என் மலர்

  தொழில்நுட்பச் செய்திகள்

  வி
  X
  வி

  31 நாட்கள் வேலிடிட்டியுடன் புது பிரீபெயிட் சலுகை அறிவித்த வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வி நிறுவனம் 31 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புது பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


  வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் மூன்று புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 98, ரூ. 195 மற்றும் ரூ. 319 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

  ரூ. 98 பிரீபெயிட் சலுகையில் 200MB டேட்டா, அன்லிமிடெட்ட வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்கள் 15 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. வி ரூ. 195 பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ். மற்றும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 319 பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 2GB தினசரி டேட்டா வழங்குகிறது. 

  வி ரூ. 195 மற்றும் ரூ. 319 சலுகைகள் 31 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கின்றன. இவற்றை தேர்வு செய்வோருக்கு வி மூவிஸ் மற்றும் டி.வி. ஆப் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. வி ரூ. 319 சலுகையில் பின்ஜ் ஆல் நைட் பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. 

   கோப்புப்படம்

  இத்துடன் இதே சலுகையில் வீக்-எண்ட் ரோல் ஓவர் பலன்களும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் ரூ. 319 சலுகையில் 2GB பேக்கப் டேட்டா ஒவ்வொரு மாதமும் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

  இவை தவிர வி நிறுவனம் ரூ. 29 மற்றும் ரூ. 39 விலையில் 4ஜி டேட்டா வவுச்சர்களை அறிவித்து இருக்கிறது. இவற்றில் முறையே 2GB மற்றும் 3GB டேட்டா வழங்கப்படுகின்றன. ரூ. 29 சலுகையில் இரண்டு நாட்களும், ரூ.  39 சலுகையில் ஏழு நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றன.
  Next Story
  ×