என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய நார்சோ ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்து இருக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி ரியல்மி ஏற்கனவே அறிவித்து இருந்தது.
புதிய ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+ ஸ்கிரீன், யுனிசாக் T612 பிராசஸர், அதிகபட்சம் 4GB ரேம், 128GB UFS 2.2 மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். மற்றும் ரியல்மி U1 R எடிஷன் வழங்கப்பட்டு உள்ளது.
புகைப்படங்களை எடுக்க நார்சோ 50A பிரைம் மாடலில் 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP பிளாக் அண்ட் வைட் சென்சார் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி நார்சோ 50A பிரைம் அம்சங்கள்:
- 6.6 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டா கோர் யுனிசாக் T612 பிராசஸர்
- மாலி G57 GPU
- 4GB LPDDR4x ரேம்
- 64GB / 128GB UFS 2.2 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி U1 R எடின்
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8
- 2MP மேக்ரோ கேமரா
- வி.ஜி.ஏ. கேமரா, f/2.4
- 8MP செல்ஃபி கேமரா, f/2.45
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன் பிளாஷ் பிளாக் மற்றும் பிளாஷ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 64GB மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 499 என்றும் 4GB + 128GB மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என துவங்குகிறது.
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
டுவிட்டர் நிறுவனத்தை உலகின் முன்னணி பணக்ககாரரான எலான் மஸ்க் வாங்குகிறார். இதை அடுத்து, டுவிட்டருக்கு, "இனி இருண்ட காலம் தான். அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்," என டுவிட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். டுவிட்டர் நிறுவனம் விற்கபட்டால் இது தான் ஏற்படும் என அவர் தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனங்களில் டுவிட்டர் தனிச்சிறப்பு கொண்டிருக்கிறது. டுவிட்டர் தளத்தை உலக தலைவர்கள் தொடங்கி அரசியல் பிரபலங்கள், பொது மக்கள் என ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு உலக பணக்காரரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களை நிறுவிய எலான் மஸ்க் முயற்சித்து வந்தார்.
அதன்படி அவர் டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்க விரும்புவதாகவும் தெரிவித்து வந்தார். டுவிட்டர் நிறுவன பங்கு ஒன்றுக்கு 54.20 டாலர் வரை கொடுக்க தயார் என்றும் அறிவித்து இருந்தார். முன்னதாக, எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். இதன் காரணமாக டுவிட்டர் நிர்வாகக் குழுவில் சேர அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தான் எலான் மஸ்க் கொடுக்கும் விலைக்கே டுவிட்டர் நிறுவனத்தை ஒப்படைக்க அதன் நிர்வாகம் ஒப்புக் கொண்டு இருப்தாக தகவல் வெளியாகி வந்தது. அதன்படி டுவிட்டர் நிறுவனத்தின் பங்கு ஒன்றிற்கு 54.2 டாலர்கள் என்ற கணக்கில் வழங்க நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்கிடம் விற்பனை செய்ய டுவிட்டர் ஒப்புக் கொண்டுள்ளது. டுவிட்டர் நிர்வாகக் குழு உடனான பேச்சுவார்த்தையில் இந்த தொகைக்கு நிறுவனத்தை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதற்கான பரிவரத்தனை எப்போது நடைபெறும், மஸ்க் வாங்கிய பிறகு ட்விட்டர் நிறுவனத்தை யார் வழிநடத்துவார் போன்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது இந்தியரான பராக் அகர்வால் டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.
"ஒட்டு மொத்த உலகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான சம்பந்தம் மற்றும் குறிக்கோளை டுவிட்டர் கொண்டிருக்கிறது. எங்களின் குழுக்கள் மற்றும் அவர்களது பணியை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது," என டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் தெரிவித்து இருக்கிறார்.
"தலைசிறந்த ஜனநாயகத்திற்கு சிறந்த அடித்தளமே கருத்து சுதந்திரம் தான். மனித குலத்தின் எதிர்காலம் பற்றிய விவாதங்கள் நடைபெறும் டிஜிட்டல் டவுன் ஸ்கொயர் தான் டுவிட்டர். இதுவரை இல்லாத வகையில் டுவிட்டர் தளத்தை சிறப்பான ஒன்றாக மாற்ற விரும்புகிறேன். இதற்காக புது அம்சங்களை வழங்க இருக்கிறேன். மேலும் இதன் அல்காரிதம்களை ஓபன் சோர்ஸ் ஆக மாற்றி நம்பகத்தன்மையை அதிகப்படுத்தி, ஸ்பாம் பாட்களை வீழ்த்த முடிவு செய்துள்ளேன். டுவிட்டரில் ஏராளமான தனித்துவம் உள்ளது. இதனை வெளிக் கொண்டு வர பயனர்கள் மற்றும் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்." என எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.
வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷன்களில் க்ரூப் வாய்ஸ் கால் பயனர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
உலகின் முன்னணி குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் அப்டேட்களின் மூலம் செயலியில் புதுப்புது அம்சங்கள் வழங்குவதை வாட்ஸ்அப் நீண்ட காலமாகவே பின்பற்றி வருகிறது. இந்த வரிசையில் தான், தற்போது புது அப்டேட் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் செயலியின் புது அப்டேட் கொண்டு ஒரே சமயத்தில் 32 பேருடன் வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் கால் பேச முடியும். முன்னதாக 2020 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் க்ரூப் வாய்ஸ் கால் அம்சத்தில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது.

இது தவிர ஒரே சாட் திரெட்-இல் அதிக பயனர்களை சேர்த்துக் கொள்ளும் வசதி, ரி-டிசைன் செய்யப்பட்ட லொகேஷன் ஸ்டிக்கர், disappearing மெசேஜ்களை save செய்து கொள்ளும் ஆப்ஷன், அதிக எமோஜிக்கள், பிரைவசி செட்டிங்களில் அதிக ஆப்ஷன்கள் என ஏராளமான அம்சங்கள் புது பீட்டா அப்டேட்டில் வழங்கப்பட்டு உள்ளன.
வாட்ஸ்அப் க்ரூப் கால் செய்வோர் இனி, அதிகபட்சமாக 32 பேருடன் வாய்ஸ் கால் பேச முடியும். இதே தகவல் வாட்ஸ்அப் வலைதளத்தில் FAQ பக்கத்திலும் இடம்பெற்றுள்ளது. முன்னதாக இந்த அம்சத்தில் நான்கு பேருடன் வாய்ஸ் கால் பேசும் வசதி வழங்கப்பட்டு, பின் அந்த எண்ணிக்கை ஏப்ரல் 2020 வாக்கில் இருமடங்காக அதிகரிக்கப்பட்டது. இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.22.8.80 வெர்ஷனிலும், ஐ.ஓ.எஸ். 2.2.9.73 வெர்ஷனிலும் வழங்கப்பட்டு உள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புது மோட்டோ G52 ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G52 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்போன் விவரங்கள் மற்றும் வெளியீடு பற்றி மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அதன்படி புது மோட்டோ G52 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+pOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 12, பக்கவாட்டில் கைரேகை சென்சார், யு.எஸ்.பி. டைப் சி கனெக்டிவிட்டி, 5ஜி, 5000mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

மோட்டோ G52 சிறப்பம்சங்கள்:
- 6.6 இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் FHD+ மேக்ஸ்விஷன் pOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4GB / 6GB ரேம்
- 64GB / 128GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் My UX
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8
- 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் / டெப்த் கேமரா, f/2.2
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.45
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- டர்போ பவர் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய மோட்டோ G52 ஸ்மார்ட்போன் சார்கோல் கிரே மற்றும் போர்சிலெயின் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய மோட்டோ G52 ஸ்மார்ட்போனின் 4GB, 64GB மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 என்றும், 6GB, 128GB மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை மே 3 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் சீரிஸ் 6 மாடல்களில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சினையை இலவசமாக சரி செய்து கொடுப்பதாக அறிவித்து இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடல்களுக்கான சர்வீஸ் புரோகிராமை அறிவித்து இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடல்களின் சில யூனிட்களில் திடீரென பிளாக் ஸ்கிரீன் தோன்றுவதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஏப்ரல் 2021 முதல் செப்டம்பர் 2021 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடல்கள் இந்த பிரச்சினை மூலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடல்களை பயன்படுத்துவோர், அதில் உள்ள சீரியல் நம்பரை ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டு இலவச சர்வீஸ் செய்து கொள்ளலாம். இலவச சர்வீஸ் செய்து கொள்ள பயனரின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 சீரியல் நம்பர் ஆப்பிள் வலைதளத்தில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சீரிஸ் 6 ஸ்மார்ட்வாட்ச் மாடல்களின் உற்பத்தியின் போது ஏற்பட்ட பிழையின் காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்து ஆப்பிள் வெளியிட்ட தகவல்களின் படி, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலின் 40mm வெர்ஷனில் சில யூனிட்களில் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடல்களின் குறிப்பிடத்தக்க அம்சமாக அறிவிக்கப்பட்ட ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் சீரற்று இயங்கியதாக பலர் குற்றம்சாட்டினர். இந்த பிரச்சினை வாட்ச்ஓ.எஸ். 8.5 அப்டேட்டிற்கு பின் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.
