என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
வி நிறுவனம் 31 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புது பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் மூன்று புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 98, ரூ. 195 மற்றும் ரூ. 319 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரூ. 98 பிரீபெயிட் சலுகையில் 200MB டேட்டா, அன்லிமிடெட்ட வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்கள் 15 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. வி ரூ. 195 பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ். மற்றும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 319 பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 2GB தினசரி டேட்டா வழங்குகிறது.
வி ரூ. 195 மற்றும் ரூ. 319 சலுகைகள் 31 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கின்றன. இவற்றை தேர்வு செய்வோருக்கு வி மூவிஸ் மற்றும் டி.வி. ஆப் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. வி ரூ. 319 சலுகையில் பின்ஜ் ஆல் நைட் பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது.

இத்துடன் இதே சலுகையில் வீக்-எண்ட் ரோல் ஓவர் பலன்களும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் ரூ. 319 சலுகையில் 2GB பேக்கப் டேட்டா ஒவ்வொரு மாதமும் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.
இவை தவிர வி நிறுவனம் ரூ. 29 மற்றும் ரூ. 39 விலையில் 4ஜி டேட்டா வவுச்சர்களை அறிவித்து இருக்கிறது. இவற்றில் முறையே 2GB மற்றும் 3GB டேட்டா வழங்கப்படுகின்றன. ரூ. 29 சலுகையில் இரண்டு நாட்களும், ரூ. 39 சலுகையில் ஏழு நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றன.
ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியின் போது எதிர்கொள்ளும் வழிமுறைகளை அந்நிறுவனம் விரிவாக விளக்கி இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியின் போது எந்தளவு பரிசோதனைகளை எதிர்கொள்கின்றன என்பதை விரிவாக விவரித்து இருக்கிறது. நுகர்வோர் விசுவாசத்தை வெளிப்படுத்த சிறந்த வழிமுறை உயர் ரக பொருட்களை உற்பத்தி செய்வது தான் என ஒப்போ நிறுவனம் அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக ஒப்போ நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியின் அனைத்து பிரிவுகளிலும் மிக கடுமையான வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. இதற்காக சில ஆண்டுகளுக்கு முன் ஒப்போ நிறுவனம் இந்தியாவில் QE ரிலயபிலிட்டி ஆய்வகத்தை திறந்தது.

தொடர்ச்சியான ஆய்வு, திட்டமிடல் மற்றும் வளர்ச்சி மூலம் மிக எளிமையான யோசனைகள் பிறக்கும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிளாக்ஷிப் மாடல்களான ஒப்போ F21 ப்ரோ உள்ளிட்டவை ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான மணி நேர மனித உழைப்பின் பலனாக உருவாக்கப்பட்டன.
இதனை எப்படி உற்பத்தி செய்வது என்பதை திட்டமிடவே நீண்ட காலம் ஆகிவிட்டது. ஒவ்வொரு புதிய ஒப்போ சாதனமும் இதுபோன்று பிரத்யேக வழிமுறைகளை கடந்தே உற்பத்தி நிலையை எட்டுகின்றன. மேலும் ஸ்மார்ட்போன்களின் தரம் மற்றும் உறுதியை நிலைநாட்ட பலக்கட்ட பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இது போன்ற பரிசோதனைகள் ஒப்போ நிறுவனத்தின் ரிலையபிலிட்டி ஆய்வகத்தில் நடத்தப்படுகிறது.
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி ஸ்மார்ட் டி.வி. X FHD மாடலை அறிமுகம் செய்தது. இது 40 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. மேலும் இத்துடன் குரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. ரியல்மி ஸ்மார்ட் டி.வி. மாடல் பெசல் லெஸ் டிசைன் கொண்டிருக்கிறது.

