என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சியோமி நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் டேப்லெட் மாடல் எஸ் பென் சப்போர்ட் உடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் சியோமி பேட் 5 டேப்லெட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. புதிய சியோமி பேட் 5 மாடலில் 11 இன்ச் 2.5K /WQXA LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன், HDR10, குவால்காம் ஸ்னாப்டிராகனஅ 860 பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம், வழங்கப்பட்டு உள்ளது. 

    இத்துடன் குவாட் ஸ்பீக்கர் செட்டப், டால்பி அட்மோஸ், 6.85mm மெல்லிய பாடி, சியோமி ஸ்மார்ட் பென் சப்போர்ட் கொண்டிருக்கிறது. சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் பென் கொண்டு குறிப்பு எடுப்பது, எழுதுவது, ஸ்கிரீன்ஷாட் எடுப்பது, பென் மற்றும் இரேசர் இடையே ஸ்விட்ச் செய்வது என ஏராளமான டாஸ்க்குகளை செய்ய முடியும். 

     சியோமி பேட் 5

    சியோமி பென்-ஐ டேப்லெட் மீது பொருத்தினால் காந்த சக்தியால் இணைந்து கொண்டு தானாகவே சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய சியோமி பேட் 5 மாடலில் 8720mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய சியோமி பேட் 5 மாடல் காஸ்மிக் கிரே எனும் ஒற்றை நிறத்தில் தான் கிடைக்கிறது. இதன் 128GB மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என்றும் 256GB மெமரி மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய சியோமி பேட்  5 விற்பனை அமேசான், Mi ஹோம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. விற்பனை மே 3 ஆம் தேதி துவங்குகிறது. மே 7 ஆம் தேதி வரை சியோமி பேட் 5 மாடல் 128GB மெமரி மாடல் ரூ. 24 ஆயிரத்து 999 என்றும் 256GB மெமரி மாடல் ரூ. 26 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இது முதல் முறையாக ஸ்மார்ட்போன் வாங்குவோரை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 6.6 இன்ச் HD+LCD ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர், பவர் வி.ஆர். GPU, 2GB ரேம், 64GB மெமரி, 2GB ரேம் எக்ஸ்பான்ஷன் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 மாடலில் 8MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், எல்.இ.டி. பிளாஷ் மற்றும் 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கேமராவுடன் அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.

     இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6

    இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 அம்சங்கள்:

    - 6.6 இன்ச் ஸ்கிரீன் 1600x720 பிக்சல் HD+ ரெசல்யூஷன்
    - 2GHz குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ 22 12nmபிராசஸர்
    -IMG PowerVR GE-class GPU
    - 2GB LPDDR4X ரேம் + 2GB விர்ச்சுவல் ரேம்
    - 64GB மெமரி
    - மெமரியை கூடுதலாத நீட்டிக்கும் வசதி
    - ஆணட்ராய்டு 11 (கோ எடிஷன்)
    - கைரேகை சென்சார் / ஃபஸஅன்லாக்
    - 8MP rear camera with f/2.0 aperture, Depth sensor, dual LED flash
    5MP பிரைமரி கேமரா, 
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யு.எஸ.பி
    - 5000mAh பேட்டரி
    - 10w சார்ஜிங்

    இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 மாடலின் விலை ரூ. 7 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மே 6 ஆம் தேதி துவங்குகிறது.
    சியோமி நிறுவனம் தனது NEXT நிகழ்வில் புதிய 55 இன்ச் ஸ்மார்ட் டி.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    சியோமி நிறுவனம் NEXT நிகழ்வில் OLED விஷன் 55 ஸ்மார்ட் டி.வி.-யை அறிமுகம் செய்து இருக்கிறது. இது சியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கும் முதல் 4K OLED டி.வி. மாடல் ஆகும். இதில் IMAX என்ஹான்ஸ்டு, டால்பி விஷன் IQ மற்றும் ரியாலிட்டி ஃபுளோ MEMC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டி.வி.யில் 30W எட்டு ஸ்பீக்கர் செட்டப் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி உள்ளது.

    இத்துடன் 4.6mm மிக மெல்லிய ஃபிரேம், மெல்லிய பெசல் லெஸ் டிசைன் மற்றும் 97 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது. இந்த டி.வி.யில் ஃபார்-ஃபீல்டு மைக்குகள் உள்ளன. இவற்றை கொண்டு கூகுள் அசிஸ்டண்ட் சேவையை இயக்க முடியும். 

     சியோமி ஸ்மார்ட் டி.வி.

