலை மாற்றம் தலைப்பில் நடைபெற்ற கண்காட்சியை துவக்கி வைத்தார். இவரின் டிசைன்கள் ஆன்லைனில் NFT-க்களாக விற்பனை செய்யப்படுகிரன்றன. மேலும் இவற்றை அச்சடிக்கப்பட்டும் வழங்கப்படுகின்றன.
"முன்னதாக டிஜிட்டல் கலை படைப்பு அல்லது சாதாரண கலை படைப்புகளை யார் பார்க்க வேண்டும் என்றும், எப்படி அதனை வாங்க வேண்டும் என்ற விவகாரங்களில் அதிக கட்டுப்பாடுகள் இருந்தன," என்றும் சர்குய் தெரிவித்தார். இவர் சீயாட்டில் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி கிரிப்டோ சார்ந்த கலைத் துறையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நுழைந்தார்.
கடந்த மாதம் ஐயர்லாந்தை சேர்ந்த ஆய்வு மற்றும் சந்தை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, சர்வதேச NFT சந்தை இந்த ஆண்டில் மட்டும் 21 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 60 ஆயிரத்து 698 கோடி) மதிப்பை எட்டும் என கணித்துள்ளது.