மேலும் இதில் ஆண்ட்ராய்டு டி.வி. 11 ஓ.எஸ்., ஆட்டோ லோ லேடன்சி, குரோம்காஸ்ட் பில்ட் இன் உள்ளது. யூடியூப், நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் சேவைகளுக்கான ஷார்ட்கட் பட்டன்களை கொண்ட ரிமோட் இந்த டி.வி.யுடன் வழங்கப்படுகிறது. மேலும் இதில் 24W திறன் கொண்ட ஸ்பீக்கர்கள் உள்ளன.
ரியல்மி ஸ்மார்ட் டி.வி. X FHD 40 மற்றும் 43 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 22 ஆயிரத்து 999 என்றும் ரூ. 25 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த டி.வி. மாடல்கள் ரியல்மி, ப்ளிப்கார்ட் வலைதளங்களில் மே 4 ஆம் தேதி விற்பனைக்கு வருகின்றன. ஆப்லைன் தளங்களில் இவற்றின் விற்பனை மே 5 ஆம் தேதி துவங்குகிறது.
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது GT Neo3 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
ரியல்மி நிறுவனம் GT Neo2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக உருவாகி இருக்கும் ரியல்மி GT Neo3 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.7 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம் போன்ற அம்சங்கள் உள்ளன.
இதில் உள்ள லிக்விட் கூல்டு மேக்ஸ் ஸ்மார்ட்போனை அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4500mAh பேட்டரி மற்றும் 150W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கிறது. 5 நிமிடங்களில் 50 சதவீதமும், 15 நிமிடங்களுக்குள் 100 சதவீதமும் சார்ஜ் ஏற்றும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும்.

ரியல்மி GT Neo3 அம்சங்கள்:
- 6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- ஆக்டா கோரா மீடியாடெக் டிமென்சிட்டி 8100 5nm பிராசஸர்
- மாலி-G510 MC6 GPU
- 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
- 12GB LPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யு.ஐ. 3.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, OIS, f/1.88, LED ஃபிளாஷ்
- 8MP 119° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.25
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.45
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax, ப்ளூடூத் 5.3
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்
- 4500mAh பேட்டரி, 150W அல்ட்ரா டார்ட் பாஸ்ட் சார்ஜிங்
ரியல்மி GT Neo 3 ஸ்மார்ட்போன் நைட்ரோ புளூ, ஸ்டிரைப் வைட் மற்றும் ஆல்ஃபாஸ்ட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 80W 8GB + 128GB மாடல் விலை ரூ. 36 ஆயிரத்து 999 என்றும் 12GB + 256GB மாடல் விலை ரூ. 38 ஆயிரத்து 999 ஆகும். இதன் 12GB + 256GB 150W மாடல் விலை ரூ. 42 ஆயிரத்து 999 ஆகும். இதன் விற்பனை மே 4 ஆம் தேதி துவங்குகிறது.
போக்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய போக்கோ M4 5ஜி ஸ்மாரட்போனினை அறிமுகம் செய்தது.
போக்கோ நிறுவனம் தனது M4 5ஜி மிட்-ரேனஅஜ் 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.58 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம், 2GB விர்ச்சுவல் ரேம், அதிகபட்சமாக ஏழு 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் வசதி, ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13 போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

போக்கோ M4 5ஜி அம்சங்கள்:
- 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 7nm பிராசஸர்
- மாலி-G57 MC2 GPU
- 4GB LPDDR4x ரேம், 64GB (UFS 2.2) மெமரி
- 6GB LPDDR4x ரேம், 128GB (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13
- 50MP பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
- 2MP போர்டிரெயிட் கேமரா, f/2.4
- 8MP செல்பி கேமரா, f/2.45
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
- டஸட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட், வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 18W பாஸ்ட் சார்ஜிங்
போக்கோ M4 5ஜி ஸ்மார்ட்போன் கூல் புளூ, பவர் பிளாக் மற்றும் போக்கோ எல்லோ என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 64GB மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் 6GB + 128GB மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 5 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் எட்ஜ் 30 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் OLED, 10-பிட் கலர் ஸ்கிரீன், HDR 10+, 144Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 778G பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP டெப்த் கேமரா மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், பக்கவாட்டில் கைரேகை சென்சார், மேட் ஃபினிஷ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மோட்டோ எட்ஜ் 30 அம்சங்கள்:
- 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ OLED 144Hz டிஸ்ப்ளே, HDR10+
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778G பிளஸ் 6nm பிராசஸர்
- அட்ரினோ 642L GPU
- 8GB ரேம்
- 128GB / 256GB மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் மை யு.எக்ஸ்.
- டூயல் சிம்
- 50MP பிரைமரி கேமரா, f/1.88, OIS
- 50MP 118° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, 2.5cm மேக்ரோ ஆப்ஷன்
- 2MP டெப்த் கேமரா, f/2.4
- 32MP செல்ஃபி கேமரா, f/2.25
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி
- 4020mAh பேட்டரி
- 33W டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்
மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் மீடியோர் கிரே, அரோரா கிரீன் மற்றும் சூப்பர்மூன் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 449.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 36 ஆயிரத்து 265 என துவங்குகிறது. முதற்கட்டமாக ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும் மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ மாடல் அதன் பின் ஆசியா, ஆஸ்திரேலியா, இந்தியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் பயனர்கள் பேமண்ட் சேவையை பயன்படுத்தும் போது கேஷ்பேக் பலன்களை வழங்குகிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களிடம் ஒரு சேவையை பயன்படுத்த வைக்க அசத்தலான யுக்தியை கையாள முடிவு செய்துள்ளது. அதன்படி அதிகாரப்பூர்வ காப்பரேட் சப்போர்ட் வலைப்பக்கத்தில் கேஷ்பேக் பற்றிய தகவல் இடம்பெற்று இருக்கிறது. வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் வெவ்வேறு பயனர்களுக்கு மூன்று முறை பணம் அனுப்பினால், ரூ. 11 வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் பேமண்ட் சேவையை 100 மில்லியன் பயனர்களுக்கு நீட்டிக்க இந்திய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியதை அடுத்து, வாட்ஸ்அப் நிறுவனம் கேஷ்பேக் சலுகையை அறிவித்து இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு முதல் பேமண்ட் சேவையை வழங்க வாட்ஸ்அப் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