    சியோமி OLED விஷன் டி.வி. 55 இன்ச் அம்சங்கள்:

    - 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K OLED டிஸ்ப்ளே
    - குவாட் கோர் கார்டெக்ஸ் A73 மீடியாடெக் பிராசஸர்
    - மாலி-G52 MC1 GPU
    - 3GB ரேம்
    - 32GB மெமரி
    - ஆண்ட்ராய்டு டி.வி. 11 மற்றும் பேட்ச்வால் 
    - ஃபார்-ஃபீல்டு மைக்
    - வைபை 6 802.11 ax (2.4GHz / 5GHz), ப்ளூடூத் 5
    - 3 x HDMI 2.1, eARC, 2 x USB, ஆப்டிக்கல், ஈத்தர்நெட், AUX போர்ட்
    - 30W (8 ஸ்பீக்கர் செட்டப்), டால்பி அட்மோஸ், DTS-X

    புதிய சியோமி OLED விஷன் 55 டி.வி. விலை ரூ. 89 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 19 ஆம் தேதி துவங்குகிறது. இந்த டி.வி.யுடன் மூன்று ஆண்டுகளுக்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது. இதனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போதும், மாத தவணை முறையை தேர்வு செய்யும் போதும் ரூ. 6 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
    ஐகூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ஐகூ Z6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஐகூ நிறுவனம் இந்தியாவில் ஐகூ Z6 ப்ரோ 5ஜி மற்றும் ஐகூ Z6 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. ஐகூ Z6 மாடலில் 6.44 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக 8GB ரேம், 4GB வரை அடிஷனல் விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 5000mAh பேட்டரி, 44w பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களும் உள்ளன. 

    ஐகூ Z6 ப்ரோ 5ஜி மாடலில் 6.44 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G பிராசஸர், 12GB ரேம், 4GB விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஐகூ Z6

    புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4700mAh பேட்டரி, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை 18 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும். 

    விலை விவரங்கள்:

    இந்தியாவில் ஐகூ Z6 44W மாடல் ராவென் பிளாக் மற்றும் லுமினா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 128GB மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 என்றும் 6GB + 128GB மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்றும் 8GB + 128GB மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என துவங்குகிறது.

    ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஃபேண்டம் டஸ்க் மற்றும் லீஜியன் ஸ்கை நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்றும் 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், குறுகிய காலக்கட்டத்திற்கு இந்த ஸ்மார்ட்போன் ரூ. 22 ஆயிரத்து 999 எனும் துவக்க விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்த ஐபோன்கள் விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் பத்து லட்சம் "மேட் இன் இந்தியா" ஐபோன் மாடல்களை விற்பனை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சைபர் மீடியா ரிசர்ச் (CMR) எனும் சந்தை ஆ்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஐபோன்களில் 50 சதவீதம் அதிகம் ஆகும்.

    மேலும் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்தியாவில் ஐபோன்கள் 22 சதவீத வளர்ச்சியை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 விற்பனையே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

     ஐபோன் 13

    "எங்களின் தகவல்கள் பெரும்பாலும் மேக் இன் இந்தியா ஐபோன்களின் விற்பனையை குறிக்கின்றன. இவை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 50 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஐபோன் 13 விற்பனை ஐபோன் 12 சீரிஸ் விற்பனைக்கு இணையாகவே உள்ளது," என CMR நிறுவன தலைவர் பிரபு ராம் தெரிவித்து இருக்கிறார்.

    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் 2017 முதல் ஐபோன் மாடல்களை உற்பத்தி செய்ய துவங்கியது. ஐபோன் SE மாடலே இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஐபோன் ஆகும். இதைத் தொடர்ந்து ஐபோன் 11, ஐபோன் 12 போன்ற மாடல்களும், பின்னர் ஐபோன் 13 மாடல்களின் உற்பத்தியும் தற்போது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
    போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது M4 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ M4 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. இதற்கென போக்கோ வெளியிட்டு இருக்கும் டீசரில் புது ஸ்மார்ட்போன் டூயல் கேமரா, எல்லோ மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இதன் பின்புறம் கேமரா மாட்யூலை சுற்றி பிளாக் நிற பார் இடம்பெற்று இருக்கிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய போக்கோ M4 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ரெட்மி 10 5ஜி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

     போக்கோ M4 5ஜி

    போக்கோ M4 5ஜி அம்சங்கள்:

    - 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
    - ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 7nm பிராசஸர்
    - மாலி-G57 MC2 GPU
    - 4GB / 6GB LPDDR4x ரேம்
    - 128GB (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI
    - 50MP பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 2MP போர்டிரெயிட் சென்சார், f/2.4
    - 5MP செல்ஃபி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5000mAh பேட்டரி
    - 18W ஃபாஸ்ட் சார்ஜிங்

    சோனி நிறுவனம் உருவாக்கி வரும் புது வயர்லெஸ் பிரீமியம் ஹெட்போன் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    தலைசிறந்த நாய்ஸ் கேன்சலிங் வயர்லெஸ் ஹெட்போன் மாடல்களை வழங்குவதில் சோனி நிறுவனம் இன்று வரை தனிச்சிறப்பு மிக்க பிராண்டாக விளங்குகிறது. சோனி நிறுவனத்தின் WH-1000XM4 ஓவர்-இயர் ஹெட்போன் சீரிசுக்கு இன்று வரை குறிப்பிடத்தக்க போட்டியாளராக எந்த மாடலும் வெளியிடப்படவில்லை. 