முன்னணி ஆடியோ சாதனங்கள் விற்பனையாளரான நாய்ஸ், இந்திய சந்தையில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
இந்திய சந்தையில் ஆடியோ சாதனங்கள் விற்பனையில் முன்னணி நிறுவனம் நாய்ஸ். சில தினங்களுக்கு முன்பு நாய்ஸ்பிட் Buzz ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் தற்போது புதிதாக கலர்பிட் அல்ட்ரா Buzz எனும் ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது.
புது ஸ்மார்ட்வாட்ச்-இல் ப்ளூடூத் காலிங், 1.75 இன்ச் ஃபுல் டச் எல்.சி.டி. டச் ஸ்கிரீன், நூற்றுக்கும் அதிக வாட்ச் பேஸ்கள், வாட்ச் பேஸ்களை பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரன்னிங், டிரெட்மில், வாக்கிங், ஸ்பின்னிங், சைக்ளிங், யோகா, ஹைக்கிங், பிட்னஸ். கிளைம்பிங் என நூறு ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் 24x7 ஹார்ட் ரேட் மாணிட்டரிங், SpO2 மாணிட்டரிங், ஸ்லீப் மாணிட்டரிங், ஸ்டாக்ஸ், வொர்ல்டு கிளாக், குயிக் ரிப்ளை, ஸ்மார்ட் DND போன்ற சென்சார்கள் மற்றும் ரிமைண்டர் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் கலர்பிட் அல்ட்ரா Buzz ஸ்மா்ர்ட்வாட்ச் சார்கோல் பிளாக், ஷேம்பெயின் கிரே மற்றும் ஆலிவ் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 499 ஆகும். புதிய நாய்ஸ் கலர்பிட் அல்ட்ரா Buzz ஸ்மார்ட்வாட்ச் விற்பனை ஏப்ரல் 28 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் புது ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் 2C பெயரில் புது ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அந்த வரிசையில், புது ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இது மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மைக்ரோமேக்ஸ் இன் 2b ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2C இந்தியாவில் ஏப்ரல் 26 ஆம் தேதி அறிமுகமாகிறது. இதனை மைக்ரோமேக்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கென பிரத்யேக வலைதளமும் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
அதில் புது ஸ்மார்ட்போனின் அம்சங்கள் உள்ளன. அதன்படி புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட டிஸ்ப்ளே, டூயல் கேமரா செட்டப், யுனிசாக் T610 பிராசஸர், 5000mAh பேட்டரி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போன் சில்வர் மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து உள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் 2C எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
- 6.52 இன்ச் HD+ 720x1600 பிக்சல் LCD டிஸ்ப்ளே
- யுனிசாக் T610 பிராசஸர்
- 8MP பிரைமரி கேமரா
- VGA இரண்டாவது சென்சார்
- 5MP செல்ஃபி கேமரா
- 4GB / 6GB LPDDR4x ரேம்
- 64GB eMMC 5.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 5000mAh பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
- ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்.