குறைந்தபட்சம் 30 நாட்களாக பேமண்ட் சேவையை பயன்படுத்தி வருவோருக்கு மட்டும் இந்த சலுகையை வாட்ஸ்அப் முதற்கட்டமாக வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் கேஷ்பேக் ரிவார்டுகளை வழங்குவதற்கான சோதனையை வாட்ஸ்அப் இந்தியாவில் நடத்தியது.
கேஷ்பேக் சலுகையின் மூலம் வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் மொபைல் பேமண்ட் சந்தையில் ஆழமாக கால்பதிக்க முடியும். இந்த சந்தையில் தற்போது கூகுள் பே மற்றும் வால்மார்ட் நிறுவனத்தின் போன்பெ போன்ற சேவைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் தளத்தில் திரைப்படங்களை வாடகைக்கு விடும் சேவை துவங்கப்பட்டு இருக்கிறது.
ஆன்லைனில் திரைப்படங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் வழங்கி வருகிறது. அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளம் போன்று திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை சந்தாதாரர்களுக்கு வழங்காமல், அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் பயனர்களை குறிப்பிட்ட திரைப்படத்தை குறுகிய காலக்கட்டதிற்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது.
அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் தளத்தில் வாடகைக்கு எடுக்கப்படும் திரைப்படம் 30 நாட்களுக்கு அப்படியே இருக்கும். எனினும், தரவுகளை பார்க்க துவங்கினால் அடுத்த 48 மணி நேரத்திற்கு மட்டுமே அவை இருக்கும். 48 மணி நேரத்திற்கு பின் திரைப்படத்தை பார்க்க விரும்பினால், மீண்டும் அதனை வாடகைக்கு எடுக்க வேண்டும்.

4K ரெசல்யூஷன்:
அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோரில் திரைப்படம் ஒன்றை UHD (4K) HD (1080/720p) மற்றும் SD (480p) ரெசல்யூஷனில் வாடகைக்கு எடுக்க ரூ. 499 கட்டணமாக நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. சற்றே குறைந்த ரெசல்யூஷன் அல்லது எஸ்.டி. தரவுகளை வாடகைக்கு எடுக்கும் போது குறைவான கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.
தற்போது அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் தளத்தில் பேட்மேன் திரைப்படத்திற்கு ரூ. 499 வாடகை வசூலிக்கப்படுகிறது. இதே போன்று ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படம் ரூ. 99 விலையிலும், தி மேட்ரிக்ஸ் ரிசரக்ஷன் ரூ. 149 விலையில் வாடகைக்கு கிடைக்கிறது.
அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் தளத்தில் திரைப்படங்களை UHD தரத்தில் வாடகைக்கு எடுக்கும் போது, பயனரின் சாதனம் Copy Protection (HDCP)-Compliant Display சான்று பெற்றிருக்க வேண்டும். இது இல்லாத பட்சத்தில் தரவுகள் SD தரத்திலேயே ஸ்டிரீம் செய்யப்படும். திரைப்படங்களை வாடகைக்கு எடுப்போர் அதற்கான கட்டணத்தை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளலாம்.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு சீரிசில் முதல் இயர்பட் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது முதல் நார்டு சீரிஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, 94ms அல்ட்ரா லோ லேடன்சி, 12.4mm டைட்டானியம் டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இவை தலைசிறந்த bass அனுபவத்தை வழங்குகின்றன.
இயர்பட் மிக கச்சிதமாக காதுகளில் பொருந்திக் கொள்ளும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனினும், இதில் இயர் டிடெக்ஷன் அம்சம் வழங்கப்படவில்லை. இந்த இயர்பட்ஸ் மெட்டாலிக் தோற்றம் கொண்டிருக்கின்றன. புதிய ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் IP55 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