     சோனி ஹெட்போன்

    இந்த நிலையில், சோனி நிறுவனம் உருவாக்கி வரும் புது ஓவர்-இயர் ஹெட்போன் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இது சோனி WH-1000XM5 பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இதன் அம்சங்கள் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்றும் இதன் டிசைனில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. 

    முந்தைய சோனி ஹெட்போன் மாடல்களான WH-1000XM3 மற்றும் WH-1000XM4 வரிசையில் புதிய WH-1000XM5 மாடல் சோனி ஹெட்போன் தரத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சீரிஸ் தொடர்ந்து சோனி நிறுவனத்தின் டாப் எண்ட் வயர்லெஸ் ஹெட்போன் மாடல்களாக இருக்கும்.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் நோக்கியா G21, நோக்கியா 105 மற்றும் நோக்கியா 105 பிளஸ் என மூன்று மொபைல் போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு புது சாதனங்களை அறிமுகம் செய்தது. இதில் நோக்கியா G21 ஸ்மார்ட்போன், நோக்கியா 105 மற்றும் நோக்கியா 105 பிளஸ் ஃபீச்சர் போன் மாடல்கள் உள்ளிட்டவை அடங்கும். இவற்றுடன் நோக்கியா கம்ஃபர்ட் இயர்பட்ஸ் மற்றும் நோக்கியா கோ இயர்பட்ஸ் பிளஸ் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய நோக்கியா 105 மாடல் 2019 இல் அறிமுகமான நோக்கியா 105 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இரு மாடல்களும் காம்பேக்ட் கிளாசிக் நார்டிக் டிசைன் மற்றும் ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் எக்ஸ்டீரியர் ஃபினிஷ் கொண்டுருக்கின்றன.

    இரு மாடல்களிலும் எப்.எம். ரேடியோ, அதிகபட்சம் எல்.இ.டி. டார்ச்லைட் மற்றும் பில்ட் இன் கிளாசிக் கேம்ஸ்-ஐ கொண்டிருக்கிறது. நோக்கியா 105 பிளஸ் மாடல் ஆட்டோ கால் ரெக்கார்டிங் ஆப்ஷனுடன் கிடைக்கிறது. இதில் அதிகபட்சம் 32GB மைக்ரோ எஸ்.டி. கார்டு சப்போர்ட், மியூசிக் பிளேயர், 1000mAh பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     நோக்கியா G21

    நோக்கியா G21 அம்சங்கள்:

    - 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 V-நாட்ச் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
    - 1.6GHz ஆக்டா கோர் யுனிசாக் T606 பிராசஸர்
    - மாலி G57 MP1 GPU
    - 4GB LPDDR4x ரேம், 64GB மெமரி
    - 6GB LPDDR4x ரேம், 128GB மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - ஆண்ட்ராய்டு 11
    - 50MP பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 2MP டெப்த் கேமரா
    - 2MP மேக்ரோ கேமரா, f/2.4
    - 8MP செல்ஃபி கேமரா
    - 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5050mAh பேட்டரி
    - 18W சார்ஜிங்

    புதிய நோக்கியா G21 ஸ்மார்ட்போன் நார்டிக் புளூ மற்றும் டஸ்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 64GB மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் 6GB + 128GB மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    நோக்கியா 105 (2022) மாடல் சார்கோல் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா 105 பிளஸ் மாடல் சார்கோல் மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1399 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.  

    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய இன் 2C ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய இன் 2C ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் HD+ டிராப் நாட்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, ஆக்டா கோர் யுனிசாக் T610 பிராசஸர், மாலி G32 GPU, 3GB ரேம், 32GB மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 8MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் மற்றும் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

     மைக்ரோமேக்ஸ் இன் 2C

    மேலும் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு  11 ஓ.எஸ்., 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போன் பிரவுன் மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8 ஆயிரத்து 499 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 7 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை மே 1 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களை பார்ப்போம்.


    ஒன்பிளஸ் நிறுவனம் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி பெயரில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. அந்த வகையில், புது ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் குறித்து இதுவரை வெளியாகி இருக்கும் விவரங்கள், சிறப்பம்சங்கள் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.