- யு.எஸ்.பி. சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக்
ஒன்பிளஸ் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய நார்டு 2T ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஒன்பிளஸ் நார்டு 2T ஸ்மார்ட்போன் விவரங்கள் பல்வேறு வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் நார்டு 2T ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1300 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Photo Courtesy: Twitter | Yogesh Brar
ஒன்பிளஸ் நார்டு 2T எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
- 6.43 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே
- மீடியாடெக் டிமென்சிட்டி 1300 பிராசஸர்
- 12GB ரேம்
- 256GB மெமரி
- 50MP பிரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைடு கேமரா
- 2MP மோனோகுரோம் கேமரா
- 32MP செல்ஃபி கேமரா
- 5ஜி, 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 4500mAh பேட்டரி
- 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி புது ஹோம்பாட் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர், அடுத்த தலைமுறை மாடலில் மிக முக்கிய புது அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இதுகுறித்து தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஹோம்பாட் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது பில்ட்-இன் கேமரா கொண்ட ஸ்மார்ட் டிஸ்ப்ளே போன்று செயல்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஹோம்பாட் ஸ்பீக்கர் பேஸ் ஐடி வசதி கொண்டிருக்கும் என்றும் இது ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த டி.வி. ஓ.எஸ். கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. பேஸ்டைம் உரையாடல்களை இயக்க ஏதுவாக ஆப்பிள் நிறுவனம் தனது ஹோம்பாட் ஸ்பீக்கரில் பில்ட்-இன் கேமராவை வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

டிஸ்ப்ளே, பில்ட்-இன் கேமரா போன்ற அம்சங்களை கொண்டிருப்பதால், அடுத்த தலைமுறை ஹோம்பாட் மாடல் கூகுள் நிறுவனத்தின் கூகுள் நெஸ்ட் ஹப் மேக்ஸ் மற்றும் அமேசான் எக்கோ ஷோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. இரு மாடல்களிலும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், டிஸ்ப்ளே, கேமரா மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
பேஸ் ஐ.டி. வசதியுடன் புது ஹோம்பாட் மாடல் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி வந்தாலும், இந்த மாடல் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், புதிய சாதனத்திற்கான டீசரை ஆப்பிள் நிறுவனம் தனது WWDC நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
ஐகூ நிறுவனம் புதிய Z6 4ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி பற்றிய புது தகவல் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஐகூ நிறுவனம் தனது ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், ஐகூ Z6 4ஜி மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐகூ Z6 ப்ரோ 5ஜி மாடலுடன் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஐகூ Z6 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை ஐகூ இந்திய தலைமை செயல் அதிகாரி நிபுன் மௌரியா தெரிவித்ததாக தனியார் செய்தி வலைதளம் குறிப்பிட்டு இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் வெளியீடு மற்றும் அம்சங்கள் பற்றி ஐகூ தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

ஐகூ Z6 4ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
புதிய ஐகூ Z6 4ஜி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். யு.ஐ. வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 128GB மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5ய1, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
போக்கோ நிறுவனம் விரைவில் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
போக்கோ நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் M2131W1 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதோடு ரஷ்யா எலெக்டிரானிக் சான்றிதழை பெற்று இருக்கிறது.
புதிய போக்கோ வாட்ச் டிசைன், அம்சங்கள் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. எனினும், இதுபற்றி போக்கோ சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போதைய ரெண்டர்களின் படி போக்கோ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஐவரி, பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Photo Courtesy: Digit
டிசைனை பொருத்தவரை சதுரங்க வடிவம் கொண்ட பாடி, வலது புறத்தில் நேவிகேஷன் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 1.6 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 360x320 பிக்சல் ரெசல்யூஷன், ஓரங்களில் சிறு வளைவுகள் காணப்படுகின்றன. மற்ற ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை போன்றே போக்கோ வாட்ச் மாடலிலும் ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார், SpO2 டிராக்கல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் புதிய போக்கோ வாட்ச் 225mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் இதில் 5ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய போக்கோ வாட்ச் மட்டுமின்றி போக்கோ நிறுவனம் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இன் இயர் ரக டிசைன், நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, 28 மணி நேர பேட்டரி பேக்கப் போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் பிளாக்ஷிப் பிராசஸர் கொண்ட புது ஸ்மார்ட்போன் மாடலை மிட் ரேன்ஜ் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய ரியல்மி GT 2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.62 இன்ச் FHD+ E4 AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8 லேயர் ஹீட் டெசிபேஷன் ஸ்டிரக்சர் வழங்கப்பட்டு உள்ளது. இது ஸ்மார்ட்போனில் ஏற்படும் வெப்பத்தை பெருமளவு குறைக்கிறது.
இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யு.ஐ. 3 கொண்டிருக்கும் ரியல்மி GT 2 ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

ரியல்மி GT 2 அம்சங்கள்:
- 6.62 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 120Hz E4 AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
- அட்ரினோ 660 GPU
- 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
- 12GB LPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யு.ஐ. 3.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8, OIS
- 8MP 119° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.5
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 65W அல்ட்ரா ஃபாஸ்ட் பிளாஷ் சார்ஜிங்
புதிய ரியல்மி GT 2 ஸ்மார்ட்போன் ஸ்டீல் பிளாக், பேப்பர் கிரீன் மற்றும் பேப்பர் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8GB + 128GB மெமரி மாடல் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என்றும் 12GB + 256GB மெமரி மாடல் விலை ரூ. 38 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மர்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஏப்ரல் 28 ஆம் தேதி துவங்குகிறது.