இதன் இயர்பட் ஒவ்வொன்றும் 4.8 கிராம் எடை கொண்டிருக்கிறது. இதனால் காதுகளில் அணிந்து கொள்ள சவுகரியமாக இருக்கும். இதனுடன் மூன்று அளவுகளில் சிலிகான் இயர்பிளக் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகின்றன. இதன் இயர்பட்கள் 7 மணி நேரத்திற்கு ஸ்டாண்ட் அலோன் பிளேபேக் வழங்கும். இதில் உள்ள பிளாஷ் சார்ஜ் அம்சம் பத்து நிமிட சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது.
ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் மாடல் பிளாக் ஸ்லேட் மற்றும் வைட் மார்பில் நிறங்களில் கிடைக்கின்றன. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 10 ஆம் தேதி துவங்குகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் மூன்றாவது நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போன் 6.59 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்பி கேமரா, ஆக்டா கோர் ஸ்னாப்டிபாரன் 695 பிராசஸர் மற்றும் ஹைப்பர்பூஸ்ட் கேமிங் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 12.1 கொண்டிருக்கும் ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 2 ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட்டு உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அலர்ட் ஸ்லைடர் வழங்கப்படவில்லை. எனினும், இதில் 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு உள்ளது.

ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி அம்சங்கள்:
- 6.59 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே, 120Hz LCD ஸ்கிரீன்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
- அட்ரினோ 619L GPU
- 6GB / 8GB LPDDR4X ரேம், 128GB (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 12
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 64MP பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 2MP டெப்த் கேமரா, f/2.4
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், சூப்பர் லீனியர் ஸ்பீக்கர்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி, 33W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்
ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக் டஸ்க் மற்றும் புளூ டைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6GB + 128GB மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 8GB + 128GB மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 30 ஆம் தேதி துவங்குகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் 10R 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒன்பிளஸ் 10R என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம், 256GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 12.1, மூன்று முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒன்பிளஸ் 10R அம்சங்கள்:
- 6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் டிமென்சிட்டி 8100-மேக்ஸ் 5nm பிராசஸர்
- மாலி-G510 MC6 GPU
- 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
- 12GB LPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 12
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.88, LED பிளாஷ்
- 8MP 119° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.4
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்
- 4500mAh பேட்டரி, 150W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்
புதிய ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனின் 80W மாடல் சியெரா பிளாக் மற்றும் பாரஸ்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8GB + 128GB மாடல் விலை ரூ. 38 ஆயிரத்து 999 என்றும் 12GB + 256GB மாடல் விலை ரூ. 42 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் 10R 150W மாடல் சியெரா பிளாக் நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இதன் 12GB + 256GB மாடல் விலை ரூ. 43 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பரிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சியோமி நிறுவனம் இந்தியாவில் புதிய சியோமி 12 ப்ரோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சியோமி 12 ப்ரோ மாடலில் 6.73 இன்ச் 2K+ சாம்சங் E5 OLED ஸ்கிரீன் கொண்ட 120Hz LTPO டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது.
இத்துடன் அதிகபட்சம் 12GB ரேம், MIUI 13, நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட், மூன்று ஆண்ட்ராய்டு ஓ.எஸ். வழங்கப்படும் என சியோமி உறுதி அளித்து இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

சியோமி 12 ப்ரோ அம்சங்கள்:
- 6.73 3200x1440 பிக்சல் FHD+ AMOLED 20:9 HDR10 + டிஸ்ப்ளே, 120Hz ரிபெஷ் ரேட்re
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்
- 8GB / 12GB LPPDDR5 6400Mbps ரேம்
- 256GB UFS 3.1 1450MBps மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13
- 50MP பிரைமரி கேமரா, f/1.9
- 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 50MP ப்ரோடிரெயிட் கேமரா
- 32MP செல்ஃபி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ. வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்.பி. டைப் சி
- 4600mAh பேட்டரி
- 120 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்
புதிய சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் நாய்ர் பிளாக் மற்றம் ஒபேரா மாவ் மற்றும் காண்டுர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8GB + 256GB மாடல் விலை ரூ. 62 ஆயிரத்து 999 என்றும் 12GB + 256GB மாடல் விலை ரூ. 66 ஆயிபத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.