    புதிய ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ரியல்மி 9 ப்ரோ 5ஜி-யின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். ரியல்மி 9 ப்ரோ 5ஜி மாடல் ஏற்கனவே இந்தியாவில அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் மூன்று கேமரா சென்சார்கள், இவற்றை சுற்றி பேட்டன் டிசைன், பன்ச் ஹோல் ஸ்கிரீன், செவ்வக எல்.சி.டி. பேனல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி

    ஸ்மார்ட்போனின் விலையை குறைவாக வைக்கவே இந்த மாடலில் எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த மாடலில் 6.58 இன்ச் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், புல் ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷன் ஸ்மார்ட்போனின் மூன்று புறமும் மெல்லிய பெசல்கள், கீழ்புறத்தில் நன்கு தெளிவாக காட்சியளிக்கும் சின் காணப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி மாடலில் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 64MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 2MP டெப்த் கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் அல்ட்ரா வைடு அல்லது டெலிபோட்டோ லென்ஸ் எதுவும் வழங்கப்படவில்லை என்றே தெரிகிறது.

    ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் 6GB/8GB ரேம் மற்றும் 128GB மெமரி வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. 

    கூகுள் நிறுவனம் தனது முதல் பிக்சல் வாட்ச் மாடலை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்யலாம்.


    கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் விரைவில் அறிமுகமாகும் என கூறப்பட்டு வருகிறது. கூகுள் நிறுவனம் இதனை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கூகுளின் முதல் ஸ்மார்ட்வாட்ச் பிக்சல் வாட்ச் எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் உடன் மற்றொரு ஸ்மார்ட்வாட்ச் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த மாடல் கூகுள் பிக்சல் வாட்ச் ஃபிட் என்று அழைக்கப்பட இருக்கிறது.

     கூகுள் பிக்சல் வாட்ச்

    கூகுள் பிக்சல் வாட்ச் ஃபிட் மாடல் பற்றிய தகவல்கள் கூகுள் ஊழியர்களிடம் இருந்து கிடைத்ததாக கூறப்படுகிறது. எனினும், இரு மாடல்களும் ஒரே மாதிரி இருக்குமா அல்லது வெவ்வேறாக காட்சியளிக்குமா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. பிக்சல் வாட்ச் பெயரை பயன்படுத்த கூகுள் நிறுவனம் ஏற்கனவே டிரேட்மார்க் பெற்று விட்டது. 

    இதனால் கூகுள் வெளியிடும் புது ஸ்மார்ட்வாட்ச் பிக்சல் வாட்ச் என்றே அழைக்கப்படலாம். கூகுள் பிக்சல் வாட்ச் பிட் மாடலை சுற்றி தடிமனான பெசல்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முற்றிலும் முரணாக பிக்சல் வாட்ச் ஸ்டாண்டர்டு மாடல் பெசல் லெஸ் டிசைன் கொண்டிருக்கும். மேலும் பில்டு-ஐ பொருத்தவரை ஸ்டாண்டர்டு மாடலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபினிஷ், பிட் மாடலில் அலுமினியம் பாடி டிசைன் வழங்கப்படுகிறது.

    மிவி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    மிவி நிறுவனம் இந்தியாவில் மிவி F60 இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. சில வாரங்களுக்கு முன் மிவி நிறுவனம் மிவி போர்ட் S60 மற்றும் S100 சவுண்ட்பார் மாடல்ளை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. 

    புதிய மிவி டுயோபாட்ஸ் மாடலில் 13mm எலெக்ட்ரோ டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இவை ஸ்டூடியோ தர சவுண்ட் வெளிப்படுத்த வழி செய்கின்றன. இத்துடன் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அழைப்புகளின் போது சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

    இதன் இயர்பட்ஸ் காதுகளில் சவுகரியத்தை ஏற்படுத்தும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இயர்பட்களின் எடையும் குறைவு ஆகும். இதில் டூயல் மைக்ரோபோன்கள் உள்ளதால், வாய்ஸ் இன்புட் மற்றும் அவுட்புட் மிக தெளிவாக இருக்கும். பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும், எளிமையாகவும் இருக்க செய்யும் வகையில், இந்த இயர்பட்ஸ் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவைகளான அலெக்சா, சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்டவைகளுக்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    மேலும் இயர்பட்களின் மீது லேசாக தொட்டாலே அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது மற்றும் வால்யூம் அடஜஸ்ட்மெண்ட் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். 

    மிவி டுயோபாட்ஸ் F60


    புதிய மிவி டுயோபாட்ஸ் F60 மாடல் கிரீன், பிளாக், புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1499 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் ரூ. 999 விலையில் விற்Hனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் மிவி வலைதளங்களில் நடைபெறுகிறது.
    ×